Wednesday, April 4, 2012

அஞ்சறைப்பெட்டி 05/04/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பதிவுகள் எழுத இயலவில்லை கடந்த வாரம் அஞ்சறைப்பெட்டி அன்று ப்ராஜக்ட் டெலிவரி அதனால் வேலைப்பளுவில் அஞ்சறைப்பெட்டியும் எழுத இயலவில்லை. மீண்டும் இந்தவாரத்தில் தொடரும் வழக்கம் போல் எனது பதிவுகள்...
...............................................................................................

பங்குனி பிறந்ததில் இருந்து எனது மனைவி ஊரான அந்தியூர் பத்ரகாளியம்மனுக்கு பூ மிதிப்பதாக இருந்தேன் அதனால் வெளியில் சாப்பிடாமல், அசைவ உணவுகள் சாப்பிடாமல் இருந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உணவுகள் சாப்பிடாமல் பால், பழம் மற்றும் பழ ரசங்கள் மட்டும் 3 நாட்கள் சாப்பிட்டு விரதம் இருந்தேன் நேற்று வெற்றிகரமாக மதியம் 2 மணியவில் பூ மிதித்துவிட்டு எனது நேர்த்திக்கடனை அம்மனுக்க நிறைவேற்றினேன்..

பூ மிதிக்கும் போது கூட எனக்கு அனல் தெரியவில்லை பூ மிதித்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் தோர் சாலையில் ஒரு 7 நிமிடம் நடந்த போது கால் பாதத்தில் இதுவரை அப்படி ஒரு வெப்பத்தை கண்டதில்லை. கொஞ்ச நேரம் நடந்த எனக்கே இப்படி என்றால் செருப்பில்லாமல் நம்ம ஊரில் நடக்கும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் அவர்களை நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது. இனி செருப்பு அந்ததும் அதை தூக்கி வீசுவதை விட்டு விட்டு பழைய துணிகளை கொடுப்பவர்களுக்கு செப்பலையும் கொடுக்கலாம்...

3 நாள் விரதத்தில் முக்கியமான விசயம் ஒரு 2 கிலோ எடை குறைந்துள்ளேன். இனி வாரம் ஒரு நாள் விரதம் இருக்கவேண்டியது தான்...


...............................................................................................

மீண்டும் ஐபிஎல் அதுவும் இப்போது பரிட்சை நேரத்தில் துவங்கி உள்ளது கொஞ்ச நாட்கள் தள்ளி துவங்கி இருக்கலாம். ஐபில் நடத்துபவர்களுக்கு பரிட்சையா முக்கியம் பணம் தானே முக்கியம். முழுக்க முழுக்க பணத்திற்காக மட்டுமே விளையாடும் விளையாட்டு இந்த ஐபிஎல் இதில் மெனக்கெட்டு பார்ப்பதை விட குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடலாம்...

................................................................................................

கிராமப்புறங்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. முதலில் நடனங்களில் ஆரம்பித்து பின் இது ஆபாச நடனமாக மாறியது அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சிகளை ஆரம்பித்திலேயே தடை செய்திருந்தால் இன்று ஈசல் போல வளர்ந்திருக்காது ( ஒரு 4 வருடத்திற்கு முன்  இந்நிகழ்ச்சியை பார்க்க ஊர் ஊராக சுற்றியது தனிக்கதை). இந்நிகழ்ச்சிகளை தடை செய்தது போல் தொலைக்காட்சியில் வரும் ஆபாச நடனங்களையும் தடை செய்ய வேண்டும். ( அதுக்கு யாராவது வழக்கு தொடர்ந்தால் மிக்க மகிழ்ச்சி) அவ்வாறு செய்தால் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கும் போது தைரியமாக சேனல் மாற்றலாம்...

................................................................................................

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் `டொனால்டு டிரம்ப்ஸ்' என்ற அமைப்பின் சார்பில் உலக அழகிப்போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளில் அழகிப்பட்டம் வென்றவர்கள், இந்த போட்டியில் பங்கேற்பார்கள். அதன்படி, கனடா நாட்டின் அழகி போட்டியில் ஜென்னா தலக்கோவா என்ற 23 வயது மாடல் அழகி பங்கேற்றார்.
இறுதி சுற்று வரை தகுதி பெற்ற அவருக்கு போட்டியில் தொடர்ந்து நீடிக்கத்தடை விதிக்கப்பட்டது. காரணம், ஜென்னா ஆணாக இருந்து பெண்ணாக மாறிவர் என்பதுதான்.   உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு, ஒருவர் இயற்கையிலேயே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது ஜென்னா `உண்மையிலேயே ஒரு பெண்தான்' என்றாலும், விதியின்படி அவரை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த முடிவை எதிர்த்து மாடல் அழகி ஜென்னா போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து கனடா அழகி போட்டியில் பங்கேற்க ஜென்னாவுக்கு போட்டியை நடத்தும் அமைப்பு அனுமதி வழங்கி இருக்கிறது.   ஜென்னாவுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டபோது பேட்டி அளித்த கனடா அழகி போட்டி அமைப்பாளரான டெனிஸ் தவிலா, "ஜென்னா உண்மையான பெண்ணைப்போல் இருக்கிறார்.
அவர், உண்மையான பெண்தான். ஆனால், விதிகளின்படி (பிறக்கும்போதே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும்) அவரை அனுமதிக்க முடியாது என்று கூறி இருந்தார். அதற்கு விளக்கம் அளித்த ஜென்னா, 4 வயது வரை பெண்ணாகவே இருந்ததாகவும், அதன்பிறகு ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தினால் ஆணாக மாறி, பின்னர் 19-வது வயதில் அறுவை சிகிச்சை மூலம் முழுமையான பெண்ணாக மாறிவிட்டதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
...............................................................................................

