உள்ளுரில் இருந்து உலகம் வரை........
பட்ஜெட்டை
பொறுத்தவரை எப்பவும் ஆளும் கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் நிறைவான
பட்ஜெட் என்பார்கள்.. எதிர்கட்சிகள் உப்பு சப்பு இல்லாத பட்ஜெட் என்பர் ஆக
அது அவர்களின் கட்சி அடிப்படையிலான முடிவு... நம்மைப்போன்ற
நடுத்தரவர்க்கத்தை பொறுத்தவரை எல்லாத்துக்கும் அரசுக்கு வரி கட்டுகிறோம்
எந்தபொருள் வாங்கினாலும் வரி அது போல நாம் வாங்கும் சம்பளத்துக்கும் வரி
மொத்தத்தில் வரி கட்டுவதற்காகவே கொஞ்சம் சேர்த்து உழைக்கனும் போல...
........................................................... .....
சமீபத்தில் வீடு வாங்கலாம் என்று ஞானம் பிறந்து அடுக்குமாடி குடியிருப்பை
விசாரிக்கலாம் என்று சென்றேன் சிட்டி மெயினில் உள்ள அந்த அடுக்குமாடி
குடியிருப்பு 1 கோடி என்றனர் திரும்பி பார்க்காமல் ஓடிவந்தேன் கொஞ்சம் ஊர்
ஓரமாக விசாரிக்கலாம் என்று விளம்பரத்தை பார்த்து நேரில் சென்றேன் இரண்டாவது
மாடி 45 இலட்சம் என்றும் கார்பார்க்கிங் வாங்கவேண்டியதில்லை இலவசமாக
பெற்றுக்கொள்ளலாம் என்றனர் சரி எங்க இருக்கு உங்க அடுக்குமாடி குடியிருப்பு
என்றேன் இப்பதான் கட்ட ஆரம்பித்திருக்கிறோம் இது தான் இடம் என்று ஒரு
கோவைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஊரைக்காட்டினார்கள் மீண்டும் திரும்பி
பார்க்காமல் வந்தேன்.. வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு அடுக்குமாடி
குடியிருப்புக்கு நேரில் சென்றேன் அங்கு இருந்த போன் நெம்பரை சுழற்றி
பேசும் போது இன்னும் 4 வீடுகள் தான் உள்ளது சீக்கிரம் சொல்லுங்க
முடிச்சிடலாம் 65 இலட்சம் என்றார் கார்பார்க்கில் எல்லாம் சேர்த்து மாத
பராமரிப்பு 1500 என்று சொன்னதும் சரிங்க என்று அங்கு குடியிருக்கும் ஒரு
பெரியவர் வந்தார் அவரிடம் விசாரித்தேன் எல்லாம் சரிதான் கண்ணு இங்க
ஆகாயமும் சொந்தமிள்ள பூமியும் சொந்தமிள்ள நடுவுல மட்டும் தான் சொந்தம்
என்றார்.. நாளை எதாதாதவது அசம்பாவிதம் நடந்தால் நம்ம வீடு எங்க இருக்கு
என்று கான்பிக்கிறது...
............................................................ ..............................
தமிழர் இனம் இலங்கையில் அழிக்கப்பட்டபோது எடுத்த படங்கள்
மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பல குற்றங்கள் வந்தாலும் இலங்கைக்கு
ஆதரவாக உள்ள நாடுகள் நிறைய உள்ளதால் முக்கியமாக சுற்றி உள்ளதால்
என்னைப்பொறுத்தவரை இலஙகையை அதிகம் தண்டிக்க இப்போது இயலாது ஆனால் என்றாவது
ஒரு நாள் இந்த இன அழிப்பிற்கு அவர்கள் வருந்தி மடியத்தான் போகிறார்கள்...தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் நிச்சயம் தர்மம் மறுபடியும் வெல்லும்....
............................................................ .............................. ......
