Thursday, April 26, 2012

அஞ்சறைப்பெட்டி 26/04/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
அடிக்கிற வெய்யில் அனைவரையும் புரட்டி போடுகிறது போதாக்குறைக்கு மின் தடை வேறு இயற்கையே மக்கள் மேல் இரக்கம் காண்பித்து நேற்று முன் தினம் பரவாலக மழை பெய்தது...

ரொம்ப நாளைக்கு அப்புறம் மழையில் நனைந்து வீட்டுக்கு சென்றேன்.. மழையை ரசித்தேன் ஆனால் கூடவே அடித்த சூறைக்காற்றால் எனது வாகனம் இடம் மாறி மாறி சென்றது அந்த அளவிற்கு சூறைக்காற்று... இருந்தாலும் மழையினால் பூமி குளிராகி மின் தடை ஏற்பட்ட பிறகும் சில் என்று இருந்தது ரொம்பா நாளைக்கு அப்புறம் ரொம்ப நேரம் தூங்கிய திருப்தி நேற்று...

...............................................................................................

இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை போக்குவரத்து காவலர் தலைகவசம் இல்லை என்று பிடித்து அபராதம் விதிப்பது நல்ல செயல் தான் ஆனால் பெண்கள் பலர் தமது துப்பட்டாவை தலைகவசம் போல் தான் சுற்றி வருகின்றனர் அவர்களை எல்லாம் நம்ம ஆட்கள் கண்டுகொள்வதில்லை..

தலைக்கவசம் இல்லாத பசங்களா பார்த்து அபராதம் விதிக்கின்றனர்.. ஆண் என்ன பெண் என்ன எல்லாருக்கும் உயிர் ஒன்னு தான்..



...............................................................................................

ஐபிஎல் போட்டி இந்த முறை மாணவர்களின் தேர்வு சமையத்திலேயே ஆரம்பித்தனர் இருந்தாலும் ஆண்டவன் சென்னையை தவிர மற்ற ஊர் மாணவர்களை கைவிடவில்லை. சென்னையில் இருப்பவர்களுக்கு ஒரு மணி நேரம் மின் தடைதான் அதனால் அவர்கள் தடையின்றி ஐபிஎல் பார்த்தனர். ஆனால் எங்க ஊர் பக்கம் ஐபிஎல் பார்க்காமல் அனைவரும் சிம்னி விளக்கில் படிக்க வேண்டிய நிலை.. எப்படியோ பசங்க ஐபிஎல்க்கு அடிமையாகமல் சிம்னி விளக்கிலாவது படிப்பது மகிழ்ச்சியே...
................................................................................................

சமீபத்தில் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒகே ஒகே படம் பார்த்தேன்.. நீண்ட நாளைக்கு பின் ரொம்ப நேரம் சிரித்து சிரித்து சந்தோசமனது மட்டுமல்லாமல் அந்த ஜோக்கை எல்லாம் வீட்டில் சொல்லியும் சிரித்துக்கொண்டு இருக்கேன்...
................................................................................................

இந்தியா அக்னி ஏவுகணையை பரிசோதித்தாலம் பரிசோதித்தது சுத்தி உள்ள நாட்டுக்கெல்லாம் இப்ப கொஞ்சம் கிலி ஏற்பட்டுவிட்டது. என்னதான் நாம் வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் ராணுவத்தில் சீனா நமக்கு 10 வருடத்துக்கு முன் சென்று விட்டார்கள் இருந்தாலும் நாம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக இருக்க வேண்டும்...
விண்ணில் இருந்தபடி பருவநிலை மாற்றம் குறித்து துல்லியமான தகவல்கள் தரும் ரீசாட்-1 செயற்கைகோள் இன்று காலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது வரை இந்தியா விண்ணிற்கு அனுப்பியதில் இந்த செயற்‌கைகோளே மிக அதி எடை கொண்டது. இந்த செயற்கைகோள் விஞ்ஞான உலகில் ஒரு மைல்கல் என்பதில் நமக்கெல்லாம் பெருமையே...
...............................................................................................

இலங்கைக்கு சென்று வந்த எம்பிக்கள் குழு அங்கு செய்யப்படும் நிவாரண உதவிகள் நன்றாக நடைபெறுகின்றது என்கின்றனர் மகிழ்ச்சி. நிவாரணப்பணிகள் நன்றாக நடைபெறுவது தமிழர் பகுதிக்கா, சிங்களவர் பகுதிக்கா என்று தெரியவில்லை. சிங்களவர்கள் தமிழகர்கள் பகுதியில் கட்டாய குடியமர்த்தப்படுகின்றனர் என்கிறார்கள் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழ் இளைஞர்கள் அடிக்கடி காணமல் போகின்றனர் என்று சொல்றாங்க அதைப்பற்றி எதுவும் இல்லை. முகாம்களில் அடைக்கப்பட்டவர்களிடம் தனியாக பேசி இருக்கலாம், அங்கு முகாம்களில் உள்ள தளபதிகளின் மனைவிகளை பார்த்து விசாரித்திருக்கலாம் இதெல்லாம் நடந்திருந்தால் கொஞ்சம் மனநிறைவாக இருந்திருக்கும்.


..................................................................................................

