உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இன்று பெற்றோர்கள்
எவ்வளவு செலவானலும் பரவாயில்லை என் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்று அதிக
செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அங்கு வருடம்
முழுவதும் பாடம் நடத்துகின்றனர் பல டெஸ்ட்டுகள் வைக்கின்றனர் அப்போதும்
அந்த மாணவன் படிக்க வில்லை என்றால் பெற்றோரிடம் கூறி அவனை எப்படி
படிக்கவைப்பது என்று யோசித்து அவனுக்கு புரிய வைக்க வேண்டும் ( பணம்
வாங்குறீர்கள் அல்லாவா புரிய வைத்தால் தவறில்லை).
இதை எல்லாம் விட்டு விட்டு அந்த மாணவனுக்க பள்ளியில் தேர்வு நடக்கும் போது பிட் அடிக்க உதவியது எவ்வளவு கேவலமான விஷயம். தன் மகன் பிட் அடித்து தான் பாஸ் செய்தான் என்றால் அந்த பெற்றோருக்கு எவ்வளவு கேவலம். நிச்சயம் இதை அனுமதிக்க கூடாது. அந்த பள்ளியின் மேல் எடுக்கும் நடவடிக்கையில் மற்ற பள்ளிகள் இந்த தவறை செய்யக்கூடாது என்பதில் இதற்கு அளிக்கும் தண்டனையில் தான் இருக்கின்றது.
தங்கள் ப ள்ளி 100 சதவீதம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக நடந்த கேவலமான விசயம். இதைப்போல் பல பள்ளிகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது அப்படி அவர்கள் செய்தார் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.... இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு அந்த பொழப்பு பொழைக்கலாம்...
இதை எல்லாம் விட்டு விட்டு அந்த மாணவனுக்க பள்ளியில் தேர்வு நடக்கும் போது பிட் அடிக்க உதவியது எவ்வளவு கேவலமான விஷயம். தன் மகன் பிட் அடித்து தான் பாஸ் செய்தான் என்றால் அந்த பெற்றோருக்கு எவ்வளவு கேவலம். நிச்சயம் இதை அனுமதிக்க கூடாது. அந்த பள்ளியின் மேல் எடுக்கும் நடவடிக்கையில் மற்ற பள்ளிகள் இந்த தவறை செய்யக்கூடாது என்பதில் இதற்கு அளிக்கும் தண்டனையில் தான் இருக்கின்றது.
தங்கள் ப ள்ளி 100 சதவீதம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக நடந்த கேவலமான விசயம். இதைப்போல் பல பள்ளிகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது அப்படி அவர்கள் செய்தார் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.... இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு அந்த பொழப்பு பொழைக்கலாம்...
............................................................ .............................. .....
நான்
தினமும் பயணிக்கும் வழியில் காலையும், மாலையும் வயதானவர்கள் நிறைய நின்று
கொண்டு இருப்பர். ஒரு நாள் இரவு அலுவலகத்தில் இருந்து செல்லும் போது இரவு
11 ஆகிவிட்டது அப்பவும் அங்கு கூட்டம் இருந்தது. என்ன என்று விசாரிக்கும்
போது தான் சொன்னார்கள் மண்ணெண்ணெய் வாங்க இரவில் இருந்து நிற்பதாகவும்
அப்பவும் குறைந்த அளவு தான் கிடைக்கின்றதாம். எல்லா நாளும் கிடைப்பதில்லை
அவர்கள் அறிவிக்கும் நாள் அன்று முன்னரே இடம் போட்டு விட்டால் அடுத்த நாள்
சீக்கிரம் வாங்கிக்கொள்ளலாம் என்றனர். எத்தனையோ முன்னற்றம் இருந்தும் மண்ணெண்ணெய்க்காக 20 மணி நேரம் காத்திருந்து வாங்குவது கொடுமையான விஷயம்.. இப்படி இருந்தால் எப்ப நாம் வல்லரசு ஆகிறது?????
............................................................ .............................. .....