இப்போது எங்கு பார்த்தாலும் ஆசிட் வீசி எதிராளியை தண்டிப்பது
அதிகரித்து விட்டது இதற்கு ஆசிட் விலை குறைவு மற்றும் எளிதில் கிடைக்ககூடிய
பொருளாக இருப்பது தான் காரணம். பகைக்கு எதிராளியை அளிப்பது தீர்வாகது
என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் ஆசிட் கூசிய பெண்ணின் குடும்ப
நிலையையும், வீசியவனின் குடும்பநிலையையைம் ஒரு கனம் யோசித்தால் குற்றங்கள்
குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது...
........................................................... .............................. ......
அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள, ஐக்கிய அரவு எமிரேட் நாட்டின் ஒரு நகர
மாநிலமாக திகழ்வது துபாய் நகரம். இந்த துபாய் நகரம், உலகின் முதன் முதலாக
தான் திகழ வேண்டும் என்று தீராப்பசி கொண்ட நகரமாகும்.
இது தனது முதன் முதல் பட்டியலில், அடுத்து 72 மாடிகள் கொண்ட அதி நவீன
ஓட்டல் ஒன்றை சேர்த்துள்ளது.
உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஓட்டலை கடந்த செவ்வாய் அன்று முறைப்படி துபாய் திறந்துள்ளது. 355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஒட்டலின் பெயர் ஜே.டபிள்யூ. மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.
இது உலகின் அதி உயர 828 மீட்டர் கட்டிடமான பர்ஜ் கலீப் கட்டிடத்தின் அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.
உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஓட்டலை கடந்த செவ்வாய் அன்று முறைப்படி துபாய் திறந்துள்ளது. 355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஒட்டலின் பெயர் ஜே.டபிள்யூ. மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.
இது உலகின் அதி உயர 828 மீட்டர் கட்டிடமான பர்ஜ் கலீப் கட்டிடத்தின் அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.
......................................................... .............................. ........
உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின்
ப்ரூஸ் ரெனால்ட்ஸ் தனது 81வது வயதில் லண்டனில் மரணமடைந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக தனது தந்தை இறந்ததாக ப்ரூஸின் மகன் நிக்
ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
1963ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு ரயில் கொள்ளைச் சம்பவம் அப்போது
உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. கிளாஸ்கோவிலிருந்து லண்டன் சென்ற லண்டன்
மெயில் ரயிலில் நடந்த பரபரப்பான கொள்ளை அது. அப்போது அந்த ரயிலில் புகுந்த
கொள்ளைக் கும்பல் அதிலிருந்து 20 லட்சம் பவுண்டு பணத்தை கொள்ளையடித்து
விட்டு துணிகரமாக தப்பியது. அந்தப் பணத்தின் மதிப்பு இப்போது 4 கோடி
பவுண்டுகளாகும்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தே ஆடிப் போனது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டு நடத்திய
கொள்ளைக் கும்பலின் தலைவர்தான் ப்ரூஸ்.
கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் 5 வருடம் தலைமறைவாக இருந்தார் ப்ரூஸ்.
1968ம் ஆண்டுதான் அவர் சிக்கினார். பின்னர் அவருக்கு 25 வருட சிறைத் தண்டனை
கொடுக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பத்து வருடத்தில்
விடுவிக்கப்பட்டார். பிறகு எழுத்தாளராக மாறி பத்திரிகைகளில் எழுதினார்.
சுயசரிதை எழுதினார். இப்போது மரணமடைந்துள்ளார்.
தகவல்
செவ்வாய் கிரகத்துக்கு புதுமண ஜோடி தேனிலவு செல்லும் சுற்றுலா திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்ணில் சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கிரகம் செவ்வாய் (மார்ஸ்) இது சூரியனில் இருந்து 4-வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக காணப்படுகிறது.
பூமிக்கு சந்திரன் துணைக்கோள் இருப்பதுபோல செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ், டெயிமோஸ் என்ற 2 துணைக் கோள்கள் உள்ளன. தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது.
