Tuesday, September 21, 2010

மாணவர்களுக்கு தேவை உடற்கல்வி

இன்று நம் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்று அனைத்து பெற்றோர்களும் எவ்வளவு செலவானலும் பரவாயில்லை என் மகன் படிக்க வேண்டும் என்று பணத்தை கொட்டி தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்கின்றனர். குழந்கைகளுக்கு எந்த அளவிற்கு கல்வி முக்கியமோ அந்த அளவிற்கு உடற்கல்வியும் முக்கியம்.
இன்று நம் நாட்டில் உள்ள பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை அதுவும் தனியார் பள்ளியில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் குறைவு. உடற்கல்வியில் விளையாட்டு மட்டுமின்றி சிறுவயதில் இருந்து குழந்தைகளுக்கு யோகசனம், மூச்சுப்பயிற்சி போன்ற எளிய பயிற்சிகளை பள்ளியில் இருந்தே சொல்லித் தருவதன் மூலம் அவர்களது உடல் நலமும் நலமாக இருக்கும்.

நம் நாட்டு கல்வி முறையில் உடற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை இது இன்று மட்டுமல்ல ஆரம்ப காலத்தில் இருந்து இதுதான் நடைமுறை. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் உடற்கல்விக்கென இரண்டு மணி நேரம் ஒதுக்குகிறார்கள் இது மிகவும் குறைவு. ஆனால் தனியார் பள்ளிகளில் உடற்கல்விக்கு என நேரம் ஒதுக்கும் பள்ளிகள் குறைவுதான்.

இன்றைய வேகமான காலநிலையில் ஒரு மாணவன் காலை முதல் இரவு தூங்கும் வரை விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அவனுக்கு படிப்பு படிப்பு தான். படிப்பு முக்கியம் தான் அந்த அளவிற்கு அவனது உடல் நிலையும் முக்கியம்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஒரு மாணவனுக்கு சிறுவயது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உடற்கல்வியை சொல்லித் தருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் அவனது அரோக்கியம் என்ற கல்வி அவனுக்கு போதிக்கப்படுகிறது. நம் கல்வி முறையில் உடல் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாததால் நிறைய விளையாட்டு வீரர்களை நாம் இழந்து இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒவ்வொரு முறை ஒலிம்பிக் விளையாட்டின் போதும் நம் 100 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் வளரும் நாடுகளில் மிகமுக்கியமான நாடு நம் நாடு எத்தனை பதக்கங்கள் வாங்குகிறோம் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை ஒரு வெங்கல பதக்கம் வாங்கினவே அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் நிலைதான் இங்கு உள்ளது.


ஒருவன் விளையாட்டு வீரன் ஆக உருவாக்குவது அவன் கல்வி முறையில் தான் உள்ளது. நல்ல பயிற்சி கொடுத்தால் 100 கோடியில் 100 உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரனை உருவாக்கலாம் இதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. எங்கு இருந்து பயிற்சி தொடங்க வேண்டும் என்றால் நிச்சயம் பள்ளியில் இருந்து தான் தொடங்க வேண்டும். இன்றைய நிலையில் அரசு பள்ளியில் மட்டுமே விளையாட்டுக்கு ஓரளவு முக்கியத்துவம் தருகிறார்கள் அதாவது வாரத்தில் இரண்டு மணிநேரம் ஒதுக்குகிறார்கள் ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்பது தான் நிலை.


விளையாட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் தருவதற்கு அரசு தனது சட்ட திட்டங்களை கடுமையாக ஆக்கினால் அனைத்து பள்ளிகளிலும் நிச்சயம் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தராளம். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகலுக்கு அங்கீகாரம் இல்லை என்றால் அனைவரும் மைதானங்களை உருவாக்கி உடற் கல்விக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

ஒரு மாணவனுக்கு சமூதாயத்தில் உயர்ந்து நிற்பதற்கு கல்வி அவசியம். அதே போல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற் கல்வி அவசியம்.

23 comments:

  1. காலை எழுந்தவுடன் படிப்பு
    பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
    மாலை முழுதும் விளையாட்டு


    நல்ல தகவல் சொல்லியிருக்கிங்க சதீஸ்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இன்றைய தேதிக்கு பெரும்பான்மை அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியரே கிடையாது.. தமிழக அரசு இதற்காக இன்றுவரைக்கும் ஒரு துரும்பை கூட கிள்ளவில்லை ...

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு சங்கவி

    ReplyDelete
  4. உடற்கல்வி ஆசிரியர் தனியாக போட்டு விளையாட்டு பயிர்ச்சிக்கு நிறைய அரசு செலவு செய்யத்தான் செய்கிறது.நிறைய பள்ளிகள் இதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதும் இல்லை..நல்ல பதிவு

    ReplyDelete
  5. நல்ல பதிவு நண்பரே. நான் படிக்கும் காலத்தில் கூடஎங்கள் பள்ளியில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது ஆனால் இன்று அதே பள்ளியில் பெரும்பாலான மாணவர்களுக்கு இதைப்பற்றியே தெரியவில்லை காரணம் யார் ???

