Wednesday, April 24, 2013

அஞ்சறைப்பெட்டி 25.04.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பதிவு எழுதி ரொம்பநாள் ஆச்சு அஞ்சறைப்பெட்டியை மட்டும் எப்படியவாது வாரம் ஒரு முறை எழுதி விடவேண்டும் என்று நினைக்க மட்டுமே முடிகிறது எழுத இயலவில்லை மீண்டும் எழுதி விடவேண்டும் என்று ஒருவாரமாக எழுதுகிறேன் அப்படியும் முடிக்க இயலவில்லை அஞ்சறைப்பெட்டியை இதற்கு மிக முக்கிய காரணம் முகநூலில் அடிமையாக கிடப்பதால் தான்... மீண்டும் முயற்சிப்போம் வராம் 2 பதிவுகளாவது எழுத...

  ................................................................

தற்போது அனைத்து ஊர்களிலும் சாலைகள் துரிதமாக செப்பனிட்டுகொண்டு இருக்கின்றனர் எனக்கு தெரிய பவானி மேட்டூர் சாலை பத்து வருடத்திற்கு மேல் இருக்கும்  சமீபத்தில் சென்றபோது சாலை தரமாக இருந்தது என்ன ஏது என்று விசாரித்தால் தமிழகம் முழுவதும் கிராமப்புற சாலைகள் செப்பனிட தனியாக பணம் ஒதுக்கு சாலை போடுகின்றனர் என்றனர்... அநேகமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எல்லா ஊரிலும் நல்ல சாலைகளை பார்க்க நிறைய வாய்ப்பிருக்கிறது....

..........................................................................................

எனக்கு ஐபிஎல் மேட்சில் உடன்பாடில்லை பொழுது போக்கு என்கின்றனர் என்னைப்பொறுத்த வரை குடும்பத்தோடு செலவிட இருக்கற நேரமே பத்தவில்லை இதில் எங்க பொழுது போக்குவது.. இருந்தாலும் எனக்கு பிடிச்ச கெயில் விளையாடுகின்றார் என்றால் மட்டும் அவ்வப்போது பார்ப்போன் அப்படித்தான் எதாச்சையாக சேனலை திருப்பும் பார்த்தேன் அந்த மரண அடியை எப்பா எப்படி சொல்வது இந்த மாதிரி அடியை பார்ப்பதற்கு இனி வாய்ப்பு குறைவுதான்... இந்த முறை உலககோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் நல்ல இடத்தில் இருக்கும் என்பது என் நம்பிக்கை....
................................................................................................

தீடீரென பெய்த மழையால் தமிழகம் கொஞ்சம் குளிர்ந்து உள்ளது இந்த வருணபகவான் மனது வைத்து இதைப்போல இன்னும் 4 மடங்கு மழை பெய்தால் தண்ணீர் பிரச்சனையும் தீரும்.. அடுத்த வருட விவசாய மகசூல் இன்னும் நன்றாக இருக்கும்... பார்ப்போம் இந்த ஆடிப்பட்டம் எப்படி இருக்கும் என.....
...............................................................................................
 
 நட்பு நாடு நட்பு நாடு என்று யாரை சொல்கிறோமோ அவர்கள் நம் முதுகில் குத்துகின்றனர் எப்போதும்... இலங்கையை நட்பு நாடு என்கிறோம் ஆனால் நம் மீனவர்களை தாக்குகின்றனர்.. சீனாவை நட்பு நாடு என்கிறோம் அவர்கள் அப்பா எப்ப தூங்குவார் திண்ணை எப்ப காளியாகும் என்றே காத்திருக்கின்றனர். கிடைத்த கேப்பில் 10 கிலோமீட்டரை பிடித்து விட்டனர்... நம்ம ரேடார் என்ன செய்கிறது என்று யோசிக்கவேண்டி இருக்கு... ஒரு வேளை அது வாங்கியதிலும் எதாவது பிரச்சனையா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...


தகவல்

கத்தார் நாட்டில் இஸ்லாமியர்கள் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஹோட்டல்களில் மது விற்பனை செய்யப்படுகிறது. அங்கு வசிக்கும் பிற மதத்தினர் அனுமதி பெற்ற பின் மதுவை அருந்தலாம்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கத்தாரில் தங்கி முடி திருத்துபவராக பணிபுரிந்து வரும் இஸ்லாமியர் ஒருவர் மது அருந்திவிட்டு, தன்னுடைய வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து  அவர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 100 யுரோக்கள் (இந்திய மதிப்பில்  ரூ.7000)  அபராதம் விதித்துள்ளது. மேலும் அவருக்கு 40 சவுக்கடிகள் வழங்கவும் உத்தரவிட்டது.

