Wednesday, June 13, 2012

அஞ்சறைப்பெட்டி 14/06/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கடந்த ஞாயிற்றுக்கிழமை இனிமையான ஓர் அனுபவம் கோவையில் எங்களால் அரங்கேற்றப்பட்டது கோவையைச் சேர்ந்த பதிவர்கள் பரஸ்பரம் , அறிமுகம் என்று களை கட்டியது எங்கள் நினைவுகள். கலந்து கொண்ட எங்கள் கோவை வலைப்பதிவர்கள்...
 

...............................................................................................


இந்த வாரத்தில் நாடு முழுவதும் நித்தியானந்தாவைப் பற்றிதான் பேச்சு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
என்னைப் பொறுத்த வரை நித்தியானந்தாவின் மேல் தவறு எதுவும் இல்லை என்பேன் அவர் நல்லவர் இல்லை என்று அறிந்தும் அவரைச்சுற்றி சுற்றி அவரை சந்திக்க செல்லும் மக்களைத்தான் குற்றம் சொல்வேன். நீங்கள் இடம் கொடுத்ததால் தான் தவறு செய்கிறான்.

சாமியார்களை நம்பி ஏமாந்தவர்கள் தான் அதிகம் இதை இன்னும்புரிந்து கொள்ளாமல் அவர் பின் சென்றால் கை என்ன காலைத் தூக்கி கூட மேலே வைப்பார்..

எப்படியும் நித்தி விரைவில் வெளியே வரத்தான் போகிறார்.. மீண்டும் சிஷ்யைகள் அவரைச்சுற்றி சுற்றி வரத்தான் போகிறார்கள் நாம் திட்டிக்கொண்டே இருக்கத்தான் போகிறோம்...
...............................................................................................

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று எல்லா கட்சிகளும் தேர்வு செய்ய திக்குமுக்காடுகின்றன. காங்கிரசும், பாரதியஜனதாவும் சிறிய கட்சிகளின் ஆதரவை நோக்கி செல்கின்றனர். இம்முறை மாநில கட்சிகளின் விருப்பம் தான் விரைவில் நிறைவேறும் போல...
................................................................................................

கரூர் மாவட்டம் சணப்பிரட்டி எஸ்.வெள்ளாப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த சிதம்பரம்(லேட்) என்பவரது மகன் மணிகண்டன்(17). அவரது தந்தை சிதம்பரம் இறந்து விட்ட நிலையில், கட்டிட தொழிலாளியான அவரது தாய் லதாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார். மணிகண்டன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 480 மதிப்பெண் பெற்று பலரது புருவத்தையும் உயர வைத்தார்.

இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1ல் சேர்ந்தார். சமீபத்தில் வெளியான ப்ளஸ் 2 தேர்வில் மணிகண்டன் 1,188 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். அவர் இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவம் படிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மணிகண்டனின் வறுமையை அகற்றவும், அவரது கல்விக்கு கை கொடுக்கவும் (கரூர் மாவட்டம்) கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் அவரது 13வது மாத சம்பளத் தொகையான ரூ. 50,000த்தை அந்த மாணவனின் மருத்துவ படிப்பு செலவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். காமராஜ் தனக்கு கிடைத்த 12 மாத சம்பளத்தை சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு வழங்கி உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப்போல எல்லா எம்எல்ஏக்களும் தங்கள் ஊதியத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவிட்டால் அதை விட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை...

...............................................................................................


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது.

இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.

அங்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பின்னர் அந்த எடிட் செய்த பிரதியையே, நாடு முழுவதும் வெளியிட்டனர். எத்தனை தியேட்டர்கள் தெரியுமா... தமிழை விட அதிகம்... 1300 திரையரங்குகள்!

வெளியிட்ட அனைத்து ஜப்பானிய நகரங்களிலும் ரோபோவின் ராஜ்ஜியம்தான். ரஜினி இன்றைக்கு ஜப்பானின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார்.
படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகும் கூட்டம் குறையவில்லை.

