Thursday, September 16, 2010

கல்விக் கொள்ளை என்ன தான் தீர்வு


தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் கல்விக்கொள்ளைக்கு இனி தடை இல்லை  நீதிபதி கோவிந்தராசன் தலைமையில் ஆய்வு செய்த குழு அரசுக்கு அவர்களின் கருத்தை தெரிவித்ததோடு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவுருத்தியது இதை அரசும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. தனியார் பள்ளியின் அமைப்புகள் நீதிமன்றத்தில் முறையிட்டு இன்று இடைக்கால தடை பெற்று விட்டனர். தடை பெற்றது இப்போது தான் ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னரே எல்லா தனியார் பள்ளியிலும்  ஒரு தொகையை வசூலித்துவிட்டு மாணவர் சேர்க்கையை ஆரம்பித்து வெற்றிகரமாக பள்ளியை நடத்திக்கொண்டு இருக்கின்றனர் இது தான் இன்றைய நடைமுறை.

முதலில் தனியார்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் தனது குழந்தைகளுக்கு பள்ளி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர் இது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் ஆனால் எத்தனை பெற்றோர் இப்பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் என்று புகார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நிச்சயம் விரல் விட்டு எண்ணினாலும் யாரும் இல்லை. பெற்றோர்களின் எண்ணம் இந்த பள்ளியில் என் குழந்தைக்கு படிக்க சீட் கிடைத்தால் போதும் பணம் எவ்வளவு வேண்டுமானலும் கட்ட நான் தயார் என்று சொல்லது தான் தனியார் பள்ளியின் பலம். இப்படி பல பெற்றோர் இருக்கையில் இவர்கள் கட்டணத்தை அதிகரித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

இன்று நம் மாநிலத்தில் கட்டணம் அதிகம் வாங்கியதால் இப்பள்ளி தடை செய்யப்பட்டுள்ளது என்று எதாவது ஒரு கல்விக்கூடம் இருக்கிறதா என்றால் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். எல்லா கல்விக்கூடத்திலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் நாங்கள் வாங்குகிறோம் என்று சொல்வார்கள் அதைக் கட்டிய பெற்றோருக்குத்தான் தெரியும் எவ்வளவு வர்ஙகினார்கள் என்று அப்பெற்றோர்கள் கொடுத்த தொகையை சொல்ல முன்வருவார்களா என்றால் நிச்சயம் தயங்குவார்கள்.

இன்று நடுத்தர மக்களுக்கு இருக்கிற ஒரே தீர்வு நீதிமன்றம் தான் தனியார் பள்ளிகள் இங்கு இடைக்கால தடை பெற்று விட்டனர் நீதிமன்றம் நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இடைக்கால தடை வழங்கியாச்சு. மீண்டும் எத்தனை கோவிந்தராசர் கமிட்டி வந்தாலும் தடை வாங்குவது தொடரும். கட்டணம் வசூலிப்பதும் தொடரும் கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள்.

இதற்கு தீர்வு என்று பார்த்தால் நிறைய இருக்கு அது நடக்குமா என்பது சந்தேகமே...

19 comments:

  1. சந்தேகம் தான் நண்பா.. மாற்றம் கொஞ்சம் கடினம்..

    ReplyDelete
  2. இடைக்கால தடை இருக்கும் வரை இப்படி தான் நடக்கும்

    ReplyDelete
  3. arasu palligalai membadutha vendum pin petrorgal ange kulandaigalai serppar

    ReplyDelete
  4. அதிக கட்டணம் என்றாலும் கட்ட தயாராக உள்ள பெற்றோர் முதலில் திருந்த வேண்டும்.

    ReplyDelete
  5. //இன்று நம் மாநிலத்தில் கட்டணம் அதிகம் வாங்கியதால் இப்பள்ளி தடை செய்யப்பட்டுள்ளது என்று எதாவது ஒரு கல்விக்கூடம் இருக்கிறதா என்றால் உட்கார்ந்து யோசிக்க வேண்டும்.