தலைகவசம் அணிவது நிச்சயம் கட்டாயம் ஆக்க வேண்டும்
என்று நிறைய முறை எழுதியாச்சு இருந்தாலம் அனுபவிச்சு எழுதினால் தான் பலன்
அதிகம்.. ஊரை விட்டு ஒதுக்குப்புறமான சாலையில் பயணிக்கும் போது எப்பவும்
நண்பர் வேகமாக சென்று கொண்டு இருந்தார் நான் பின்னால் சென்று கொண்டு
இருந்தேன் திடீர் என ஒரு நாய் ஒன்று நண்பரின் வாகனத்தில் குறுக்கே வந்து
சக்கரததிற்கும் இன்ஜினுக்கும் நடுவில் சிக்கி நண்பரை புரட்டி போட்டதில்
உடலில் காயம் சுமாராகவும் முகத்தில் சரிச்சு விட்டு இருந்தது. அப்பதான்
நண்பனிடம் சொன்னேன் தலைகவசம் அணிவதை கிண்டல் செய்தாயே இப்ப பாரு உன்
நிலமையை என்றதும் தலை குனிந்து நின்றான் நண்பன்.. மக்களே நிச்சயம் வாகனம்
ஓட்டும் போது தாலைகவசம் அணியுங்கள்...
............................................................ .............................. ......
காந்திஜியின் ஒரு துளி ரத்தம் படிந்த புல், மண் ஆகியவை ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. 1948-ம் ஆண்டில் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அந்த இடத்தில் இருந்து இவை சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றைப் போலவே, காந்திஜி பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை போன்றவையும் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்பட்டன. இறுதியில் கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கும், ராட்டை ரூ.21 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன.
ரத்தம் தோய்ந்த மண்ணும் புல்லும் கண்ணாடியிலான மேல்புறத்தைக் கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்கான கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பொருள்களை ஏலத்தில் வாங்கியவர்களைப் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. ஏலம் விடப்பட்ட கண்ணாடி, 1890-ம் ஆண்டு வாக்கில் காந்திஜி லண்டன் வந்தபோது வாங்கியதாகும். காந்திஜி எழுதிய கடிதங்கள், ஆன்மிகத் தகவல்கள் அடங்கிய அந்தக் கால இசைத் தட்டு, பிற ஆவணங்கள் போன்றவையும் ஏலம் விடப்பட்டன.
லண்டனைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான முல்லாக், இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்திருந்தது. காந்திஜியின் பொருள்கள் ஏலம் விடப்படுவது குறித்து இந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டபோது, பல்வேறு தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
............................................................ .............................. ......
கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது கடந்த வார
விடுமுறையில் ஊரில் சுற்றும் போது வெய்யிலின் உக்கரம் தணிக்க ஒரு நாளைக்கு
5 முறை குளிக்க வேண்யதாகிற்று.
மின்சாரம் வேறு இல்லை அதனால்
வேப்பமரத்தடியில் படுத்து ஓரளவிற்கு வெப்பத்தை தணித்தேன் ஆனால் இந்த வேகாத
வெய்யிலிலும் கிராமத்தில் விவசாய நிலங்களில் உழுபவர்களையும், ஆடு மாடு
மேய்ப்பவர்களையும் பார்க்கும் போது அவர்கள் இந்த வெய்யிலை பொருட்
பொடுத்தாமல் தங்களது பணிகளில் மும்மரமாக இருந்தனர். என்னால் வெய்யில் தாங்க இயலாமல் கிணற்றில் சென்று தண்ணிக்குள் படுத்து தான் உஷ்ணத்தை தணித்தேன்...
......................................................... .............................. ........