 ரோபோ ரஜினி முகமூடி அணிந்தபடி இரும்பிலே ஒரு இதயம் பாடலை முணுமுணுத்தபடி, மீண்டும் மீண்டும் படம் வருகிறார்கள் ரசிகர்கள்.
...............................................................................................

ஜீன் 12 எப்போதும் காவிரியில் டெல்டா விவசாயிகளுக்காக தண்ணீர் திறந்து விடும் நாள் இந்நாளைத்தான் அநேக விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பர். இந்த வருடம் மழை பொய்த்துப்போனதால் தண்ணீர் திறக்கவில்லை மக்களும் வானத்தை பார்த்து பெருமூச்சு விட வேண்டிய நிலையில் உள்ளனர். கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்பதை விட வருணபகவானிடம் கேட்பதே மேல்...
..................................................................................................

டெங்கு காய்ச்சல் வந்தாலும் வந்தது கிராமப்புறங்களில் எல்லாம் கொசு மருந்து புகையை அடிக்கின்றனர். முன்பு மாநகராட்சி, நகராட்களில் தான் அதிகம் காண முடியும் ஊராட்சியில் மருந்து அடிப்பது குறைவுதான் இந்த முறை எங்கள் கிராமத்துக்கு சென்றிருந்தபோது கொசுவை ஒழிக்க புகை அடிப்பதைப்பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி..
இந்த புகையினால் கொசு ஒழியுமா என்றால் அது கொசுவிற்கே வெளிச்சம்...
..................................................................................................

இந்த வாரம் குடிகமன்களுக்கு வருத்தமான செய்தி பீர் விலையை உயர்த்துவது தான். என்ன தான் விலையை உயர்த்தினாலும் அந்த பொருளை நாம் வாங்கமல் இருக்கப்போவதில்லை அது போலத்தான் பீரும்...
விலையை உயர்த்தினால் குடிக்கமா விட்ருவாங்களா...
..................................................................................................

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். இவரது மனைவி சமந்தா. இவர்களுக்கு நான்சி (8), ஆர்தர் (6) மற்றும் புளோரன்ஸ் (22 மாதம்) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இங்கிலாந்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் இளமையான பிரதமர் என்ற பெருமையை கேமரூன் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கிங்ஹாம் சியரில் காஸ்டனில் உள்ள பிளப் இன் என்ற ஓட்டலில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டார்.
அதில், பங்கேற்க மனைவி சமந்தா மற்றும் 3 குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றார். விருந்து முடிந்ததும் மனைவி மற்றும் குழந்தைகள் ஆர்தர், புளோரன்சுடன் காரில் பிரதமர் இல்லம் உள்ள டவுனிங் தெருவுக்கு புறப்பட்டார்.
காரில் தாயார் சமந்தாவுடன் 8 வயது மகள் நான்சி இருப்பதாக பிரதமர் கேமரூன் நினைத்தார். அதேபோன்று இவருடன் அவள் இருப்பதாக சமந்தா நினைத்தார். ஆனால் நடந்ததோ வேறு.
விருந்து முடிந்து திரும்பியபோது இவர்கள் இருவரும் தங்களது மகள் நான்சியை அங்கேயே தவறவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் விருந்து நடந்த ஓட்டலின் கழிவறையில் நான்சி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார். அவளை ஓட்டல் ஊழியர் பார்த்து விசாரித்தார். அப்போதுதான் அவளது தந்தை இங்கிலாந்து பிரதமர் கேமரூன் என தெரிய வந்தது.

..................................................................................................

எகிப்தில் சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சி மக்கள் போராட்டத்துக்கு பின் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் முபாரக்கின் ஆதரவாளரும் போட்டியிடுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில் பொதுமக்கள் உச்சக்கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அப்போது சுமார் 200 ஆண்கள் சேர்ந்து பெண்களுக்கு செக்ஸ் தொல்லையும், கொடுமைகளும் இழைத்தனர். இதை எதிர்ப்பு தெரிவித்து நேற்று தக்ரீர் மைதானத்தில் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் 50 பெண்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு வளையமாக கைகோர்த்தப்படி சில ஆண்கள் சுற்றி நின்றனர். அதையும் மீறி சில ஆண்கள் பெண்களை கேலியும் கிண்டலும் செய்தும், கட்டித்தழுவியும் செக்ஸ் கொடுமை செய்தனர்.

