Friday, September 17, 2010

எளிமையான கருத்தடை சாதனம் துளசி

 
துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.


பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர். சாமிக்கு சூடப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர் தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் நோயை விரட்டலாம் ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான்.


 சாலைஓரங்களில் சும்மா கிடைக்கும் துளசியின் பயன்களை பாரீர்...
 
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம்த்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம்.

துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. 

வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். 

உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு.

நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. 

எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

துளசி நம் உடலில் உ‌ள்ள கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம், உடலை தூ‌ய்மை‌ப்படு‌‌த்து‌ம் பொருளாகவு‌‌ம் அது செய‌ல்படு‌கிறது. ச‌ளி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு‌ம் துள‌சி மரு‌ந்தாக அமையு‌ம்.

துளசி‌ச் செடி‌யி‌ன் இலைகளை அ‌வ்வ‌ப்போது சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் எந்த நோயும் நம்மை அணுகாது.

கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம்.

துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உட‌லி‌ன் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி‌க்கு உதவு‌ம்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை
கடுக்காய் தோல் – 5 கிராம்
கீழாநெல்லி – 10 கிராம்
ஓமம் -5 கிராம்
மிளகு – 3
எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

குணமாகும் வியாதிகள்

1.உண்ட விஷத்தை முறிக்க.
2.விஷஜுரம்குணமாக.
3.ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5.காது குத்துவலி குணமாக.
6.காது வலி குணமாக.
7.தலைசுற்றுகுணமாக.
8.பிரசவ வலி குறைய.
9.அம்மை அதிகரிக்காதிருக்க.
10.மூத்திரத் துவாரவலி குணமாக.
11.வண்டுகடி குணமாக.
12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13.எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16.அஜீரணம் குணமாக.
17.கெட்டரத்தம் சுத்தமாக.
18.குஷ்ட நோய் குணமாக.
19.குளிர் காச்சல் குணமாக.
20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21.விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22.பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23.காக்காய்வலிப்புக் குணமாக.
24.ஜலதோசம் குணமாக.
25.ஜீரண சக்தி உண்டாக. 
26.தாதுவைக் கட்ட. 
27.சொப்பன ஸ்கலிதம் குண்மாக. 
28.இடிதாங்கியாகப் பயன்பட 
29.தேள் கொட்டு குணமாக. 
30.சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக. 
31.கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற. 
32.வாதரோகம் குணமாக. 
33.காச்சலின் போது தாகம் தணிய. 
34.பித்தம் குணமாக. 
35.குழந்தைகள் வாந்தியை நிறுத்த. 
36.குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த. 
37.சகல விதமான வாய்வுகளும் குணமாக. 
38.மாலைக்கண் குணமாக. 
39.எலிக்கடி விஷம் நீங்க. 
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால். 
41இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த. 
42.வாந்தியை நிறுத்த. 
43.தனுர்வாதம் கணமாக. 
44.வாதவீக்கம் குணமாக. 
45.மலேரியாக் காய்ச்சல் குணமாக. 
46.வாய்வுப் பிடிப்பு குணமாக. 
47.இருமல் குணமாக. 
48.இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக. 
49.காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த. 
50.இளைப்பு குணமாக. 
51.பற்று, படர்தாமரை குணமாக. 
52.சிரங்கு குணமாக. 
53.கோழை, கபக்கட்டு நீங்க.

34 comments:

  1. ஐயோ ஐயோ இவ்வளவு பயனா
    நன்றி பயனுள்ள தகவல் தந்ததுக்கு
    தொடருங்கள் உங்கள் பணியை

    ReplyDelete
  2. இவ்வளோ விஷயம் இருக்க இதுல.. நன்றி சதீஷ்..

    ReplyDelete
  3. ஒரு நல்ல பயனுள்ள பதிவு நண்பரே

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. எத்தனை விதாமான பயன்பாடு இந்தத் துளசியில்.இத்தனை வியாதிக்கும் இங்கே பணம் கொடுத்து ஆங்கில மருந்துகளை விழுங்கிக்கொண்டு இன்னொரு உடல் உபாதைகளோடு கஸ்டப்படுகிறோம்.
    நன்றி சங்கவி.

    ReplyDelete
  6. எங்கள் வீட்டில் இதன் பயன்பாடு உண்டு. குழந்தைகள் வைத்து இருப்பவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று என்பதை அனுபவத்தை வைத்து சொல்கிறேன். நல்ல பகிர்வு. அதற்காக நன்றி சகோ.

    ReplyDelete
  7. சதிஷ்! அருமையாக சொல்லிட்டீங்க! ரொம்ப சந்தோஷம். மக்கள் அதை எதுவோ மாலையில் சேர்த்துக் கட்டும் பொருளாகத் தான் பார்க்கிறார்கள்.

    உங்களின் கருத்துக்களால் அவர்களுக்கு பயன் விளையும் என்று நினைக்கின்றேன். நன்றி நண்பா!

    ReplyDelete
  8. இந்த தாவரத்தில் இவ்வளவு பயன் உண்டா அருமை தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். பயன் பெறுங்கள்.

    ReplyDelete
  9. துளசிக்கு இவ்வளவு சக்தியா!!!!!!

    ReplyDelete
  10. //துளசி கோபால் said...

    துளசிக்கு இவ்வளவு சக்தியா!!!!!!//


    துளசியைப் பற்றிய பதிவுக்கு வந்து துளசி கோபால் அவர்களே வியந்த பிறகு, நான் சொல்ல என்ன இருக்கு? வழமை போலவே, எண்ணற்ற தகவல்கள் கொண்ட அருமையான இடுகை!

    ReplyDelete
  11. நல்ல பதிவு சங்கமேஷ்!

    ReplyDelete
  12. மிக அருமையான மருந்துதான் துலசி.. பகிர்வுக்கு நன்றீ சங்கவி

    ReplyDelete
  13. மிக அருமையான மருந்துதான் துலசி.. பகிர்வுக்கு நன்றீ சங்கவி

    ReplyDelete
  14. மிக அருமையான மருந்துதான் துலசி.. பகிர்வுக்கு நன்றீ சங்கவி

    ReplyDelete
  15. மருத்துவப் பலன் கொண்ட துளசியை சாப்பிடும் போது தொண்டைக்கு இதமாக இருக்கும்.

    உபயோகமானத் தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. துளசி ஒன்னு போதும் போலயே எல்லா வியாதிக்கும்!

    ReplyDelete
  17. துளசியை இங்கு "holy Basil" என்று சொல்கிறார்கள். பெயர் பொருத்தம் சரிதான் என்று, உங்கள் இடுகையை வாசிக்கும் போது தெரிகிறது.

    ReplyDelete
  18. விடயங்கள் வியக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி,

    ReplyDelete
  19. athanaal thaan perumaal koilil "THULASI THEERTHAM" tharugiraargalaa?.

    Purattasi maasam thinamum perumaal koil ponga, THULASI THEERTHAM Sappidunga!
    Nalla udal nalamum mananalamum "Ulagalantha Perumal" tharuvaar.

    ReplyDelete
  20. நல்ல பகிர்வு. நன்றி.

    //துளசி கோபால் said...
    துளசிக்கு இவ்வளவு சக்தியா!!!!!//
    :-)

    ReplyDelete
  21. ஆஹா...ஆச்சரியமான பலன்கள்!

    பதிவிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்! நன்றி!

    ReplyDelete
  22. நம்ப சிரமமாக உள்ளது. சில பயன் இருக்கலாம். பெருக்கி எழுதி உள்ளதோ ?
    சிலரோ அனைத்து பிரச்சினைக்கும் சாப்பிடாதே என்கிறார்கள்.

    ReplyDelete
  23. துளசில இவ்ளோ விஷயம் இருக்கா... வாவ்...

    ReplyDelete
  24. நல்ல பயனுள்ள பதிவு. நல்ல மருந்து நிவாரணி. என் அம்மா வீட்டில் இப்பவும் இதை பயன்படுத்துகிறார்கள், துளசி பூஜையும் செய்கிறாங்க.

    www.vijsvegkitchen.blogspot.com

    ReplyDelete
  25. உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கிறேன் . பெற்றுக் கொள்ளவும்

    http://lksthoughts.blogspot.com/2010/09/blog-post_19.html

    ReplyDelete
  26. thulacila 2u vetham erukea entha thulasi

    ReplyDelete
  27. இரண்டாவது படத்தில் காண்பித்திருப்பது துளசிச் செடி அல்ல நண்பரே..................

    அது பச்சிலை என்னும் செடி.

    ReplyDelete
  28. மிகவும் பிரயோசனமான விடயம். உங்களுக்கு எனது பணிவான நின்றி.

    ReplyDelete
  29. மிகவும் பிரயோசனமான விடயம். உங்களுக்கு எனது பணிவான நின்றி.

    ReplyDelete
  30. திருமண வயதில் இருக்கும் ஆண்கள் ஒரு நாள் எத்தனை இலை சாப்பிடலாம்?

    ReplyDelete