Thursday, December 10, 2009

விஜய்யின் வேட்டைக்காரன் 100 நாளை நோக்கி..............? பாகம் 1




நான் விஜய்யின் ரசிகன் ஒரு காலத்தில்.. அவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் கில்லி 15 முறை பார்த்து இருப்பேன். அதற்கு அப்புறம் நான் சினிமா பார்ப்பதை குறைத்து விட்டேன்
விஜய் படங்கள் எல்லாம் ரீமேக் படமாக இருப்பதால் சுத்தமாக பார்ப்பதில்லை. ஆனால் சமீபத்தில் வேட்டைக்காரன் ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படம் ஓடுமா ஓடாதா என எனது நண்பர்கள்
மட்டுமின்றி அனைவரும் பட்டிமன்றமே நடத்துகின்றனர். இந்த சமயத்தில் விஜய்யைப்பற்றியான எஸ்.எம்.எஸ் எனக்கு நிறைய வருகிறது. அது இன்று மிக பிரபலமாக இருக்கிறது. இன்று காலை எனது நண்பனின் மொபைலில் ஒரு பிரபல சானலில் வரும் செய்தியைப்போல் வில்லு படத்தை போட்டு தாக்கு தாக்கு என தாக்கி இருந்தார்கள் என்னடா நமது தலைவரை இந்த தாக்கு தாக்கறாங்கன்னு மனது கேட்கல அதனால எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எல்லாம் உங்களுடன் பகிர்நது இது சாரியானு கேட்கலாம்னு தான் இந்தப்பதிவு. எத்தனை எஸ்.எம்.எஸ் வந்தாலும் தலைவரின் வேட்டைக்காரன் 100 நாளை நோக்கி போகுமா? இல்ல பொங்கலுக்கு படத்தை மாத்திருவாங்களான்னு 18ம் தேதி வரை பொறுமையுடன் இருப்போம். எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எல்லாம் கொடுத்து இருக்கிறேன் நீங்களும் பார்த்து உங்க கருத்துக்களை சொல்லுங்க...

காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?

கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.

காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?

கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்

*******************************************************************************

விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே

நாலுமாசம் தூங்க மாட்டே


ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா

நீ நடிச்சாத்தான் தாங்க முடியல


*********************************************************************************************** 


பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...

நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க

விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க

நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..

**********************************************************************************************


டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?

dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....

டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்....

 

******************************************************************************  


 சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா?

கதையை ஜீரணிக்க முடியாததால்.



*********************************************************************************************


அதோ போறாரே அர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.

அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...?

ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

*********************************************************************************


விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?


அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.

*********************************************************************************


விஜய் யோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

ஏன்யா...! என்னாச்சு?

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க

*******************************************************************************************


கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?

மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....


************************************************************************************


ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

**********************************************************************************

விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா : கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்கு இது போதும்.

**********************************************************************************

எல்லாம் படிச்சீங்களா இப்படி போட்டுத்தாக்குன்னா தலைவர் என்னங்க பண்டுவார்........

எல்லாருக்கும் வேட்டைக்காரன்ல பதில் சொல்லுவார் என எனக்கு நம்பிக்கை இருக்கு......

மீண்டும் அடுத்த பதிவில் மற்ற எஸ்.எம்.எஸ் எல்லாம் பாகம் 2 ஆக பதிய இருக்கிறேன் காத்திருங்கள்...........................

ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயதில்................

ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயது இந்த வாக்கியத்தை ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக பாட்டிகள் பயன்படுத்துவார்கள்.
எனது 7 வயது முதல் 15 வயது வரை அதிகமாக எனது வீட்டில் ஒடுற பாம்பை பிடிக்கற வயசுல இருட்டுக்குள்ள போக மாட்டேன்னு சொல்றாம்பாரு என
ஏத்து விழுகும். அப்புறம் அம்மா இருட்டுனா ஒன்னும் இல்ல நான் வருகிறேன் நீயும் வான்னு சொல்லி பயத்த போக்கிட்டாங்க...
இந்த பதிவுல நான் இந்த வயதில் என்னை அறிந்தும் அறியாமலும் செய்த குறும்புகளை உங்களுடன் பகிர்கிறேன்.