மேலும், கைகளை பிடித்து இழுத்தும், துணிகளை அகற்ற முயற்சித்தும் மானபங்கம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அருகே இருந்த அகதிகள் முகாம்களில் புகுந்து தங்களின் மானத்தை பாதுகாப்பு கொண்டனர்.
தகவல்
இன்றைய பரபரப்பான விஞ்ஞான யுகத்தில் டென்சன் ஆகாதவர்களே இல்லை என்று சொல்லலாம். பணிச்சுமை, ஏமாற்றம், எதிர்பார்த்தது கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் டென்சன் உருவாகிறது. நாளடைவில் இதுவே மன அழுத்தம் (டிப்ரஷன்) நோயில் தள்ளி விடுகிறது.

இந்தியாவில் மன அழுத்தம் நோய்க்காக மனநல டாக்டர்களிடம் சென்றால் ரிலாக்ஸ் ஆக இருக்க கற்றுக் கொள்ளுங்கள், வாக்கிங் செல்லுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுவார்கள். மன அழுத்தத்தை குணப்படுத்தும் மருந்துகளும் வந்துவிட்டது.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் மன அழுத்த நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. மன அழுத்த நோய்க்கு மருந்து உட்கொள்தல் தவிர உடற்பயிற்சி செய்தால் குறையுமா என்று லண்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகம், எக்செடர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழு ஆய்வு நடத்தியது.

இதற்காக அவர்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்படட 18 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட 361 பேரை பயன்படுத்தினார்கள். அவர்களை இரு பிரிவாக பிரித்தனர்.

ஒரு பிரிவினர் வழக்கமாக அவர்கள் செய்யும் பணியை எப்போதும் போல் மேற்கொள்ளச் செய்தனர். மற்றொரு பிரிவினரை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தினார்கள். 12 மாதங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் அவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.

இதில் உடற்பயிற்சியால் அவர்களது மன அழுத்தம் கொஞ்சம்கூட குறையவில்லை என தெரிய வந்தது. உலகில் முதல் முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் கார்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ளதாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளது.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  மழை கழுவிய பூக்கள் என்ற பெயரில் அதிசயா என்பவர் எழுதி வருகிறார்.. பெண்ணைப்பற்றியும், அவளின் நட்பு, காதல் பந்தம் என கவிதைகளில் புகுந்து விளையாடுகிறார்... படியுங்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்...

http://athisaya.blogspot.in/
தத்துவம்

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்பவனுக்கு எல்லா கதவுகளும் திறந்திருக்கும்....

பேசும் போது எல்லாவற்றையும் நன்றாக யோசி, ஆனால் யோசிப்பதை எல்லாம் பேசி விடாதே...

Tuesday, June 12, 2012

கோவையில் உற்சாகமான உள்ளுர் பதிவர் சந்திப்பு..002

கோவை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள் அவரிகளின் சுயஅறிமுகம் செய்த போது அவர்களைப்பற்றிய எனது தொகுப்புக்கள் இந்த தொகுப்புற்கு மிக உதவியர் கவிதாயினி சரளா.
 தீயா வேலை செய்கிறார்கள்
The Kid with Pike ப்ரஞ்ச் படம்

கோவி அவர்கள் ( முரன்சுவை ) கவிதைகளின் தேவைகளைகளை பற்றி அருமையாக விளக்கினார் மேலும் வலை ஆரமிக்கும் முன் பின் நிகழ்வுகளை வரிசகரமாக அடுக்கியது கேட்கவே சுவாரசியமாக இருந்தது .

அடுத்ததாக ஐயா கந்தசாமி அவர்கள் பேசுகையில் நம் நோக்கம் குறிக்கோள் இவைகளை பதிவுகள் மூலமாக உலகறிய செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சபாபதி வெற்றிக்கு அருகில் மூலிகைகளை படம் எடுத்து அதன் இயற்பெயர் அறிவியல் பெயர் அதன் பயன் என கலக்கல் பதிகளை தன் வலையில் நிரப்பியிருக்கிறார் .

