Thursday, July 29, 2010

நாட்டுப்புறப்பாட்டு கும்மிப்பாட்டு

நாட்டுப்புறப்பாடல்களில் கும்மிப்பாட்டும் ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததுதான். நம் முன்னோர்கள் ஊர்த்திருவிழா என்றால் அதில் நிச்சயம் பெண்களின் கும்மிப்பாட்டு இடம் பெறும் ஆனால் இன்று கும்மிப்பாட்டு கிட்டத்தட் அழியும் நிலையில் உள்ளது ஒன்று என்று சொன்னால் அது மிகையாகது.

இன்று தமிழக குக்கிராமங்கிளில் எங்கோ ஒரு மூலையில் கும்மிப்பாட்டுக்கலை நிச்சயம் இருக்கும் நானும் குக்கிராம்தைச் சேர்ந்தவன் தான் ஆனால் எங்கள் பகுதியில் இப்போது இக்கலையே இல்லை. விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒரு அரைமணிநேர நிகழ்ச்சியாகத்தான் பார்க்க முடிகிறது. நாளைய சமுதாயத்திற்கு இது தான் கும்மிப்பாட்டு என்று தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியைத்தாக் காண்பிக்க முடியும்.

சில கிராமங்களில் பெண்கள் நெல் அறுவடை முடிந்து அறுவடையில் கிடைக்கும் நெல்லை பங்கு போடுவார்கள் பங்கு பிரித்த பின் அனைவரும் கொஞ்சம் பணம் போட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து அன்று ஒரு மூன்று மணி நேரம் கும்மியடித்து பாடிக்கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டாடுவர். மற்றும் ஊரின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அந்த கிராமத்தின் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர்.

கும்மிப்பாட்டு பெண்களால் ஒரு குழுவாக வட்டமிட்டு நின்று கைகளால் கும்மியடித்து கீழே குனிந்து மீண்டும் திரும்பி வட்டமிட்டவாரே பாடிக்கொண்டு நளினமாக ஆடியும் வருவார்கள். ஆடும் போது நடுவில் குத்துவிளக்கு அல்லது பூக்கூடை வைத்து இருப்பார்கள்.

கும்மிப்பாடல்கள் நம் தமிழர்களின் தொன்று தொட்டு உண்டு சித்தர்கள் முதல் பாரதியார் மற்றும் இன்று வரை உள்ள கவிஞர்கள் கும்மிப்பாடல்களை எழதி உள்ளனர்.. இதில் இப்பாடல் ரொம்ப பிரபலம்....

கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!

கும்மிப்பாட்டு திருவிழா காலங்களில் பாடும் போது நக்கலும் நையாண்டியுமாக கேட்பவரை இன்புறச்செய்யும்...

கும்மியடி பெண்ணே! கும்மியடி!
கொங்க குலுங்கவே கும்மியடி
நம்மப் பொங்களும் சேர்ந்து – அவர
நாடிக் கும்மி யடியுங்கடி – அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!
நம்பிடக் காத்திட வந்தவண்டி – அவரை
நாடிக் கும்மி யடியுங்கடி - அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!

சித்திரைத் திருவிழாக்களில் இன்னும் எங்கள் ஊரில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் சன்னதி முன்னால் வைத்து கும்மியடிப்பார்கள்..எல்லாரும் சுற்றி நின்று  பார்ப்பதுண்டு..


இப்படிதான் சரணம்...செல்கிறது..


