Wednesday, February 20, 2013

கிராமத்து மனசு 05

மாட்டு வண்டி நான் சென்ற முதல் வாகனம் இதுதான். எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் திருவிழாவிற்கு முதன் முதலாக 4 மாத குழந்தையாக இருக்கும் போது சென்றேன் பின்னாளில் எனது அம்மா சொன்னதாக ஞாபகம். எனக்கு மட்டுமல்ல 25 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் வாகனம் மாட்டு வண்டியாகத்தான் இருக்கும். இன்றும் மாட்டு வண்டிகள் அழியவில்லை ஆனால் குறைந்து இருக்கின்றது.

கிராமங்களில் விடாப்பிடியாக இன்னும் சில பேர் மாட்டு வண்டி வைத்து கொண்டு விவசாயம் பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .மாட்டு வண்டி ஓட்டுவது ஒரு கலை மாட்டின் சுபாவத்திற்கு ஏற்ப அதை அதட்டி ஓட்டுவார்கள்.
எனக்கு சிறுவயதில் இருந்து அதிகம் மாட்டுவண்டியுடன் புழக்கம் உள்ளது. இவ்வண்டியை நெல் சுமக்க, அரைக்க, சந்தைக்கு செல்ல என அனைத்து பொருட்களையும் தூக்கி செல்ல மாட்டு வண்டியைத்தான் பயன்படுத்தினர் ஒரு காலத்தில். இப்போது இதை பயன்படுத்துவது குறைந்தாலும் கிராமத்தில் இதற்கான வரவேற்பு இன்றும் உண்டு.

பழைய திரைப்படங்களில் மாட்டு வண்டியைப்பற்றிய பாடல்களும், மாட்டு வண்டிகளும் அதிகம் இடம் பெற்று இருக்கும் கிராமத்து படம் என்றால் மாட்டு வண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாட்டு வண்டியைப்பற்றி புகழ் பெற்ற பாடல்கள் நிறைய இருக்கின்றன.

முன்காலத்தில் சரக்கு வாகனமாக மக்கள் பய்னபடுத்தியது மாட்டு வண்டியைத்தான் இவ்வண்டியைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் தாத்தா கூறிய தகவல் இன்னும் நன்றாக இருந்தது. அவர் காலத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் அதிகம் நடக்குமாம் ஊர் ஊராக சென்று மாட்டு வண்டி ஓட்த்தில் நிறைய பரிசுகள் பெற்று இருக்கின்றாராம். மாட்டு வண்டி பந்தயத்திற்கு சென்ற இடத்தில் தான் பந்தயத்தை பார்க்க வந்த அவர் மனைவியையும் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். வண்டிக்கு பெயிண்ட் அடித்து அழகாக பராமரித்து வருகிறாராம் இப்ப பட்டணத்துக்கு குடி வந்தாதால் அதெல்லாம் நினைவுகளோடு சரி என்கிறார்.

இன்றும் பல ஊர்களில் ரேக்ளா ரேஸ் என்ற பெயரில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

 அந்த காலத்தில் சுற்றுலா என்றால்  பழனிதான் அதிகம் செல்வார்கள் பழனி செல்லும்போது வீட்டில் உள்ள மாட்டு வண்டியின் மேல் சாக்கு கட்டி விட்டு அதுதான் நிழல் போகும் போது கட்டுச்சோறு செய்து கொண்டு போவோம். வரும் போது விறகு பொறுக்கி சில இடங்களில் கல் வைத்து சாப்பாடு செய்து கொள்வோம். பழனி சென்று வர ஐந்து நாட்கள் ஆகும் இவர் திருப்பதிக்கும், ராமேஸ்வரத்துக்கும் மாட்டு வண்டியிலேயே குடும்பத்துடன் சென்று வந்தவர்கள் நிறைய பேர்.
15 வருடத்திற்கு முன்பு திருமணம் என்றால் எல்லாரும் வண்டி கட்டிக்கொண்டு தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள் அதானால் தான் அக்காலங்களில் 3 நாட்களுக்க திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இப்போது 3 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது திருமண நிகழ்வுகள்..

மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றிக்கொண்டு செல்வார்கள் பின்னால் சென்று கரும்பை சத்தம் வராமல் உடைத்து வந்து சாப்பிடுவோம். மாட்டு வண்டியில் இரு மாடுகளை பூட்டி அதை லவகமாக கையில் பிடித்து சின்ன சாட்டையை வைத்து அடித்து மேதுவாக நகரும் போது ஆடி ஆடி செல்லும.பொருட்கள் ஆட்கள் என எல்லோரையும் இழுக்கும் வண்டி நம்ம ஊரு மாட்டுவண்டி..

மாட்டுவண்டியை ஒவ்வொருவரும் அவர்களது வசதிக்கேற்ப வண்டியை அழகு படுத்தி வைத்திருப்பர்.  சிலர் அழகாக கூண்டு அடித்து அதற்கு பெயின் அடித்து வைத்திருப்பர். இன்னும் சிலர் கட்டை வண்டியாகவே வைத்திருப்பர். வைக்கோள் போட்டு அதன் மேல் பெட்சீட் போட்டு மெத்தை போல வடிவமைத்து வைத்துருப்பர் இதை எல்லாம் நின்று பொறுமையாக ரசிக்கத்தோணும்.

இவ்வண்டிகளைப் பொறுத்த வரை ஹய் ஹய் என்று கத்தி சாட்டையில் மெதுவாக ரெண்டு போட்டால் வேகமாக செல்லும். ஹோ ஹோ என்று சத்தமிட்டு கயிரை இறுக்கப்பிடித்தால் அப்படியே நிற்கும். இதற்கு இதுதான் எக்ஸ்லேட்டர், பிரேக் எல்லாம். வண்டி ஓட்டுபவரின் குரல் தான் இதற்கு மிகப்பெரிய பலம் அவரின் குரலுக்கேற்ப நகரும்..
இவை இரண்டும் மாட்டு வண்டிக்கு முக்கிய தேவைகள்...

அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.
இன்றும் ஊருக்கு சென்றால் மாட்டு வண்டியில் செல்ல மனம் அடித்து கொள்ளும். சமீபத்தில் வண்டியில் இருந்து இறங்கி ஒரு 5 நிமிடம் மாட்டு வண்டியில் சென்றேன் ஆடி ஆடி குழியில் இறங்கி செல்லும் போது பின்புறம், முதுகு, கை எல்லாம் வலி எடுத்தது. அந்த வலியும் ஒரு சுகமான கிராமத்து நினைவுகள் தான்....

Tuesday, February 12, 2013

காதலர் தினம்... பிப்ரவரி 14...


தந்தை தினம் வருகிறது  பல பேர்களுக்கு அது வந்து  போவதே தெரிவதில்லை. தாய் தினம் வருகிறது அதை நாம் யாரும் அந்த அளவிற்கு கொண்டாடுவதில்லை இன்னும்  நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பித்த பல தியாகிகளின் பிறந்த நாட்கள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. ஆனால் இந்தக் காதலர் தினம் மட்டும் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி அனைவரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம். இந்த வருடம் வாரப்பத்திரிக்கைகளில் எல்லாம் நல்ல முக்கியத்துவம் கொடுத்து நிறைய கவிதைகளை வெளியிட்டு காதலர் தினத்தை இளம் தலைமுறையினரிடையே சூடக்கி உள்ளது.

முகநூலில் எங்கு பார்த்தாலும் இப்போதே காதலர் தினத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சமூகவலைத்தளங்கள் எல்லாம் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றன காதல்ர் தினத்தை அதுமட்டுமில்லாமல் இன்று பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து பயணம் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு காதலர் தினம் தான். 