 யோகநாதன் .பேருந்து நடந்துனராக இருந்துகொண்டு மனித சமூகத்திற்கு இவர் ஆற்றும் பணி அளவிட முடியாதது .....மரங்களை காக்க இவர் மேற்கொள்ளும் போராட்டங்களும் அரசை எதிர்த்து அரசு ஊழியனான அவர் செய்யும் செயல்கள் பாராட்ட வைக்கின்றது மனிதனாய் பிறந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற இவரின் லட்சிய பயணம் கண்டு வியந்தோம் .

வின்சென்ட் இயற்க்கை மற்றும் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை ஆதாரபூர்வமாக தன்னயுடைய தளத்தில் வெளியிடுகிறார். பல மர வகைகளை எப்போது கேட்டாலும் அதன் நன்மைகள் தீமைகள் என்று அனைத்தையும் சொல்லக்கூடியவர். மூலிகை பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
நறுமுகை தேவி முகநூலில் இவருக்கு என்று தனி இடம் பிடித்திருக்கிறார் இலக்கியம் பல்சுவை கட்டுரைகள், கவிதைகள் என தனி முத்திரை பதிக்கிறார். . ஆண் பெண்ணின் ஆரோக்கியமான உறவையும் முகநூளில் காணப்படும் நட்பின் பயம் பற்றியும் வெளிப்படையாக விவரித்தார்.
பெருமாள் சக்தி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கோவை மாவட்ட தலைவர் ) இவரின் கார்கில்  பற்றிய இரண்டாயிரம் மீட்டர் கடிதம் ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார் மேலும் பல நுண் இலக்கியங்களை வெளியிட்டு இருக்கிறார் இவரின் சாதனை போற்றுதற்குரியது .

விஜி ராம் இவர் நேசம் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மையம் ஒன்றை நடத்துகிறார் அதை பற்றிய செய்திகளையும் மரகன்றுகளை கொடுத்து அனைவரும் ஆச்சர்யப்படுத்தினார்.

எழில் .இவர் நிகழ்காலம் என்னும் பெயரில்   பல்சுவை நிகழ்வுகளை பதிவு செய்கிறார். பெரியார் பற்றிய சிந்தனைகளை அதிகம் பகிர்ந்தார்.


சங்கவி இவர் கிராமத்து விருந்து என்ற நோக்கில் அழித்து வரும் பாரம்பரியங்களை பற்றியும் பல நிகழ்வுகளை பளிச்சிடும் வகையில் பதிவு செய்கிறார். மற்றும் அரசியல் பதிவுகள் எழுதி வருகிறார்.

 கோவை மு சரளா இவர் பெண் என்னும் புதுமை என்ற தளத்தில் பெண்ணின் மெல்லிய உணர்வுகளை தனது கவிதைகளின் தொகுத்துள்ளார் .சமூகம் சார்ந்த பணிகளில் அக்கறை மிக்கவர். இவரின் முள்ளிவாய்க்கால் கவிதைகள் பிரபலம்.
கோவை நேரம் ஜீவா கோவையின் புகழ் பரப்பும்  மனிதர். கோவையை சுற்றியும் அதன் கோவைக்குள்ளும் அறிய கிடைக்காத பல விசயங்களை நம்மோடு பகிருகிறார். ( பாண்டியன் ஊறுகாய் என்பதை பற்றி ருசிகரமான ஒரு பதிவை வெளியிட்ட பெருமைக்குரியவர்). 

யோகமணி ராமராஜ் குழந்தைகளின் மேல் அதிக அன்பும் பாசமும் மிக்கவர்.. இவருக்கு மிகவும் பிடித்தமானது ஜோக்ஸ்... ரொம்ப ரொம்ப ரசித்து சொல்கிறார் நினைவுகளை...

 வீடு சுரேஷ் கோவை பதிவர் குழும பேனர் டிசைன் இவரால உருவாக்கப்பட்டது நல்ல திறமைமிக்க தன்னடக்கம் மிகுந்தவர் அவரின் கிராம சூழல் பற்றி கவிதைகள் பதிவுகள் வெளியிடுகிறார். முக்கியமாக அஞ்சலியின் ரசிகர்...

உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி பிடித்து மற்றவருடன் பகிர்வதில் பெரும் ஆனந்தம் கொள்ளும் அற்புத மனிதர் இவர் வெளியிட்ட ரஷ்ய சினிமா இன்றைக்கு நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய பொறுப்பான படம் .....
 முழுமையாக பார்க்க முடியாத வருத்தம் இருந்தது ...

 சம்பத்குமார் தமிழ் பேரன்ட்ஸ் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் அருமையான பதிவுகளை வெளியிடுகிறார் தானே முன் வந்து மற்றவருக்கு உதவும் மனிதர் தொழில் நுட்ப சந்தேகங்களை தீர்க்க முனைந்து வந்து உதவினார் .

 சிவசங்கரன் பொள்ளாச்சிய சேர்ந்த இவர் காதல் தோல்வியால் பதிவு எழுதுவதை நிறுத்தியிருக்கிறார் .......மீண்டும் ஒரு காதல் கைகூடினால் பதிவு எழுதுவதாக உறுதி அழித்து சென்றார் ஆகவே அவரின் காதல் கை கூட வாழ்த்துக்கள். இவரின் பொழுது போக்கு மாடு மேய்ப்பது..
கோவை சக்தி மரம் வெட்டுதல் தடுக்கும் பல பதிவுகளையும் ,பங்கு சந்தை நிகழ்வுகளையும் பளிச்சென்று தெரியும் வகையில் பதிவு செய்கிறார் மிகவும் அடக்கமான மனிதர்.

ஸ்ரீதர் இவர் ரியல் எஸ்டேட் பற்றிய தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் இயற்கை வளங்களை பற்றியும் சமூக நோக்கில் பேசினார்.

கலாகுமரன் இனியவை கூறல் என்ற தளத்தில் அறிவியல், இயற்கை மற்றும் பல்சுவை பதிவுகளை வெளிடுகிறார் ......சுற்றுசூழல் ஆர்வலர் .....

பாபுராஜ் நகை தொழில் செய்யும் இவர் பங்கு சந்தை பற்றிய பல செய்திகளை பதிவிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கல்வி இவருக்கு ஒரு தடையில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.

என் கணேசன் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றும் இவர் பல பயனுள்ள பதிவுகளை கொடுத்து எல்லோரையும் அசத்துகிறார் .தன்னம்பிக்கை பற்றியும் ஆன்மிகம் பற்றியம் ஆனந்த விகடனில் இவரின் கட்டுரைகள் வெளி வந்திருகின்றன .

ஆனந்தன் பத்திரிக்கை நிருபர் அமையான கடலில் புறப்படும் அதிவேக அலைபோல அவரிடம் இருந்து புறப்பட்ட வார்த்தைகள் சமூகத்தின் மீது கொண்ட கோபம் இவை எல்லாம் அவரை ஆச்சர்யம் கொள்ள செய்கிறது.


வினோத் இளைய தலைமுறையின் சக்தியாக இவரை பார்க்க முடிகிறது வார்த்தைகளில் புது வேகம் இயற்கையை பாதுகாக்க இவர் மேற்கொள்ளும் பணி சிறப்புக்குரியது வனத்துறை உதவியுடன் நல்ல மரகன்றுகளை தரிசு நிலங்களில் வளர்க்க உதவுகிறார் .......நீரின் உபயோகம் பற்றி கேள்வி கேட்டு எல்லோரையும் மௌனமாக்கினார்.

ஈரம் மகி மகேந்திரன் உண்மையில் நெஞ்சில் ஈரம் இருக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர் ஆதவற்ற நிலையில் சாலையோரம் இருக்கும் மனிதர்களை அவர்களின் உறவுகளோடு செய்தும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்தும் மனித குலத்திற்கு பெருமை சேர்க்கும் மகத்தான மனிதர் இவருக்கு பெரிதும் உதவியது முகநூல் நண்பர்கள் என்று அழுத்தமாக அவர் கூறியது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.

