உள்ளுரில் இருந்து உலகம் வரை........
பதிவு எழுதி ரொம்பநாள் ஆச்சு அஞ்சறைப்பெட்டியை மட்டும் எப்படியவாது வாரம் ஒரு முறை எழுதி விடவேண்டும் என்று நினைக்க மட்டுமே முடிகிறது எழுத இயலவில்லை மீண்டும் எழுதி விடவேண்டும் என்று ஒருவாரமாக எழுதுகிறேன் அப்படியும் முடிக்க இயலவில்லை அஞ்சறைப்பெட்டியை இதற்கு மிக முக்கிய காரணம் முகநூலில் அடிமையாக கிடப்பதால் தான்... மீண்டும் முயற்சிப்போம் வராம் 2 பதிவுகளாவது எழுத...
.............................. .............................. ....
தற்போது அனைத்து ஊர்களிலும் சாலைகள் துரிதமாக செப்பனிட்டுகொண்டு இருக்கின்றனர் எனக்கு தெரிய பவானி மேட்டூர் சாலை பத்து வருடத்திற்கு மேல் இருக்கும் சமீபத்தில் சென்றபோது சாலை தரமாக இருந்தது என்ன ஏது என்று விசாரித்தால் தமிழகம் முழுவதும் கிராமப்புற சாலைகள் செப்பனிட தனியாக பணம் ஒதுக்கு சாலை போடுகின்றனர் என்றனர்... அநேகமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எல்லா ஊரிலும் நல்ல சாலைகளை பார்க்க நிறைய வாய்ப்பிருக்கிறது....
.............................. .............................. ..............................
எனக்கு ஐபிஎல் மேட்சில் உடன்பாடில்லை பொழுது போக்கு என்கின்றனர் என்னைப்பொறுத்த வரை குடும்பத்தோடு செலவிட இருக்கற நேரமே பத்தவில்லை இதில் எங்க பொழுது போக்குவது.. இருந்தாலும் எனக்கு பிடிச்ச கெயில் விளையாடுகின்றார் என்றால் மட்டும் அவ்வப்போது பார்ப்போன் அப்படித்தான் எதாச்சையாக சேனலை திருப்பும் பார்த்தேன் அந்த மரண அடியை எப்பா எப்படி சொல்வது இந்த மாதிரி அடியை பார்ப்பதற்கு இனி வாய்ப்பு குறைவுதான்... இந்த முறை உலககோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் நல்ல இடத்தில் இருக்கும் என்பது என் நம்பிக்கை....
.............................. .............................. .............................. ......
தீடீரென பெய்த மழையால் தமிழகம் கொஞ்சம் குளிர்ந்து உள்ளது இந்த வருணபகவான் மனது வைத்து இதைப்போல இன்னும் 4 மடங்கு மழை பெய்தால் தண்ணீர் பிரச்சனையும் தீரும்.. அடுத்த வருட விவசாய மகசூல் இன்னும் நன்றாக இருக்கும்... பார்ப்போம் இந்த ஆடிப்பட்டம் எப்படி இருக்கும் என.....
.............................. .............................. .............................. .....
நட்பு நாடு நட்பு நாடு என்று யாரை சொல்கிறோமோ அவர்கள் நம் முதுகில் குத்துகின்றனர் எப்போதும்... இலங்கையை நட்பு நாடு என்கிறோம் ஆனால் நம் மீனவர்களை தாக்குகின்றனர்.. சீனாவை நட்பு நாடு என்கிறோம் அவர்கள் அப்பா எப்ப தூங்குவார் திண்ணை எப்ப காளியாகும் என்றே காத்திருக்கின்றனர். கிடைத்த கேப்பில் 10 கிலோமீட்டரை பிடித்து விட்டனர்... நம்ம ரேடார் என்ன செய்கிறது என்று யோசிக்கவேண்டி இருக்கு... ஒரு வேளை அது வாங்கியதிலும் எதாவது பிரச்சனையா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...
தகவல்
கத்தார் நாட்டில் இஸ்லாமியர்கள் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஹோட்டல்களில் மது விற்பனை செய்யப்படுகிறது. அங்கு வசிக்கும் பிற மதத்தினர் அனுமதி பெற்ற பின் மதுவை அருந்தலாம்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கத்தாரில் தங்கி முடி திருத்துபவராக பணிபுரிந்து வரும் இஸ்லாமியர் ஒருவர் மது அருந்திவிட்டு, தன்னுடைய வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 100 யுரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.7000) அபராதம் விதித்துள்ளது. மேலும் அவருக்கு 40 சவுக்கடிகள் வழங்கவும் உத்தரவிட்டது.
தத்துவம்
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
.எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.