கடந்த வாரம் 3 நாட்கள் விடுமுறையாக இருந்தால் வெய்யிலில் இருந்து
தப்பிக்க எங்கள் பக்கத்தில் உள்ள கொடிவேரி அணைக்கு சென்றோம் அங்கு சென்றால்
பயங்கர கூட்டம் அதனால் நீர்வீழ்ச்சியில் குளிக்காமல் அணையின் உட்பகுதியில்
குடும்பத்தோடு தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தோம். நாங்கள் குளித்த
இடத்திற்கு பக்கத்தில் சில கல்லூரி பெண்களும், பசங்களும் விளையாடிக்கொண்டு
இருந்தனர் பரிசல் சென்று வந்ததால் அதில் ஒரு பெண் மட்டும் தனியாக பிரிந்து
வேறு பக்கம் வரும் போது அருகில் இருந்த 45 வயது உள்ள ஒரு ஆள் அந்த பெண்ணை
தண்ணீரில் வைத்து ஒரு அமுத்து அமுத்தி விட்டு முழுகிவிட்டான் அந்த பெண்
திரு திரு என்று முழிக்க நாங்கள் அவன் எங்கே என்று தேடும் போது அவனை
கண்டுபிடிக்கவே முடியவில்லை அப்போது தான் அந்த பெண்ணைப்பார்த்தோம் வெள்ளை
நிற சுடிதாரில் அப்பட்டமாக தெரிந்தால் என் மனைவி அந்த பெண்ணைக்கூப்பிட்டு
இப்படி துணி போட்டுக்கொண்டு தண்ணீரில் இறங்கினால் இப்படித்தான் நடக்கும்
முதலில் துப்பட்டாவை போர்த்தி குளி என்றதும் அந்த பெண் கண்ணீரோடு ம்ம் என்ற
வெளியேறியது மிக பரிதாபமாக இருந்தது..
முதலில் வெளியில் குளிக்கும் போது பெண்கள் தங்கள் உடைகள் எப்படி இருக்கு என்று பார்த்த பின் தான் தான் தண்ணீரில் இறங்கி விளையாட வேண்டும் அங்கிருப்பவர்கள் நம்மை பார்க்கவேண்டும் என்று கவர்ச்சியான உடையில் நன்கு கூட்டம் உள்ள இடத்தில் குளித்தால் இப்படித்தான் நடக்கும்....
முதலில் வெளியில் குளிக்கும் போது பெண்கள் தங்கள் உடைகள் எப்படி இருக்கு என்று பார்த்த பின் தான் தான் தண்ணீரில் இறங்கி விளையாட வேண்டும் அங்கிருப்பவர்கள் நம்மை பார்க்கவேண்டும் என்று கவர்ச்சியான உடையில் நன்கு கூட்டம் உள்ள இடத்தில் குளித்தால் இப்படித்தான் நடக்கும்....
............................................................ .............................. ........
இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்தவர் மாத்யூ ஹன்கின்ஸ். இவர் சவுத்
ஆம்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது 4 வயது மகள்
ஹெய்டி கான்கின்ஸ். லண்டனில் உள்ள 'மென்சா' என்ற நிறுவனம் பொது அறிவு
போட்டி நடத்தியது. இதில் பெரியவர்களே இதுவரை 100 கேள்விகளுக்கு மட்டுமே
பதில் அளித்து உள்ளனர்.
ஆனால், ஹெய்தி 159 பொது
அறிவு கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தாள். இதற்கு முன்பு ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங் ஆகிய சிறுவர்கள் 160 கேள்விகளுக்கு
பதில் அளித்துள்ளனர். இதன் மூலம் உலகிலேயே 2-வது இளம் அறிவாளி என்ற
பெருமையை பெற்றாள். இவளது அறிவு திறனை மென்சா நிறுவன அதிகாரிகள்
பாராட்டினர். அறிவு திறனை கண்டறிந்து அவளை ஊக்குவித்த பெற்றோரை பாராட்டி
வாழ்த்தினர்.
............................................................ .............................. ........
இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி... என்ன தான் நமக்குள்ள பல பிரச்சனை இருந்தாலும் இந்த மாதிரி கண்டுபிடிப்புகளை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும்... இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..
............................................................ .............................. ........
இலங்கைக்கு சென்றுள்ள மத்திய குழுவினர் எதிர்பார்த்தபடியே கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு அளிக்கின்றனர். அங்கு இருந்து இங்கு வந்த பின்னாவது யாராவது ஒருவர் உண்மையைச் சொல்வார்களா என்று பார்ப்போம்..