ராஜா நடராஜன் இவரை போல தன்னடக்கத்துடன் ஒரு உரையை யாராலும் ஆற்ற முடியாது அத்தனை இரத்தின சுருக்கம் .
கோவை சதீஸ் அகிம்சா சோசியல் சர்வீஸ்  மூலம் ஏழைகளுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மரம் நடுதல் போன்ற பயனுள்ள செயல்களை செய்யும் இளைனர் ......உதவும் மனப்பான்மை மிக்கவர் .
 எஸ்.ஆர். சேகர் டாக்டர் பினாயில் நிறுவன உரிமையாளர். சந்தன சிதறல் வலைதளத்தில் பல சுவைமிக்க கவிதை அரசியல் என பதித்துள்ளார் காட்சிக்கு எளியவர் எதையும் ஆழ்ந்து பார்க்கும் கூர்மையான அறிவு மிக்கவர்.


வா.மு.முரளி கோவையில் உள்ள பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றுகிறார். சமூக ஆர்வ மிக்கவர் இவரின் கவிதை வரிகளும் எழுத்துக்களும் நெஞ்சில் நிற்கும்.

பாலகணேஷ் கோவையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியிம் இவரின் பாலவின் பக்கங்கள் பிரபலம்.. டிவிட்டரில் தனது கருத்துக்களை அதைகம் சொல்பவர்.


பாலாஜி ............இணைய வடிவமைப்பாளர் ,பல இலவச கல்வி சேவைகளை செய்கிறார்.





அடுத்த பதிவில் நில சுவாரஸ்யமா படங்களுடன் நிறைவு பெறப்போகிறது கோவை பதிவர் சந்திப்பு...

கோவையில் உற்சாகமான உள்ளூர் பதிவர் சந்திப்பு.. 001



சிறுவயதில் இருந்து நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பர் அவர்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நண்பர்கள் அது போலத்தான் இணையத்தால் இணைந்த பல புதிய நட்புக்களின் இணைய சந்திப்பு கோவையில்...

நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏன் கோவை பதிவர்கள் எல்லாம் சந்திக்க கூடாது என்று பேசும் போது கோவை பதிவர்கள் குழுமம் என்ற பெயரும் www.kovaibloggers.in என்ற தளத்தையும் முதலில் உருவாக்கி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம், உடுமலை போன்ற ஊர்களை உள்ளடக்கி நண்பர்களை சேர்க்க முற்பட்டபோது மிகுந்த வரவேற்பு இரண்டு நாட்களில் 25 பேர் குழுமத்தில் இணைந்தனர் நாட்கள் செல்லச்செல்ல 30, 35, 40, என்று கடைசியாக 52 பேர் குழுமத்தில் இணைந்து நண்பர்களாகினர்.

குழும நண்பர்களுக்கான முதல் சிறு சந்திப்பு 31.05.2012 அன்று நடைபெற்றது அப்போது 16 பேர் வந்திருந்து சிறப்பித்தனர். அடுத்தாக 52 பேரும் சந்திக்க வேண்டும் என்று 10.06.2012 ம்அன்று தேதி முடிவு செய்ததும் குழும உறுப்பினர்களை அனைவரையும் அழைத்தோம். 50 பேர் வருதாக உறுதி அளித்தனர் சந்தோசமாக இருந்தது அனைவரையும் விரைவில் சந்திப்போம் என்று..

சந்திப்பு நடக்கும் இடத்தை ஜீவா புக் செய்ய, சுரேஷ் லோகோ பேனர் டிசைன் செய்தார், நானும் சம்பத்தும் நண்பர்களை அழைக்கும் பொறுப்பையும், விஜி அவர்கள் மரக்கன்று வாங்குவதற்கும், சக்தி நண்பர்களிடம் தகவல் திரட்ட வேண்டும் என ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டு செயல்பட்டோம்..

முதலில் நிகழ்ச்சி 3 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிக்க திட்டமிட்ட போது உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்கள் நான் ஒரு உலக சினிமா திரையிடுகிறேன் என்றார் அப்ப 2 மணி முதல் 3 மணி வரை போட்டுக்குங்க என்றதும் அவர் அந்த படத்தின் அற்புதமான கதைக்கருத்தை பதிவாக்கி எதிர்பார்ப்பை அதிகம் உண்டாக்கி இருந்தார்..