கடைவீதிகளில் பரிசுகள் இந்த வருட புதுமை என அறிமுகப்படுத்தி அங்கும் கல்லாகட்டுன்றனர் காதலர் தினத்தால். காதலர் தினம் மிடியாக்கலின் பெரும் வரவேற்பால் குழந்தைகள் கூட இன்று காதலர் தினம் என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.

ஒருவருக்கு அன்புடன் பரிசு கொடுப்பதில் தவறொன்றுமில்லை. பரிசு கொடுக்க கொடுக்கத்தான் எதிர்பார்ப்புகள் அதிகமாகி அன்பு அதிகமாகும். பரிசுகளை காதலர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நாம் அன்பு வைத்திருக்கும் எவருக்கும் கொடுக்கலாம். நம் ஊர்க்கலாச்சாரம் காதல்ர் தினத்தை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறது. காதலர் தினம் காதலி இருந்தால் தான் கொண்டாடவேண்டும் என்று அவசியம் இல்லை நட்புக்களுடனும், பெற்றோருடனும் கொண்டாடுவதில் தவறென்ன இருக்கிறது..



ஊரில் யார் யார் காதலிக்கிறார்கள் என்று இந்த தினத்தில் அவர்கள் உடுத்தும் உடையை வைத்தே சில வருடங்களுக்கு முன்னால் சோதிடம் சொல்லியது எல்லாம் தற்போது நினைவில்.. ஒரு 15 வருடங்களாகத்தான் நம்ம ஊரில் இந்த தினம் பேசப்படுகிறது எனக்கு முதன் முதலாக காதலர் தினம் அறிமுகமான புதிதில் இன்று பச்சை கலர் துணி அணிய வேண்டுமாம் அப்போது தான் நமக்கு காதலி இல்லை என்று எல்லாருக்கும் தெரியுமாம் நம்மை காதலிக்க வாய்ப்பிருக்கிறது என்று நண்பர்கள் போற போக்கில் பிட்டைப்போட பள்ளியில் கலர் துணி போட முடியாதே அதனால் பச்சை கலந்த சட்டையை வீட்டில் இருந்து பள்ளி பையில் ஒளித்து வைத்து பஸ்ஸ்டேண்டு கடையில் மாற்றிக்கொண்டு பஸ் பயணத்தின் போதும் பள்ளிக்உள் செல்லும் வரை பச்சை சட்டையும் அப்புறம் சீருடைக்கு மாறி மீண்டும் மாலை பச்சை சட்டை போட்டும் பயன் இல்லை அப்போது 7வது படிக்கிறேன் என்று நினைக்கிறேன்...

பச்சை சட்டை போட்டு டியூசன் வரை சென்று அன்று முழுவதும் பச்சை சட்டையை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போட்டு இருந்தேன் கை மேல் பலன் கிடைப்பது போல் நினைப்பு என்னை சுத்தி சுத்தி வந்தது ஆனால் ஒருத்தரும் திரும்பி கூட பார்க்கவில்லை என்றாலும் வருடா வருடம் அந்த வருடம் எந்த கலர் என்று கேட்டுத் தெரிந்து அந்த கலர் சட்டை போட்டும் பயன் இல்லை பச்சி ஒன்னும் சிக்கலை நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று அடுத்தவனை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் ஆனேன்...

இதனாலயே காதலர் தினத்தின் மேல் கோபமாக வரும்.. இருந்தும் அந்த நாள் சந்தோசமாக போதும் என்பதால் இன்று வரை அதை வரவேற்க கடமைப்பட்டு இருக்கேன்.. காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...

Wednesday, January 30, 2013

அஞ்சறைப்பெட்டி 30.01.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
பல முறை எனது அஞ்சறைப்பெட்டியில் எழுதி இருந்தேன் எங்கள் ஊர் சாலை (பவானி முதல் மேட்டூர் வரை) மிக மோசமான சாலை என்று யார் செய்த புண்ணியமே தெரியவில்லை 10 வருடத்திற்கு பின் இப்பத்தான் அந்த சாலையை செப்பனிடும் வேலை நடந்து கொண்டு இருக்கின்றது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இனி எங்க ஊருக்கு நல்ல படியாக பயணம் செய்யலாம் என்று... இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கூட உடல் வலி ரொம்ப பின்னி எடுக்கும் அந்த அளவிற்கு குழிகள் கொண்ட சாலை அது.