மாவோயிஸ்ட்டுகள் கடத்தல் சமீப காலமாக மிக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது நாட்டில் இன்று அதிகம் பேர் பேசிக்கொள்ளும் செய்தியாக இவர்களின் கடத்தல் தான் இருக்கின்றது. சமீபத்தில் கடத்தப்பட்ட மேனன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதில் மிக வருத்தம். அதுவும் இல்லாமல் இவர் ஆஸ்மா நோயளி என்றும் அறியப்படுகிறது. இவர் பத்திரமாக திரும்ப வேண்டுகிறேன்..
..................................................................................................

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவீரமாக அதே சமயம் தகவல்கள் அதிகம் வெளிவரா வண்ணம் ஆதரவு தேடுகின்றனர்.  மீண்டும் அப்துல்கலாமிற்கு வாய்ப்பு வருவது போல் செய்திகள் வருகின்றன. ஒரு தமிழர் குடியரசுத்தலைவராக வந்தால் நிச்சயம் நமக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சியே...
..................................................................................................

புதுக்கோட்டைக்கு எதிர்பார்ததது போல் முன்னரே வேட்பாளரை அறிவித்து களத்தில் முன் இறங்கி உள்ளார் அம்மா. எப்பவும் இடைத்தேர்தல் ஆளம் கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கும் அதற்கு புதுக்கோட்டை விதிவிலக்கல்ல.
கம்யூனிஸ்ட் போட்டியிட்ட தொகுதி கூட்டணி கட்சி என்று சொல்கின்றனர் சில நடுநிலைவாதிகள் அவர்களுக்கு நான் சொல்வது சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் கூட்டணி முடிந்துவிட்டது. அதற்கு அடுத்த உள்ளாட்சி தேர்தலிலேயே கூட்டணி இல்லாமல் தான் அனைத்து கட்சியும் போட்டி போட்டது அது போலத்தான் இதுவும். 

திராணி இருந்தால் அனைவரும் தனியாக நில்லுங்கள் வெல்லுங்கள் வரவேற்கிறோம்...

..................................................................................................

 ஏற்கனவே நம் ஊரில் ஜாதிப்பிரச்சனைக்கு பஞ்சமில்லை. எத்தனை காதல் திருமணங்கள் நடந்தாலும் ஜாதிப்பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே இங்குள்ள ஜாதிக்கட்சிகள் என் ஜாதி மக்கள் தான் அதிகம் என்று கூப்பாடு போடுகின்றனர் இதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லாத ஒன்று... இதனால் ஜாதிபிரச்சனைகள் அதிகம் தோன்றுமே தவிர குறையாது...

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  ஓலை என்று தன் வலைப்பூவிற்கு பெயரிட்டு சிறுகதைகள் பல ரசிக்குமாறு வட்டார வழக்கில் எழுதி உள்ளார்.. ரசிக்க வேண்டிய கதைகள்...

http://siruvolai.blogspot.in/

தத்துவம்
சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது!

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

தகவல்


டேப்லட் மூலம் கட்டுப்படுத்தும் புதிய பறக்கும் எந்திர துப்பாக்கி ஒன்றை தயாரித்து, அதன் செயல் விளக்க வீடியோ யூடியூப்பில் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது.

ஹெலிக்காப்டர் போன்று பறக்கும் ஒரு குவேட்ரேட்டர் எந்திரத்தை உருவாக்கி, அதில் இந்த எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியின் விசேஷம் மணிக்கு அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தில் இந்த குவேட்ரேட்டர் பாய்ந்து செல்லும்.

அதோடு இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதால் இலக்கை சரியாக குறிவைத்து ஏவ முடியும். இதனால் மனிதர்களையும், பறவைகளையும் கூட வித்தயாசப்படுத்தி அறிந்து கொள்ளும் வகையில் இதன் கேமரா உதவும்.

இந்த எந்திர துப்பாக்கியின் முக்கிய அம்சமே, இதை டேப்லட் மூலம் இயக்க முடியும் என்பது தான். இதனால் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

9 comments:

  1. கண்களை மட்டும் விட்டுவிட்டு துப்பட்டவால் முகத்தை முழுக்க மூடிக்கொள்கிறார்கள். கைகளுக்கு கிளவுஸ். அழகை பாதுகாக்கிறார்களாம்? உயிர் பாதுகாப்பு பற்றி கவலை கொள்வது இல்லை. நாகரீகம் வளர வளர ஆபத்தும் அதிகமாகிறது.

    ReplyDelete
  2. தாங்கள் தந்துள்ள செய்திகளும் தலைப்புகு ஏற்றவாறே உள்ளது சா இராமாநுசம்

    ReplyDelete
  3. அஞ்சரைப்பெட்டி பல விஷயங்களை தாங்கி வந்துள்ளது...நன்றிங்கோ மாப்ளே!

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள்.
    நன்றி.

    ReplyDelete
  5. உங்களின் பார்வை எட்டு திக்கும் சொல்லுது

    ReplyDelete
  6. பறக்கும் துப்பாக்கியை பற்றிய செய்தி ஆச்சர்யமான கண்டுபிடிப்பு......

    ReplyDelete
  7. எல்லா கட்சியும் தனியா நின்னா ஆளும் கட்சி தான் ஜெயிக்கும். இதில என்ன ஆச்சரியம்?

    ReplyDelete
  8. அஞ்சரபெட்டி அனைவருக்கும் உண்டான தகவல் பெட்டி..

    ReplyDelete
  9. அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete