தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் கல்விக்கொள்ளைக்கு இனி தடை இல்லை நீதிபதி கோவிந்தராசன் தலைமையில் ஆய்வு செய்த குழு அரசுக்கு அவர்களின் கருத்தை தெரிவித்ததோடு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவுருத்தியது இதை அரசும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. தனியார் பள்ளியின் அமைப்புகள் நீதிமன்றத்தில் முறையிட்டு இன்று இடைக்கால தடை பெற்று விட்டனர். தடை பெற்றது இப்போது தான் ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னரே எல்லா தனியார் பள்ளியிலும் ஒரு தொகையை வசூலித்துவிட்டு மாணவர் சேர்க்கையை ஆரம்பித்து வெற்றிகரமாக பள்ளியை நடத்திக்கொண்டு இருக்கின்றனர் இது தான் இன்றைய நடைமுறை.
முதலில் தனியார்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் தனது குழந்தைகளுக்கு பள்ளி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர் இது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் ஆனால் எத்தனை பெற்றோர் இப்பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் என்று புகார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நிச்சயம் விரல் விட்டு எண்ணினாலும் யாரும் இல்லை. பெற்றோர்களின் எண்ணம் இந்த பள்ளியில் என் குழந்தைக்கு படிக்க சீட் கிடைத்தால் போதும் பணம் எவ்வளவு வேண்டுமானலும் கட்ட நான் தயார் என்று சொல்லது தான் தனியார் பள்ளியின் பலம். இப்படி பல பெற்றோர் இருக்கையில் இவர்கள் கட்டணத்தை அதிகரித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.
இன்று நம் மாநிலத்தில் கட்டணம் அதிகம் வாங்கியதால் இப்பள்ளி தடை செய்யப்பட்டுள்ளது என்று எதாவது ஒரு கல்விக்கூடம் இருக்கிறதா என்றால் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். எல்லா கல்விக்கூடத்திலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் நாங்கள் வாங்குகிறோம் என்று சொல்வார்கள் அதைக் கட்டிய பெற்றோருக்குத்தான் தெரியும் எவ்வளவு வர்ஙகினார்கள் என்று அப்பெற்றோர்கள் கொடுத்த தொகையை சொல்ல முன்வருவார்களா என்றால் நிச்சயம் தயங்குவார்கள்.
இன்று நடுத்தர மக்களுக்கு இருக்கிற ஒரே தீர்வு நீதிமன்றம் தான் தனியார் பள்ளிகள் இங்கு இடைக்கால தடை பெற்று விட்டனர் நீதிமன்றம் நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இடைக்கால தடை வழங்கியாச்சு. மீண்டும் எத்தனை கோவிந்தராசர் கமிட்டி வந்தாலும் தடை வாங்குவது தொடரும். கட்டணம் வசூலிப்பதும் தொடரும் கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள்.
இதற்கு தீர்வு என்று பார்த்தால் நிறைய இருக்கு அது நடக்குமா என்பது சந்தேகமே...