பயம்

எனது 7வது வயதில் இருட்டைக்கண்டால் பயம், தனியாக ஆத்துக்குப்போனால் பயம், மீசை பெரியாதாக உள்ள மாமவைக்கண்டால் பயம்,
இரவில் நாய், ஓநாய் குரைத்தால் பயம், சைக்கிள் போனால் பயம், சுடுகாட்டுப் பக்கம் போனால் பயம் (பின்னாட்களில் எனது பொழுது போக்கு மையமே இதுதான் இது தனிக்கதை)
பாம்பு சட்டையைக் கண்டால் பயம், கோயில்ல மினி சாமியப்பார்த்தா பயம், இடி இடித்தால் பயம், இரவில் தனியாக நடந்தாலும், அம்மாவுடன் நடந்தாலும் பயம், கிணற்றை எட்டிப்பார்த்தால் பயம்
இப்படி எதைக்கண்டாலும் பயந்தே இருந்தேன். அப்பதான் பக்கத்து வீட்டு பாட்டி ஒடுற பாம்பை பிடிக்கற வயசில ஏன்டா இப்படி இருக்கறன்னு என்ன சொல்லி சொல்லி அப்பா, அம்மா, மாமா எல்லாரும் எனது பயத்தை கொஞ்சம் கொஞ்சமா போக்கி நான் 6 வது பஸ்ஸில் போய் படிக்கனும் நான் அப்பவே பஸ்ல படிக்கட்டுல தொங்கற அழவிற்கு தைரிய வந்திருச்சு....

குறும்பு

7, 8 வது எல்லாம் நான் வீட்டில் இருந்து தான் படித்தேன் என்னுடைய தைரியமும், வம்பு இழுக்கறத பார்த்துவிட்டு எல்லாறும் திட்டுவாங்க. நான் வீட்டில் இருக்கும் போது சனி
ஞாயிறு லீவ் நாளில் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஆத்துக்கு குளிக்கப்போவம் அப்படி ஒரு நாள் குளிக்கும்போது சுழல் வந்து என்னை இழுக்க நான் தண்ணீரில் சென்று எனது காலை பக்கத்தில்
இருந்த பாறையில் உந்தியதால் பிழைத்தேன் அப்ப இருந்து ஆறு சுழல் மீது எனக்கு இருந்த பயம் போய்விட்டது. எனக்கு நாயைக்கணடால் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது நாய்க்கு பக்கத்துல போய்
அதுகிட்ட பழகி அப்படியே நாயின் இரண்டு முன்கால்களைப் பிடித்து சுத்தி வீசுவது இது மிகப்பெரிய தவறு தான் ஆனா அந்த வயதில் எனக்கு தெரியவில்லை அப்புறம் விட்டுவிட்டேன்.

புரட்டாசி, சித்திரை மாதங்களில் சித்தேஸ்வரன் மலைக்கு நண்பர்களுடன் போவேன் அப்ப காட்டுக்குள்ள போய் கொய்யா, பலாப்பழம் எல்லாம் மலைக்காரர்களுக்குத் தெரியாமல் பறித்து கூட்டாக
எப்பவுமே நண்பர்களுடன் தான் சாப்பிடுவேன். நாங்களே மலையில் சமைச்சு சாப்பிடுவோம் மலையில் உள்ள கோயிலுக்கெல்லாம் போக மாட்டேன் ஆனால் அந்த இயற்கையை ரொம்ப ரசிப்பேன் ( இந்த மலை ஆட்டத்தைப்பற்றி தனியா ஒரு பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்).

