Friday, July 16, 2010

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது.....

சிவராமன் இன்ஜனீயரிங் படித்து விட்டு தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வருகிறான் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை முப்போகம் விளைச்சல் கண்டு வருகிறான். இந்த வருமானத்தை வைத்து 5 கறவை மாடுகள் வாங்கி பால் விக்கிறான். ஏண்டா படிச்சிட்டு வேலைக்கு செல்லாம் இல்ல இப்படி காட்டிலும் மேட்டிலும், வெய்யிலிலும் ஏன் இப்படி கிடக்கிற என்று யார் கூறினாலும் இதில் இருக்கும் சுகம் அங்கு இல்லை என்று கூறுவான்.

தனது படிப்பையும் அறிவையும் வைத்து குறுகிய காலத்தில் என்ன பயிர் செய்தால் இலாபம் என அறிந்து விவசாயம் செய்து வருகிறான். சிவராமனுக்கு இப்போது வயது 32 எங்கு பெண் பார்க்க சென்றாலும் பையன் பி.இ படித்து விட்டு விவசாயம் செய்கிறானா எப்படி இவனை நம்பி பெண் கொடுப்பது என இதுவரை 50 பேருக்கு மேல் சொல்லி இருப்பார்கள். அனைத்துக்கும் இவன் பதில் எனக்கு என ஒருத்தி எங்காவது பிறந்திருப்பாள்.

சிவராமனின் பெரியப்பா மகன் ராஜா பெங்களூரில் வேலையி இருக்கிறான் அவனுக்குத் திருமணம் அவன் திருமணத்தில் அனைத்து வேலைகளையும் இவனே செய்தான் இதைப்பார்த்த ஒரு பெரியவா தரகரிடம் சொல்லி அந்தைப்பையன் ஜாதகம் வாங்கி வா என அனுப்பு தரகர் ஜாதகத்தை வாங்கிக்கொண்டு பையன் பி.இ படித்து விட்டு பெங்களூரில் வேலையில் இருந்திருக்கிறான் இப்ப அந்ந கம்பெனி சாத்திட்டாங்க இப்பத்துக்கு வீட்டில் விவசாயம் பார்க்கிறான் மீண்டும் வேலைகிடைத்தால் பெங்களூர் செல்வான் என ஒரு பிட்டைப்போட இவர்களும் நம்பி வேலைகிடைக்கட்டும் பார்க்கலாம் என்று இருந்தனர்.

பெரியர் மட்டும் புரோக்கரை அழைத்துக்கொண்டு சிவராமன் வீடு செல்ல பெரியவருக்கு சிவராமனின் விவசாயம் பிடித்துப்போக உனக்கே என் பேத்தியை திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி சென்று விட்டார். சிவராமனும் அவர் நண்பர்களும் சேர்ந்து புரோக்கரிடம் பணத்தை கொடுத்து பெண்ணின் பெயர் மற்றும் போன் நம்பரைக்கேட்க புரோக்கர் பேர் மட்டும் லாவண்யா மணிகாரன்பாளையம் என்று சொல்லி சென்று விட்டார்.

சிவராமன் நெல் அரைக்க மணியகாரன்பாளையம் சென்ற போது புரோக்கரிடம் பேசி லாவண்யாவை சந்திக்க பல முறை முயற்சி செய்தும் கடைசியாக அந்த ஊர் மளிகை கடையில் சந்திக்கிறான் ஆனால் பேச இயலவில்லை மீண்டும் தரகரிடம் பேசி லாவண்யா வீட்டு போன் நெம்பர் வாங்கி சில சிக்கல்களுக்கு அப்புறம் லாவண்யாவிடம் பெரியவர் அறிமுகப்படுத்த கைபேசி எண்ணை வாங்கி ஒரு 2 நாட்கள் பேச ஆரம்பித்தான்.

லாவன்யாவின் அப்பா விவசாயம் பார்க்கிற பையனுக்கெல்லாம் என் பெண்ணை தரமாட்டேன் கைநிறைய சம்பளம் வாங்கும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவருடன் தான் திருமணம் என கன்டிப்பாக கூறு லாவன்யா அப்பா பேச்சை எதிர்க்காமல் ஒரு வாரம் பேசிய சிவராமனை தவிர்த்தாள்.

ஒரு 6 மாதத்திற்குப் பின் சென்னையில் பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்யும் சத்யாவிற்கும் லாவன்யாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சத்யா சென்னையில் பன்னாட்டு கம்பெனியில் வேலை எனவும் 60 ஆயிரம் சம்பளம் எனவும் சொல்லிக்கொண்டனர். மணமக்கள் இருவரையும் வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. அனைத்தும் பேசி முடித்து திருமண பத்திரிக்கையும் அடித்து அனைவருக்கும் கொடுத்தனர். அனைவரும் திருமண நாளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

திருமணத்திற்கு ஒரு நாள் முன்னர் லாவன்யாவின் ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில் இருந்து போன் இந்தப் பையனைப் பற்றி விசாரித்தீர்களா இந்த பன்னாட்டு நிறுவனத்தில் தான் வேலை செய்கிறான என ஏன் என கேட்க இல்லை என் மகளும் அதே நிறுவனத்தில் தான் வேலை செய்கிறாள் பத்திரிக்கையில் போட்டு இருக்கும் பேரில் அங்கு யாரும் சாப்ட்வேர் இன்ஜினியர் இல்லை என சொல்ல என்ன சொல்றீங்க நாளை இரவு திருமணம் என சொல்ல சென்னை பன்னாட்டு நிறுவன போன் நெம்பர் வாங்கியும் அங்கிருந்த உறவினர்களை போய் பார்க்க அந்நிறுவனத்தில் இருப்பது சத்யாவின் நண்பனாம். சத்யா பி.இ முடிக்காமல் சென்னையில் செல்போன் கடை வைத்தி இருக்கிறார் என அப்போது தான் அவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது.

ஊரில் பஞ்சாயத்தை கூட்டி கேட்க சத்யா உண்மையை சொல்லிவிட்டான் செல்போன் கடை தான் வைத்திருக்கிறேன் ஆனால் மாதம் 60 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிறேன் என சொல்ல பெண் வீட்டார் உடனே விசாரிக்க அதுவும் பொய் என தெரிந்து மாப்பிள்ளை வேண்டாம் என சொல்லி இதுவரை செலவு செய்த பணத்தை வாங்கி பஞ்சாயத்து முடித்தது. குறித்த நேரத்தில் வேறு ஒரு நல்ல மாப்பிள்ளையை பிடித்து அதே மனவறையில் என் மகளுக்கு திருமணம் என மாப்பிள்ளை தேட வீட்டு பெரியவர் சிவராமனைச் சொல்ல பெண் வீட்டாரும் சரி என அனைவரும் சனிக்கிழமை காலை சென்று நிலமையை விளக்கினார். சிவராமன் தரப்பும் சம்மதம் தெரிவிக்க உடனே மாப்பிள்ளைக்கு துணி எடுத்து அன்று மாலை திருமண வரவேற்பில் லாவண்யாவுடன் சிவராமன். அடுத்த நாள் காலை முகூர்த்தம் முடிந்தது. என்ன சிவராமன் அனைவரையும் அழைக்க முடியவில்லை.

இது என் நண்பனின் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். வித்தியாசமான திருமணத்தில் இதுவும் ஒன்று என்பதால் இந்நிகழ்ச்சியை பதிவாக்கினேன். நான் இன்னும் சிவராமனை பார்க்கவில்லை அடுத்த வாரம் சந்திப்பேன் என நினைக்கறேன்.

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் என்று கவிஞரின் வாக்கு எனது நண்பன் விசயத்திலும் உண்மையானது.

10 comments:

  1. சிவராமன் என்ற மனிதருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..........
    சிவராமன் போல எல்லோருக்கும் இது போல அமையுமா என்ன ?
    மத்தபடி கல்யாணம் <= விபச்சாரம் என்பது இது போன்ற சம்பவங்களால் உறுதி படுத்தபடுகிறது ........
    நமது சமுதாயத்தில் கல்யாணம் செய்யா விட்டால் ...அவன் எதோ பெரியதாக இழந்து விட்டான் என்பது போல பார்ப்பது எரிச்சலை தான் தருகிறது ....

    மேலும் படிக்க http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html

    ReplyDelete
  2. விவசாயம் பார்ப்பவர்களுக்கு மட்டும் பெண் தர மறுக்கவில்லை. குல தொழில் என்று அறியப்படுகிற நெசவு தொழில், பொற்கொல்லர்கள், தச்சு வேலை பார்ப்பவர்கள் என்று எவருக்கும் பெண் தர மறுக்கிறார்கள். சாப்ட்வேர் பொறியாளர்களுக்கு தான் எல்லோரும் அலைகிறார்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சிவராமன் & லாவண்யா...

    ReplyDelete
  4. Real life incidents are sometimes strange than what we see in Film or stories. This is one such incident.

    ReplyDelete
  5. சிவராமன் ரொம்பவே பாவம்.. என்னைக் கேட்டால் அவர் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டு இருக்கக் கூடாது நண்பா..

    ReplyDelete
  6. பொண்ணு வீட்டுக்காரங்க லோக்கல்ல இருக்கற நல்ல மாப்ளைக்கு பொண்ணு தர மாட்டாங்க,ஃபாரீன் ஃப்ராடு மாப்ளைக்கு வலிய போய் குடுப்பாங்க

    ReplyDelete
  7. //நமது சமுதாயத்தில் கல்யாணம் செய்யா விட்டால் ...அவன் எதோ பெரியதாக இழந்து விட்டான் என்பது போல பார்ப்பது எரிச்சலை தான் தருகிறது ....//
    its ur view not societys view...

    wishes to shivraman and lavanya

    ReplyDelete
  8. வாழ்வு எவ்வளவு சிக்கலாய் இருகிறது!

    ReplyDelete
  9. Convey my wishes to Sivaram.Please ask him to explain after 40 years of computer engineers.Ask s.sram to explain for his blood uncle his expense and computer engineers activity .Sivaram also explain to wife to go through in agriculture that is 100 sucess

    ReplyDelete
  10. @LK ...

    ///its ur view not societys view...///


    இருக்கலாம்...சில நேரங்களில்........

    ReplyDelete