சந்திப்பு நடக்கும் என்று காலையில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது நிறைய புதிய நண்பர்களை சந்திக்க இருக்கிறோம் என்ற ஆவலுடன். நிகழ்ச்சி நடந்த லால்குடி ஹாலுக்கு முதலில் ஜீவாவும், சம்பத்தும் வந்தனர் பின் நானும், சுரேஷ், விளங்காதவன் ஆகியோர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருக்கம் வேலைகளை முடித்து நண்பர்களை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தோம்...

நிகழ்ச்சியின் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க வருகிறேன் என்று உறுதி அளித்தவர்களில் நிறைய பேர் போன் செய்து இன்று என்னால் வர இயலவில்லை என்று போன் தான் அதிகம் இருந்தது. எதிர்பார்த்தது போல 35 நண்பர்கள் வந்து கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி இதில் பேஸ்புக் நண்பர்களும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி...

தமிழ்தாய் வாழ்த்தை கவிதாயினி சரளா பாடி தொடங்க விஜி அனைவரையும் வரவேற்று பேசினார் பின் இந்த நிகழ்ச்சி எவ்வாறு தொடங்கியது என் நான் பேசி நண்பர்களின் அறிமுக படலம் தொடங்கியது...

தமிழ்தாய் வாழ்த்து


நிகழ்ச்சி தொடக்க உரை


நண்பர்களின் அறிமுகத்திற்குப்பின் யோகநாதன் அவர்களுக்கு நேசம் சார்பாக விஜி அவர்கள் 150 மரக்கன்றுகளையும், மகி மகேந்திரன் அவர்களுக்கு கோவை பதிவர்கள் சார்பாக 50 மரக்கன்றுகளும் இலவசமாக கொடுக்கப்பட்டது.

சங்கவி,யோகநாதன், நேசம் விஜி, ஜீவா

மகிமகேந்திரன், சங்கவி,யோகநாதன், ஜீவா, சம்பத், கோவை சக்தி

வந்திருந்த நண்பர்களுக்கு ஸ்வீட், காரம், காபியும் இனிதே இவ்விழா நிறைவு பெற்றது.

வந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும், இந்நிகழ்ச்சிகளுக்காக தீயாக வேலை செய்த குழும நண்பர்களுக்கும், இச்சந்திப்பிற்காக தங்கள் பங்களிப்பை பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி....


பதிவர்களின் அறிமுகம்
புகைப்படங்கள்
அடுத்த பவர்ஸ்டார் யார் என்று போட்டி போட்ட இரு பதிவர்கள்

என பல சுவாரஸ்யங்களோடு பதிவுகள் காத்திருக்கின்றன....

Thursday, June 7, 2012

கோவை பதிவர் சந்திப்பு

 
 
கோவை பதிவர்களின் முதல் சந்திப்பு வருகிற 10.06.2012 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அது சமயம் கோவையைச் சேர்ந்த பதிவர்கள், முகநூல் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

கோவை பதிவர்கள் சந்திப்பு

நாள்   : 10.06.2012 ஞாயிறு
நேரம்: 2 மணி முதல் 6 மணி வரை
இடம் : ஹோட்டல் ஒரியன் A/c,
262 கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், கோவை.


நிகழ்ச்சி நிரல்

மதியம் 2 - 3 மணி வரை  - உலக சினிமா உலக சினிமா ரசிகன் பாஸ்கரன்

3 - 3.05 தமிழ்த்தாய் வாழ்த்து (கோவை.மு.சரளா)

3.10 வரவேற்புரை (விஜிராம்)

3.15 பதிவர் சந்திப்பு பற்றிய அறிமுக உரை (சங்கவி சதீஷ்)

3.30 பதிவர்கள் அறிமுகம்

4.00 சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரக்கன்று வழங்குதல் ( நேசம் சார்பாக விஜி, கோவை குழுமத்திற்காக ஜீவா, சக்தி)

4.30 பதிவு பற்றிய தொழில்நுட்பம் (வீடு சுரேஷ், சம்பத்)

5.30 கலந்துரையாடல்

5.59 நன்றியுரை (இரவு வானம் சுரேஷ்)



இதுவரை வருவதாக உறுதி அளித்த கோவை பதிவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள்...