இதுபோல் பல்வேறு உலக நாடுகளும் செவ்வாய் கிரகத்தை பற்றியே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பூமியைப்போல செவ்வாய் கிரகத்திலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் அதிக அளவு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை சுழற்சி நிகழ்கின்றது. மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள், பாலைவனங்கள் உள்ளன.
தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் அமெரிக்காவின் 3 விண்கலங்கள் சுற்றி வருகின்றன. வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் டிட்டோ என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதன் சுற்றுலா செல்லும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தை நாசாவுடன் இணைந்து செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் இது தொடங்கும் என்று அறிவித்தது.
தற்போது செவ்வாய் கிரகத்தில் தேனிலவு பயணம் செல்லும் திட்டத்தையும் அது அறிவித்துள்ளது. இதில் திருமணமான தம்பதி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மொத்தம் 501 நாட்கள் பயணம். இதற்கான செலவு ரூ. 5,400 கோடி என்றும் இன்னும் 5 வருடத்தில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் அதன் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு தேர்வு செய்யப்படும் தம்பதிக்கு விண்வெளிப்பயணம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு செவ்வாய் கிரகத்துக்கு பயணம் தொடங்கும்.
தத்துவம்
உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.
நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.
வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.. வாழ்க்கையை முழுவதாக வாழவில்லை என்று தான் பொருள்...
நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.
வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.. வாழ்க்கையை முழுவதாக வாழவில்லை என்று தான் பொருள்...
பெரியவர் சரியாத்தான் சொல்லி இருக்கார்...
ReplyDeleteரூ. 5,400 கோடி...!
முத்தான தத்துவங்கள்...
எல்லாமே நல்ல தகவல்கள்தான்....
ReplyDeleteஅஞ்சறைப் பெட்டி வாசமாய் இருக்கிறது...
[url=http://buycialispremiumpharmacy.com/#vvfqv]buy cialis online[/url] - buy cialis , http://buycialispremiumpharmacy.com/#gkkme buy cialis online
ReplyDeleteபட்ஜெட்டு புஸ்வானம்....
ReplyDeleteசெவ்வாய் கிரக தகவல் அழகு...
[url=http://buyviagrapremiumpharmacy.com/#nbtjp]buy viagra[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#ssqmr generic viagra
ReplyDeleteஇது அஞ்சறைப் பெட்டியல்ல
ReplyDeleteஅமுது உற்றை அடக்கியபெட்டி
வரித் திட்டத்தின் வியாக்யானம்
தரித்து ஆரம்பித்த அழகு
அடுக்குமாடிக் குடியிருப்பு தேடும்
இடக்குமா நிறந்த சொல்லோட்டம்
அமில ஆசங்கவாதிகளின் அற்ப
துமில் செயல்களை தூக்கி எறியும்
கட்டுரை என்ன சொல்ல...
அரபிய ஹோட்டலினை அழகுற
சொல்லி லாந்தர் விளக்கொளியில்
ரயில் திருட்டும் சொன்ன நேர்த்தி
அற்புதம் தொடர்க
[url=http://viagraboutiqueone.com/#zbskm]buy generic viagra[/url] - viagra 100 mg , http://viagraboutiqueone.com/#rndbp viagra without prescription
ReplyDelete[url=http://viagraboutiqueone.com/#khcbv]buy generic viagra[/url] - viagra 150 mg , http://viagraboutiqueone.com/#pcedi cheap viagra
ReplyDelete[url=http://viagraboutiqueone.com/#gsiwv]viagra online without prescription[/url] - viagra 200 mg , http://viagraboutiqueone.com/#avtlb cheap viagra
ReplyDelete[url=http://buyonlineaccutanenow.com/#vaplk]accutane online without prescription[/url] - accutane 30 mg , http://buyonlineaccutanenow.com/#dnvgh cheap accutane
ReplyDelete