Tuesday, August 16, 2011

அந்தியூர் குதிரை சந்தை வரலாறும் படங்களும் 1

கடந்த வார இறுதியில் விடுமுறை கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த போது சனிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தது வெள்ளி இரவே ஊருக்குச் சென்று சனிக்கிழமை காலை கூட்டம் குறைவாக இருக்கும் என கோயிலுக்குச் சென்றோம்.
குருநாதசுவாமி கோயில்

இக்கோயில் ஊரை விட்டு 10கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு பெயர் வனம். இக்கோயிலைச்சுற்றி உள்ள வனத்தில் மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி திருவிழாவை கொண்டாடுவார்கள். திருவிழா சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்குச் சென்றால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆடு, கோழி என விருந்து களை கட்டும். திருவிழா சமயம் மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகலும் விருந்து நடைபெறும்

குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தைகளில் இந்த வருடம் முடிந்தவரை படங்கள் அனைத்தையும் அள்ளி வந்துள்ளேன்.

குதிரை சந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப்பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டியது அந்தியூர் சந்தை...
இக்குதிரையின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம்

80 ஆயிரம்

காங்கேயம் காளை

 ஜமுனா பாரி ஆடுகள்

தற்போது எங்கள் பகுதியில் அதிக மக்கள் விரும்பி வளர்க்கும் ஈமு கோழி

ஜோடி 1ஒரு இலட்சத்து 50 ஆயிரம்

2 லட்சம்

சாரட் வண்டியின் விலை 60 ஆயிரம்



காங்கேயம் காளை (க்ராஸ்க்காக கொண்டு வரப்பட்டது)

4 இலட்சம்

3 இலட்சம்

4 இலட்சம்

2 லட்சத்து 50 ஆயிரம்

3 இலட்சம்

4 இலட்சம்

இசைக்கு தகுந்த படி நடனம் ஆடும் குதிரை 4 இலட்சமாம்

மீதி படங்கள் அடுத்த பதிவில்....

Wednesday, August 10, 2011

அஞ்சறைப்பெட்டி 11-08-2011 ( இந்தவாரம் விடுமுறை...)

வணக்கம் நண்பர்களே.,

கடந்த 1  மாதமாக அலுவலகத்தில் வேலைப்பளுகாரணமாக வலையுலகம் பக்கம் அதிகம் வர இயலவில்லை இருந்தாலும் வார வாரம் அஞ்சறைப்பெட்டி மட்டும் எழுதிக்கொண்டு இருந்தேன் இந்தவாரம் அதுவும் எழுத இயலவில்லை. நண்பர்களின் பதிவையும் படிக்க இயலவில்லை விரைவில் வேலைப்பளு குறைந்து உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்.

நான் மிகவும் எதிர்பார்த்த எங்கள் ஊர் குதிரை சந்தை தற்போது நடைபெற்று வருகிறது என்னால் சனிக்கிழமைதான் செல்ல முடியும். அதற்கு முன் கிடைக்கும் படங்களை பதிவு செய்கிறேன். அடுத்த வாரம் முழுவதும் உங்களுக்காக ஸ்பெசல் குதிரைப்படங்களுடன் வருகிறேன்.

பதிவு ஏன் எழுதுவதில்லை, எங்கள் பதிவின் பக்கம் வருவதில்லை என்று தொலைசியிலும், மின்அஞ்சலிலும் விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி...
விரைவில் வருகிறேன் குதிரை படங்களுடன்....

குதிரை சந்தை “களை” கட்டுகிறது

 
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில் பழமையான குருநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப் பெருந்திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த கோவில் திருவிழாவையொட்டி மாட்டு சந்தை- குதிரை சந்தையும் நடக்கிறது. மாட்டு சந்தை தொடங்கி நடந்து வருகிறது. இதில் காரி, சிம்மி, காங்கயம், நாட்டு மாடுகள் இடம் பெற்றுள்ளன. காரி மாடு வண்டிகளுக்கு பூட்ட ஏற்றது. சிம்மி, காங்கயம், நாட்டு மாடுகளும் வண்டியில் பூட்டவும், உழவு போடவும் ஏற்ற மாடுகள் ஆகும்.