தன்னன நாதினம்    தன்னன நாதினம்       தன்னன நாதினம்      தன்னானே..
பெண்ணைப் பெண்ணே கும்முதல்..
*கண்ணாடிக் கன்னத்தில் வேர்க்கு தடி - உந்தன்
கடைக்கண்ணு எங்கேயோ பார்க்கு தடி
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி!
பக்தியாக
**மாயன் அழகு மலை மேலே - என்றும்
மல்லிகைப் பூ வாசம் வீசுதடி
நாயன் அவன் புகழே பாடி - இள
நங்கை யரே கும்மி அடிங்கடி*
*
**நந்தன் மதலையைக் கும்பிடு வோம் - அந்த
நாரணன் தாளையே நம்பிடு வோம்
செந்திரு மார்பனை சுந்தர ராஜனை
செந்தமிழ் பாடியே கும்மி யடி
சாத்தின கதவு திறக் காமல் - என்றும்
சந்தன காப்புக் கலை யாமல்
சத்தியம் காக்கும் கருப்பண்ண சாமியை
சரணம் என்றே ஒரு கும்மி யடி 
இன்று இக்கலை அழிவை நோக்கி இருந்தாலும் இக்கும்மிப்பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாது என்றால் அது மிகையாகது....

37 comments:

  1. ஆடியோ லிங்க் சேர்த்து விட்டுருக்கலாமே... மெட்டுடன், வாசித்து கொள்ள நல்லா இருந்தது... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இதைப் நேரில் பார்க்கத்தான் இனி வாய்ப்பில்லை! இது பற்றிய தொகுப்புகள், காணொளி இருந்தாலாவது சேகரித்து வைக்கவேண்டும் பங்காளி....

    இது போல் இன்னும் பல விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

    பிரபாகர்...

    ReplyDelete
  3. வாங்க சித்ரா வாங்க...

    வீடியோ லிங்க் சரியானது இல்லை... தேடுகிறேன் கிடைத்தால் அடுத்த பதிவில் நிச்சயம் சேர்த்து விடலாம்....

    ReplyDelete
  4. வாங்க ஜெகதீஸ்வரன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  5. வாங்க பங்காளி...

    நிச்சயம் கும்மிப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டுக்கள் எல்லாம் கிடைத்தால் சேகரிக்க வேண்டும்...

    ReplyDelete
  6. சொல்லிக் கேட்டிருக்கிறேன்.பாடிக் கண்டதில்லை சங்கவி.சில பழைய திரைப்படங்களில் கண்டிருக்கிறேன்.
    அழிந்துகொண்டிருப்பவைகளில் இதுவுமொன்று.

    ReplyDelete
  7. அப்படியே நீங்க கொடுத்த சந்தத்துக்கு ஏத்தா மாதிரி பாடிப்பார்த்தனுங்கோ! சூப்பராயிருக்குது! திருநேலி, மதுர டிஸ்ரிட்டுலேயும் இன்னும் கோவில்லே கும்மியுண்டு. அசத்தலுங்கோ! :-)

    ReplyDelete
  8. இங்கே நவராத்திரி சமயங்களில் கும்மி, கோலாட்டம் இதெல்லாம் பாக்கும்போது, நம்மூர்ல இந்தக்கலை அழிஞ்சுக்கிட்டு வர்றது ஞாபகம் வருது.. வருத்தமா இருக்கு.

    ReplyDelete
  9. வாங்க ஹேமா...

    நிச்சயம் அழிந்து கொண்டுருப்பவைகளில் இதுவும் ஒன்று....

    ReplyDelete
  10. வாங்க சேட்டை...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. வாங்க அமைதிச்சாரல்...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  12. சங்கவி,
    எங்கள் ஊர் அம்மன் கோயில்களில்
    முளைப்பாரி எடுக்கும் போது கும்மியும், கும்மி பாட்டும் இன்னும் இருக்கின்றன.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  13. வணக்கம் சங்கவி,
    மிஹ மிஹ அருமை. இவை மட்டும் அல்ல தாலட்டு பாடல்களும் சேகரிகபடவென்டியவை... இப்பொழுதெல்லம் யார் தாலட்டுபாடி குழந்தையை தூங்க வைகிரார்கள். இன்னும் கொஞ்சம் நாளிள் அது அழிந்தே பொயிவிடும்.!!!

