உள்ளுரில் இருந்து உலகம் வரை........
நிலநடுக்கம்,
சுனாமி என்ற தகவலை நமது தகவல் தொழில்நுட்பத்தால் அனைவருக்கும் முன் கூட்டி
தெரிவித்த விதம் அருமை இதிலும் பேஸ்புக், டிவிட்டரில் தகவல்கள் பற பற என
பரந்தன என்றால் மிகையாகது. சுனாமி எதிர்பார்க்கிறோம் வந்தாலம் வரும் என்று
பல தகவல்கள் வந்தாலும் கடைசியில் வராமல் போனது அனைவரின் நெஞ்சிலும் பாலை
வார்த்தது.
சுனாமி வந்தால் எத்தனை இழப்புகள் அதை சரிசெய்யவே நமக்கு பல வருடங்கள் ஆகும். ஒரு முறை வந்து நாம் பட்ட துன்பம் போதும் இனி அந்த மாதிரி இழுப்புகளை இழக்காமல் இருக்க வேண்டும்...
சுனாமி வருவது இயற்கையின் சீற்றம் இதில் பல பேர் நடுநிலையாளர் போர்வையில் அம்மா ஆட்சி அதானல் தான் சுனாமி என்று வாய் கூசாமல் சொல்கின்றனர் இவர்கள் எல்லாம் படித்திருந்தும் முட்டாள் இதைத் தவிர வேறு என்ன சொல்ல...

............................................................ .............................. .....
ஐபிஎல் கிரிக்கெட் 4 மணியில் இருந்து இரவு வரை எங்க பார்த்தாலும் எல்லா வீட்டிலும் இப்போது இது தான் முக்கிய பொழுது போக்கு... யார் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் நமக்கு தேவை சியர்ஸ் கேர்ள்ஸ் நடனம் தான் என்கின்றனர் சிலர்...
............................................................ .............................. .....
ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து
நேரில்
ஆய்வு செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று
இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை
மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது. இலங்கை செல்லும் 14
எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் போய் அங்கே
ஒன்றும் நடக்கப்போவதில்லை ராஜபக்சே உடன் விருந்து சாப்பிடுவது தான்
முழுமையாக நடக்கும்..
அங்கு முள் வேளிக்குள் இருக்கும் மக்களை இவர்களால் சந்திக்க முடியுமா? முன்னாள் விடுதலைப்புலிகள் கைதியாக இருக்கின்றார்களே அவர்களை சந்திக்க முடியுமா? தமிழ் பெண்களை தனியாக சந்தித்து அவர்களின் நிலை பற்றி கேக்க முடியமா? பல தளபதிகளின் மனைவிகள் தற்போது இலங்கை வசம் உள்ளனரே அவர்களை சந்தித்து பேச முடியுமா? 3 வருடம் ஆகிவிட்டது ஏன் மீள் குடியேற்றவில்லை என்று கேக்க முடியமா? தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடிபெயர்கின்றனர் என்று கூறுகிறார்களே இதைப்பற்றி ராஜபக்சே விடம் கேக்க முடியுமா? இதெல்லாம் நடந்தால் இக்குழு இலங்கை போவதில் ஓர் அர்த்தம் உண்டு. பயன்கள் உண்டு அங்குள்ள தமிழர்களுக்கு...

............................................................ .............................. ......
ஆந்திராவில் விபச்சாராத்தில் கொடி கட்டி பறந்த நடிகையின் வாக்குமூலத்தி படிக்கும் போது நிச்சயம் பலருக்கு பல் ஆடியிருக்கும். கடைநிலை ஊழியன் முதல் மிகப்பெரிய பதவியில் இருப்பவர் வரை அனைவரும் இவர் வாடிக்கையாளர்கள்.. என்ன செய்வது அம்மணி இப்ப மாட்டிக்கிட்டாங்க...
............................................................ .............................. ......
தற்போது உயிரணு (விந்து) தானம்மூலம் பெண்கள் குழந்தை பெற்று
கொள்கின்றனர். ஆனால் கடந்த 1940-ம் ஆண்டில் இருந்தே உயிரணு தானம் பெற்றும்
குழந்தைகள் பெற்றுள்ளனர். இவ்வாறு குழந்தை பெறுபவர்கள் மற்றும் உயிரணு
தானம் வழங்கியவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆனால்,
ஒரு விஞ்ஞானியின் உயிரணு தானம் மூலம் 600 குழந்தைகள் பிறந்துள்ள தகவல்
தற்போது வெளியாகி உள்ளது. அவரது பெயர் பெர்டோல்டு வியஸ்னர். இங்கிலாந்து
நாட்டைச் சேர்ந்த இவர் லண்டனில் சொந்தமாக கருத்தரித்தல் மையம் ஆஸ்பத்திரி
நடத்தி வந்தார். இந்த மையத்தில் உயிரணு தானம் வழங்கியதன் மூலம் 1500
குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றுள் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விஞ்ஞானி
வியஸ்னர் உயிரணுவின் மூலம் பிறந்தவை என தெரியவந்துள்ளது.
இவர்களில்
இரட்டையர்களும் அடங்குவர். கனடாவை சேர்ந்த டாக்குமெண்டரி சினிமா
தயாரிப்பாளர் பார்ரி ஸ்டீவன், லண்டன் வக்கீல் டேவிட் கோலன்ஸ் இது குறித்து
ஆய்வு நடத்தி இந்த ரகசியத்தை கண்டு பிடித்தனர். விஞ்ஞானி வியஸ்னர்
ஆண்டுக்கு 20 முறை உயிரணு தானம் செய்துள்ளார். கடந்த 1940 முதல் 1960 வரை
அதாவது 20 ஆண்டுகள் தானம் செய்து இருக்கிறார். இவர் தற்போது உயிருடன்
இல்லை.
கடந்த 1972-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவரின் உயிரணு தானம் மூலம் 150 குழந்தைகள்
பிறந்துள்ளன. அதுவே உலக அளவில் அதிக அளவாக கருதப்பட்டது. அந்த சாதனையை
விஞ்ஞானி வியஸ்னர் முறியடித் துள்ளார். மேலும் இதே கருத்தரித்தல் மையத்தில்
இவருக்கு அடுத்த படியாக மற்றொருவர் அதி கம் பேருக்கு உயிரணு தானம்
செய்துள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
......................................................... .............................. ........
இங்கிலாந்தில் உள்ள பைப் என்ற இடத்தில் பள்ளி பஸ் ஒன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் அமர்ந்து இருந்தனர். பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி சாய்ந்தார். பஸ் தாறுமாறாக ஓடியது. இதை கவனித்த அருகில் இருந்த 11 வயது மாணவன் சமயோசிதமாக செயல்பட்டு பஸ் ஸ்டியரிங்கை பிடித்து பஸ்சை சரியான பாதையில் செல்ல வைத்ததுடன் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினான்.
இதனால் பஸ்சில் இருந்த அனைவரும் காயமின்றி தப்பினர். மேலும் பஸ்சில் இருந்த மாணவர்களே அவசர உதவிக்கு தகவல் கொடுத்து டிரைவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
............................................................ .............................. ........
அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் விதியின் வலியே உயிர் செல்லும் என்று தன் வலைப்பூவிற்கு பெயரிட்டு கட்டுரைகள் பல, வரலாற்று நிகழ்வகள் என பல வகையில் எழுதி வருகிறார் அருண் ஜீவன். இவரின் தேவதைக்கான கவிதைகள் அனைவரும் ரசிக்கவேண்டிய ஒன்று..
http://humalaniman.blogspot.in/
தத்துவம்
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்!
இந்த உலகில் நமக்கு விதிக்கப்பட்ட கடமையைச் சரிவரச் செய்து முடிப்போமானால், நாம் யாரிடமும் எப்போதும் அச்சமே அடையத் தேவை இல்லை.
நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்!
இந்த உலகில் நமக்கு விதிக்கப்பட்ட கடமையைச் சரிவரச் செய்து முடிப்போமானால், நாம் யாரிடமும் எப்போதும் அச்சமே அடையத் தேவை இல்லை.
தகவல்
ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுசம்மந்தமாக அவர்கள் நடத்திய ஆய்வில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பு பலருக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே சர்க்கரை நோயின் அறிகுறியாகத்தான் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது இதயத்தில் உள்ள பாதிப்பாகவும் இருக்கலாம். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதுவும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடனடியாக இதயம், சிறுநீரகம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்றும் பரிசோதித்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளர்.

வழக்கம் போல சுவையான தகவல்கள்.
ReplyDeleteநிறைய விசயங்களை சுவையாகத்தொகுத்திருக்கிறீர்கள். தானே புயல் அழிவையே இன்னும் சரிசெய்ய முடியவில்லை. இதில் சுனாமி, நிலநடுக்கம் வேறா? நல்லவேளை சுனாமி வராமல் போய்விட்டது.
ReplyDeleteஉயிரணு தானம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது மகாபாரதக் காலத்திலயே உண்டண்ணே..:))
ReplyDelete