இதுதவிர மலைமாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறது. காங்கயம் ஜோடி மாடுகள் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரை விற் பனையாகிறது. இவைகளை வாங்கிச் செல்ல தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கோவில் திருவிழாவையொட்டி குதிரை சந்தை நாளை (10-ந்தேதி) தொடங்கு கிறது. இந்த சந்தைக்கு நூற்றுக்கணக்கான குதிரை கள் கொண்டு வரப்பட்டுள் ளன. ஒரு மாத குதிரைக்குட்டி ரூ.7 ஆயிரம் முதல் விலை போகிறது. ரூ.7 ஆயிரம் தொடங்கி ரூ.2 லட்சம் வரை மதிப்புள்ள குதிரைகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

திருவிழாவை முன் னிட்டு அந்தியூர் முதல் புதுப்பாளையம் வரை ரோட்டின் இருபுறமும் சுமார் 1000 திருவிழா கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. அல்வா கடை, பர்பி கடை, சோளக்கதிர் கடை, பேன்சி கடை, பிளாஸ் டிக் பொருட்கள் கடை, பாத்திரக்கடை, வீட்டு உப யோகப்பொருட்கள் கடை, ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்களை மகிழ்விக்கும் சர்க்கஸ், ராட்டினம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன. பக்தர்கள் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற் பாடும் செய்யப்பட்டுள் ளது. நாளை (10-ந் தேதி) காலை 10 மணிக்கு புதுப்பாளையத்தில் இருந்து குருநாத சாமி, பெருமாள் சாமி தேரில் எழுந்தருளி வனக்கோவில் செல்லும் நிகழ்ச்சியும், காமாட்சி அம்மன் சப்பரத்தில் வனக் கோவில் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் சிறப்பு வழிபாடும், இரவு 9 மணிக்கு தண்ணீரில் விளக்கு எரியும் நிகழ்ச்சியும், இரவு முழுவதும் சிறப்பு பூஜையும் நடக்கிறது.
 
நன்றி மாலைமலர்

Thursday, August 4, 2011

அஞ்சறைப்பெட்டி 04.08.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சமீபத்தில் இன்ஜினியரிங்க கவுன்சிலிங்கிற்கு சென்று இருந்த மாணவி ஒருவர் 194 கட் ஆப் வாங்கி உள்ளார் இவர் கோவையில் உள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளார் இவரின் கட் ஆப் மார்க்கிற்கு பிரபல மற்றும் கேம்பஸ் இன்டர்வியூ அதிகம் நடைபெறும் கல்லூரி சிஐடி எடுங்க என்று அவந்த பெண்ணின் ஆசிரியர் போனில் கூறி உள்ளார் இவர் சிஐடி என நினைத்து சிஐஇடி என்ற தனியார் கல்லூரியை தேர்ந்தெடுத்து விட்டார் அரசு கோட்டாதான் என்றாலும் தனியார் கல்லூரி துவங்குபவர்கள் முன்னாள் உள்ள பிரபல கல்லூரியின் பெயரை ஒட்டி வருமாறு புது கல்லூரி நிறைய துவங்கி உள்ளனர் நிறைய மாணவர்கள் அது என்று நினைத்து இங்கு சேர்ந்துவிடுகின்றனர் என்று என் ஆசிரியர் நண்பர் புலம்பினார்.

அவர் புலம்பியதும் சரியே இன்று கவுன்சிலிங் செல்லும் மாணவர்களில் பல கிராமப்புற மாணவர்கள் சரியான வழிகாட்டிகள் இல்லாததால் பிரபல கல்லூரிக்கு வாய்ப்பிருந்தும் புதிய கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இவர்களுக்கு நாம் செய்யும் உதவி நமக்கு தெரிந்தவர்கள் கவுன்சிலிங் சென்றால் நம்மால் ஆன அறிவுரைகளை சொல்லி அவர்கள் முன்னேற நாமும் ஒரு ஏணிப்படியாக இருக்கலாம்...

...............................................................................................

மீண்டும் ஆரம்பித்துவிட்டது சிங்கமுத்து வடிவேல் பிரச்சனை. கடந்த ஆட்சியில் வடிவேலு முதல்வருக்கு நெருக்கமாக இருந்ததால் சிங்கமுத்து மேல் நடவக்கை மேற்கொண்டனர் இப்போது நிலைமை தலைகீழ்...


...............................................................................................