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் விதியின் வலியே உயிர் செல்லும் என்று தன் வலைப்பூவிற்கு பெயரிட்டு கட்டுரைகள் பல, வரலாற்று நிகழ்வகள் என பல வகையில் எழுதி வருகிறார் அருண் ஜீவன். இவரின் தேவதைக்கான கவிதைகள் அனைவரும் ரசிக்கவேண்டிய ஒன்று..
http://humalaniman.blogspot.
தத்துவம்
அள்ளக் அள்ளக் குறையாத செல்வம் கல்வி என்றால், எதற்குமே ஈடு இணையற்ற செல்வம் தன்னம்பிக்கைதான்!
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
தகவல்
பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் உள்ள சுக்கூர் பகுதியில் இம்ரான் அலி
சேர்(31) என்கிற எக்ஸ்-ரே தொழில்நுட்ப பணியாளருக்கு ஒரு ஆண் குழந்தை
பிறந்தது. பிறந்த போதே அந்த குழந்தைக்கு ஆறு கால்கள் இருந்தன. இந்த குழந்தை
சுக்கூரில் இருந்து திங்கட்கிழமை கராச்சியில் அமைந்துள்ள குழந்தைகள் நல
மருத்துவ மையத்திற்க்கு (என்.ஐ.சி.எச் ) மாற்றப்பட்டுள்ளது.
இது
குறித்து என்.ஐ.சி.எச் டைரக்டர் ஜமால் ராசா கூறும்போது: இது கால்கள்
ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளால் ஏற்பட்டது எனவும் இதில் ஒரு குழந்தை
உயிருடன் இருப்பதாகவும் மற்றொன்றின் உடல் மறைந்து கால்கள் மட்டும்
இருக்கிறது. தற்போது இக்குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில்
உள்ள தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும்
அவர் தெரிவித்தார்.
மேலும், குழந்தையின்
அதிகப்படியான கால்களை நீக்குவது அந்த குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக
முடியலாம் எனவும் இது மருத்துவ சிக்கல்கள் நிறைந்த ஒன்று என்றும்
தெரிவித்தார்.
எனினும் குழந்தையின் தந்தை இம்ரான் தனது குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தர வேண்டும் என மருத்துவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அருமை.... அருமை.... மண்ணெண்ணெய் மேட்டர்தான் மனதை இளக்கியது....வாழ்த்துக்கள் சங்கவி,
ReplyDeleteசிறப்பு.அஞ்சறைப் பெட்டி நிறைய தகவல்களை கொண்டு வந்திருக்கிறது..
ReplyDeleteகொடிவேரியை காட்டிவிட்டீர்களே அருமை போங்க..
//காந்திஜியின் ஒரு துளி ரத்தம் படிந்த புல், மண் ஆகியவை ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. //
ReplyDeleteதகவலுக்கு நன்றி,சதீஷ்.
ஏலத்திற்கு முன் இதுபற்றிய ஒரு பதிவை நான் 5.4.2012 தேதியில் எழுதியிருந்தேன் தாங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
"ஏலத்துக்கு வருகிறது காந்தியின் ரத்தக்கறை படிந்த மண்"
மற்றவர்களுக்காக இந்த URL :
http://eniyavaikooral.blogspot.in/2012/04/blog-post.html
இந்திய அரசு எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கவில்ல என நினைக்கிறேன்.
குழந்தை பற்றிய பதிவு மனதை கனத்தது .
ReplyDelete//தங்கள் ப ள்ளி 100 சதவீதம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக நடந்த கேவலமான விசயம். இதைப்போல் பல பள்ளிகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது அப்படி அவர்கள் செய்தார் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.... இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு அந்த பொழப்பு பொழைக்கலாம்...
ReplyDelete//
சரியான சவுக்கடி
அஞ்சறைப் பெட்டிச் செய்தியில் பள்ளி குறித்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.ஏதோ ஒரு மாணவியின் தந்தை சரியான விதத்தில் எடுத்த நடவடிக்கையால் விஷயம் வெளியில் வந்தது.வெளி வராமல் எத்தனையோ பள்ளிகளில் இது போன்ற அவலங்கள் நடைபெறவே செய்கிறது.
ReplyDeleteஅருமையான செய்திகள்.
ReplyDeleteநன்றி.