Thursday, February 4, 2016

தே.....மு.....

இது ஒரு கெட்ட வார்த்தை தான், இதை நிறைய இடங்களில் பரவலாக பயன்படுத்துவது தான். அதுவும் என்னை போன்ற கிராமத்தான்கள் கோபம் வந்தால் இதைத்தான் முதல் வார்த்தையா பயன்படுத்துவோம். இப்ப எதுக்கு இங்க இந்த வார்த்தை என்றால், சமீபத்தில் மகனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் உள்நோயாளியாக இருக்கவேண்டி இருந்தது.

பொதுவாக குழந்தைகள் தேமு, காமு, கேபு இது போல வார்த்தைகளை 99.9 சதவீதம் தவிர்ப்பேன். இந்த மருத்துவமனையில் பக்கத்து படுக்கையில் உள்ள ஆட்களை எல்லாம் மகன் வேடிக்கைபார்த்துக் கொண்டு படுத்து இருந்தான், அருகில் நானும்.

எங்களுக்கு எதிர்படுக்கையில் ஒரு நான்கு வயது சிறுவன், அவன் அம்மா நக நாகரீக மங்கை என்பது அவர்களின் உடையிலேயே தெரிந்தது. ஜீன்ஸ், டாப்ஸ், கூலிங்கிளாஸ் என செம்ம பந்தாவாக காட்சியளித்தார். அவர் மகனுக்கு சாப்படு ஊட்ட, அதை சாப்பிட மறுத்த அவன், எடுத்ததும் உபயோகித்த வார்த்தை தே...மு... இப்ப எதுக்கு எனக்கு ஊட்ற என்று கத்தினான். நான் மட்டுமல்ல செவிலியர்கள், மற்றும் அங்கு இருந்த பார்வையாளர்கள் என அனைவரும் கொஞ்சம் அதிர்ந்து திரும்பி பார்த்தோம்.. மீண்டும் அந்த பையன் அப்பா இந்த தே..மு.. என்ன சாப்பிடு சாப்பிடுன்னு தொந்தரவு செய்கிறாப்பா என்றதும், அவன் தந்தை சமாதனப்படுத்தினார்...

இப்ப பிரச்சனையே இதைப்பார்த்த பிரசன்னா தே..முன்னா என்னப்பா என்றான். நானும் அருகில் இருந்த செவிலியரும் பேந்த பேந்த விழிக்க, உடனே சுதாரித்த செவிலியர் டிவியை ஆன் செய்து சோட்டா பீனை போட்டு அந்த வார்த்தையில் இருந்து அவன் கவனத்தை திருப்பினார்..
நாம் என்ன பேசுகிறோமோ அதைத்தான் குழந்தைகளும் பேசுவார்கள், ஆடம்பரமாக உடை அணிந்து, உயர்தரவாகனங்களில் பவனி வந்தாலும் குழந்தைகள் முன் பேசும் போது கவனமாக பேசவேண்டும், இதை பெற்றவர்கள் உணரவேண்டும்..

6 comments:

  1. இதென்னங்க அநியாயமா இருக்கு, அவங்கப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அறிவில்லையா?

    ReplyDelete
  2. தே மு தி கா வைப் பற்றி சொல்ல வருவீர்கள் என நினைத்தேன் :)

    இவ்வளவு மோசமாக பெரும்பாலோர் வீட்டில் பேசுவதில்லை ,சங்கவி ஜி :)

    ReplyDelete
  3. உண்மைதான் நண்பரே .பலரின் நடை உடை பாவனைக்கும்
    பேச்சுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை .இப்படி பல சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன் ,குறிப்பாக குழந்தைகள் முன்பு கதைக்கும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் .குழந்தைகள் எப்போதும் பெற்றோரையே பின்பற்றுவதால் ,அருமையான பதிவு

    ReplyDelete
  4. தலைப்பைப் பார்த்ததும் நான் அப்பிடியே ‘ஷாக்’ ஆயிட்டேன்.

    தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்-னு சொல்லுவாங்க. அதைத்தான் நீங்க பார்த்திருக்கீங்க.

    ReplyDelete
  5. பிஞ்சு மனதில் விதை க்க பட்ட நஞ்சு .
    மிக நீண்ட நாட்களுக்கு பின்..........
    நானும் வாசித்தேன்

    ReplyDelete