Monday, February 22, 2016

விதிமுறை என்ற பெயரில், பணம் பிடிக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா....

எல்லாரும் வங்கிக்கு செல்வோம், அங்கு சென்று பணத்தை போடுவோம், எடுப்போம் அடுத்து லோன் வாங்குவதற்காக, லோ லோ என்று அழைவோம் இது தான் என்னை போன்ற கிராமத்தானுக்கு வங்கியை பற்றியான அனுபவம்..

நான் சில வருடங்களுக்கு முன் தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் என் சொந்த ஊரான சித்தாரில் கணக்கை துவங்கினேன். அதில் அப்ப இப்ப என்று 100, 200 ரூபாய் போடுவதும் எடுப்பதும் வழக்கம்.

சம்பளம் மற்றும் இதர லோன்கள் எல்லாம் மற்ற வங்கியில் இருப்பதால் அதன் நடை முறைகள் ஓரளவிற்கு தெரியும், இந்த ஸ்டேட் பாங்கின் நடைமுறை அந்த அளவிற்கு அத்துப்படி அல்ல.

கடந்த இரு மாதங்களாக எனது வங்கி கணக்கில் வீட்டில் இருந்து அப்பா அவ்வப்போது பணத்தை எனக்கு அனுப்புகிறார். அதில் கடந்த மாதம் 2000, 3500, 3000 என்று 5 முறை அனுப்பினார். அதற்கு மேலும் 1000, 2000 மொத்தம் 8 முறை அனுப்பி இருந்தார்.

எப்பவும் இல்லாமல் இன்று ஆன்லைன் அக்கவுண்ட்டை ஒபன் செய்தேன். அதில் 57 ரூபாய் மூன்று தடவை பிடித்தம் செய்திருந்தார்கள். அதுவும் 3500, 2000, 1000 ரூபாய்க்கு தலா 57 ரூபாய். 2000 ரூபாய்க்கு 57 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்று போட்டு இருந்தது.

அடங்கொன்னியா கந்து வட்டி, மீட்டர் வட்டி தான் கேள்விப்பட்டு இருக்கோம் இது என்னடா வட்டி என்று கொஞ்ச நேரம் மண்டை காய்ந்துவிட்டேன். 2000 ரூபாய்க்கு 57 ரூபாய் என்பது எல்லாம் என்னை போல வேலைக்கு போய் சம்பாரிக்கும் அன்றாடங்காட்சிகளுக்கு எல்லாம் ரொம்ப அதிகம். 57 ரூபாயில்  ஒரு நாள் முழுக்க 3 வேளை சாப்பிட்டு விடுவேன்.

சரி என்று அப்பாவை நம்ம ஊர் வங்கி கிளைக்கு அனுப்பு பேச சொல்லாம் என்றால் அவர் உடல் முடியாததால், எப்பவும் பணம் அனுப்பும் தம்பியை அனுப்பினேன். தம்பி துணை மேலாளரை பார்த்து உள்ளார். அவரோ 25000 ரூபாய்க்கு மேலே போனால் பிடிப்போம் என்று சொல்லி உள்ளார். தம்பி எனக்கு போன் செய்து விவரத்தை சொன்னான், 25000 பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அவ்வள இல்லை என்று பதில் சொல்ல சொன்னேன், அவர் இது RBI ரூல்ஸ்ப்பா என்னை கேட்டால் நான் என்ன செய்ய என்று அவர் விலகிவிட்டார்.

