Showing posts with label பாசம். Show all posts

Monday, March 11, 2013

தாய்

இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. 

மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..

Tuesday, August 3, 2010

தாய்ப்பாசம்

இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..