  ................................................................

அனைவரும் எதிர்பார்த்த விஸ்வரூபம் தேவை இல்லாமல் பல போராட்டங்களை நடத்தி இன்று தடை செய்யும் அளவிற்கு வந்துள்ளது. சினிமாவை சினிமாவாக பார்த்ததால் நிச்சயம் இந்த பிரச்சனைகள் இருக்காது.. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க சினிமாவுக்காக போராடுவது அபந்தம். முதலில் அடிப்படை விசயங்களுக்காக போராடாதவர்கள் தேவை இல்லாமல் சினிமாவுக்காக போராடுகின்றனர்.

..........................................................................................

கேரளத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடாத தமிழகம் மீது சட்டரீதியான நடவடிக்கை என அம்மாநில உம்மன்சாண்டி கூறிஉள்ளார்.. ஏற்கனவே நாங்க சட்டரீதியான நடவடிக்கை எடுத்தும் எங்களுக்கு ஒரு சொட்டு கூட் தண்ணீர் கிடைக்கவில்லை இதில் நீங்களுமா..

................................................................................................

இனியும் மழை பெய்யவில்லை என்றால் இந்த வருட கோடை காலங்களில் நிச்சயம் தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலை வரும் வாய்ப்பு உண்டு. ஊரில் உள்ள குளங்கள், ஏரிகள் எல்லாம் வறண்டு காணப்படுகின்றன. மழையின்மையால் முதலில் பாதிக்கப்பட்டது விவசாயம் தான் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கப்போறமோ இந்த மழையின்மையால்..

...............................................................................................

பசித்தாலும் சாப்பிடுவதில்லை.... தூக்கம் தொலைத்து நாள்தோறும் 16 மணிநேரம் ஆன் லைன் கேமில் மூழ்கியிருந்த ஆஸ்திரேலிய சிறுவன் அதற்கு அடிமையாகிவிட்டான். இக்கட்டான நிலையில் இருந்து அந்த சிறுவனை மீட்கப் போராடி வருகிறார் ஒரு தாய். உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைனில் இந்த கேம் ஆடுவதாக கூறப்படுகிறது. இலவச ஆன்லைன் வீடியோகேம்களில் மிகவும் பிரபலமானது ‘ரன்எஸ்கேப்'. மல்டிபிளேயர் ஆன்லைன் கேம் என்ற வரிசையில் ரன்எஸ்கேப், கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த ஜெகக்ஸ் கேம்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வடிவமைத்ததுதான் இந்த கேம். கேமில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். அதோடு நாமும் ஒரு கேரக்டராக இறங்கி விளையாட வேண்டும். எப்படி விளையாடுவது, விளையாட்டின் நோக்கம் என்ன, எந்த இலக்கை அடைய வேண்டும் என்றெல்லாம் கேமுக்குள் இருக்கும் ஆலோசகர்களிடமே கேட்டுக் கொள்ளலாம். இதுதான் இலக்கு என்று எதுவும் கிடையாது.எதை நோக்கி போவது, என்ன சாதிப்பது என்பது நம் விருப்பம்தான். ஆகமொத்தம், உள்ளுக்குள் ஒரு உலகமே இருக்கும்.

...............................................................................................

