Monday, March 12, 2012

வெய்யிலும் வெள்ளரிக்காயும்...

 குளிர்காலம் முடிந்து இப்பொழுது வெய்யில் ஆரம்பித்து விட்டது. கோவையில் இருக்கும் நாங்களே மதிய வேளையில் வெளியில் செல்ல முடிாத அளவு வெப்பம் இருக்கிறது. சென்னையில் சொல்ல வேண்டியதே இல்லை அனேகமாக அங்கேயும் தொடங்கி இருக்கும் என நினைக்கிறேன். குளிர்காலத்திற்கும், வெய்யில் காலத்திற்கும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. வெய்யில் காலத்தில் நாம் நம் உடம்பிற்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று வெள்ளரிக்காய் இதன் மகத்துவம் நான் தெரிந்து கொண்ட வகையில் மிக அதிகம். அதை உங்களுட் பகிர்கிறேன் நீங்களும் பன் பெறுங்கள்...

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்காய்
பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம். அதற்கான பதிவு நம் வலைப்பூவில் நிறைய இருக்கின்றது.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.
வெள்ளரியின் பயன்கள்:
விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
  1. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  2. வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
  3. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
  4. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்..
வெய்யில் காலத்திற்காக இது மீள்பதிவு...

9 comments:

  1. வெள்ளரிக்காய் ஒரு அருமருந்து, சூப்பரா சொன்னீங்க மக்கா.....!!!

    ReplyDelete
  2. வெயிலுக்கு வெள்ளரிக்காயை தேட வைத்தது உங்கள் பதிவு அருமை .

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. மீள் பதிவு என்றாலும் தேவையான பதிவே...

    ReplyDelete
  5. வெள்ளரி மகிமை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. குளுகுளுன்னு இருக்கு பதிவு..

    ReplyDelete
  7. நீங்கள் போட்டிருக்கும் முதற் படம், பாகற்காய்!!
    2 ம் படம் - cucumber- என ஆங்கிலத்தில்குறிப்பிடுவது, இதை இங்கு பச்சையாகவே சாப்பிடுவார்கள். ஐரோப்பியருடைய உணவில் அதிகம் , இதை சமைப்பதாகத் தெரியவில்லை.இவை முற்றியபோதும் வெள்ளரிப்பழமிங்கு கிடைக்கவில்லை.இதை
    நான் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் கண்டதேயில்லை.
    ஆனால் இலங்கையில் வெய்யில் காலங்களில் தாகந்தீர இது போல் உருவில் சற்றுப் பெரிய காய் ஒன்றைச் சாப்பிடுவோம். இளங்காயில் தோலைச் சீவி விட்டு அதன் இளம் விதைகளுடனே சாப்பிடுவோம்.
    அதில் கறி வைத்ததாக அறியவில்லை. இதைக் "கெக்கரிக்காய்" என கூறியே என்பாட்டி தருவார்.
    இவை வெள்ளரிப் பிஞ்சுகளோ? தெரியவில்லை.
    அதே காலத்தில் வெள்ளரிப்பழம் கிடைக்கும். வெடித்து பிளந்திருக்கும் பழங்கள், பனையோலைக் குடலிகளில் கட்டி எடுத்து வருவார்கள். மணம் ஊரையே எழுப்பும்; ஆனால் சுவையில்லை. சர்க்கரை, பனங்கட்டி, தேனுடன் உண்போம். இவை சுமார் 2 அடி நீளம் , 6 அங்குல சுற்றுவட்டமுள்ள உருளை வடிவில் இருக்கும்.

    ReplyDelete