Monday, April 29, 2013

அவசியமான நீச்சல் பயிற்சி....

நாம் தினமும் பல உடற்பயிற்சிகளை கேள்விப்பட்டு இருக்கிறோம் இன்னும் சில பேர் செய்து கொண்டு இருக்கிறோம் எல்லா பயிற்சியிலும் ஒரு நிவாரணம் இருக்கும். உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வேலை செய்ய நீச்சல் என்னும் உடற்பயிற்சி பயன்படுகிறது.

நீச்சல் கலையை கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள் நகர்புரத்து இளைஞர்கள் நிறைய பேருக்கு நீச்சல் தெரியாது என்பது மறுக்க இயலாத உண்மை. கிராமத்து இளைஞர்கள் நீச்சல் கற்க காரணம் அவர்கள் ஊரில் கிணறு, வாய்க்கால், ஏரி அல்லது ஆறு இருக்கும் இதனால் இவர்களுக்கு நீச்சல் கற்கும் வாய்ப்பு தானாக வருகிறது.

நீச்சலில் பல வகை உண்டு கிணற்று நீச்சல், ஆற்று நீச்சல், கடல் நீச்சல் என மூன்று வகையாக சொல்லலாம். கைகளையும் கால்களையும் இடத்திற்கு தகுந்தவாறு அதன் அசைவுகளை மாற்றுவதால் நீச்சலை பிரித்துச் சொல்கிறோம்.

முக்கியமான விசயம் நீச்சலும், சைக்கிள் ஓட்டுவதும் வாழ்க்கையில் ஒரு முறை கற்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.

நீச்சல் கற்பது எப்படி?

கிணற்று நீச்சல்

நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும். 

தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன் கிராமத்தில் புரடை(சுரைக்காயை ஒரு 2 மாதம் காய வைத்தால் அதற்கு பெயர் புரடை) கட்டுக்கொண்டு இறங்க வேண்டும். தற்போது லாரி டியூப்பில் காற்றை நிரப்பி நடுவில் உட்கார்ந்து கொண்டு காலை மட்டும் அசைக்கலாம். 

ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன் நன்கு நீச்சல் அறிந்தவருடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறை பிடித்துக்கொள்ள வேண்டும் அப்போது கையையும் காலையும் ஒன்றாக அசைக்க வேண்டும். 
ஒரு இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிக்கும் போது நல்ல பழக்கம் ஏற்படும் கிணற்றில் பழகும் போது இந்தப்பக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் நீச்சல் அடித்து பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வாரத்தில் எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ளலாம்.

இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.


ஆற்று நீச்சல்

ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்தவர்களுடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளையும் ஒவ்வொன்றாக முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 10 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும்  எளிதாக தப்பிக்கலாம்.
நீச்சலின் பயன்கள் :

1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான். 
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும். 
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும். 
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 
5. இரத்த ஓட்டம் சீராகிறது. 
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும். 
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. 
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது.

நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியும்
நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.

வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

1. தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
 
எனது வேண்டுகோள் :

குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும். நீச்சல் கற்றுத்தருவதன் மூலம் உடல் நலம் நலன்பெறும்.

Wednesday, April 24, 2013

அஞ்சறைப்பெட்டி 25.04.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பதிவு எழுதி ரொம்பநாள் ஆச்சு அஞ்சறைப்பெட்டியை மட்டும் எப்படியவாது வாரம் ஒரு முறை எழுதி விடவேண்டும் என்று நினைக்க மட்டுமே முடிகிறது எழுத இயலவில்லை மீண்டும் எழுதி விடவேண்டும் என்று ஒருவாரமாக எழுதுகிறேன் அப்படியும் முடிக்க இயலவில்லை அஞ்சறைப்பெட்டியை இதற்கு மிக முக்கிய காரணம் முகநூலில் அடிமையாக கிடப்பதால் தான்... மீண்டும் முயற்சிப்போம் வராம் 2 பதிவுகளாவது எழுத...