    உண்மைதான் நண்பா ... எவ்வளவுதான் பணம் கேட்டாலும் கொடுத்து படிக்க வைக்க மேல்தட்டு மக்கள் தயாராக இருக்கும் வரை கல்வி கொள்ளை நடந்து கொண்டேதான் இருக்கும்...

    ReplyDelete
  6. கல்வி வியாபாரம் ஆகி போச்சு! அதை வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்க்க வேண்டியது தான்...

    ReplyDelete
  7. மொத்தத்தில் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் மாற வேண்டும் .. தங்களால் கல்விக்கட்டணம் செலுத்த முடியுமா என்பதை அவர்கள் மதிப்பீடு செய்திட வேண்டும் .. அப்படி பண்ணுவதை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளை குறை கூறிக்கொண்டிருப்பது சரியல்ல.!

    ReplyDelete
  8. எல் கே ஜி முதல் எம் பி பி ஸ் வரை இந்த நிலை தான்... என்ன சொல்லி யாரை கேட்ப்பது...

    கல்வி நிறுவனகள வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாய் இருக்கிறார்கள் மற்றவர்கள் அவர்களுக்கும் அரசுக்கும் மிக நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்...

    ReplyDelete
  9. தொடரும் கேள்விக்குறிகள்! :-(
    பகிர்வு அருமை!

    ReplyDelete
  10. //இதற்கு தீர்வு என்று பார்த்தால் நிறைய இருக்கு அது நடக்குமா என்பது சந்தேகமே...//


    அதே..அதே..

    ReplyDelete
  11. எல்லா கல்விக்கூடத்திலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் நாங்கள் வாங்குகிறோம் என்று சொல்வார்கள் அதைக் கட்டிய பெற்றோருக்குத்தான் தெரியும் எவ்வளவு வர்ஙகினார்கள் என்று அப்பெற்றோர்கள் கொடுத்த தொகையை சொல்ல முன்வருவார்களா என்றால் நிச்சயம் தயங்குவார்கள்.

    ...black or white money?

    ReplyDelete
  12. பெற்றோர்கள் மாற வேண்டும்

    ReplyDelete
  13. எல்லாமே நாடகம் தான்....பஜ கோவிந்தம் பாடிட்டே போக வேண்டியது தான்.

    ReplyDelete
  14. வியாபார யுக்தியில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதை உணர்த்தும் சமூக சிந்தனை பதிவு. இவர்களை திருத்த இயலாது. மக்களும் திருந்த மாட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளை கடன்வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். (என்னத்த சொல்லுவது)
    இனி கல்விக் கட்டண கொள்ளைகள் தொடர்கதை தான்......

    ReplyDelete
  15. இவனுங்க எல்லாம் கல்வித் தந்தைகளாம்.தே.பசங்க. இதுல எங்க போய் நம்ம பசங்க உலகத் தரத்தோட போட்டி போடறது. எவனாவது மாணவர்களோட படிப்பைப் பத்திக் கவலைப்படறானுகளா பாருங்க, பரதேசிங்க. முன்னை எல்லாம் மாணவர்கள்தான் ஸ்ட்ரைக் செய்வாங்க. இப்ப பிரின்ஸ்பாலுங்க எல்லாம் சேர்ந்து ஸ்ட்ரைக் பண்றாங்க. இவனுககிட்ட படிச்சு பசங்க விளங்கிடுவானுங்க. பன்னாடைங்க. நல்லா வருது வாயில. விளங்கவே மாட்டானுங்க. கவிஞர் தாமரை சமீபத்தில் எழுதின ஒரு அறப் பாடலை இவங்களுக்கு சமர்ப்பிக்கறேன். அவ்வளவுதான் என்னால செய்ய முடியும்.

    ReplyDelete
  16. கல்வி என்றோ வியாபாரம் ஆனது இப்போது அரசியலும் ஆகிவிட்டது..என்ன சொல்வது தெரியலை சுயமாய் செயல்படவதென்பது இனி வரும் காலங்களில் இயலுமா தெரியலை..எல்லாம் பணம் அரசியல் என்ற நோக்கிலேயே செயல்படுகிறது..

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு நண்பரே

    இதற்கெல்லாம் எப்போது விடிவு வரும் என்று தெரியவில்லை

    ReplyDelete