Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Monday, December 28, 2015

அந்தியூர் ஈரட்டி நீர்வீழ்ச்சி

ஈரோடு மாவட்டம் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது அந்தியூர் வனம், இந்த அடர் வனத்தில் ஈரட்டி என்ற கிராமத்தை இங்குள்ளவர்களே அநேகம் பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.  இந்த மழை கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் காட்டில் நடந்து செல்ல வேண்டும் அவ்வாறு செல்லும் போது, இயற்கையின் அற்புதமான கொடை என்று சொல்லும் ஓர் எழில் மிகு பச்சைபசேல் என்ற காட்டினுள் அமைந்துள்ளது ஓர் நீர்வீழ்ச்சி. அநேகம்பேர் அறியாத இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த முறை பயணக்கும் வாய்ப்பும், அதில் ஆனந்த நீராடும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. 

காடுகளில் பல நல்ல இயற்கை இலைகள் மீது பட்டு  மேடு பள்ளங்களை கடந்து ஓடையாக உருவெடுக்கிறது சில நீர் ஆதாரங்கள். அது மட்டுமல்லாமல் பல இடங்களில் சுனைகளில் இருந்து நீர் பெருகி அடர் வனத்தில் இருந்து பல ஓடைகள் வருகின்றன. 

இந்த ஓடைகள் எல்லாம் ஒன்றினைந்து சிறிய ஆறாக உருவெடுக்கிறது இதை காட்டாறு என்று சொல்கின்றனர். இந்த காட்டாறு ஓர் இடத்தில் இயற்கையாக அமைந்த பாறையின் மேல் விழுந்து சிறு நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இந்த காட்டாறில் உள்ள மூலிகை நீரும், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழும் நீர்விழ்ச்சி தண்ணீர் நம் மேல் படும் போது, நம்மை அறியாமல் நம் உடல் புத்துணர்வு பெறுகிறது.

சுமார் 1 மணி நேரம் இந்த நீரில் நீராடிய எங்களை மேலும் புத்துணர்வாக்கியது இந்த ஈரட்டி நீர்வீழ்ச்சி..



அதிக பேர் பயன்படுத்தாமல் இருப்பதால் சுற்றுச்சுழல் மாசின்றி அழகாகவும், சுத்தமாகவும் இருக்கிறது இந்த சிறிய நீர்வீழ்ச்சி...

வாய்ப்பிருப்பவர்கள் சென்று வாருங்கள்.. அந்தியூர் மலைப்பகுதியில் ஈரட்டி என்ற ஊரில் அமைந்து உள்ளது,

இதை ஈரட்டி நீர்வீழ்ச்சி என்று அழைக்கின்றனர்...



குறிப்பு: செல்லும் வாய்பிருப்பவர்கள் ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், இயற்கையை ரசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டுகிறேன்...

அந்தியூரில் இருந்து ஈரட்டிக்கு பஸ் வசதி உண்டு...

Sunday, May 13, 2012

உயிரைப்பணையம் வைக்கும் தீயணைப்பு வீரர்கள்...


தலை போகிற அவசரத்தில் நாம் சென்றுகொண்டிருந்தாலும் சைரன் ஒலித்தபடி விரையும் இரண்டு வண்டிகளின் மீது அனிச்சையாக நம் கண்களும் மனமும் குவியும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி இரண்டுமே உயிர்காக்கும் வண்டிகள் என்றாலும் தீயணைப்பு வண்டியின் சேவை கொஞ்சம் வித்தியாசமானவை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்ற உயிர்களை காக்கும் உன்னத பணி.

வேகமாக பரவும் நெருப்போ,  சரிந்துவிழும் கட்டடமோ, உயிர் குடிக்கும் விஷ வாயுயோ, ஊரையே குடிக்கும் சுனாமியோ, பூகம்பம், கிராமங்களில் கிணற்றுகுக்குள் விழந்த மாடுகள் இப்படி  எதுவாக இருந்தாலும் அங்கே உதவிக்குத் தீயணைப்புத் துறையின் உதவுவர். மனிதனக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் ஆபத்தில் இருந்து காக்கும் அற்புத பணி இவர்களுடையது.
கருவிகள்

தீ விபத்து குறித்த தகவல் வந்த 20 வினாடிகளுக்குள் தீயணைப்புப் படையினர் அதற்குத் தகுந்த கருவிகள் பொருத்திய வண்டியுடன் புறப்படுவார்கள். சம்பவம் நடந்த இடத்தை அடைந்ததும் மின்னல் வேகத்தில் செயலாற்றுவார்கள். கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு வண்டியின் நிலையை அறிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.


தங்கள் உயிரைத் திரணமாக மதித்து மீட்புப்பணியில் களமிறங்கும் தீயணைப்பு வீரர்களுக்காக உதவும் வகையில் மிகுந்த சக்தி வாய்ந்த சில அதி நவீன உபகரணங்கள் உள்ளன இவற்றைத் தவிர, மிக உயரமான கட்டிடத்தில் சிக்கித் விப்போரை மீட்கவும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கவும் Hazamat Vehicles, Sky Lifts  ஆகிய நவீன ரக உபகரணங்களும் பயன்படுகின்றன.

கொடிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உயிருக்குப் போராடுகிறவர்களையும், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களையும் மீட்கும் கடினமான பணிக்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இயற்கை சீற்றம்

மனிதர்களால் ஏற்படும் விபத்து ஒருபுறம் இருக்க மறுபுறம் இயற்கை சீற்றமும் சமுதாயத்தை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல், நில நடுக்கம், வறட்சி, மண் சரிவு போன்றவற்றால் ஏற்படும் அழிவு சமூகச் சூழலையே புரட்டி எடுத்துவிடும் அளவுக்கு அபாயமானவை. இதுபோன்ற நேரத்தில் உதவத்தான் தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் வருவதற்குள் சூழ்நிலையை எதிர்கொள்ளவும் நிலைமையைக் கையாளவும் கற்றுக்கொண்டால், பாதிப்புகளை ஓரளவுக்குக் குறைக்கலாம். இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்க முடியாவிட்டாலும், சீரிய திட்டமிடல் மூலம் விளைவுகளைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

தீ பரவுகிறது என்றால் சூழ்நிலையை அனுமானிக்க வேண்டும். பதற்றம், தேவையில்லாத சிக்கலை உருவாக்கும். இதுபோன்ற நேரத்தில், ‘நில், படு, உருண்டோடு’ என்பதைக் கடைபிடிக்கச் சொல்கின்றனர் தீயணைப்புத் துறையினர். இந்தச் செயல்களால் தீப்புகையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஒரு விபத்து ஏற்பட்டதும், நமக்கேன் வம்பு என ஒதுங்கிக்கொள்ளாமல் 101 என்ற எண்ணைச் சுழற்றி சம்பவம் நடந்த இடத்தை தெளிவாக ஏதேனும் ஒரு அடையாளத்துடன் தெரிவிக்க வேண்டும். அந்த அழைப்பு எழும்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, சம்பவம் நடக்கும் தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவிக்கப்படும்.

பணிகள்

ஒரு தீயணைப்பு வீரரின் பணி மிக கடினமான, துணிச்சலான அதே சமயம் சவால் நிறைந்த பணியாகும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தெரிந்தும் தெரியாததுமான ஆபத்துகளைத் தாங்கிப் பணிபுரியும் பணியாளரின் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கக்கூடும். தீ, வெள்ளம், புயல், பூகம்பம், நிலச்சரிவு, ரசாயன வாயுகசிவு, கட்டிட இடுபாடுகளில் மீட்பு பணி போன்ற நிகழ்வுகளில் பணிபுரியும்போது சிறியதும் பெரியதுமான  காயங்கள், உடல் உறுப்புகளின் தற்காலிக மற்றும் நிரந்தரச் செயலிழப்பு, உடல் உறுப்புகளைப் பறிகொடுத்தல் போன்ற பாதிப்புகள் மட்டுமின்றி சில விபத்துகளில் பணிபுரியும்போது மரணமும்கூட ஏற்படும்.

இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எதிரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல, பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் தீயணைப்பு வீரர்களது மீட்புப் பணி.

ஆனால் இந்த சமுதாயத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான முக்கியத்துவம் மிக குறைவு.. பல பள்ளிகளிளும், கல்லூரிகளிலும் பக்கத்தில் உள்ள தீயணைப்பு அதிகாரிகளை கூப்பிட்டு மாணவர்களுக்கு அவர்களின் அனுபவங்களை கூறச்சொல்பவர்களை விரல் விட்டு என்னி விடலாம்.. உயிரைப்பணையம் வைத்து காப்பாற்றும் இவர்களுக்கு நிச்சயம் ஊருக்குள் மரியாதை குறைவுதான்..

Tuesday, December 1, 2009

நம்ம ஊரு கோவில், சுற்றுலாத்தளங்களை பல கோணங்களில் பாருங்க....

ஒரு வாரத்துக்கு அப்புறம் இப்பதான்
வலைப் பூ விற்கு வந்தேன்....

நான் நெட்ல இருக்கும் போது
ஒரு அழகான 360 view வெப்சைட்  பார்த்தேன்
அதுவும் நம்ம தமிழ்நாட்டு கோவில்கள்....
நான் ரொம்ப ரசிச்சு ரசிச்சுப் பார்த்தேன்....
ரொம்ப அழகா இருந்துச்சு நீங்களும் பாருங்களேன்........

360 view வெப்சைட்டுக்கான லிங்க் கீழே இருக்கு பாருங்க.......



மதுரை : http://www.view360.in/virtualtour/madurai/

தஞ்சாவூர் : http://www.view360.in/virtualtour/thanjavur/

மகாபலிபுரம் : http://www.view360.in/virtualtour/mamallapuram/

ராமேஸ்வரம் : http://www.view360.in/virtualtour/rameswaram/

கன்னியாகுமரி: http://www.view360.in/virtualtour/kanyakumari/vivekanandarrock/

கொல்லி மலை: http://www.view360.in/virtualtour/kollihills/arapaleesarartemple/

ஏலகிரி:http://www.view360.in/virtualtour/yelagiri/murugantemple/

நம்ம ஊரு இயற்கை எழில் கொஞ்சும் இடமான

குற்றால அருவிகள்

கொல்லி மலை அருவிகள்

ஏற்காடு மலை

நீங்களும் பார்த்து ரசியுங்கள்....... http://www.view360.in/index.html