Monday, September 27, 2010

சளியை விரட்டும் கற்பூரவல்லி


கற்பூரவல்லி இது ஓர் அற்புதமான மூலிகை செடி இது ந்ம ஊர்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். கடந்த இரண்டு நாட்களாக எனது மகனுக்கு சளி தொல்லை அதிகமாக இருந்தது அப்போது வீட்டு பெிாயவர்கள் சொன்ன ஓர் அற்புதமான மருந்து செடி தான் இது. இதன் பயன்களை கேட்க கேட்க ஆச்சர்யப்பட வைத்தது. இச்செடியின் தாயகம் இந்தியாதான். இது அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. நம் வீட்டிலும் வளர்த்தலாம்.

கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.



பயன்கள்
  • கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. 
  • வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
  • இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.
  • இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
  • இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
  • இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
  • இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
  • கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
  • தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும். 
  • மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். 
  • சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.
அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

22 comments:

  1. கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும்.//
    எங்க வீட்லயும் இந்த செடி இருக்கு ஆனா எட்டு மாசம் ஆகுங்கிறது ஆச்சர்யமா இருக்கு..

    ReplyDelete
  2. பரவாயில்ல...சளிக்கு இரண்டு தலைய பிச்சி சாப்பிட்டுகிட்டிருந்தேன்..முறைப்படி சாப்பிடற !முறை சொல்லி இருக்கீங்க நன்றி

    ReplyDelete
  3. ஓமவல்லி என்று சொல்வார்களே, அது வேற செடியா?
    நானும் இதன் இலைகளை பயன்படுத்தி இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. சங்கவி., கூகிளில் பார்த்தேன். ஓமவல்லி என்பதும் இதேதான்.

    ReplyDelete
  5. உபயோகமான தகவல்கள்..நன்றி நண்பரே

    ReplyDelete
  6. இதை வெறுமனே சாப்பிடுவோம் வாசனை நன்றாக இருக்கும். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  7. ஏங்க ஊரில சின்னபிளைகளுக்கு சளி எண்டால் இதுதான் கை வைத்தியத்துக்கு பாவிபாங்கள்.
    நல்ல தகவல் உங்கள் தேடல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இதுல இவ்ளோ நல்ல குணங்கள் இருக்கா .?
    எங்க வீட்டுல இருக்கு ..! வாசனை அருமையா இருக்கும் ..

    ReplyDelete
  9. எங்கூரு பக்கத்துல இதை ஓமத்தழைன்னு சொல்லுவாங்க.. சின்னப்பிள்ளையில சளிக்காக சாப்பிட்டிருக்கேன்...

    நல்ல பகிர்வுங்க...

    ReplyDelete
  10. நல்ல தகவலுடன் கூடிய பதிவு

    ReplyDelete
  11. என்னோட வீட்லயும் கற்பகவல்லி செடி இருந்தது. ஆனா சரியா பராமரிக்காதனால வாடிப்போய்டுச்சு.
    ::((

    ReplyDelete
  12. ஒவ்வொரு வாட்டியும் இந்த மாதிரி அரிய தகவல்களைத் தொகுத்து, அருமையாக வழங்கி..., என்ன தான் பின்னூட்டம் எழுதறதாம், ஒரு மாறுதலுக்காவது ஒரு மோசமான இடுகை எழுத மாட்டீங்களா எப்பவாச்சும்...? யூ ஆர் க்ரெட்!

    ReplyDelete
  13. அருமையான கைவைத்தியக் குறிப்பு சொல்லி இருக்கிங்க. பகிர்ந்தமைக்கு நன்றி!

    இதுப்போலவே நிறைய தகவல்களை சொல்லுங்கள். எல்லோருக்கும் பயனாக இருக்கும்.

    ReplyDelete
  14. பகிர்ந்தமைக்கு நன்றி!

    எங்க வெட்டில் சொல்றேன் கண்டிப்பா

    ReplyDelete
  15. அருமையான மூலிகை. இதை வளர்த்தால், அந்த இடத்துக்கு பாம்பு அண்டாதுன்னு சொல்வாங்க.

    பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  16. அருமையான் மருத்துவ தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. அருமையான பயனுள்ள தகவல்...

    ReplyDelete
  18. என் வீட்டில் காடாய் வளந்திருக்கு. நான் ஆவி மட்டுமே பிடிப்பேன். மற்றும் பஜ்ஜி செய்வேன்.
    உங்கள் குறிப்புகள் பயனுள்ளவை.நன்றி அதுக்கு!

    ReplyDelete
  19. இதன் பெயர் கற்பூரவல்லியா ?.. ஓமம் இதிலிருந்து தயாரிப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.

    ReplyDelete
  20. ஒரு காம்பு ஓடிச்சுட்டு வந்து வீட்டிலே வைச்சீங்கன்னா அது பாட்டுக்கு காடு மாதிரி வளரும். நல்லா தண்ணீர் கிடைக்கும் இடத்தில வைத்தால் ஒவ்வொரு இலையும் ஒரு வெற்றிலை அளவு பெரிதாக வளரும். இல்லை மேல் தொட்டு விட்டாலே ஓம வாசனை குமுவென்று வரும். மற்றபடி இதில் இருந்து ஓம விதைகள் எடுக்கப் படுவதாக தெரியலை. இந்தச் செடியில் விதைகள் இல்லை.
    சும்மா சூடான ஒரு பாத்திரத்தின் மேலோ அல்லது தோசைக் கல்லை சூடாக்கி இலையை லேசா மேல வைத்து சூடு படுத்தி விட்டு ( ரொம்ப வைச்சா இலையில் உள்ள தண்ணீர் வற்றிவிடும் ) கையால் பிழிந்தால் நல்லா சாறு வரும். கொஞ்சம் தேன் கலந்து கொடுக்கலாம். தண்ணீரில் துளசியுடன் சேர்த்து கொதிக்க வைத்தும் கொடுக்கலாம்.
    இந்த மாதிரி பாட்டி வைத்தியங்கள் மூன்று நாளுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்று சொல்லுவார்கள் ( விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்ற சொல்லக் கேட்டிருக்கோம்இல்லையா

    ReplyDelete
  21. சளி தொல்லைக்கு ஒரு நல்ல் தகவல்

    ReplyDelete