  ................................................................

தற்போது அனைத்து ஊர்களிலும் சாலைகள் துரிதமாக செப்பனிட்டுகொண்டு இருக்கின்றனர் எனக்கு தெரிய பவானி மேட்டூர் சாலை பத்து வருடத்திற்கு மேல் இருக்கும்  சமீபத்தில் சென்றபோது சாலை தரமாக இருந்தது என்ன ஏது என்று விசாரித்தால் தமிழகம் முழுவதும் கிராமப்புற சாலைகள் செப்பனிட தனியாக பணம் ஒதுக்கு சாலை போடுகின்றனர் என்றனர்... அநேகமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எல்லா ஊரிலும் நல்ல சாலைகளை பார்க்க நிறைய வாய்ப்பிருக்கிறது....

..........................................................................................

எனக்கு ஐபிஎல் மேட்சில் உடன்பாடில்லை பொழுது போக்கு என்கின்றனர் என்னைப்பொறுத்த வரை குடும்பத்தோடு செலவிட இருக்கற நேரமே பத்தவில்லை இதில் எங்க பொழுது போக்குவது.. இருந்தாலும் எனக்கு பிடிச்ச கெயில் விளையாடுகின்றார் என்றால் மட்டும் அவ்வப்போது பார்ப்போன் அப்படித்தான் எதாச்சையாக சேனலை திருப்பும் பார்த்தேன் அந்த மரண அடியை எப்பா எப்படி சொல்வது இந்த மாதிரி அடியை பார்ப்பதற்கு இனி வாய்ப்பு குறைவுதான்... இந்த முறை உலககோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் நல்ல இடத்தில் இருக்கும் என்பது என் நம்பிக்கை....
................................................................................................

தீடீரென பெய்த மழையால் தமிழகம் கொஞ்சம் குளிர்ந்து உள்ளது இந்த வருணபகவான் மனது வைத்து இதைப்போல இன்னும் 4 மடங்கு மழை பெய்தால் தண்ணீர் பிரச்சனையும் தீரும்.. அடுத்த வருட விவசாய மகசூல் இன்னும் நன்றாக இருக்கும்... பார்ப்போம் இந்த ஆடிப்பட்டம் எப்படி இருக்கும் என.....
...............................................................................................
 
 நட்பு நாடு நட்பு நாடு என்று யாரை சொல்கிறோமோ அவர்கள் நம் முதுகில் குத்துகின்றனர் எப்போதும்... இலங்கையை நட்பு நாடு என்கிறோம் ஆனால் நம் மீனவர்களை தாக்குகின்றனர்.. சீனாவை நட்பு நாடு என்கிறோம் அவர்கள் அப்பா எப்ப தூங்குவார் திண்ணை எப்ப காளியாகும் என்றே காத்திருக்கின்றனர். கிடைத்த கேப்பில் 10 கிலோமீட்டரை பிடித்து விட்டனர்... நம்ம ரேடார் என்ன செய்கிறது என்று யோசிக்கவேண்டி இருக்கு... ஒரு வேளை அது வாங்கியதிலும் எதாவது பிரச்சனையா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...


தகவல்

கத்தார் நாட்டில் இஸ்லாமியர்கள் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஹோட்டல்களில் மது விற்பனை செய்யப்படுகிறது. அங்கு வசிக்கும் பிற மதத்தினர் அனுமதி பெற்ற பின் மதுவை அருந்தலாம்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கத்தாரில் தங்கி முடி திருத்துபவராக பணிபுரிந்து வரும் இஸ்லாமியர் ஒருவர் மது அருந்திவிட்டு, தன்னுடைய வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து  அவர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 100 யுரோக்கள் (இந்திய மதிப்பில்  ரூ.7000)  அபராதம் விதித்துள்ளது. மேலும் அவருக்கு 40 சவுக்கடிகள் வழங்கவும் உத்தரவிட்டது.

தத்துவம்

செய்வது எதுவாக இருந்தாலும் அதை அழகுறச் செய்ய வேண்டும். எதையும் செய்வதற்குச் சோம்பல் கூடாது.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

.எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.

Wednesday, April 17, 2013

கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறு என்னைப்பொறுத்த வரை வயது ஆக ஆக மாறிக்கொண்டே இருக்குது சிறு வயதில் கூட்டு சாப்பாட்டை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். நாங்கள் முதன் முதலில அசைவ கூட்டாஞ்சோறு சமைக்கத் தொடங்கியது படித்து முடிதது வேலைக்கு செல்லும் போது தான் ஊரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் ஞாயிறு அன்று நிச்சயம் வீட்டில் அசைவம் தான். புரட்டாசி மாதத்தில் யார் வீட்டிலும் அசைவம் இருக்காது மாதம் மாதம் சாப்பிட்டு பழகியாச்சு என்ன செய்வது வீட்டில் செய்யமாட்டாங்க. எங்களுக்கு பக்தி எல்லாம் கிடையாது அனைவரும் வேலைக்குச் செல்வதால் கையில் பணம் இருக்கும். ஆளுக்கு 20 ரூபாய் போட்டு கறி எடுத்துக்கொள்வோம்.

ஊருக்கு ஒதுக்குப்புறம் எல்லாம் செல்ல மாட்டோம் ஊர் நடுவில் உள்ள பஞ்சாயத்து மோட்டர் அறை தான் எங்கள் சமையல் அறை வீட்டில் அசைவம் செய்தாலும் அப்ப அப்ப எங்க சமையல் நடைபெறும். கிராமங்களில் சேவல் வளர்க்கும் பழக்கம் உண்டு எங்கள் எல்லார் வீட்டிலும் வளர்ப்போம் எங்க பசங்க யாராவது வீட்ல இருக்குற சேவலை தூக்கீடடுப்போய் சமைத்து சாப்பிடடு விட்டு அப்புறம் அவங்க வீட்ல மாத்து வாங்குன கதை எல்லாம் நிறைய இருக்கு...


அசைய சமையலில் நாங்கள் அதிகம் சாப்பிடுவது கோச்சை தான் கோச்சை என்பது கட்டுச்சாவல் என்று சொல்வார்கள் இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கோழிச் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்று சண்டையில் இறக்கும் கோழியை கோச்சை என்பார்கள் இதன் சுவையே தனி... ஒரு கோச்சை 3 முதல் 5 கிலோ வரை இருக்கும்.

கோச்சையில் இருக்கும பொங்கை பிய்ச்து எடுத்து விட்டு துண்டு துண்டாக நறுக்கி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்,வெங்காயம் போட்டு நன்கு வனக்கி நறுக்கிய துண்டுகளை உள்ளே போட்டு நன்கு எண்ணெய்யில் வனக்க வேண்டும் ஒரு பத்து நிமிடம் எண்ணெய்யில் வணக்கி கொத்தமல்லி தூள், மிளகாய்ப்பொடி போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் பூ போல வேக வைப்போம் இன்னொரு அடுப்பில் ( அடுப்பு மூன்று கல்லை வைத்து அதற்கு மேல் பாத்திரம் இது தான் எங்கள் அடுப்பு) சாப்பாடு ரெடியாக இருக்கும் பக்கத்து தோட்டத்தில் தலை வாழை இலை கொண்டு வந்து நாங்கள் 10 பேர் மண் தரையில் தான் உட்காருவோம் ஆளுக்கு மூன்று கரண்டி கறித்துண்டும் குழம்பும் சாப்பாட்டோடு சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. இதுவரை நிறைய இடங்களில் சாப்பிட்டுவிட்டேன் ஆனால் இந்த சுவையும் சுகமும் கிடைக்கவில்லை.