அடுத்து அங்கு எப்பவும் உதவும் காசாளர் ஒருவரை பிடித்து விபரம் கேட்டு இருக்கின்றான் தம்பி, அவர் இது வந்துங்க RBI ரூல்ஸ்ங்க 5 முறைக்கு மேல் பணம் அனுப்பினால், 6 வது முறை நீங்கள் அனுப்பும் பணத்திற்கு 57 ரூபாய் சர்வீஸ் சார்ஜாக எடுத்து கொள்வார்கள் என்றார் இதை தம்பி என்னிடம் சொன்னதும்அழைபேசியில் அழைத்து நான் விபரம் கேட்டேன். ஆமாங்க சார் 5 முறைக்கு மேல் பணம் அனுப்பினாலோ, பணம் எடுத்தாலோ 57 ரூபாய் பிடிப்பாங்க இது RBI ரூல்ஸ் என்றார் மறுபடியும்.
சரி அவரிடம் பேசி பயன் இல்லை என்று அழைபேசியை அணைத்துவிட்டேன்.
உடனே எனது கனரா வங்கியின் கணக்கை எடுத்து பார்த்தேன் அதில் 5முறைக்கு மேல் பணம் போட்டு இருக்கேன், ஆனால் அவர்கள் எதுவும் பிடித்தம் செய்யவில்லை அதுவும் சேமிப்பு கணக்கே..
இந்த பிரச்சனையால் எனக்கு பல சந்தேகங்கள்... அவை,,,

எனது கணக்கில், எனது கிளையில், என் பணத்தை நான் 5 முறைக்கு மேல் போட்டால் 57 ரூபாய் பிடித்தம் செய்தால், என்னை போல அன்றாடங்காட்சி எல்லாம் எப்படி பணத்தை சேமிப்பது என்பது தான் விளங்கல.

ஒரு சின்ன கடை வைத்து உழைத்து சம்பாரித்து வங்கியில் சேமிப்பு கணக்கில்  500 ரூபாய் வீதம் மாதம் 10 தடவை போடுகிறார் ஒருவர்., அதில் 5 முறைக்கு 57 ரூபாய் வீதம் பிடித்தம் செய்தால் அப்புறம் எதற்கு அதற்கு சேமிப்பு கணக்கு என்று பெயர்.. அவர் உழைத்து பணம் கட்டுவராம் இவர்கள் விதிமுறை என்ற பெயரில் பிடிச்சுக்குவாங்கலாம்... இதற்கு எதற்கு சேமிப்பு கணக்குன்னு வெச்சானுகன்னு தான் புரியல.

RBI ரூல்ஸ் என்கின்றனர் அப்படி என்றால் எல்லா வங்கிளும் அல்லவா பிடித்தம் செய்யவேண்டும் ( ஒரு வேளை எனக்கு தெரியவில்லையா)

சேமிப்பு கணக்கு தொடங்கினால் இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் என்று, கணக்கு தொடங்கும் போதோ, அதற்கு பின்னாலே பகிரங்கமாக சொல்லலாம் அல்லவா.

எத்தனை கோடி அக்கவுண்ட் இருக்கும், அதில் குறைந்த அளவு மக்களுக்கு கூட இந்த விதிமுறை தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.

அக்கவுண்டில் பணம் எடுக்கும் போதும், போடும் போதும் குறுஞ்செய்தி அனுப்பும் வங்கிகள், பிடித்தம் செய்யும் போது மட்டும் ஏனோ எதுவும் அனுப்புவதில்லை.

நாம் கண்ணுக்கு தெரிந்து பணம் போடுகிறோம், அவர்கள் நமுக்கு தெரியாமலே விதிமுறை என்ற பெயரில் பிடித்தம் செய்துவிடுகின்றனர்.

எனது வங்கி இருக்கும் பகுதி கிராம பகுதி அங்கு பல பேர் பணத்தை போட்டு எடுக்கின்றனர், நிச்சயம் அவர்களுக்கும் பணத்தை பிடித்திருப்பார்கள், நிச்சயம் அவர்களுக்கு தெரிந்திருக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்ற சத்தியம் செய்து சொல்லாம்...

57 ரூபாய்க்கா இந்த குமறல் என்று கூட நினைக்கலாம், நினைத்து பாருங்கள் என்னை போல லட்சம் பேருக்கு பிடிச்சால் எம்புட்டு ஆகும் என்று..

இந்த பணம் பிடித்த புகாரை யாருக்கு, எப்படி அனுப்பவேண்டும் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுங்கள். என்னால் முடிந்த அளவு கல்லை வீசிப்பார்க்கிறேன்...

9 comments:

  1. இது ரொம்ப நாளாய் நடப்பதுதானே? சம்பந்தப் பட்ட வங்கியின் ATM மிலேயே எடுத்தால் 5 முறையும், வேறு வங்கியின் ATM மில் எடுத்தால் 3 முறையும் கட்டணமின்றி எடுக்கலாம்! அதே போல ஒரு நாளைக்கு 25,000 ரூபாய்க்கு மேல் ATM மில் எடுக்க முடியாது.

    வங்கிக் கணக்கு பற்றி, பணம் எடுக்கப்படுவது / போடப்படுவது பற்றி உங்களுக்கு வரும் எஸ் எம் எஸ் களுக்கும் வருடத்துக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இவ்வளவு ஏன், சென்ட்ரல் பேங்க்கில் என் கையொப்பம் மாறி இருந்தது என்று சொல்லி, மாற்றுக் கையெழுத்து வாங்கிக் கொண்டு அதற்கு 125 ரூபாய் கழித்து விட்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது, நாம் ஙே என்று முழிக்க வேண்டியது தான்...

      Delete

  2. The Banking Ombudsman,
    Reserve Bank Of India Building
    No 16, Rajaji Salai, Parrys, Chennai - 600001,

    என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பி தங்களின் குறைகளை சொல்லலாம்.

    ReplyDelete
  3. எனக்கும் ஒரு கசப்பான அனுபவம் உண்டு. புது கணக்கு துவங்க ஆன்லைனில் விண்ணப்பித்து பின் உள்ளூர் வங்கியில் மற்ற விதிமுறைகளை முடித்தேன். இதே வங்கியில் எனக்கும் என் கணவருக்கும் சேர்ந்து சேமிப்புக் கணக்கு உண்டு. அந்த இன்ட்ரொவுடன் கணக்கு துவக்கம். புது பாஸ் புக்கில் என் கணவர் பெயரில் சிறு மாற்றம். போய் கேட்டதற்கு வேறு கவுண்டரில் சரி செய்து கொள்ளச் சொன்னார்கள். இதறகு 11 ரூபாய் என் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டது!! :-((

    ReplyDelete
  4. Write to banking ombudsman to get clarity, each district has one I think.

    ReplyDelete
  5. தமிழ்இளங்கோவிடம் கேளுங்கள்.tthamizhelango.blogspot.in

    Jayakumar

    ReplyDelete
  6. தமிழ்இளங்கோவிடம் கேளுங்கள்.tthamizhelango.blogspot.in

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜே.கே. அவர்களே என்னை வம்பில் இழுத்து விடுவதில் உங்களுக்கு அவ்வளவு ஆர்வமா?

      பொதுவாக வங்கிகளில் சேவைக் கட்டணங்கள் என்பவை ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். கேட்டால் Bank Policy matter என்பார்கள். (In 1999, the practice of Indian Banks' Association (IBA) fixing the benchmark service charges on behalf of the member banks was discontinued and the decision to prescribe the service charges was left to the discretion of the Boards of individual banks.) REF: On service charges of the banks in India - Technical Report 2010 by IIT, Bombay)

      பணம் பரிமாற்றம் (Cash Transaction)
      செய்யும்போது சில வங்கிகளில் சேவைக் கட்டணம் உண்டு; சிலவற்றில் கிடையாது. எனவே பால் கட்டணம், பஸ் கட்டணம் உயர்வை எதிர்த்து போராடுவது போன்று, இது மாதிரியான சேவைக் கட்டணம் குறித்தும் போராட வேண்டும்.
      அரசியல்வாதிகளாகிய மக்கள் பிரதிநிதிகள் மக்கள்சபையில் குரல் எழுப்ப வேண்டும்.

      Delete