குழந்தைகள் மண் சாப்பிடுவார்கள். அதிகம் போனால் சாக்பீஸ் சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகள் சாம்பல் விபூதி சாப்பிடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து பெரிய ஆளாக ஆன பின்னும் பூனை முடியை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஒரு பெண்.
15 ஆண்டுகளாக பந்து பந்தாக சுருட்டி பூனை முடியை ருசித்து சாப்பிட்டு வருகிறார் 43 வயதான அந்தப் பெண். பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார் அந்தப் பெண்.
இதற்காக தான் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள பூனைகளைப் பிடித்து அதன் முடிகளை சேகரித்து வருகிறார். கேட்பதற்கு அருவெருப்பாக இருந்தாலும் அந்தப் பெண் பூனை முடியின் ருசிக்கு அடிமையாகிவிட்டார் என்றே கூறுகின்றனர்.

தகவல்
 
 
அண்டார்டிகா பனி பிரதேசத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் முகாம் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது படர்ந்து கிடக்கும் ஐஸ் கட்டியின் அடியில் மறைந்து கிடக்கும் ஏரிகளை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ரோஸ் கடல் பகுதியில் ஐஸ் கட்டிகளின் மீது துளை போடும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அப்போது 1 கி.மீட்டர் ஆழத்தில் ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வில்லர்னஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது துளை போடும் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் தெரிய வந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவினர் ஐஸ் கட்டிக்குள் மறைந்து கிடந்த எல்ஸ்வொர்த் என்ற ஏரியை கண்டுபிடித்தனர்.

தத்துவம்

இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.

எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.

Wednesday, January 23, 2013

அஞ்சறைப்பெட்டி 24/01/2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்ததால் அணையின் உட்புத்தோற்றத்தை காண சென்றேன் அனையில் இருந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 23 கீலோ மீட்டர் தள்ளி இருந்து உள்ளே உள்ள நந்தி சிலை மற்றும் சர்ச் கோபுரங்களை சிறு படகின் துணை கொண்டு சுற்றிப்பார்த்தேன்.. 2002ம் ஆண்டுக்கு பின் இப்போது தான் நந்தி முழுவதும் தெரிகின்றது என்றனர். நிச்சயம் அணைவரும் பார்க்க வேண்டிய இடம். அந்த அளவிற்கு உள்ளது மேட்டூடாஅணையின் அமைப்பு..

  ................................................................

இந்த புத்தாண்டில் என்ன குத்தம் செய்தேன் என்று தெரியவில்லை எழுதுவதற்கு நேரமே இல்லை.. வேலைப்பளு நிறைய உள்ள காரணத்தால் எழுத வேண்டிய பல தகவல்கள் பதியமுடியவில்லை. இனி வரும் வராங்களில் ஓரளவு இந்த பிரச்சனை தீரும் என்று நினைக்கிறேன் பார்ப்போம்.

..........................................................................................

விஸ்வரூபம் ஆரம்பித்தில் இருந்தே முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டிடிஎச் க்கு 1000 கட்டி பதிவு செய்தேன்... அது புட்டுகிச்சு, தியேட்டர் என்றதும் ப்ரூக்பில்டுல தான் பார்க்கனும் என்று அதுக்கு புக் செய்தேன் அதுவும் புட்டுகிச்சு... எப்பவும் படம் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டமாட்டேன் இந்த படம் பார்க்கனும் என்று ஆர்வம் காட்டியது தப்பு போல..
விஸ்வரூபம் விஸ்வரூபம் ஆகிடுச்ச...


................................................................................................

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர் தங்கள் அவசரத்திற்காக குழந்தையை வண்டியில் ஏற்றியதும் படு வேகத்தில் வளைவுகளில், சாலையின் பிரிவுகளில் கவனிப்பதே இல்லை கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 5 பேர் இது போல விழுந்து எழுந்து குழந்தையின் டிபன் பாக்ஸ் எல்லாம் ரோடுகளில் சிதறி என பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது இதற்கு காரணம் பள்ளியோ, அரசோ இல்லை பெற்றோர்கள் தான்...
...............................................................................................

குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு அது போலத்தான் எனக்கும் 3 வயதாகப்போகும் குழந்தையை எந்த பள்ளியில் படிக்க வைக்கலாம் என்று விவாதிக்கும் போது பிரபல தனியார் பள்ளிகள் எல்லாம் தற்போது அப்ளிகேஷன் விற்பனை செய்கிறார்கள் போய் வாங்குங்கள் என்றது பல பள்ளிகளில் 2013 ஜீன்க்கு எங்க பள்ளியில் அட்மிஷன் முடிந்துவிட்டது என்றனர். ஒரு பள்ளியில் 1 இலட்சம் டொனேஷன் கொடுத்தால் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்கின்றனர். மற்றொரு பள்ளியில் 50 ஆயிரம் டொனேஷன் வேண்டும் என்றனர் இப்பதானே ஆரம்பித்துள்ளீர்கள் என்ன என்ன சொல்லித்தரப்போகிறார்கள் என விசாரித்தால் இனி தான் எல்லா பொருளும் வாங்க வேண்டும் என்கின்றனர். இந்த Play School. PreKG. LKG, UKG கட்டணத்தை கேட்கும் போது Engineering கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது...

எந்த எந்த பள்ளியில் என்ன கேட்டாங்க என்று விரைவில் இதைப்பற்றியான தனி பதிவு இடனும்...

...............................................................................................


உலக பொருளாதார மந்தம்: ஒரே ஆண்டில் 40 லட்சம் பேர் வேலை இழப்பு

உலகம் முழுவதும் பல நாடுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உலகம் முழுவதும் வேலை இழப்புகள் அதிகமாகி வருவதாக உலக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது 19 கோடியே 70 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
அதாவது வேலை செய்யும் திறனுள்ளவர்களில் 6 சதவீதம் பேருக்கு வேலையில்லை. கடந்த 1 ஆண்டில் மட்டும் 40 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 24 வயதுக்கு குறைவானவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 3 -ல் ஒரு பங்கினர் ஒரு வருடத்துக்கு மேலாக வேலையில்லாமல் இருப்பதாகவும் உலக தொழிலாளர் அமைப்பு கூறியிருக்கிறது. 

...............................................................................................

'செக்ஸ்' வீரியத்துக்காக வயாகரா மாத்திரையை ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர். 'செக்ஸ்' மட்டுமின்றி உடல் பருமனையும் இந்த மாத்திரை குறைப்பதை நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள போக் பல்கலைக்கழக நிபுணர்கள் எலிகள் மூலம் இந்த ஆய்வு நடத்தினார்கள். அதில் வயாகரா மாத்திரையினால் அவற்றின் அடிவயிற்றில் படிந்திருந்த தேவையற்ற கொழுப்புகள் கரைந்தன. அதன் மூலம் உடல் பருமன் தடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மனிதர்களுக்கும் வயாகரா மாத்திரை பயன்படுத்தி உடல் பருமனை குறைக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்

கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்

அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம், ரத்தக் கொதிப்புகுறைவதோடு, நினைவாற்றல்அதிகரிக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள, வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் நமது உடலில்,பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனான, ஆக்சிடாக்சினை பரிசோதித்து வந்தனர். அதில், நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலன் அல்லது காதலி, என நம்மை நேசிக்கும்அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித் தால், "ஆக்சிடாக்சின்' வெளிப்பட்டு, ரத்தக் கொதிப்பு குறைகிறதுஎன்பதை கண்டறிந்துள்ளனர்.மேலும், இதன் மூலம், நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.ஆனால், நமக்கு முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை நேசிக்காதவர்கள் ஆகியோரை,கட்டிப்பிடிக்கும்போது, இந்த ஹார்மோன் அதிகம் சுரக்காமல், எதிர் விளைவுகள் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, வியன்னா பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானி சாண்ட் குக்லர் கூறியதாவது: பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போ
தும், தம்பதியினர் கட்டிப்பிடிக்கும்போதும், ஆக்சிடாக்சின் அதிகளவு சுரப்பது தெரியவந்துள்ளது.பரஸ்பரம் நம்பிக்கையுடன் உள்ளவர்களை கட்டிப்பிடிக்கும்போது மட்டும் தான், ரத்தக்கொதிப்பு குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமும் ஒரு 10 தடவையாவது கட்டிப்பிடிங்கப்பா கட்டிப்பிடிங்க...