    ReplyDelete
  14. நல்ல பதிவு

    புலவர் இராசுவின் தாது வருட பஞ்ச கும்மிகள் புத்தகம் படித்துப் பாருங்க.

    பஞ்சத்தின் கோரப்பிடியையும் மிக அழகாக விவரித்துள்ளனர் நம் முன்னோர்கள்

    ReplyDelete
  15. பெண்கள் கும்மி பார்த்ததில்லை. மாரியம்மன் கோவிலில் ஆண்கள் கும்மிபாட்டை கேட்டு இருக்கிறேன். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு முப்பது வயதையொற்றிய வாலிபர்கள், மங்கையரை கவர, மாரியம்மன் கம்பம் ஆடும் போது மத்தளம் காய்ச்சும் இடைவெளியில் கும்மி பாட்டி பாடி ஆடுவர். இப்போது இது வெகுவாக குறைந்து விட்டது.

    அந்த கடைசிப்பாட்டு 'சுப்ரமணியபுரம்' படத்தில் வந்துள்ளது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. நல்ல பதிவு. அழிந்து வரும் கலைகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  17. நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete
  18. ///பெண்ணைப் பெண்ணே கும்முதல்.///
    ஓ .. இங்கிருந்துதான் கும்முறது வந்திருக்குமோ ...!!

    ReplyDelete
  19. அப்புறம் திருஞான சம்பத் அண்ணனை வழிமொழிகிறேன் ..
    அதே போல எண்கள் ஊரிலும் பார்த்திருக்கிறேன்..

    ReplyDelete
  20. கும்மி அழிந்து வரும் ஒரு தமிழ்க்கலை வடிவம்....
    இனி ஏக்கம் தான் மிச்சம்.
    பகிர்வுக்கு நன்றிங்க நண்பா.

    ReplyDelete
  21. வாங்க அம்பிகா....

    முளைப்பாரி வைத்து கும்மி அடிப்பதை பார்க்கும் அழகே தனி....

    ReplyDelete
  22. வாங்க ரமேஷ்....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  23. வாங்க ஆரூரன் விசுவநாதன்...

    புலவர் இராசுவின் புத்தத்தைப் பற்றி சில தகவல்கள் உங்கள் பதிவில் பார்த்த ஞாபகம்..

    ReplyDelete
  24. வாங்க திருஞானம்...

    தங்கள் வருகைக்கம், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  25. வாங்க பின்னோக்கி...

    தங்கள் வருகைக்கம், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  26. வாங்க சசிகுமார்

    தங்கள் வருகைக்கம், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  27. வாங்க செல்வக்குமார்...

    ஆமாங்க இங்கிருந்தும் வந்திருக்கலாம்....

    ReplyDelete
  28. வாங்க கருணாகரசு...

    இனி நிச்சயம் இந்த மாதிரி நாட்டுப்புறப்பாடல்கள் இல்லாம் ஏக்கம் தான் இருக்கும்....

    ReplyDelete
  29. நிறைய இதுமாதிரி காணாமல் போய்விட்டது...இவையெல்லாம் எங்காவது பார்க்கும்போது பதிவு செய்து வைக்கவேண்டும்...

    ReplyDelete
  30. நிறைய இதுமாத்ரி காணாமல் போய்விட்டது...நீங்களாவது பதிவு பண்ணி வையுங்க...

    ReplyDelete
  31. நல்ல பதிவு. அழிந்து வரும் கலைகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  32. வாங்க கண்ணகி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  33. வாங்க குமார்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  34. மிக அருமையான எதுகை மோனை சந்தம் உள்ள கும்மிப் பாட்டு சங்கவி.. ரசித்துப் படித்தேன்..

    ReplyDelete
  35. நல்ல பகிர்வு சங்கவி.

    ReplyDelete
  36. படங்களில் மட்டும் பார்த்திருக்கிறேன்

    அப்பறம் இங்க தான்

    அந்த கும்மிபாட்டு வரிகள் செம செம

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete