உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மூன்று இலட்சம் அப்பாவிகளை கொன்ற இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரும் போது இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகள் எதிர்ப்பது வழக்கமானதுதான். ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோவைப் பார்த்த பின்பாவது மனம் மாற வேண்டாமா ??? என்ன செய்வது தமிழனின் தலைஎழுத்து....
ரயில்வே பட்ஜெட்டில் விலை பயணக்கட்டணத்தை உயர்த்தி பட்ஜெட் வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர். இந்த பயணக்கட்டண உயர்விற்கு அவரது கட்சிதலைமையே எதிர்ப்பு தெரிவித்து அவரை பதவியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. அமைச்சராக இருந்தும் சுதந்தரமாக செயல்படமுடியாது என்பதற்கு நல்ல உதாரணம்...
இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிதாக 10 ரயில்கள் என்று அறிவித்துள்ளனர் இது மிகவும் குறைவுதான் இருந்தாலும் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட்டுக்கொள்வோம்...
............................................................ .............................. .....
ரயில்வே பட்ஜெட்டில் விலை பயணக்கட்டணத்தை உயர்த்தி பட்ஜெட் வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர். இந்த பயணக்கட்டண உயர்விற்கு அவரது கட்சிதலைமையே எதிர்ப்பு தெரிவித்து அவரை பதவியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. அமைச்சராக இருந்தும் சுதந்தரமாக செயல்படமுடியாது என்பதற்கு நல்ல உதாரணம்...
இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிதாக 10 ரயில்கள் என்று அறிவித்துள்ளனர் இது மிகவும் குறைவுதான் இருந்தாலும் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட்டுக்கொள்வோம்...
............................................................ .............................. .....
முன்எப்போதையும் விட இலங்கை பிரச்சனைக்காக தமிழக கட்சிகள் எல்லாம் பாரளுமன்றத்தில் வரலாற்றில் இல்லாத நிகழ்வாக ஒரே பிரச்சனைக்கு கூக்குரலிட்டது வரவேற்கத்தக்கது. இவர்கள் கொடுத்த கூக்குரல் காங்கிரஸ் அரசுக்கு கேக்காது என்பது தனிபிரச்சனை.. இவர்கள் ஒன்றினைந்து கூக்குரலிட்டது எதிர்காலத்தில் பல போராட்டங்கள் நடக்க வாய்ப்பிருக்கு...
............................................................ .............................. ......
தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மந்திரிகளின் முற்றுகையால் செல்வச் செழிப்போடு இருக்கிறது சங்கரன்கோயில். இடைத்தேர்தல் வந்தாலே தொகுதிமக்களுக்கு குஷி தான். ஒவ்வொரு தொகதி மக்களும் மிகுந்து எதிர்பாக்கின்றனர் நம்ம தொகுதிக்க இடைத்தேர்தல் நடக்காதா என்று...
............................................................ .............................. ......
அழகாக மாற 200 தடவை ஒரு பெண் ஆபரேசன் செய்து கொண்டார். சீனாவில் உள்ள நாங்ஜிங் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து ஆச்சரியம் அடைத்தனர்.
ஏனெனில் அவரது உடலில் ஏராளமான ஆபரேசன்கள் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தனது உடல் அழகுக்காக 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேசன் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதனால் அவரது உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது எலும்புகள் செல்லரித்து மிகவும் பலவீனமாக உள்ளன. மேலும் அவரது இடது மார்பில் 3 செ. மீட்டர் நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.
இந்த ஆபரேசன்களுக்கு அவர் ரூ. 3 கோடி செலவு செய்துள்ளார். கண் இமைக்கு நேரத்தில் மட்டும் 16 தடவை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதில் என்ன விசேஷமெனில் இத்தனை முறை ஆபரேசன் செய்தும் அவர் அழகாக மாறவில்லை.
சிறிதுகாலம் இவர் தென் கொரியாவில் தங்கி இருந்தார். அப்போதுதான் இந்த ஆபரேசன் செய்து இருக்கிறார். இவரது பெற் றோர் வசதி படைத்தவர்கள் என்பதால் இவர் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளனர்.
......................................................... .............................. ........
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல் (30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான்.
கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இவர் தனது மகன் இஷானை வீட்டில் இருந்த குளியலறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார். அவனது, பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “இஷானை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட்டேன். இதனால் அவன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது அதன் காரணமாக இவனை கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
............................................................ .............................. ........
இந்தியாவில் 63 சதவீதம் பேரிடம் போன் உள்ளது. ஆனால் 50 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதியே கிடையாது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. நாட்டில் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள் ளப்படுகிறது. 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீடுகள், அதில் உள்ள வசதிகள், வாழ்க்கை தரம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த புள்ளி விவரங்கள் வருமாறு:-
நாட்டில் மொத்தம் 24 கோடியே 66 லட்சத்து92 ஆயிரத்து 667 வீடுகள் உள் ளன. இவற்றில் கிராமப் பகுதியில் 16 கோடியே 78 லட்சத்து, 26 ஆயிரத்து 730 வீடுகளும், நகர்ப்பகுதியில் 7 கோடியே 88 லட்சத்து 65 ஆயிரத்து 937 வீடுகளும் அமைந்துள்ளன. இதில் 37 சதவிகிதம் வீடுகள் ஒரே ஒரு அறையை மட்டுமே உடை யது ஆகும். 32 சதவிகிதம் வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்புகள் உள்ளன.
67 சதவிகிதம் வீடுகளில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் 54.3 சதவிகி தம் பேரிடமும், நகரங்களில் 82 சதவிகிதம் பேரிடமும் போன் உள்ளது. (டெலி போன் மற்றும் செல்போன் இரண்டும் சேர்த்து சராசரி 63.2 சதவிகிதம்). செல்போன் மட்டும் என்று எடுத்துக் கொண்டால், கிராமங்களில் 47.9 சதவிகிதம் பேரிடமும், நக ரங்களில் 64.3 சதவிகிதம் பேரிடமும் உள்ளது.
(சராசரி 53.2 சதவிகிதம்). அதே நேரத்தில், நகரம் மற்றும் கிராமங் களில் உள்ள 53 சதவிகிதம் வீடுகளில் கழிப்பறை வசதியே கிடையாது. நகரங்களில் 81.4 சதவிகிதம் வீடுகளிலும், கிரா மங்களில் 30.7 சதவிகி தம் வீடுகளிலும் கழிப்பறைகள் உள்ளன. சமைப் பதற்கு பதிப்பேர் இன்னும் விறகையே பயன்படுத்துகின்றனர். கிராமங்களில் 62.5 சதவிகிதம் வீடுகளிலும், நகரங்களில் 20.1 சதவிகிதம் வீடுகளிலும் விறகு அடுப்பு பயன்படுத்தப்படுகின்றன.
தகவல்
மனிதர்களின் உயிரிழப்பு குறித்து எடின்பர்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.
ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் Pakeerathan இவர் Pakee Creation என்று தனது வலைப்பூவிற்கு பெயரிட்டு கவிதைகள் பெயரில் எழுதி வருகிறார். இவரின் கவிதைகள் அனைத்தும் காதலர்கள் திரும்ப திரும்ப படிக்கத் தூண்டும் கவிதைகள்...
http://www.pakeecreation.blogspot.in/
தத்துவம்
உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
இலங்கை விஷயத்தில் இந்தியா ஏன் இவவளவு யோசிக்கிறது என்று தெரியவில்லை...
ReplyDeleteபாகிஸ்தானுக்கே பயப்படாத இந்தியா இலங்கையைக்கண்டு பயப்படுவது ஏன்என்று தெரியவில்லை...
உள்ளூரில் இருந்து உலகம் வரை...
ReplyDeleteஅறிய புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது...
தொகுப்புக்கு வாழ்த்துக்கள்...
ஆரோக்கியம் , அரசியல் , சமூகம் , அறிமுகம் என பல முகங்களை ஒரு பதிவாக்கிய விதம் அருமை . நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்! // முடித்த விதமும் அருமை .
ReplyDelete//பாகிஸ்தானுக்கே பயப்படாத இந்தியா இலங்கையைக்கண்டு பயப்படுவது ஏன்என்று தெரியவில்லை...//
ReplyDeleteகாரணம் சீனா.
நல்ல பதிவு சங்கவி. :-))))))
nalla pathivu..
ReplyDeleteஉள்ளூரில் இருந்து உலகம் வரை...
ReplyDelete>>
பல அரிய தகவல்களை தாங்கி வந்திருக்கும் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