Showing posts with label விடுகதை. Show all posts
Showing posts with label விடுகதை. Show all posts

Thursday, October 28, 2010

கதை... விடுகதை...1


விடுகதை போடுவதும் அதற்கு பதில் சொல்வதும் சுவாரஸ்யமான விசயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. ஏற்கனவே நிறைய விடுகதைகளுடன் கூடிய பதிவை போட்டுள்ளேன் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஒவ்வொரு முறையும் விடுகதை சொல்லும் போது அதற்கான பதிலை முதலில் சொல்வோம் அது சரியாக இருந்தால் அந்த சந்தோசம் தனி...

இந்த முறை நிறைய விடுகதைகள் சொல்லப் போறேன் யார் அனைத்து விடுகதைக்கும் பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு ஓர் இனிய தீபாவளி பரிசு...

1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?

2. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

3.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

4. செக்க செவந்த அழகி  நீ கோபத்துக்கு பேர் போனவலடி!!!  யார் நீ?

5. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

6. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?

7. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

8. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?

9. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?

10. குதிரை ஓட ஓட வால் குறையும் அது என்ன?

11. பூக்கும், காய்க்கும், வெடிக்கும் ஆனால் பழுக்க மட்டும் செய்யாது அது என்ன?

12. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலை  யைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

13. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்  அவன் யார்?

14. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானம் அவன் யார்

15. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?

16. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?

17. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?

18. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?

19. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ?

20. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?

Monday, September 6, 2010

கதை... விடுகதை...


விடுகதை சொல்வதும் அதற்கு பதில் சொல்வதும் ஒரு சுவரஸ்யமான விசயம். சிறுவயதில் குழந்தைகளுக்கு கதை சொல்வது விடுகதை சொல்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும். விடுகதை சொல்வதால் அக்குழந்தைகளுக்கு யோசிக்கும் திறுனும் அதன் பதில் தெரிந்ததும் இந்த பொருளை இப்படியும் கூறலாமா என நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். விடுகதை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ரொம்ப யோசிக்க வைக்கும்.

விடுகதைகளை பல இடங்களில் பயன்படுத்தலாம் எனக்குத் தெரிந்த நான் படித்த நான் சொன்ன விடுகதைகள் சிலவற்றை கொடுக்கிறேன்... சரியான பதில் சொல்பவர்களுக்கு குருவி ரொட்டி, குச்சி முட்டாய், இலந்த வடை, இலந்த தூள், இஞ்சி மரப்பான் பரிசாக அனுப்பப்படும்..

1. கவி பாடும் கட்டழகி, காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?

2. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? 
3. ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் அவன் யார்?

4. இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்?

5.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம், அது என்ன ?

6. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குக் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன?

7. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

8. ஓடுப்பான்! பிச்சை, ஒரு நாளும் கண்டறியான்!காடுறைவான்! தீர்த்தக்கரை சேர்வான்! - தேட நடக்குங்கால் நாலுண்டு!நல்தலை ஒன்றுண்டு! -அது என்ன? 

9.  ஆயிரம் பேர் பார்க்க ஆத்தங்கரை ஓரத்திலே கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல் கன்னத்தைக் கடிக்கிறாள்  கள்ளியவள்-அது என்ன?

10.சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

11. குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து கொண்டே போகும் அது என்ன?
 
12. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?

13. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?

14. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?

15. நீந்தத் தெரியும் மீனில்லை; நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை; இறக்கை இருந்தும் பறக்காத பறவை நான் யார் தெரியுமா? 

இந்த விடுகதை எல்லாம் கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கும்... உங்களின்  பதிலை எதிர்பார்க்கிறேன்...