Thursday, April 15, 2010

ஒரு தமிழன் வேஷ்டி அணிந்தால் அது இன்னொரு தமிழனுக்கு கேவலமா?

இந்த வருட தமிழ்புத்தாண்டு அன்று எங்கள் அலுவலகத்தில் ஆண்கள் வேஷ்டி அணிந்தும் பெண்கள் புடவையுடன் வரலாம் என்று அறிவிப்பு வெளியானதுமே எனக்கு ரொம்ப சந்தோசம். எனக்கு பிடித்த உடைகளில் வேஷ்டி ரொம்ப முக்கியமானது. நான் பொதுவாக தமிழர் திருவிழா காலங்களில் வேஷ்டி அணிவது வழக்கம் அதனால் உற்சகத்துடன் வீடு திரும்பி சித்திரைத் திருநாளை எதிர் நோக்கி காத்திருந்தேன்.

சித்திரைத் திருநாள் அன்று காலை எழுந்து கனிகளில் விழித்து வெள்ளை வேஷ்டியில் பளிச்சென்று புறப்பட்டேன். மாடியில் இருந்து கீழே வரும் போது எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டு அத்தையும், மாமாவும் கோயிலுக்கா என்றார்கள் இல்லை அலுவலகத்துக்கு என்றேன். ஆபிஸ்க்கு இப்படியா போறது என கேட்டாங்க சுளீர் என வந்தது கோபம் ஆனா சிரிச்சிகிட்டே வந்து விட்டேன். கீழே வந்து இருசக்கர வாகனத்தை எடுத்து தலைகவசத்தை அணிந்தால் எதிர்வீட்டு நண்பனும் அவனது தங்கையும் என்ன வேஷ்டி கட்டடிட்டு தலைகவசம் என அங்கே ஒரு நக்கல் சிரிப்பு மீண்டும் கோபம் என்ன செய்வது சிரிச்சிகிட்டே வந்து விட்டேன்.

வேஷ்டி கட்டி வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணியக்கூடாதா என்ன? என்ன செய்வது என நான் மீண்டும் சந்தோசத்துடன் அலுவலகம் வந்தேன். அலுவலக லிப்ட்டில் ஏறியதும் அங்கே வந்த நண்பன் ஆகா வேஷ்டியா நல்லாயிருக்கு என சென்று விட்டான். எனது இருக்கை நோக்கி போகும் போது தான் எங்கள் தளத்தில் நான் மட்டுமே வேஷ்டி மற்ற யாரும் கட்டவில்லை. யாரைக்கேட்டாலும் வேஷ்டியா என்று சிரிக்கிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் காலையில் இருந்து அலுவலகம் வரை என்னை பார்த்து வேஷ்டியா? என சிரித்தவர்கள் அனைவரும் தமிழர்கள்.

ஒரு தமிழ் திருவிழா அன்று ஒரு தமிழன் நமது பாரம்பரிய உடையான வேஷ்டி அணிவது தவறா? என்னிடம் வேஷ்டியா என்று கேட்டவர்களிடம் நான் கேட்ட கேள்வி இதுதான்.

வேஷ்டி தமிழனின் அடையாளம் இன்று இருக்கும் நமது மக்கள் படித்துவிட்டு பெரிய கம்பெனியில் 5 இலக்கத்தில் சம்பளம் வாங்கினால் நீ தமிழன் இல்லையா? அலுவலகத்திற்கு ஏற்ற உடை நாகரிகமான உடை பேண்ட் சர்ட் தான் இல்லை என்று  சொல்லமாட்டேன். நமது திருவிழா நம்ம வீட்டு விசேசங்கள், நம்ம கோயில் பண்டிகை, நம் வீட்டுத்திருமணம் போன்ற நமது விசேசத்திற்கு நமது பாரம்பரிய உடை அணியலாமே இதில் தவறு ஒன்றும் இல்லை என நான் நினைக்கிறேன்.
நான் எப்போதும் எனது வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், நமது பாரம்பரிய திருவிழாக்களுக்கும் வேஷ்டி அணிவது தான் வழக்கம் இதை இன்றும் கடைபிடித்து வருகிறேன் நான் மட்டுமல்ல எங்க ஊர் இளைஞர்கள் எல்லோரும் ஊர் திருவிழாவிற்கு வந்தால் வேஷ்டி அணிந்து கொண்டு கலந்து கொள்வது வழக்கம்.

அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் வேஷ்டி என்பது நமது அடையாளம், இன்று புதிதாக நாம் அணியும் உடையல்ல, நம் அப்பா, தாத்தா என நம் முன்னோர்களின் உடையே இதுதான். இவ்வுடையை தினமும் அணியவேண்டிய அவசியம் இல்லை நமது கலாச்சார திருவிழாக்கள் அன்று அணியலாம் எனறு வலியுறுத்துகிறேன். இவ்வுடையை அணியும் போது நம்மைப்பார்த்து ஏளனம் செய்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் உனக்கு அதன் அருமை தெரியவில்லை.

நண்பர்களே நீங்களும் நமது கலாச்சார நிகழ்வுகளில் வேஷ்டி அணிந்து நம் கலாச்சாரத்தை காக்க கைகொடுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

48 comments:

  1. யாரு என்ன வேணா சொல்லட்டுங்க
    வேஷ்டி கட்டிக்கிற சுகமே தனிதான்....

    போன சனிக்கிழமை நான் வேஷ்டி கட்டிக்கொண்டு வந்த போது, நிறையப் பேர் ”ஃகிஃகிஃகி என்னங்க இது வேஷ்டி” என்று கேட்டார்கள்

    நானும் ராம்ராஜ் கம்பெனி வேஷ்டினு சொல்லிட்டு போயிட்டேயிருந்தேன்

    ReplyDelete
  2. //நம்ம கோயில் பண்டிகை, நம் வீட்டுத்திருமணம் போன்ற நமது விசேசத்திற்கு நமது பாரம்பரிய உடை அணியலாமே இதில் தவறு ஒன்றும் இல்லை//
    //நம் கலாச்சாரத்தை காக்க கைகொடுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்//
    -well said , good

    ReplyDelete
  3. சபாஷ்! சிறப்பான கருத்து! செயல்படுத்த வேண்டியது மிக அவசியம் தான்!

    ReplyDelete
  4. ///இவ்வுடையை தினமும் அணியவேண்டிய அவசியம் இல்லை நமது கலாச்சார திருவிழாக்கள் அன்று அணியலாம் எனறு வலியுறுத்துகிறேன்.///


    .....சிறப்பு விசேஷ நேரங்களில் (பொங்கல் மற்றும் எனக்கு வளைக்காப்பு போன்ற சமயங்களில்), என் கணவர் வேஷ்டி கட்டி வருவதை பழக்கமாக வைத்து இருக்கிறார். எங்கள் அமெரிக்க தோழர்களும் அந்த கலாச்சார அடையாளத்தை ரசித்து பாராட்டுகிறார்கள். நம் சொந்த நாட்டில், சொந்த மாநிலத்தில், நீங்கள் வேஷ்டி கட்டி வந்ததை ஆதரிக்க ஆள் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமே.

    ReplyDelete
  5. இதற்கு என்ன சொல்வது என்று குழப்பமாக உள்ளது!!
    ஆனால் உங்களின் நியாயமான ஆதங்கத்திற்கு பிறகு இந்த விஷயத்தின் மற்ற கோணங்களையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
    நானும் கூட ஒரு பன்னாட்டு நிறுவன ஊழியராகவும் மற்றும் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வேட்டி உடுத்தியும் இருக்கிறேன்.
    யோசித்து பார்த்தால் அந்த ஒரு நாள் மட்டும் வேட்டி உடுத்தி மற்ற நாட்களில் பான்ட் & ஷர்ட் என்பது ஒருவித நகைப்பாகதான் தோன்றியது. பிறகென்ன ஒருநாள் கூத்து? அதற்கு ஒப்பனை?
    இந்த விதத்தில் நான் சாதாரணமாக அதிகமாக கேரளத்தவர்கள் வேட்டி உடுத்தி இருசக்கர வாகனத்தில் செல்வதை பார்த்திருக்கிறேன்.
    பல விஷயங்களிலும் இது போன்ற வித்தியாசங்களை (பெரும்பாலும் நல்லவை அல்ல!!!!) காணலாம்.
    1 > ஒரு துளி இடமும் விடாமல் சிமெண்ட் போட்டு மழை தண்ணீர் சேரவிடாமல் செய்வது. கேட்டால் "அந்த இடம் இருந்தா வண்டி நிறுத்த ஆகுமே"
    2 > ஒரு மரத்த விடாம வெட்டிட்டுதான் வீடு கட்ட ஆரம்பிப்போம். கர்நாடக / கேரளா வில் பெரும்பாலும் அந்த மரத்த அப்பிடியே விட்டுட்டு கட்டுவாங்க அதிகமா தென்ன மரம். நான் ஒரு வீட்ல நட்ட நடுவுல கூட ஒரு மரம் ரெண்டு ப்ளோர் தாண்டி இருக்குறத பார்திருக்கிறேன்.
    3 > அப்புறம் இந்த ஆத்தங்கரை / குளத்து கரைலலாம் இயற்கை உபாதைய கழிக்கறது.

