Sunday, July 11, 2010

வந்திருச்சு "மெட்ராஸ்-ஐ"



தற்போது அனைத்துப்பகுதிகளிலும் மெட்ராஸ்-ஐ என்னும் கண் நோய் பொதுமக்களை தாக்கி வருகின்றது மற்றும் வேகமாக பரவி வருகிறது. 

மெட்ராஸ்-ஐ

கருவிழியை சுற்றியுள்ள வெள்ளை படலத்தின் மீது கண்ணுக்கு தெரியாமல் வைரஸ் கிருமி ஒட்டிக்கொள்ளும். இதனால், கண்கள் அதிகம் சிவப்பாக இருக்கும். கண்ணில் அதிகமாக அழுக்கு வரும் கண் எரிச்சல் உண்டாகும், வலிக்கும், தண்ணீர் சொட்டும், கண்கள் கூசும் இதைத்தான் மெட்ராஸ்-ஐ என்கின்றனர்.

எப்படி பரவுகிறது

இந்நோய் தானாக வர வாய்ப்பில்லை யாருக்கேனும் இருந்தால் அவர்கள் மூலம் பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதாலோ அல்லது கிருமிகள் காற்றில் பரவுவதாலோ இந்நோய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இந்நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, முகம் துடைக்கும் துணிகளை பயன்படுத்தினால் மட்டுமே கிருமிகள் எளிதில் பரவும். கண்நோய் பாதித்தோர் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

அறிகுறிகள்

கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்டவை இந்நோய்க்கான அறிகுறிகள்.

என்ன செய்ய வேண்டும்

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாகவே மருந்துகள் வாங்கி போட்டுக்கொள்ளக் கூடாது கண் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
சொட்டு மருந்துகளை கண்ணில் போடும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
கண்ணில் எதிர்ப்பு சக்தி குறையும், முறையான சிகிச்சை பெற்றால் 5 நாட்களில் குணமாகிவிடும்.
கண்நோய் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறு, கோழி இரத்தம் போன்றவற்றை விடக்கூடாது.

பரவாமல் தடுக்க

இந்நோய் மற்றவர்களை தாக்கமல் இருக்க மூக்கு கண்ணாடிகளை பயன்படுத்தலாம்

7 comments:

  1. //கண்நோய் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறு, கோழி இரத்தம் போன்றவற்றை விடக்கூடாது.//


    இது போலவும் செய்றாங்களா நம் மக்கள், நல்ல பதிவு பயனுள்ள நண்பா

    ReplyDelete
  2. நல்ல பகிர்வுங்க... நன்றி...

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு பங்காளி...

    பிரபாகர்...

    ReplyDelete
  4. கத்திரி முடிந்து ஆனி-ஆடியில் வெப்ப சலனம் காரணமாக மெட்ராஸ் ஐ மற்றும் அம்மை நோய்கள் பரவும்.

    சிறிது எச்சரிக்கையாகவும் சுத்தமாகவும் நாம் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. தங்களின் பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  6. இந்நோய் மற்றவர்களை தாக்கமல் இருக்க மூக்கு கண்ணாடிகளை பயன்படுத்தலாம்////


    அப்ப கண்ணுக்கு போடுற கண்ணாடிய பயன்படுத்த கூடாதா சார்

    ReplyDelete