அடுத்து ஆட்டுக்கறி எப்பவும் ஆட்டுக்கறி சமைப்பது என்று முடிவு செய்து விட்டால் கறி எடுக்க செல்வது தனி கலை. ஆடு முத்தி இருக்கக்கூடாது இளம் ஆடாகவும் செம்புளி ஆடாகவும் முன் தொடை கறியாகவும் பார்த்துதான் எடுக்க வேண்டும் அப்ப தான் சுவை அதிகமாக இருக்கும் ஆட்டுக்கறி சமைத்தால் கூட சாப்பிட எதாவது வேண்டும் (டாஸ்மார்க்) தான். எல்லாத்தையும் வாங்கிவிட்டு எங்கள் ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்று கரைக்கு சென்று விடுவோம் யாரும் வராத இடமாக சென்று சமைத்து தண்ணீரில் குளித்துக்கொண்டே இருப்போம் ஒருவர் மாற்றி ஒருவர் சமையல் வேலைகளை பார்ப்போம் தண்ணீர் சாப்பிட்டுவிட்டு தண்ணீரில் குளிக்கும் சுகமே தனி தான்.. நன்றாக குளித்த பின் நல்ல பசி எடுக்கும் அப்ப மட்டன் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுப்பதெல்லாம் தண்ணீருக்குள்தான் இதன் சுகமும் சுவையும் தனிதான்...

இந்த மட்டன் வருவலும, கோச்சை கறியும் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் நண்பர்கள் நான் ஊருக்கு செல்லும் போது வாய்ப்பு கிடைக்கும் சென்று சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன் மற்ற அனுபவங்களுக்கு நேரமில்லை... ஆனால் இந்த கூட்டாஞ்சோறு கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களிடம் இன்றும் இருப்பது சந்தோசமான விசயமே...

Wednesday, March 20, 2013

அஞ்சறைப்பெட்டி 21.03.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மாணவர்களின் போராட்டத்தில் மிக பாராட்டுக்குறியது அவர்களின் அறவழிப்போராட்டம் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இத்தனை மாணவர்கள் வீதியில் வந்து போராடுவதை பார்க்கும் போது நான் இப்போது மாணவனாக இல்லை என்ற ஏக்கம் என் மனதில் ஏறக்குறைய நிறைய பேர் மனதில் நிச்சயம் இருக்கும். அதுவும் இந்த போராட்டத்தில் மாணவிகளின் கூட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

கோவையில் ஏறக்குறைய அனைத்து கல்லூரிகளும் விடுமுறை விட்ட நிலையில் மாணவர்களின் போராட்டத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் மாணவக்கண்மணிகள் கலந்து கொண்டார்கள் என்பதில் தெரிகிறது அவர்களின் உறுதியான மனநிலை..

இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் மிகப்பெரிய அளவில் நடக்கும் போராட்டம் இந்த ஈழப்போராட்டம் தான் மாணவர்கள் ஈழப்போராட்டத்தோடு சேர்ந்து நம் மீனவர்கள் தாக்கப்படுவதையும் முன்னிறுத்த வேண்டும் என்பது என் ஆவா...

  ................................................................

இத்தாலி நாட்டினர் கேரள மீனவர்களைத்தாக்கி விட்டு சென்றதை கண்டிக்கும் நம் பாரத பிரதமர் 40க்கு 40 கொடுத்து முதன் முதலில் ஆட்சி பீடத்தில் அவரை பிரதமாராக ஏற்றிய தமிழன் மீன்பிடிக்க சென்றபோது 500க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றபோது இன்றளவும் கண்டிக்காதது வருந்தத்தக்கது...
..........................................................................................

பாஜக, சமாஜ்வாடி, நிதிஷ்குமாரின் கட்கிள் எல்லாம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மறுக்கின்றனர் ஏன் டெசோ அமைப்பு அவர்களை சந்தித்து ஆதரவு கேட்கக்கூடாது ஒரு வேளை கேட்டுவிடுவார்கள் என்று தெரிந்து தான் இன்று சிபிஐ ரெய்டு நடத்திவிட்டார்களோ...

