Thursday, September 2, 2010

ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் புலம்பல்....

இது எனக்கு என் நண்பன் மூலமா மெயிலில் வந்த தகவல் எனக்கு ரொம்ப புடித்திருந்தது உங்களுடன் பகிர்கிறேன்....

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா  வெறுப்புடன் தொடங்குகிறது  அந்நாள்.

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய்
ஃபேஸ்புக்கில்  சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத
விரக்திகள்  எரிச்சலைக்  கிளப்புகிறது.

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

பாசமாக பேசும்,  பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம்  கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது. 


செம்மறி ஆடுகள்
பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
மென்பொறியாளர்கள்
பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்காங்க......

43 comments:

  1. koodave call center makkalaium setthukonga

    ReplyDelete
  2. //பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,

    உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,

    அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது

    "நீங்க நல்லவரா? கெட்டவரா ?"//

    கவிதை வரிகள் அருமை. ரொம்ப எளிமையா இருக்கு. நன்றி நண்பா!

    ----------------------------------

    நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

    என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

    நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

    ReplyDelete
  3. அனுபவிச்சு எழுதியிருக்காங்க......

    ReplyDelete
  4. செம்மறி ஆடுகள்
    பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
    மென்பொறியாளர்கள்
    பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.


    .... :-)

    ReplyDelete
  5. ஆஹா மிக அருமை !!! எங்களை மாதிரி சாப்ட்வேர்கு வாக்கபட்டவங்க நிலமைய நல்லா புரிஞ்சு எழுதிருக்காங்க.....இந்த பதிவு தேவையான ஒன்று !! என்னமா பீல் பண்ணி எழுதிருக்காங்க...சூப்பர் பாஸ் !!!!

    ReplyDelete
  6. சாப்ட்வேர் துறையில் மட்டுமல்ல நண்பரே...எல்ல துறைகளிலும் இந்தத நிலைமைதான்.

    ReplyDelete
  7. //சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
    சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
    காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
    பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.//

    இந்த வரிகள் நல்லாருக்கே! எழுதிய நண்பருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  8. நீங்க ரசித்த படைப்பை, நாங்களும் ரசித்தோம் சங்கவி.

    ReplyDelete
  9. //மென்பொறியாளர்கள்

    பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.//

    பயனாக பணமும் கிடைக்கிறது என்ன செய்ய?

    நல்லாவே எழுதியிருக்காங்க

    ReplyDelete
  10. சிரிப்பை வரவழைத்தாலும் உண்மை நிலை இதுதான் !
    பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  11. //சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
    சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
    காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
    பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.//

    ReplyDelete
  12. மிகவும் அருமை.

    //சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
    சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
    காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
    பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.//

    சேம் பீலிங்

    ReplyDelete
  13. செம தூள்மா.காமெடியா இருந்தாலும் பரிதாபமா இருந்தாலும் ,பொறாமை இருக்கத்தான் செய்யுது சம்பளத்தை நினைச்சா

    ReplyDelete
  14. வாவ்.. செமையா இருக்கு.. யார் எழுதி இருந்தாலும் அவங்களுக்கு என் பாராட்டுக்கள். கூடவே அனுதாபங்களும்

    ReplyDelete
  15. நல்லாயிருக்கு..

    "உனக்கும் கீழே உள்ளவர்கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

    இதையும் கொஞ்சம் ஞாபகத்துல வைச்சுக்குங்க..!

    எல்லாம் சரியாப் போயிரும்..!

    ReplyDelete
  16. எல்லாத் தொழிலிலும் இது உண்டு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே போல வாகனம், சிமென்ட், இரும்பு ஆலைகளில் அலுவலகங்களில் பணியாளர்கள், பொறியாளர்கள் இப்படிதான் பணத்திற்காக தங்கள் ஆசைகளை, கனவுகளை கொலை செய்தார்கள்.
    இப்போது மென்பொருள், அயல் பணி ஒப்படைப்பு தொழிலில் நாம் நமது சுய ஆசைகளை தொலைத்து கொண்டு இருக்கிறோம் .

    At least nowadys AC office, those days NON ac but Veppamara nizal office

    ReplyDelete
  17. சிரிக்கிறதா அழுறதா??

    நடிகர் திலகம் ஆகிட வேண்டியது தான்.

    :) :(

    ReplyDelete
  18. ரொம்பப் பாவம்தான்..:((

    ReplyDelete
  19. நண்பா அருமை !

    'அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,


    அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'

    போல நடித்து'

    உங்களுடைய வலியை இவ்வளவு அழகாக கவிதையாக சொன்ன விதம் அருமை.

    ReplyDelete
  20. பதிவுகள் படிப்பதற்கு மட்டும் அல்ல
    புரிந்து நடப்பதற்கும்
    வாழ்க்கை சில காலமே...
    பகிர்வுக்கு நன்றி... :-)

    ReplyDelete
  21. உண்மையான நிலைமையை நொத்துபோய் எழுதியிருக்காங்க.

    ReplyDelete
  22. நீங்க நல்லவரா? கெட்டவரா ?


    ithu ungalukku he he............

    chumma oru doubttu keattu vaipameaannuthaan!

    ReplyDelete
  23. கெடாவெட்டு எப்போ!?

    ReplyDelete
  24. மென்பொறி ஆடுகள் என்று எழுதி இருக்கலாம்.

    ReplyDelete
  25. உண்மை நிலையை கவிதையாக வடித்துள்ளீர்கள் பலரது நிலை இப்படித்தான்.
    இதை விட மோசமாக் இல்லை என்று மனதை தேற்றுங்கள். மேலும் பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. உணர்வுப்பூர்வமான பதிவுங்க.

    மென்பொறியாளர்கள் மட்டுமல்ல.. என்ஜினியரிங் ஃபீல்டிலும் அப்படித்தான்..

    ReplyDelete
  27. //வாகன நெரிசலில் சாரலில் நனைந்து.
    ஒவ்வொரு நாளும் ஓடிப் பிடித்து இடித்துத் தள்ளி பேருந்தில் ஏறுவது, சே! என்னடா வாழ்க்கையிது என நினைக்கத் தோன்றுகிறது. அவரவர் ஊர் அருகிலேயே நிறுவனங்கள் தோன்றினால் நல்லாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  28. கவிதை எழுதியவருக்கும் அதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  29. கவிதை நன்றாக இருக்கிறது. இது எல்லாத் துறைகளிலும் பணி புரிபவர்களுக்கும் பொருந்தும். பணியை சுகமாக நினைத்து செய்தால் சுவாரசியம்; சுமையாக நினைத்துச் செய்தால் சுவை! ஆனால், அலுத்துக்கொள்ளுகிறவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  30. வலிகளை அழகாய் உணர்த்தும் கவிதை...

    கீழே உள்ளதை "தேவர் மகன்" படத்தில் சிவாஜி பேசும் ஸ்டைலில் படிக்கவும்.
    "இந்த காட்டுமிராண்டி பய கூட்டத்துல இந்த கமெண்ட போட்டவனும்
    ஒருத்தங்கிறத மறந்துராத"

    ReplyDelete
  31. சாப்ட்வேர் துறையில் மட்டுமல்ல ..எல்ல துறைகளிலும் இந்தத நிலைமைதான்......FYI

    ReplyDelete
  32. அனுப்பவிச்சி அனுபவத்தை எழுதியிருக்கார்...வாழ்க்கையோடு இன்றியமையாத பணம் படுத்தும் பாடு கொடுமை...

    ReplyDelete