ஊரில் நிறைய முன்னாள் அமைச்சர்கள் கைதாகிகொண்டு இருக்கும் போது போன ஆட்சியிலேயே கைதான அமைச்சர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது இரவோடு இரவாக கைது செய்துவிட்டார்கள்...

........................................................................................................

இலங்கை தமிழருக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 1000 அறிவித்த முதல்வருக்கு மிக்க நன்றி...

இந்த அருமையான திட்டத்தை அம்மா செயல்படுத்தி விட்டார் என் ஐயாவிற்கு பொறுக்கவில்லை உடனே ஒரு அறிக்கை இலங்கை தமிழர்களுக்கு என் ஆட்சியில் அதிகம் செய்துள்ளேன் என ஒரு பட்டியல் விட்டுள்ளார்..

ஒரு இலட்சம் தமிழர்கள் சாகும் போது அறிக்கை... இப்பவும் அறிக்கை...

........................................................................................................


சமையல் கியாஸ் சிலிண்டரை மானிய விலையில் வழங்குவதால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த இழப்பை தவிர்க்க, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம் இல்லாமல் சமையல் கியாஸ் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறதாம்...

விலை உயராத பொருள் எதாவது இருக்குதான்னு தெரியல...

........................................................................................................

தகவல்


“மேக்அப்” மூலம் தங்களை அழகுபடுத்தி கொள்வதில் இங்கிலாந்து பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.12 நாடுகளில் தயாராகும் 54 விதமான “மேக்அப்” பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே பெருமளவில் பணத்தை செலவிடுகின்றனர்.

சமீபத்தில் இங்கிலாந்தில் அதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2200 பெண்களிடம் “சர்வே” நடத்தப்பட்டது. அதில், அவர்கள் தங்கள் வாழ்நாளில் “மேக்அப்” செய்ய மட்டும் ரூ.70 லட்சம் செலவிடுவது தெரியவந்தது. ஆண்டு ஒன்றுக்கு மட்டும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், வாரத்துக்கு ரூ.3 ஆயிரமும் செலவு செய்கின்றனர். “மேக்அப்” சாதனங்களுக்கு மட்டும் ரூ.40 ஆயிரம் செலவிடுகின்றனர்.

தங்களின் கணவர்கள் மற்றும் காதலர்களை கவரவே இதுபோன்ற அழகு கலையில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அழகாக இல்லாவிட்டால் தங்களை அவர்கள் கைவிட்டு விடுவார்கள் என்றும் அச்சப் படுகின்றனர்.அதற்காகவே எப்போதும் தங்கள் கைப்பையில் “மேக்அப்” பொருட்களையும், சாதனங்களையும் எடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு பெண்களின் அழகுகலை பொருட்களின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிறது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் கார்வேந்தன். இவர் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார். இதில் விவசாயம் சார்ந்த பல அறிய வேண்டிய தகவலை அளித்துள்ளார்.

http://marutam.blogspot.com/2010/12/blog-post.html

தத்துவம்


நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”

Wednesday, August 3, 2011

கணவனிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்...


ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும்.

பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன

பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள் புரிந்துகொண்டதாக நினைக்கின்றனர்.

பெண்களின் கோப, எதிர்மறைவான எல்லா உணர்வுகளும் அவர்களின் 3 நாள் பிரச்சனையுடன் தொடர்புடையவை அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. அதற்காக கண்ணீர் விட்டு அழவேண்டியதில்லை. தோழமையின் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்த வரை தனிமையில் தொட்டு பேசுவது, மெல்ல அடித்து விளையாடுவது போன்றவற்றை மிக்க விரும்புவர் அதனால் அடிக்கடி பேச வேண்டும்

தனது கணவர் மாதத்திற்கு ஒரு முறையாவது தமக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புவர். இது பொதுவானது தான் ஆனால் எதிர்பார்க்காவண்ணம் சமைத்து அசத்த வேண்டும் இதை மிக ரசிப்பார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

தனது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புவர், பெண்களை விட்டு செல்லும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமாக வழியில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதை அதிகம் விரும்புவர்.

வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அதிகமாக கணவனிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

விடுமுறை நாளில் கூட இருக்கும் போது வேலையை பகிர்ந்து கொண்டு வெளியில் சென்று வரலாம் என்று அவர்களை அழைப்பதை மிக விரும்புகின்றனர்.

பெண்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் குடும்பமும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...