    ReplyDelete
  6. Great!! Always i get information in 'more than enough' form from your blog...

    ReplyDelete
  7. //இன்றைய வேகமான காலநிலையில் ஒரு மாணவன் காலை முதல் இரவு தூங்கும் வரை விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அவனுக்கு படிப்பு படிப்பு தான். படிப்பு முக்கியம் தான் அந்த அளவிற்கு அவனது உடல் நிலையும் முக்கியம்.//

    சதீஷ்! சரியா நேரத்தில சரியான கருத்தை சொல்லியிருக்கீங்க! commonwealth games நடக்க இருக்கிற தருணத்தில உடற்பயிச்சிகளை கொடுக்கின்ற விளையாட்டுக்களை ஊக்குவிப்பது எல்லோருடைய கடமை ஆகிறது. வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. //இன்றைய வேகமான காலநிலையில் ஒரு மாணவன் காலை முதல் இரவு தூங்கும் வரை விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அவனுக்கு படிப்பு படிப்பு தான். படிப்பு முக்கியம் தான் அந்த அளவிற்கு அவனது உடல் நிலையும் முக்கியம்.//

    சதீஷ்! சரியா நேரத்தில சரியான கருத்தை சொல்லியிருக்கீங்க! commonwealth games நடக்க இருக்கிற தருணத்தில உடற்பயிச்சிகளை கொடுக்கின்ற விளையாட்டுக்களை ஊக்குவிப்பது எல்லோருடைய கடமை ஆகிறது. வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. ஒரு மாணவனுக்கு சமூதாயத்தில் உயர்ந்து நிற்பதற்கு கல்வி அவசியம். அதே போல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற் கல்வி அவசியம்.


    .....பள்ளி நிறுவனங்களும் பெற்றோர்களும் இதன் அவசியத்தை உணர வேண்டும். நல்ல பதிவு.

    ReplyDelete
  10. நல்ல பதிவுங்க.
    நான் படித்த பள்ளியில் உடற்பயிற்சி வேளையில் தோட்டமிடல் போன்ற வேலை கொடுத்தனர்.

    ReplyDelete
  11. பயனுள்ள நல்ல சரியான பதிவு. வாழ்த்துக்கள் சங்கவி.

    ReplyDelete
  12. அவசியமான பகிர்வு. முக்கியமாக பெற்றோர்கள் உணர வேண்டும். படிப்பிலும், மதிப்பெண்கள் வாங்குதலிலும் காட்டும் அக்கறை விளையாட்டில் இல்லை. மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரமாக மாற்றி கொண்டிருக்கின்றனர்

    ReplyDelete
  13. நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த செல்வதிற்கு உடற்கல்வி மிகவும் அவசியம் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது. நன்றி.

    ReplyDelete
  14. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த செல்வத்திற்கு உடற்கல்வி மிகவும் அவசியம் என்பதை இந்த பதிவு உணர்த்துவதாக அமைந்துள்ளது. நன்றி.

    ReplyDelete
  15. //இன்றைய தேதிக்கு பெரும்பான்மை அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியரே கிடையாது.. தமிழக அரசு இதற்காக இன்றுவரைக்கும் ஒரு துரும்பை கூட கிள்ளவில்லை ..//

    valid point!

    ReplyDelete
  16. ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

    தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

    இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

    வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
    உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

    நன்றி..

    அன்புடன்...
    பாரத்பாரதி-க்காக

    எஸ்.பாரத்,
    மேட்டுப்பாளையம்...

    ReplyDelete
  17. அருமையான பதிவு சங்கவி.., மன நலத்துடன் உடல் நலம் மிக மிக அவசியம். ஆனால் அரசுத்துறைகளில் இருந்து இப்போதைக்கு இதில் கவனம் செலுத்த போவதில்லை. ப்ளாக்கை படித்தோமா, பதிலை போட்டோமா என்றில்லாமல் இதை செயல் படுத்த என் நண்பர்கள் அனைவருக்கும் உங்கள் கருத்தை இ மெயில் பண்ண இருக்கிறேன்-நீங்கள் ஒப்புதல் அளித்தால்..

    ReplyDelete
  18. வணக்கம் கந்தசாமி சார்...

    நிச்சயம் அனைவருக்கும் மின்அஞ்சல் அனுப்புங்கள்... நமக்குத் தேவை நாளைய சமுதாயம் நல்ல உடல் நலத்துடன் வாழ விளையாட்டு அவசியம் என அறியவேண்டும்...

    ReplyDelete
  19. thanx man i used this for my tamil project to write abt physical education THANX SO MUCH

    ReplyDelete