    எங்கியோ ஏதோ ஒரு தீர்வு இருக்கு ஆனா எங்கனுதான் தெரியல!!!!

    ஸ்ரீ

    ReplyDelete
  6. சிரிப்பவர்களை பற்றி நாம் அக்கறை
    கொள்ள தேவை இல்லை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Hi Sathish..Please ignore those comments given by your folks and neighbors..Even am working in an MNC will be professional in the office..but if it s any traditional functions like Pongal,New year,Temple finctions.Marriage etc..I use to wear Dhothi only....We shud keep up our tradition at any cost..we shud be an example for the next generations too...

    ReplyDelete
  8. சமீபத்தில் ஊரில் இருந்தபோது பங்குனிப் பொங்கல் திருவிழா சமயத்தில் வேஷ்டி தான் அணிந்திருந்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் இருக்கும் சவுதி அரேபியாவில் அரபி மக்களில் பெரிய அதிகாரி முதல் சாதாரண கடை நிலை ஊழியர் வரை அவர்களின் பாரம்பரிய உடைகளையே அணிகின்றனர். நாம் நமது கலாச்சார உடையான வேஷ்டி அணிவதை நகைப்புடன் பார்ப்பவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

    அருமையான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஒரு நாளு ஆபிஸ்க்கு நண்பர் ஒருத்தரு வேட்டி கட்டிட்டு வந்தப்ப எங்க ஓனர் ‘என்ன மஃப்டில்ல வந்திருக்கீங்கன்’னு கிண்டல் பண்ணினார்...

    நீங்க சொல்றமாதிரியும் கிண்டல் பண்றவங்க இருக்கத்தான் செய்யுறாங்க..

    நான் எங்கூருல எப்பவும் வேஷ்டியிலத்தான் இருப்பேன்...

    ReplyDelete
  10. இந்தக் குளிர் நாடுகளில்கூட எம் திருமணங்கள்,கோவில் திருவிழாக்களில் எம்மவர்கள் வேஷ்டி அணிகிறார்கள்.அதில் என்ன வெட்கம் இருக்கிறது !

    ReplyDelete
  11. இதுவொன்றும் புதிதல்ல. ஆங்கில மோகத்தில் தமிழை மறக்கிறோம். பேண்ட்டின் மோகத்தில் வேஷ்டியை மறக்கிறோம். இது வேதனைக்குரிய ஒன்று. நிச்சயம் உங்கள் கருத்து, ஆதங்கம்- ஏற்க வேண்டிய, நியாயமானவை.

    ReplyDelete
  12. //ஈரோடு கதிர் said...
    யாரு என்ன வேணா சொல்லட்டுங்க
    வேஷ்டி கட்டிக்கிற சுகமே தனிதான்..
    //

    கதிர் சார் சொல்றது கரெக்ட்டுங்க
    வேஷ்டி கட்டிக்கிற சுகமே தனிதாங்க

    ReplyDelete
  13. வேட்டின்னு சிரிச்சா அது நாட்டி:))

    ReplyDelete
  14. நானும் கல்லூரிகளிலும், பணிபுரிந்த வங்கிகளிலும் வேட்டி அணிந்து சென்று வந்துள்ளேன். இப்போதும் இல்லத்தில் வேட்டி அணிவது இயல்பாகவே உள்ளது. அண்மையில் நிகழ்ந்த n-th திருமண நாள் விழாவிலும் வேட்டி அணிந்து வாழ்த்துகள் அளித்தோம் பெற்றோம்.