தத்துவம்
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.

எந்த காரியத்திலும் பொறுமை, விடாமுயற்சி இவை இரண்டையும் கடைபிடி வெற்றி உனக்கே....

Tuesday, January 1, 2013

புத்தாண்டும் பிறந்தநாளும்...


2013ம் ஆண்டின் முதல் பதிவு கடந்த வருடம் அதிக பதிவு எழுதவில்லை அதற்கு முக்கிய காரணம் சோம்பேறித்தனமும் முகநூலில் அதிக நேரம் செலுத்தியதும் தான். பதிவுலகம் தான் அதிகம் இணையத்தில் உலவுவதற்கு மிக முக்கிய காரணம் நிறைய நண்பர்கள் கிடைத்ததற்கும் பதிவுலகம் தான் காரணம். பதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புத்தாண்டு என்றாலே எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும் அதற்கு மிக முக்கிய காரணம் புத்தாண்டிற்கு அடுத்த நாள் எனது பிறந்தநாள் தான்.. பிறந்தநாள் என்றாலே படு கொண்டாட்டமாகத்தான் இருப்பேன் சிறுவயதில் இருந்து அதற்காக டிசம்பர் மாதத்திலேயே தயாராகிவிடுவேன் துணி எடுப்பதில் இருந்து கொண்டாட்டம் வரைக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் ஆட்டம் பாட்டத்துடன் இருக்கும் ஆனால் இந்த வருடம் ரொம்ப அமைதியாக ரசித்தேன் புத்தாண்டு கொண்டாட்டத்தை புத்தாண்டு அன்று இரவு காரில் ஊரை ரவுண்டடித்து வீட்டுக்கு செல்லும் போது வழியில் பட்டாசு வெடித்த நண்பர்களிடம் வாழ்த்து வீடு சென்றேன். ஒவ்வொரு ஆண்டும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடியதற்கும் அமைதியாக வேடிக்கை பார்த்ததற்கும் பல மாற்றங்கள் தமிழ்புத்தாண்டை இந்த அளவிற்கு கொண்டாடுவதில்லை என்பது தான் வருத்தமான விசயம்...

நண்பர்களுடன் கொண்டாடிய பிறந்தநாள், மனைவியுடன் கொண்டாடிய பிறந்தநாளை விட கடந்த 2 வருடமாக மகனுடன் கொண்டாடிய பிறந்தநாள் தான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.  அதுவும் இந்த வருடம் மகன் மழலை மொழியில் அப்பா Happy Birthday என்று அவள் அம்மா சொல்ல பின் அவன் சொல்லியதில் தான் எத்தனை மகிழ்ச்சி..

கடந்த வருடங்களை விட இந்த ஆண்டுதான் எனக்கு மிக முக்கிய ஆண்டு இந்த ஆண்டு நான் துவங்க இருக்கும் தொழிலில் வெற்றியடைய வேண்டும் அதற்கான முயற்சியை மிக மேம்படுத்தவேண்டும். எவ்வாறு எல்லாம் முயற்சி மேற்கொண்டால் வெற்றி என்று அதையே நோக்கியே பயணிக்க இருக்கிறேன். இந்த பயணத்தின் வெற்றி அடுத்த ஆண்டில் இறுதியில் தெரியும். இறையவன் அருளாளும் நண்பர்களின் ஆசியோடும் இந்த வருடம் இனிதாக அமைய வேண்டும் என வேண்டுகிறேன்....

எனக்கு புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன் மூலமாகவும்,  சாட் வழியாகவும், வலைப்பூ மற்றும் பேஸ் புக் மூலமாக வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி....