குளிர்காலம் முடிந்து இப்பொழுது வெய்யில் ஆரம்பித்து விட்டது. கோவையில் இருக்கும் நாங்களே மதிய வேளையில் வெளியில் செல்ல முடிாத அளவு வெப்பம் இருக்கிறது. சென்னையில் சொல்ல வேண்டியதே இல்லை அனேகமாக அங்கேயும் தொடங்கி இருக்கும் என நினைக்கிறேன். குளிர்காலத்திற்கும், வெய்யில் காலத்திற்கும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. வெய்யில் காலத்தில் நாம் நம் உடம்பிற்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று வெள்ளரிக்காய் இதன் மகத்துவம் நான் தெரிந்து கொண்ட வகையில் மிக அதிகம். அதை உங்களுட் பகிர்கிறேன் நீங்களும் பன் பெறுங்கள்...
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்காய்
பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம். அதற்கான பதிவு நம் வலைப்பூவில் நிறைய இருக்கின்றது.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.
வெள்ளரியின் பயன்கள்:
விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
- சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
- வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
- உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்..


