Wednesday, March 7, 2012

அஞ்சறைப்பெட்டி 08/03/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
இந்த முறை சினிமா தேசிய விருதில் தமிழ் படங்கள் 8 தேசிய விருதுகளை அள்ளி வந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. இதில் அழகர் சாமியில் நடித்த அப்புக்குட்டிக்கு விருது கிடைத்ததில் மிக மிக மகிழ்ச்சி.
...............................................................................................

அனைவரும் எதிர்பார்த்த 5 மாநிலத்தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வியது மிகவும் வரவேற்கத்தக்கது. ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் இனி ஒருத்தர் கூட அசைக்கமுடியாது. அடுத்து அவரது அக்காவும், மச்சானும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர் என்று அவர்களைப்பற்றியே பிரச்சாரம் செய்தியாக வந்தது. அதனாலயே மண்ணைக்கவ்வியது. உபியில் முலாயம் சிங் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மக்கள் ஆடம்பரத்தையும், பாராட்டுக்களையும் விரும்புவதில்லை என்பது இத்தேர்தல் மூலம் நிச்சயம் நிருபனம் ஆகிறது..

...............................................................................................

கேஸ் டேங்கர் லாரி வேரை நிறுத்தத்தால் மிகவும் பாதிப்படைவது நகர்புற மக்கள் தான் அவர்கள் பணிச்சுமையை விட இந்த சமையல் சுமை மிகவும் கடுமையானது. கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்த போது என் அம்மா விறகு அடுப்பில் ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் சமைத்துக்கொண்டு இருந்தார் நேற்று தான் கேஸ் தீர்ந்தது நாங்கள் புக் செய்து 45 நாள் ஆச்சு போன் செய்து கேட்டால் இன்னும் 25 நாள் ஆகும் என்கின்றனர் என்று வருத்தத்துடன் சொன்னார். பக்கத்து வீட்டில் கேக்கலாம் என்று அங்கு சென்றேன் அங்கும் இதே பிரச்சனை ஊரில் பாதி வீட்டில் இப்போது விறகு அடுப்புதான்..

சிறுவயது ஞாபகம் நினைவுக்கு வர அந்த அடுப்பில் உட்கார்ந்து விறகை உடைத்து உள்ளே தள்ளி ஊதுகுழல் எடுத்து குழம்பு வைக்கும் வரை அடுப்பை ஊதி எரியவைத்தேன். ஊதிய புகை கண்ணில் பட்டு தண்ணீர் வர அம்மாவிடம் கொடுத்து நகர்ந்தேன். கிராமம் என்பதால் நிறைய விறகுகள் உடனே கிடைககும் ஆனால் நகரத்தில் முக்கியமாக அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் கேஸ் தீர்ந்தால் அவர்களின் நிலமை பரிதாபம் தான்...

................................................................................................

இன்று மகளிர் தினம்.. மங்கையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

இன்று படித்தவர்கள் மத்தியில் மங்கையர் தின வாழ்த்துக்கள் சொல்லி சந்தோசம் கொள்வார்கள்...
கீழே உள்ள படத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் மகளிர் தினம் என்றால் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...


................................................................................................

சங்கரன் கோயில் இடைத்தேர்தல் பிரச்சாரம் களை கட்டுகிறது.. அனைத்து தலைவர்களின் முற்றுகையால் திருவிழா காணப்போகிறது சங்கரன்கோயில்.. நம் மக்களுக்கு கோயில் திருவிழாவை விட அதிக சந்தோசம் இடைத்தேர்தல் திருவிழாதான் ஒவ்வொரு குடிமகனும் இப்போது எதிர்பார்ப்பது நம்ம தொகுதிக்கு இடைத்தேர்தல் வராது என்று தான்....

...............................................................................................

மின்சாரம் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரி, தண்ணீர் மற்றும் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணு உலைகளில் இருந்தும் மின்சாரம் தயாராகி வருகிறது. தற்போது கழிவு நீரின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம். பின்னர் அது சுத்தமான நீராக மாறிவிடும். அதை குடிநீராக பயன்படுத்த முடியும். இந்த தொழில் நுட்பம் வளரும் நாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே கல்லில் 2 மாங்காய் என்பதுபோல கழிவு நீரில் இருந்து மின்சாரமும், சுத்தமான குடிநீரும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 
..................................................................................................

லண்டனை சேர்ந்த நோட்ரி டேம்ஸ் பல்கலைக் கழக வல்லுனர்கள், திமோதி ஜட்ஜ் என்பவர் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு, யேல் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்த அதி மேதாவிகள், 717 பேரை, இவர்கள் தங்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்டனர்.சிறு வயது முதலே அதிக குறிக்கோளுடன் படித்து, உயர் பதவிகளை வகித்த பலர் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தால், உறவுகளை அதிகம் வளர்ப்பதில்லை. இன்னும் சிலர் முன்னேற வேண்டும் என்ற வெறியில், உடல் நலத்தை கூட கவனிப்பதில்லை. வாழ்வில் உயர வேண்டும் என்ற ஆர்வத்தை, இவர்கள் தங்கள் உடல் நலத்திலும், சமூக உறவிலும் காண்பிக்காததால், அதிக குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்களை விட, இவர்கள் குறைந்த சந்தோஷத்தையே அனுபவிக்கின்றனர். ஓரளவு சந்தோஷத்தை அனுபவிப்பவர்களும், அல்ப ஆயுசில் போய் சேர்ந்து விடுகின்றனர் என, இந்த ஆய்வை மேற்கொண்ட திமோதி ஜட்ஜ் தெரிவித்துள்ளார்.
..................................................................................................

இங்கிலாந்தில் உள்ள சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் லிசா புரூக்ஸ் (25). இவருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவரை பிரிந்து வாழும் புரூக்ஸ் தாமஸ் லீவிஸ் (22) என்பவருடன் தனது மகனுடன் தங்கியுள்ளார்.
 
இந்த நிலையில் லிசா புரூக்ஸ்சும், தாமஸ் லீவிசும் சேர்ந்து 3 வயது சிறுவனை ஒரு இருட்டு அறையில் போட்டு பூட்டி சிறை வைத்தனர். அவனுக்கு உணவு மற்றும் தண்ணீர் எதுவும் கொடுக்காமல் பல நாட்கள் பட்டினி போட்டனர்.
 
இதனால் பசி தாங்காத அச்சிறுவன் தனது தலை முடியை பிய்த்து தின்று உயிர் வாழ்ந்தான். இதை தொடர்ந்து உயிருக்கு போராடிய அவன் மயக்கம் அடைந்தான்.
 
இதுபற்றி தகவல் அறிந்த சமூக நல ஆர்வலர் போலீஸ் உதவியுடன் அச்சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தார். இதற்கிடையே சிறுவனை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த தாய் லிசா புரூக்சும், அவரது கணவர் தாமஸ் லீவிசும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தகவல்
 
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொருளாதார பத்திரிக்கையான போபர்ஸ் ஆண்டு தோறும் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்போது புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
அதில் மெக்சிகோ நாட்டு டெலிபோன் நிறுவன அதிபர் கார்லோஸ் சிலிம் முதல் பணக்காரராக தேர்வு பெற்றுள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் கோடி. அவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் பணக்காரராக இருந்து வருகிறார்.
 
பல ஆண்டுகளாக பணக்காரராக முதல் இடத்தில் இருந்து வந்த மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் அதிபர் பில்கேட்ஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி.
 
முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் அமெரிக்க தொழில் அதிபர் வாரன் பப்பட் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். 4-வது இடத்தை பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்டு அர்னால்டு பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி.
 
5-வது இடத்தை ஸ்பெயின் தொழில் அதிபர் அமென்சியோ ஒர்டேக்கோ பிடித்துள்ளார். அவருக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன.
 
இந்திய தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 21-வது இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடி சொத்து உள்ளது. இவர் கடந்த ஆண்டை விட 10 இடங்கள் பின்தள்ளப்பட்டு இருக்கிறார். இரும்பு தொழில் செய்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே பின்தங்கி இருக்கிறார்.
 

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் அருண் ஜீவன் இவர் விதியின் வழியே உயிர் செல்லும் என்று தனது வலைப்பூவிற்கு பெயரிட்டு கவிதைகள் பெயரில் எழுதி வருகிறார். இவரின் கவிதைகள் அனைத்தும் காதலர்கள் திரும்ப திரும்ப படிக்கத் தூண்டும் கவிதைகள்...

http://humalaniman.blogspot.in/
 
தத்துவம்

வல்லமை பேசேல்:  "உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே"

வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;
குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

11 comments:

  1. //ஒவ்வொரு குடிமகனும் இப்போது எதிர்பார்ப்பது நம்ம தொகுதிக்கு இடைத்தேர்தல் வராது என்று தான்....//

    ஒவ்வொரு குடிமகனும்? எதிர்பாராத வார்த்தைகள். மானமுடன் வாழும் மக்கள் இன்னும் மண்ணில் உள்ளனர்.

    ReplyDelete
  2. நல்லதோர் கலவை.... நற்பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. வாங்க சிவக்குமார்...

    குடிமகன் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு... அதை எடுத்துக்கொள்வதைப் பொறுத்து...

    ReplyDelete
  4. தேசிய விருதை தொடங்கி பணக்காரர்களின் பட்டியல் வரை படித்தாகிவிட்டது..பல புதிய தகவல்கள்...அருமையாக தொகுப்பாக வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி சகோ..அறிமுக பதிவரும் மிக்க நன்று..தொடருங்கள்..

    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
  5. கழிவு நீரில் இருந்து மின்சாரமும், குடிநீரும் நல்லதொரு செய்தி இது. இரண்டுமே இப்போதைக்கு மிக அவசியம் , தவிர கழிவு நீரால் ஏற்படும் தீமையும் தவிர்க்க படுமே.

    சுவாரசியமாக செய்திகளை பகிர்ந்து வரும் இந்த அஞ்சரை பெட்டி வழக்கம்போல் மிக அருமை.

    ReplyDelete
  6. மகளிர் தினத்தன்று வெளியிட்ட அந்த படம் மிக யோசிக்க வைக்கிறது !!!

    நன்றி சதீஷ்

    ReplyDelete
  7. சிறப்பான தொகுப்பு சங்கவி.

    ReplyDelete
  8. நல்லதொரு பதிவு தோழர்.

    "கீழே உள்ள படத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் மகளிர் தினம் என்றால் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை"

    ஆமாம் அதைப் பற்றிதான் நானும் பதிவிட்டிருக்கிறேன்..நேரமிருப்பின் வாசிக்க வாருங்கள்.

    ReplyDelete
  9. செய்தித் தோரணங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அத்தனை விஷயங்களும் அருமை. அஞ்சறைப்பெட்டி சுவை.

    ReplyDelete
  11. கழிவு நீரில் மின்சாரம், சபாஷ்...

    ReplyDelete