உயர்த்திய மின்சார கட்டணத்தை மீண்டும் குறைத்துள்ளார் முதல்வர். மின்சார கட்டணதை உயர்த்துவது பிரச்சனையல்ல மகக்ளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வேண்டும் என்பதே பிரச்சனை.. விரைவில் இப்பிரச்சனை தீரும் என அனைவரும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்...


..................................................................................................

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 47 வயது பெண் சூசன் மில்மேன். இவர் பேஸ்புக் இணைய தளம் மூலம் சிறுவர்கள் பலருடன் பழக்கம் வைத்திருந்தார். அதில் சில சிறுவர்களுக்கு தனது அந்தரங்க அழகை வெப் கேமரா மூலம் காட்டி வந்தார். இதில் மயங்கிய 15 வயது சிறுவன் ஒருவனை தனது படுக்கை அறைக்கு அழைத்து வந்த சூசன் சிறுவனுடன் 2 முறை செக்ஸ் உறவு கொண்டார்.

இதுபற்றிய தகவல் வெளியே தெரிய வந்தது. அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இங்கிலாந்து சட்டப்படி சிறுவர்களுடன் உறவு கொள்வது குற்றமாகும். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
தகவல்
திருமணமான பெண்கள் உடல் எடையை குறைக்க சாப்பாட்டில் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். அதேபோன்று கர்ப்ப காலத்திலும் கடைபிடிப்பதால் விபரீத விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது கர்ப்பிணி ஆக இருக்கும் பெண் உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவருக்கு குண்டான குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அதே நேரத்தில் அக்குழந்தையை எதிர்காலத்தில் சர்க்கரை நோய் பாதிக்கும். இது குறித்த ஆராய்ச்சியை மான்செஸ்டர் பல்கலைக் கழக நிபுணர்கள் செம்மறி ஆட்டின் மூலம் நிகழ்த்தினர்.

கர்ப்பமாக இருந்த பெண் ஆட்டுக்கு உணவு கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்த ஆடு “கொழு கொழு”வென குண்டான குட்டியை ஈன்றது. முன்னதாக, ஆட்டிக்குட்டி பிறக்கும் முன்பே அதன் மூளையை பரிசோதித்தனர். அதன் மூளை திசுக்களின் டி.என்.ஏ. மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதுதான் குட்டிகளை கொழு கொழு வென பிறக்க செய்வது தெரிய வந்தது. அதே நேரத்தில் நன்றாக தீனி அளிக்கப்பட்ட ஆடு சாதாரண எடையுள்ள குட்டிகளை ஈன்றது. அதேபோன்று தான் மனிதர்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, கர்ப்பிணிகள் சாப்பாட்டில் கட்டுப்பாடு வைத்து கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றன.
 

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  இனியவை கூறல் என்று தனது வலைப்பூவிற்கு பெயரிட்டு கட்டுரைகள் பல, வரலாற்று நிகழ்வகள் என பல வகையில் எழுதி வருகிறார். இவரின் கொங்கு மண்டல வரலாற்று சான்று அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று..

http://eniyavaikooral.blogspot.in/
தத்துவம்
ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம்.
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவரரேயானால். அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்...
 ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?

6 comments:

  1. அனைத்தும் அருமை...பரவாயில்லையே...மூன்று நாட்களில் 2 கிலோ குறைந்து விட்டீரே..இனி நாமளும் கடை பிடிக்கணும்...

    ReplyDelete
  2. //உயர்த்திய மின்சார கட்டணத்தை மீண்டும் குறைத்துள்ளார் முதல்வர். //

    என்னத்தை குறைசிருக்கார். இந்த தடவை EB பில் கட்டும் போது இருக்கு உங்களுக்கு ஷாக்.

    ReplyDelete
  3. 3 நாள் விரதத்தில் முக்கியமான விசயம் ஒரு 2 கிலோ எடை குறைந்துள்ளேன். இனி வாரம் ஒரு நாள் விரதம் இருக்கவேண்டியது தான்...//ஆஹா ஆத்திகனா மாறிடலாம் போலயே

    ReplyDelete
  4. உங்கள் மீள் வரவு, நல்வரவாகட்டும்..

    ReplyDelete
  5. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துகளும்..

    ReplyDelete
  6. அருமையான விசயங்களுடன் அஞ்சறைப் பெட்டி அழகு.

    ReplyDelete