1. உலக சினிமா ரசிகன் பாஸ்கர்
2. பத்திரிக்கை ரகு
3. இளங்கோ
4. கோவிந்தராஸ் பிஎஸ்சி காலேஜ்
5. உடுமலை சதாசிவம்
6. தாரணி பிரியா
7. கோவை சரளா
8. தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்
9. விஜிராம்
10. கோவை சக்தி
11. கலாக்குமரன்
12. வின்சென்ட்
13. மூளிகை வளம் குப்புசாமி
14. எஸ்.ஆர் சேகர்
15. வீடு சுரேஷ்
16. பழனி.கந்தசாமி
17. இரவு வானம் சுரேஷ்
18. கோவை நேரம் ஜீவா
19. கோவை ராமநாதன்
20. மனசாட்சி
21. வாமு.முரளி
22. பத்திரிக்கை வேலுச்சாமி
23. பத்திரிக்கை நெல்லை பொடியன்
24. ஓட்டக்கூத்தன்
25. சாமக்கோடங்கி பிரகாஷ்
26. சக்திசெல்வி
27. ஈரம் மகி
28. ராஜ நடராஜன் நதிக்கரை
29. என் கணேசன்
30. மதுரை அழகு...
31. கோவைக்காற்று வெங்கடபதி
32. திருப்பூர் ராஜேஸ்
33. மகுடேஸ்வரன் திருப்பூர்
34. அவை நாயகன் ஓசை
35. சத்தியமூர்த்தி
36. எழில் அருள்
37 கௌதமன்
38. ராஜேஸ் சங்கர்
39. ஃபிர்தவ்ஸ்  ராஜகுமாரன்
40. சிவசங்கர்
41. கோவை தங்கவேல்
42. ஒட்டக்கூத்தன்
43. மயூரா ரத்தினசாமி
44. பாபுராஜ் பாபு
45. வெங்கடேச முரளி
46. சங்கவி
47. கோவை ஜீவா
48. பிரசாத்
49. நறுமுகை தேவி
50. முரளி




நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்கள் தொடர்புகொள்ள


சம்பத் 9965577404
ஜீவா 9894401474
சங்கவி சதீஸ் 9843060707
வீடு சுரேஷ் 9843941916

Wednesday, June 6, 2012

ஆனந்த விகடன் வலையோசையில் சங்கவி...







மிக்க மகிழ்ச்சியான தருணம் இது. ஆனந்தவிகடன் எனக்கு இது மூன்றாம் முறையாக அங்கீகாரம் அளித்துள்ளது.  எனது பல டிவிட்டுகள் மற்றும் விகடன் வரவேற்பறையில் எனது வலைப்பூ இடம் பெற்றதை காட்டிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி இன்று எனக்கு...

அதிக சந்தோசத்தில் இருக்கும் போது வார்த்தைகள் வெளியே வராதது என்று சொல்வோம் அது போல தான் இன்றும்..

சிறுவயது முதலே நான் வாங்கிப்படிக்கும் புத்தகம் மற்றும் பேருந்து பயணத்தில் நான் அதிகம் வாசிக்கும் புத்தகத்தில் முதல் இடம் விகடனுக்கு உண்டு. வாரம் வாரம் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் படிக்கும் இப்புத்தகத்தில் இன்று என் முகத்தைப்பார்க்கும் போது ஆனந்தக்கண்ணீர்...

ஒரு குக்கிராமத்தை சேர்ந்த கிரமத்தானுக்கு இது சந்தோசம்மான விசயம் தான். அதுவும் என் சொந்த மண்ணில் இப்புத்தகத்தை பார்க்கும் நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்தும் போது இருக்கும் சந்தோசம் வேறு எதில் கிடைக்கும்...

எனது ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் என் இனிய நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள்..