இன்று டிவியில் நாம் பார்க்கும் கேண்டிட் கேமரா நான் 1988லேயே செய்துவிட்டேன். எங்கள் ஊரில் நரசுஸ் காபித்தூள் பாக்கெட் கவர் மட்டும் நண்பர்கள் எல்லாம் வீட்டில் இருந்து எடுத்து வந்து அதில் செம்மண் நிரப்பி ரோட்டில் வைத்து விடடு நாங்க பஞ்சாயத்து கிணறு மேல் உட்கார்நது கொள்வோம் அதை எடுக்கும் ஆட்கள் எல்லாம் அதை மறைத்து கொண்டுபோவதை பார்த்து சிரிப்போம் பேக்கிங் உடைந்து போய் ரோடடில் மணல் கொட்டும் மணலைப்பார்தது முழிப்பார்கள் அதைப்பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒரு ஆனந்தம். சைக்கிள் பஞ்சர் பண்டுவது விளையாடுகிறேன் என்ற
பேரில் நண்பனின் மண்டையை உடைத்தது இப்படி பயங்கர குறும்பு பண்டும்போது தான் குறும்பு தாங்காமல் என்னை 6ம் வகுப்பில் டிசி கொடுத்து அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கிறிஷ்டின்
நடுநிலைப்பள்ளியில் சேர்த்தாங்க அங்க என்ன அடி பின்னு பின்னுன்னு பின்னி ஒருவழியா படிக்க வெச்சாங்க.. இங்க தான் எனக்கு மறக்க முடியாத ஆசான்கள் சின்னப்பன், ரவிக்குமார், பெலிக்ஸ், குமார், லூர்து, சார்லஸ். அப்புறம் 8 வது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் ஏன்னா முதன் முதலா அங்க தான் டூர் கூட்டிட்டடுப்போனங்க.. கோயம்பத்தூருக்கு முதன் முறையா கோவையில் மருதமலை, பொட்டானிக்கல் கார்டன், மைக்கெல் ஸ்கூல், பேரூர் முக்கியமா ஏரோப்பிளேன் எல்லாம் பார்த்தேன் அங்க படிப்பு முடிச்சு 9 வது ஹாஸ்டல் வந்துவிட்டேன். இங்க அடிச்ச கூத்து இன்றைக்கு
நினைத்தாலும் நெஞ்சில் இருந்து அகலவில்லை. என்னங்க இவ்வளவு நேரம் படிச்சு போர் அடிச்சுருச்சா....... ரொம்ப நன்றி நண்பர்களே இவ்வளவு நேரம் படிச்சதுக்கு.... மீண்டும் சந்திப்போம் எனது
ஹாஸ்டல் வாழ்க்கையில் ( உங்கள அவ்வளவு சீக்கிரம விடமாட்டேன்).....

Monday, December 7, 2009

நாங்க எல்லாம் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்….

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா…
6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…?
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…?
ஏன் சார் ஏன்….
இத்த தான்…
திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்…
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.....

இத நான் எழுதலிங்க...... நண்பர்கள் எழுதியது எனது மெயிலுக்கு பார்வேடு ஆகி இருந்தது
என்னாலயும் மேனேஜர்கிட்ட கேட்க முடியல.... அவர் எனது பதிவை படிப்பார்னு தெரியும்
இப்படியாவது அவருக்கு சொல்லலாம்னு தான்........

நீங்களும் உங்க மேனேஜர்க்கு பார்வேடு பண்ணுங்க.......

நன்றி : இதை என் மெயிலுக்கு பார்வேடு செய்த நண்பர்களுக்கு..........

Wednesday, December 2, 2009

நண்பனின் காதல் திருமணம்.........அந்த திக் திக் சில நிமிடங்கள்.........

நான் எனது ஒரு சில நண்பர்களின் காதல் திருமணத்திற்கு (அதுதாங்க ஓடிப்போய் கல்யாணம் பன்றது)
துணை நின்று நடத்தி இருக்கின்றேன் அதில் ஒரு மறக்க முடியாத நான்(பன் வாங்கிய) எனது நண்பன் திருமணத்தின் அந்த திக் திக் சில நிமிடங்களை
உங்களுடன் பகிர்து கொள்கிறேன்.....

நாங்கள் ஒரு 6 நண்பர்கள் கோவையில் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அங்க பல சுவரசியமான, சிரிக்கும் படியான, குத்து வாங்கிய பல நிகழ்வுகள் நடந்தன,
அதில் நாங்கள் அனைவரும் இணைந்து நடத்திய திருமணம் இது. (இப்ப தாங்க மேட்டருக்கு வர்ரேன்)

எங்கள் நண்பன் பாலா (கதையின் நாயகன்) கோவயைில் ஒரு பிரபலமான பைனான்சில் வேலை செய்தான் அவனுக்கு ப்ரமோஷன் கிடைத்து திருப்பூர் சென்றான்
இவர் அங்க மேனேஜர். அதே ஆபிசில் அந்த கிளையின் இன்சார்ஜ் கீதா இவரு போய் மூன்று மாதங்களில் இருவருக்கும் பத்திகிச்சு. அப்புறம் ஒரு 5 மாதங்கள் கழிச்சு
நண்பன் எங்ககிட்ட வந்து நான் திருமணம் செய்தால் அவளைத்தான் செய்வேன் மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று வசனம் பேசினான் என்ன பன்றது நண்பனாச்சே
என்னுடன் தங்கியவர்களில் இருவர் வக்கீல் சொல்லவேண்டுமா எங்களுக்கு உடனே திருமணத்திற்கு நாள் குறித்து இடம் குறிச்சோம்...

நாள் ஒருவாரம் கழித்து புதன்கிழமை இடம் கோவையில் உள்ள ஒரு பிரபலமான கோயில். கோவிலுக்கு விசாரிக்க நானும், வக்கீலும் போனாம் அங்க என்னடான்னா காதல் திருமணம் இங்க அனுமதி இல்லை வேனும்னா வெளிய விநாயகர் கோயில்ல வெச்சு பண்ணிக்கலாம். இதற்கு புரோகிதர் வர மாட்டேன் என்கிறார். அவருக்கு பதில் காதல் திருமணத்திற்கு என இருக்கும் ஒருவருக்கு
ரூ.500 கொடுத்ததும் அவர் சரி என்று சொல்லிவிட்டர். மற்ற நண்பர்கள் பட்டுப்புடவை, வேஷ்டி, மாலை மற்றும் தாலி திருமணத்திற்கு தேவையான அனைத்துப்பொருட்களும் ஒரு ரூ.25000 ரெடி பண்டி வாங்கியாச்சு.

திருமண நாள் அன்று இரண்டு நண்பர்கள் பெண்ணை அழைத்துவர நடுராத்திரி 5 மணிக்கு (எனக்கு எப்பவுமே 8 மணிக்குத்தாங்க வெடியும்) போய்ட்டாங்க அப்புறம் எனக்கும் வக்கீலுக்கும் கோவில்ல வேலை எல்லாம் ரெடி ஆகி இருக்கிறோம். பொண்ணு இன்னும் வரல. கூட போனவங்க செல்லும் நாட் ரீச்சபல் என்னு பன்றது டென்சன், டென்சன்,டென்சன்.....

ஒரு அரைமணி நேரம் கழிச்சு நண்பன்கிட்ட இருந்து போன் பொண்ணு இன்னும் வரலனு. என்னடா பன்றது மணி இப்பவே 8 ஆச்சசுனு டென்சனின் உச்சியில் இருக்கும் போது
அடுத்த போன் பொண்ணு பொண்ணு வீட்டு பின்னாடி வழியா ஒரு 5 கீலோ மீட்டர் நட்ந்து வந்து பனியன் கம்பெனி பக்கதில இருக்குது நாங்க பிக்கப் பன்னிட்டு 1 மணி நேரத்தில்
வந்து விடுவோம் நீங்க ரெடியா இருங்க (நாங்க தான் ரெடியாச்சே) இந்த சமயத்தில் கோவில்ல பார்த்த கிட்டத்தட்ட அந்நிக்கு மட்டு 20 கல்யாணமாம் (இது கோவில்ல பதிவு பண்டுன கல்யாணம்) காதல் திருமணம் ஒரு 3 நடந்துச்சு.

