Sunday, December 23, 2012

மறக்க முடியாத சச்சின்....


கிரிக்கெட் தெரிந்தவர்கள் எல்லாம் உச்சரிக்கும் பெயர்
இந்தியா மட்டுமல்ல உலமே உச்சரித்த பெயர்
பந்து வீசுபவர் வீர வசனம் பேசினாலும் அவரை நடுங்க வைத்த பெயர்
கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பேர் தன் குழந்தைகளுக்கு வைத்த பெயர்
கிரிக்கெட் ஜம்புவான்களின் தூக்கத்தை கெடுத்த பெயர்

இப்படி சொல்லகிட்டே போகலாம்...

நான் 7ம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆன பெயர் முதல் மேட்சில் விளையாண்டதைப்பற்றி அப்போது ஸ்போர்ட்ஸ் என்ற தமிழ் விளையாட்டு பத்திரிக்கை வரும் அதில் வரும் சச்சினின் அனைத்து போட்டோக்களும் எனது விடுதி பெட்டியின் முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கும்... 
 

அப்போதெல்லாம் மேட்ச் பார்க்கும் போது சச்சின் இருக்கிறாரா என்று பார்த்து தான் மேட்ச் பார்க்கவே ஆரம்பிப்பேன்... சச்சின் முன் முறையாக ஓப்பனிங் இறங்கி நியுசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் ( சரியாக நினைவில்லை) அடித்த போது அன்று விடுதியில் நான் ஆடிய ஆட்டம் இன்றும் மறவா..

இந்தியா பாகிஸ்தான் உலக கோப்பையில் அக்தரின் பந்துகளை கிழி கிழி என்று கிழிப்பார் அந்த மேட்சை சென்னை அண்ணாசாலை வசந்த் அன்கோ முன்னாடி நின்று ஒவ்வொரு அடிக்கும் நான் போட்ட ஆட்டம் இன்று மறவா..

சச்சின் களத்தில் இருந்தால் அந்த மேட்சை எத்தனை வேலைகள் இருந்தாலும் அந்த மேட்சை பார்ப்பது தான் என் முதல் வேலை அந்த அளவிற்கு சச்சின் என்ற பெயர் மனதில் நீங்க இடம் பெற்றது. இந்திய அணியின் கேப்டனாக அவர் பணியாற்றிய போது அதிக மேட்ச்களில் வெற்றி பெறவில்லை என்றாலும் அப்போது நாங்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடிய கொண்டாட்டம் தனி...

நண்பர்களிடையே கிரிக்கெட் என்று பேச்சை எடுத்தால் நிச்சயம் அங்கு சச்சின் இருப்பார். இந்தியாவில் அவரின் பெயரை உச்சரிக்காத ஊர் இருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு...

உலகின் மிகச்சிறந்த பவுலர்கள் எல்லாம் கடந்த 25 ஆண்டுகளாக சச்சினிடம் தலை குனிந்தார்கள் என்றால் அது நிதர்சன உண்மை... எவ்வளவு  பந்து வீச்சாளர்கள் சச்சினை திட்டி கொடுத்த பேட்டிக்கெல்லாம் அவர் என்றும் பதில் அளித்ததில்லை அவரின் மட்டை மட்டுமே இதுவரை பதில் சொல்லி உள்ளது..

ரேடியோவில் கமெண்ட்ரி கேட்டதில் இருந்து இன்று LED டிவியில் மேட்ச் பார்க்குவரை சச்சினின் ஒவ்வொரு ஆட்டத்தையும் மிக மிக ரசித்துள்ளேன்.. முதன் முதலாக இலங்கைக்கு எதிராக செஞ்சுரி போட்ட போது அன்று 1000 சரவெடி வாங்கி எங்கள் ஊரில் வெடித்து கொண்டாடிய அனுபவம் இன்றும் நினைவில்.



சென்னையில் இருந்த போது ஒரு டெஸ்ட் மேட்ச் கடைசிநாள் ஆட்டம் காலை 11 மணிக்கு மைதானம் செல்லாம் என்றும் எப்படியும் சச்சினை இன்று பார்த்து விடலாம் என்று பத்திரிக்கை பாஸ் எல்லாம் வாங்கி ஓடோடி சென்றேன் ஆனால் அன்று 10.45க்கே ஆட்டத்தை முடித்து விட்டார் சச்சின்.. அப்புறம் பெவிலியன் பக்கம் நின்று ரொம்ப தூரத்தில் ஸ்ரீநாத்துடன் பேசிக்கொண்டு இருக்கும் சச்சினை பார்த்தேன்.. ஆனால் அங்கு பாத்ததைவிட எனது பெட்டிக்குள்ளேயே தினமும் பார்த்தது தான் எனக்கு பிடித்திருந்தது..


இந்தியா உலககோப்பையை வென்றதும் சச்சினை தூக்கி வைத்துக்கொண்டு சக வீரர்கள் ஆடிய ஆட்டம் ஸ்டேடியத்தில் நடந்தாலும் இங்கு பாரில் அவரின் போட்டோவை வைத்து ஆடிய ஆட்டம் என்னைப்போல பல நண்பர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

ஒரு பெண்ணை லவ்வும் போது அது உனக்கு என்னை விட வயது குறைவு என்றது உடனே என் மானீசீக குரு சச்சின் கூட தன்னைவிட வயது மூத்த பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளார் அவர் வழியில் நானும் செல்ல இருக்கிறேன் என்று அவரின் பெயரை உபயோகித்து பிட்டு போட்ட காலங்களும் உண்டு..



நமக்கு சச்சின் மீதும் அவரின் ஆட்டத்தின் மீதும் தீராத காதல் இன்றும் உண்டு என்றால் அது தான் உண்மை அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தது நம்மை போன்ற ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும் ஆனால் அவரின் பழைய கிரிக்கெட் ஆட்டங்கள் தான் நமக்கும் நம் சந்ததியினருக்கும் வரப்பிரசாதம்...

எத்தனை காலங்கள் ஆனாலும் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சின் என்ற இந்த மாபெரும் சாதனையாளனின் பெயர் உலக அரங்கில் கிரிக்கெட் உள்ள காலம் வரை ஒலிக்கும்... ஒலிக்கும்....


7 comments:

  1. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்.இதை யாரும் மறுக்க முடியாது.எத்தனை முறை வீழ்ந்தாலும் மறுபடியும் அதே வேகத்துடன் வந்தவர்.அவருடைய ஆட்டத்தை பார்த்து கற்றுக் கொண்டவர்கள் பல பேர்.பிரைன் லாரா உடன் ஒப்பிட்டு பேசினார்கள்.ஆனால் லாராவே தன்னைவிட திறமையானவர் சச்சின் என்றார் லாரா.அதுதான் சச்சின்.

    ReplyDelete
  2. அருமையான வீரரை பற்றிய அழகான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சச்சின் ஒரு சகாப்தம்...

    ReplyDelete
  5. சச்சின் ஆடிய காலம் என் வாழ்வில் பொற்காலம்

    ReplyDelete
  6. சச்சின் ஆடிய காலம் என் வாழ்வில் பொற்காலம்

    ReplyDelete