    ReplyDelete
  15. நண்பா,

    நம்மளவங்க, தாத்தா வழிச் சொத்து, அப்பா வழிச் சொத்து... இப்படி எதுனா இருந்தா அதுக்கு அலைவானுங்களே தவிர,

    நம்ம தாத்தா, அப்பா வழிக் கலாச்சாரத்தை மட்டும் புறக்கணிப்பாங்க. பின்பற்றுபவனையும் கிண்டலடிப்பாங்க.

    எவன் என்ன சொன்னா என்ன? நல்லதை, நமக்கு சரின்னு படறதை தரியமாகச் செய்யலாம்.

    ReplyDelete
  16. பங்காளி,

    வேஷ்டியோட அருமை புரியாம இருக்காங்க. கொஞ்சம் கால விலக்கி காத்து வாங்க நடக்கும் போது என்ன சுகமா இருக்கும் தெரியுமா? மடிச்சிக்கட்டி கவர்ச்சி காட்டுறதுலயாகட்டும், படுக்கும்போது அப்படியே போர்வையா போத்தி தூங்கறறதுலயாகட்டும்.... வேஷ்டி... தனி சுகம்தான்!

    வேஷ்டிய மடிச்சி கட்டு!

    பிரபாகர்...

    ReplyDelete
  17. நானுதம் ஒரு தமிழனாய் வெட்கப்படுகிறேன் இப்படியும் ஒரு சமூகம் இருக்கு எண்டு கவலைப்படுகிறேன்.

    உறவிழந்து
    உணர்விழந்து
    உடமைகள் இழந்து
    எல்லாம் இழந்து இழந்து என்று
    ஆகியதால்
    இருப்புக்காக இருப்பது வேஷ்டி
    அதையும் வெறுப்பது
    மனதுக்கு மடிவது மேலாகிறது....

    ReplyDelete
  18. ஊரில் விசேசங்களுக்கு நானும் வேட்டி தான் கட்டுவேன்..

    //.. வேட்டின்னு சிரிச்சா அது நாட்டி:)) ..//
    //.. கொஞ்சம் கால விலக்கி காத்து வாங்க நடக்கும் போது என்ன சுகமா இருக்கும் தெரியுமா? ..//

    :-)))

    ReplyDelete
  19. கரை இல்லாத நாலு முழ கதர் வேட்டியை கைலி மாதிரி மூட்டி தைத்து கைலி மாதிரியே அணிந்து கொள்ளவேண்டும்,அதே மாதிரி அரை கை கதர் சட்டையை போட்டுக்கொள்ளவேண்டும்.தினமும் துவைத்து அலுவலிலிருந்து வீட்டுக்கு வந்தபின் leisure ஆக உடுத்தினால் அதில் உள்ள சுகம் சொல்லமுடியாது.

    ReplyDelete
  20. வேஷ்டி தமிழனின் அடையாளம்னு உங்களுக்கு யார் சொன்னது நண்பரே!
    நீங்களா ஒரு அடையாளம் வச்சிகிட்டா எப்படி!?, அதை காப்பாத்துறதுக்கு வேற ஆள் கூப்பிடுறிங்களே!


    ஒரிஜினல் பட்டாபட்டி அண்ட்ராயர் தான் தமிழனனின் ஒரிஜினல் பண்பாட்டு உடை!

    ReplyDelete
  21. நல்ல பகிர்வு.
    ஆனா, நிறைய பேர் வேஷ்டியே கட்ட தெரியாமல் கஷ்டபடுறாங்க. கல்யாணத்தன்னிக்குக் கூட..

    ReplyDelete
  22. நம்ம பாரம்பரிய உடையை அணிவதில் என்ன வெட்கம் வேண்டிக்கிடக்குது!!!
    அட்லீஸ்ட் விசேஷங்களுக்காவது அணியும் உங்களை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  23. விடுங்க பாஸூ... இதெல்லாம் போகப் போக சகஜமாகிடும்..எதற்காகவும் நம்ம அடையாளத்தை இழக்க வேண்டாம். :)

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. வாங்க கதிர்...

    //நானும் ராம்ராஜ் கம்பெனி வேஷ்டினு சொல்லிட்டு போயிட்டேயிருந்தேன்//

    ஆகா இந்த பாயின்ட் சூப்பரா இருக்குதே....

    ReplyDelete
  25. வாங்க ரோகிணி...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    வாங்க சேட்டை...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  26. வாங்க சித்ரா வாங்க....

    ஆமாங்க வேதனையான விசயந்தான் அது தான் கொட்டிட்டேன்

    ReplyDelete
  27. வாங்க ஸ்ரீ

    உங்க எடுத்துக்காட்டு அருமை...

    ReplyDelete
  28. வாங்க சைவகொத்துப்பரோட்டா...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    வாங்க ரமேஷ்...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  29. வாங்க சரணவக்குமார்..

    //சமீபத்தில் ஊரில் இருந்தபோது பங்குனிப் பொங்கல் திருவிழா சமயத்தில் வேஷ்டி தான் அணிந்திருந்தேன்.//

    நீங்களும் நம்ம ஆள்தானா...

    ReplyDelete
  30. வாங்க பாலாசி...

    //நான் எங்கூருல எப்பவும் வேஷ்டியிலத்தான் இருப்பேன்...//

    படிக்கவே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது...

    ReplyDelete
  31. வாங்க ஹேமா...

    சரியாச்சொன்னீங்க ....

    ReplyDelete
  32. வாங்க வேலு...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    வாங்க வானம்பாடி ஐயா.,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    வாங்க பாலராஜன்...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  33. வாங்க சத்ரியன்...

    //நம்மளவங்க, தாத்தா வழிச் சொத்து, அப்பா வழிச் சொத்து... இப்படி எதுனா இருந்தா அதுக்கு அலைவானுங்களே//

    சரியசாச் சொன்னீங்க நண்பரே... சொத்துக்குன்னா அலைவானுக.... கலாச்சாரம்னா தூக்கி எரிவானுக...

    ReplyDelete
  34. வாங்க பங்காளி...

    //வேஷ்டிய மடிச்சி கட்டு!//

    வேஷ்டிய மடிச்சி கட்டி நிற்கற சுகமே தனி தான் நண்பா...

    ReplyDelete
  35. வாங்க றமேஸ்....

    //உறவிழந்து
    உணர்விழந்து
    உடமைகள் இழந்து
    எல்லாம் இழந்து இழந்து என்று
    ஆகியதால்
    இருப்புக்காக இருப்பது வேஷ்டி
    அதையும் வெறுப்பது
    மனதுக்கு மடிவது மேலாகிறது....//

    உங்கள் கவிதை அருமை.... உணர்வோடு இருக்கிறது...

    ReplyDelete
  36. வாங்க சம்பந்தம்...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  37. வாங்க விஜயன்...

    இதுவும் ஒரு சுகமே...

    ReplyDelete
  38. வாங்க வால்பையன்...

    தமிழனின் அடையாளம் வேஷ்டி தான் என்பது என் கருத்து ஏனெனில் எனக்கு முன்பு உள்ள 3 தலை முறையினர் வேஷ்டிதான் அணிந்து உள்ளனர். அதை வைத்து தான் சொல்கிறேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பட்டாபட்டி அண்ட்ராயரை விட கோமனம் தான் தமிழனின் ஒரிஜனல் அடையாளம் எனக்கூறலாம்....

    ReplyDelete
  39. வாங்க அம்பிகா...

    ஆமாங்க நானும் எனது நண்பர்களுக்கு கட்டி பழக்கி விட்டு இருக்கேன்...

    ReplyDelete
  40. வாங்க அமைதிச்சாரல்...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  41. தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதைவிட அந்த இழப்பில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதும் மிகவும் வருந்த வேண்டிய விஷயம்..

    இங்கும் கூட வேட்டியில் வெளியே செல்லும் மிகச் சிலரில் நானும் ஒருவன்..

    ReplyDelete
  42. nanbarey. athu veshti illa. vetti :)

    ReplyDelete
  43. ம்ம்.. கட்டிருவோம் :-)

    ReplyDelete
  44. எங்கூட்டுக்காரர் வேட்டி கட்டினா எனக்கு ரொம்பப் பிடிக்கும்..வேட்டி அணிவது ஒரு கம்பீரம்..

    ReplyDelete