தத்துவம்

செய்வது எதுவாக இருந்தாலும் அதை அழகுறச் செய்ய வேண்டும். எதையும் செய்வதற்குச் சோம்பல் கூடாது.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

.எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.

5 comments:

  1. அஞ்சறைப்பெட்டி மீண்டும் அழகுடன் வரட்டும்...!

    என்னாது கத்தாரிலும் சவுக்கடியா ஆண்டவா....

    ReplyDelete
  2. தத்துவங்கள் அருமை...

    மீண்டும் அஞ்சறைப்பெட்டி நிறைய மணக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி தத்துவம் அதுவும் கடைசி சூப்பர்

    ReplyDelete
  4. You Can Compare Your Nike Running Shoes ProgressNO! TOMS is now also selling clothing & accessories. All purchases of TOMS Clothing and TOMS accessories also support the One for One mission.[url=http://www.cheaptomsbuy.com]Cheap Toms[/url] How much does shipping and handling cost? Shipping cost is automatically calculated at checkout and will vary depending on the number of items purchased, where your order is being shipped and the type of shipping chosen. Please review the order total before confirming your purchase.Toms For Your Toes [url=http://www.onlinetomsoutlet.com]Toms Shoes[/url] Terrasoles shoes are known for providing warmth and comfort in every season and are completely water-proof. Available in versatile and attractive designs this shoes has been preferred by most of the people, as it best understand the feet requirements and are able to provide comfort to feet after a long hectic day. Wearing Terrasoles shoes removes one walking stress as most of the time people dont even realize on the amount of extra walk they have done. This shoe really eases the walking stress and provides complete comfort to feet while walking. A company called Toms Shoes have gone one better by devising a policy to donate a pair of shoes to children in poor countries for every pair bought by the buying public. This company was founded in America in 2006 after its owner saw poor children running around without footwear. Sometimes these children did not go to school as schools do not admit pupils if they do not have any shoes to wear. [url=http://www.tomsfans.com]Toms Oultet Store[/url] TOMS coupons are distributed online by the company on various websites and public can make use of those codes by just browsing them on the search engine and avail special offers.These codes can aid in purchasing shoes by the way of certain percentage off or free delivery etc. This is very amazing way of charity.There can also be some expired coupons so it is important to go through the complete details. In any case a person gets an expired coupon code, he should speak to the company and get it renewed. Espadrille is a classic rope soled shoe native of the French Mediterranean, this shoe is the new craze as men around the globe find out its comfort and simplicity. Espadrille first appeared in the Pyrenees mountains and have since become synonymous with summer and the ease of the French Riviera. The appeal of espadrille has steadily grown and they have been embraced by the fashion world. Fashion houses of repute such as Armani and Versace have all embraced espadrille and featured them on the runaway. It can be remembered that model Don Johnson sported a pair of these in the early years of NBC television series "Miami Vice".
    Relate Post
    http://blissind.com/forum/2-welcome-mat/297219-toms-outlet-high-quality-for-you-discount-buy#297219
    http://rouen.catholique.fr/minibb/index.php?action=vthread&forum=1&topic=376324

    ReplyDelete
  5. அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.

    * வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.என்னையில் பொறித்து சாப்பிடலாம்.

    * கொத்துமல்லிக் கீரையை (தளையை) பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூடும்.

    *கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.

    * மொச்சை, கொண்டைக்கடலை, முருங்கை, முள்ளங்கி இவைகளால் வாயுத் தொல்லை உண்டாகும்.

    * மூலநோய் உள்ளவர்கள் மிளகாயை அறவே நீக்குவது நல்லது.

    * கறுப்பு தேநீர், கோப்பி இவை மலத்தைக் கட்டும்.

    * இரவு கோச்சைக் கறி சாப்பிட்ட உடன் குப்புற படுக்கக் கூடாது.

    *ஒரு கோப்பை வினிகருடன் மூன்று கோப்பை தண்ணீரை கலந்து ஜன்னல்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

    *கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

    *வெங்காயத்தை உறிக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க, உறிப்பதற்கு முன் 5 நிமிடங்களுக்கு வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். கண்ணீர் மிச்சமாகும்.

    *கோழிக்கறி தின்றுவிட்டு ஆற்றில் குளித்தால் ஆப்பு ரெடி என்று அர்த்தம்.

    ReplyDelete