................................................................................................

இன்று ஜெனிவாவில் எடுக்கப்படும் வாக்கெடுப்பு வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இலாபம் இலங்கைக்கே.. இதனால் நம் மாணவர்கள் மனம் தளரக்கூடாது அடுத்த கட்ட நடவடிக்கை அடுத்த கட்ட போராட்டம் இன்னும் வழுவாக இருக்கவேண்டும்.. அதாவது இலங்கையின் தயாரிப்பு பொருட்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இலங்கை அரசுக்கு சொந்தமான விமானத்தில் செல்வதை தவிர்க்கவேண்டும் நம்மால் இலங்கைக்கு கிடக்கும் வருமானத்தை தடுக்கவேண்டும் போன்ற அடுத்த கட்ட போராட்டத்தில் பொது மக்களும் அறவழியில் ஈடுபடவேண்டும் என்பது என் எண்ணம்...
...............................................................................................

வேலைக்கு போகும் பெண்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் இல்லத்தரசிகள் ‘லிப்ஸ்டிக்’ பூசாமல் வெளியே செல்வதில்லை. உதட்டில் லிப்ஸ்டிக் பூசியே செல்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி லிப்ஸ்டிக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத்தது. ஆகவே, மனித உடல்களிலும் இது நடக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத்திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளையில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எலிகளில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட டிரைக்ளோசன் அளவு அதிகம். ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் இந்த ரசாயனத்தின் அளவு மிக குறைவாகவே சேர்க்கப்படுகிறது என அவற்றின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.

இருந்தாலும் லிப்ஸ்டிக் போடும் பெண்களே உஷாராக இருங்கள். லிப்ஸ்டிக் போட்டால் மட்டுமே அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள். இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
...............................................................................................

கோடை வெய்யிலை சந்திக்க இருக்கிறோம் அதே போல் தண்ணீர் பிரச்சனையுயைம் சந்திப்போம் போல இருக்கிறது.. எல்லா ஆறு குளம், குட்டைகள் எல்லாம் தண்ணீர் குறைந்து வறண்டு போய் இருக்கிறது.. காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் தண்ணீர் தேடி ஊருக்குள் வர ஆரம்பித்து விட்டன. இனி நாம் தண்ணீருக்கு எங்கே போவது என்று தான் புரியாத புதிராக உள்ளது....

தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கலை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து பிரதிநிதிகள் சபையின் அறிவியல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாசா விண்வெளி அமைப்பின் தலைவர் சார்லஸ் போல்டன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இதுதொடர்பாக நடந்த விவாதத்தில் பிரதிநிதிகள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். விண்கல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.
பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித விண்கற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய விண்கற்களும் அடங்கும். இந்த விண்கல்லானது மனித நாகரிகத்தை அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.
10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் விண்கற்களில், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித விண்கற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் விண்கற்கள் பூமியை தாக்குவதை சமாளிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டியது அனைத்தும் அமெரிக்காவை சார்ந்து இருக்கிறது. 
கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர் விட்டமுடைய விண்பாறை ஒன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி வந்தது. அந்த விண்பாறையானது ஆகாயத்திலேயே குண்டுகளை வீசி தகர்க்கப்பட்டது. அப்போது அப்பகுதி வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன. இதில் 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு மிகப்பெரிய விண்கல் ஒன்று சமீபத்தில் பூமியிலிருந்து 17,200 மைல் தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண்கலங்கள் படமெடுத்தன.
பூமியை தாக்கும் விண்கற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

தத்துவம்

காணும் கனவை நிஜமாக்கி காட்டுபவர்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க சிறந்த வழி மெளனம். பல பிரச்சனைகளை தவிர்க்க மிக சிறந்த ஆயுதம் புன்னகை.

Monday, March 11, 2013

தாய்


இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. 

மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..