Wednesday, April 17, 2013

கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறு என்னைப்பொறுத்த வரை வயது ஆக ஆக மாறிக்கொண்டே இருக்குது சிறு வயதில் கூட்டு சாப்பாட்டை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். நாங்கள் முதன் முதலில அசைவ கூட்டாஞ்சோறு சமைக்கத் தொடங்கியது படித்து முடிதது வேலைக்கு செல்லும் போது தான் ஊரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் ஞாயிறு அன்று நிச்சயம் வீட்டில் அசைவம் தான். புரட்டாசி மாதத்தில் யார் வீட்டிலும் அசைவம் இருக்காது மாதம் மாதம் சாப்பிட்டு பழகியாச்சு என்ன செய்வது வீட்டில் செய்யமாட்டாங்க. எங்களுக்கு பக்தி எல்லாம் கிடையாது அனைவரும் வேலைக்குச் செல்வதால் கையில் பணம் இருக்கும். ஆளுக்கு 20 ரூபாய் போட்டு கறி எடுத்துக்கொள்வோம்.

ஊருக்கு ஒதுக்குப்புறம் எல்லாம் செல்ல மாட்டோம் ஊர் நடுவில் உள்ள பஞ்சாயத்து மோட்டர் அறை தான் எங்கள் சமையல் அறை வீட்டில் அசைவம் செய்தாலும் அப்ப அப்ப எங்க சமையல் நடைபெறும். கிராமங்களில் சேவல் வளர்க்கும் பழக்கம் உண்டு எங்கள் எல்லார் வீட்டிலும் வளர்ப்போம் எங்க பசங்க யாராவது வீட்ல இருக்குற சேவலை தூக்கீடடுப்போய் சமைத்து சாப்பிடடு விட்டு அப்புறம் அவங்க வீட்ல மாத்து வாங்குன கதை எல்லாம் நிறைய இருக்கு...


அசைய சமையலில் நாங்கள் அதிகம் சாப்பிடுவது கோச்சை தான் கோச்சை என்பது கட்டுச்சாவல் என்று சொல்வார்கள் இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கோழிச் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்று சண்டையில் இறக்கும் கோழியை கோச்சை என்பார்கள் இதன் சுவையே தனி... ஒரு கோச்சை 3 முதல் 5 கிலோ வரை இருக்கும்.

கோச்சையில் இருக்கும பொங்கை பிய்ச்து எடுத்து விட்டு துண்டு துண்டாக நறுக்கி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்,வெங்காயம் போட்டு நன்கு வனக்கி நறுக்கிய துண்டுகளை உள்ளே போட்டு நன்கு எண்ணெய்யில் வனக்க வேண்டும் ஒரு பத்து நிமிடம் எண்ணெய்யில் வணக்கி கொத்தமல்லி தூள், மிளகாய்ப்பொடி போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் பூ போல வேக வைப்போம் இன்னொரு அடுப்பில் ( அடுப்பு மூன்று கல்லை வைத்து அதற்கு மேல் பாத்திரம் இது தான் எங்கள் அடுப்பு) சாப்பாடு ரெடியாக இருக்கும் பக்கத்து தோட்டத்தில் தலை வாழை இலை கொண்டு வந்து நாங்கள் 10 பேர் மண் தரையில் தான் உட்காருவோம் ஆளுக்கு மூன்று கரண்டி கறித்துண்டும் குழம்பும் சாப்பாட்டோடு சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. இதுவரை நிறைய இடங்களில் சாப்பிட்டுவிட்டேன் ஆனால் இந்த சுவையும் சுகமும் கிடைக்கவில்லை.

அடுத்து ஆட்டுக்கறி எப்பவும் ஆட்டுக்கறி சமைப்பது என்று முடிவு செய்து விட்டால் கறி எடுக்க செல்வது தனி கலை. ஆடு முத்தி இருக்கக்கூடாது இளம் ஆடாகவும் செம்புளி ஆடாகவும் முன் தொடை கறியாகவும் பார்த்துதான் எடுக்க வேண்டும் அப்ப தான் சுவை அதிகமாக இருக்கும் ஆட்டுக்கறி சமைத்தால் கூட சாப்பிட எதாவது வேண்டும் (டாஸ்மார்க்) தான். எல்லாத்தையும் வாங்கிவிட்டு எங்கள் ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்று கரைக்கு சென்று விடுவோம் யாரும் வராத இடமாக சென்று சமைத்து தண்ணீரில் குளித்துக்கொண்டே இருப்போம் ஒருவர் மாற்றி ஒருவர் சமையல் வேலைகளை பார்ப்போம் தண்ணீர் சாப்பிட்டுவிட்டு தண்ணீரில் குளிக்கும் சுகமே தனி தான்.. நன்றாக குளித்த பின் நல்ல பசி எடுக்கும் அப்ப மட்டன் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுப்பதெல்லாம் தண்ணீருக்குள்தான் இதன் சுகமும் சுவையும் தனிதான்...

இந்த மட்டன் வருவலும, கோச்சை கறியும் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் நண்பர்கள் நான் ஊருக்கு செல்லும் போது வாய்ப்பு கிடைக்கும் சென்று சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன் மற்ற அனுபவங்களுக்கு நேரமில்லை... ஆனால் இந்த கூட்டாஞ்சோறு கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களிடம் இன்றும் இருப்பது சந்தோசமான விசயமே...

7 comments:

  1. சுகமான சுவையான அனுபவம்...

    கோச்சை கறி செம சூடு ஆச்சே...!

    ReplyDelete
  2. கோச்சைக் கறி இப்போதெல்லாம் அருகிவருவதற்கு சாவல் சண்டை மேல் விழுந்த சமுதாய அடியே காரணமாகும். தொடைக் கறியை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழங்கிட கூடிய சமத்துவ சமூக நீதி இல்லாத நிலையில் தொடைக்கறியை தேடி நான் திருநீர்மலைப் பாதைப் பிரிவு வரை கூட சில நாட்கள் சென்ற துண்டு. பள்ளி நாட்களில் கொஞ்சமே கொஞ்சுண்டு கோச்சைக் கறியைத் தின்று விட்டு கோக்கறக்கோ என்று நண்பர்களுடன் நான் விளையாடியது நினைவுக்கு வந்து விட்டது. கோவையில் என் கடையில் கோச்சைக் கறி பறிமாற யோசித்து வருகிறேன்

    சகலாரதனையுடன் கூடிய அசைவ உனவைப் பற்றிய சர்வலட்சன பதிவு இது அய்யரே.


    ReplyDelete
  3. பதிவு அசைவம் பற்றியது என்பதால் நமக்கு சொல்ல எதுவும் புரியலை!தெரியலை! நன்றி!

    ReplyDelete
  4. கிராமங்களில் பிள்ளைகள் சேர்ந்து கொண்டு சமைப்பார்கள் கேள்வி பட்டு இருகிறேன் ஆனா நீங்கள் சொல்வது பெரிய பிளான் போடு செய்றது போல சமையல் பத்தி நல்ல தெரியுது அது எல்லாம் வாழ்க்கையில் பொற்காலம் தான் ம்ம்..... கொடுத்து வைத்தவர்கள் நீங்களெல்லாம்

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. சுகமான அனுபவம்...
    பகிர்வு அருமை.

    ReplyDelete
  7. Anonymous said...
    .தமிழ்நாட்டின் சிறப்புகள்


    1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

    2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

    3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

    4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

    5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

    6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

    7. மிகப் பெரிய பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

    8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

    9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

    10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

    11. மிகப்பெரிய திரையரங்கு - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

    12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

    13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

    14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

    15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

    16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

    17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

    18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

    19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)

    20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

    21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

    22. கோயில் நகரம் – மதுரை

    23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

    24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

    25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)

    26 முதன்முதலில் தமிழர்களுக்கு சாம்பார் வைக்க சொல்லித் தந்த ஊர் சாம்பல்காடு கந்தர்வ கோட்டை.

    27.பண்றிகளே இல்லாத ஊர் புதுக்கோட்டை.

    28. சாமியார்கள் வெள்ளை உடை மட்டுமே உடுத்துவது திருச்செங்கோட்டில் மட்டுமே. அதானாலே திருச்செங்கோட்டில் தாயாரிக்கப்படும் வேஷ்டிகள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.

    29.காபித்தூளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெயர் நரசிம்ம நாயுடு இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர்.

    ReplyDelete