9 மணி பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு நான் போட்டோகிராபர் அளாளுக்கு ஒரு வேலை திருமணம் நல்ல நேரத்தில் சுபமா முடிந்தது. அடுத்தது என்ன செய்யலாம்னு முடிவெடுக்கும்
போது முதல்ல சாப்பிடலாம்னு ஒட்டல் ஆர்யாஸ்ல சாப்பிட்டுவிட்டு அடுத்த முடிவ எடுத்தோம். பொண்ணு வீட்டுக்கு போன் செய்து பேசறது பேசறது நான்னு என்ன முடிவெபண்ணிட்டானுக.....

அந்த திக் திக் சில நிமிடங்கள்

நான் பொண்ணு வீட்டுக்கு போன் செஞ்சா நாலு தடவை போன் எடுக்கல எனக்கு பி.பி ஏறிருச்சு. மறுபடியும் ரிங்போகுது என்னைச்சுத்தி நண்பர்கள் ஸ்பீக்கர் ஆன்ல அவங்க அப்பா ஒரு வழியா
போன எடுத்தார். நான் பேசினேன் உங்க பொண்ணும் எங்க நண்பன் அவங்க ஆபிஸ்ல மேனேஜரும் கல்யாணம் பண்ணிட்டாங்க இப்பதான் நடந்துச்சுன்னு சொண்ணேன்.
சும்மா ஒரு 5 நிமிடம் திட்டுட்டு( செம திட்டு) கடைசியா சொன்னார்......................
எங்கிட்ட காலைல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல ஏன் சொல்லவில்லைனு எனக்கு மாத்து அப்புறம் வீட்டுக்கு வரச்சொல்லுனு சொல்லி அவங்க குடும்பம் எல்லாம் ஒன்னு சேர்நது மறுபடியும் இன்னொரு திருமணம் அவங்க குடும்த்துடன் நடந்தது. இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு
எங்கள கூப்பிடவே இல்லை............

Tuesday, December 1, 2009

நம்ம ஊரு கோவில், சுற்றுலாத்தளங்களை பல கோணங்களில் பாருங்க....

ஒரு வாரத்துக்கு அப்புறம் இப்பதான்
வலைப் பூ விற்கு வந்தேன்....

நான் நெட்ல இருக்கும் போது
ஒரு அழகான 360 view வெப்சைட்  பார்த்தேன்
அதுவும் நம்ம தமிழ்நாட்டு கோவில்கள்....
நான் ரொம்ப ரசிச்சு ரசிச்சுப் பார்த்தேன்....
ரொம்ப அழகா இருந்துச்சு நீங்களும் பாருங்களேன்........

360 view வெப்சைட்டுக்கான லிங்க் கீழே இருக்கு பாருங்க.......



மதுரை : http://www.view360.in/virtualtour/madurai/

தஞ்சாவூர் : http://www.view360.in/virtualtour/thanjavur/

மகாபலிபுரம் : http://www.view360.in/virtualtour/mamallapuram/

ராமேஸ்வரம் : http://www.view360.in/virtualtour/rameswaram/

கன்னியாகுமரி: http://www.view360.in/virtualtour/kanyakumari/vivekanandarrock/

கொல்லி மலை: http://www.view360.in/virtualtour/kollihills/arapaleesarartemple/

ஏலகிரி:http://www.view360.in/virtualtour/yelagiri/murugantemple/

நம்ம ஊரு இயற்கை எழில் கொஞ்சும் இடமான

குற்றால அருவிகள்

கொல்லி மலை அருவிகள்

ஏற்காடு மலை

நீங்களும் பார்த்து ரசியுங்கள்....... http://www.view360.in/index.html