Wednesday, December 26, 2012

அஞ்சறைப்பெட்டி 27/12/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பாலியல் பலாத்காரம் இது தான் இன்று பெட்டிக்கடை முதல் தலைமை செயலகம் வரை உச்சரிக்கும் வார்தை எதோ டெல்லியில் மட்டும் இது நடைபெற்றது என்று சொன்னால் முட்டாள்தனம் இன்றும் கிராமப்புறங்களில் தினமும் நடக்கும் ஒன்று தான். பெண்கள் துணிந்து புகார் கொடுக்க முடியாத நிலை தான் கிராமப்புறத்தில் தண்டனைகள் அதிகம் ஆனால் மட்டுமே குற்றங்கள் குறையும்...
  ................................................................

இதுவும் பாலியல் வன்முறை தான்....

இந்த வார இறுதியில் கொடிவேரி அணைக்கு சென்று இருந்ததேன்.. கூட்டம் இல்லை சில காதலர்கள் இருந்தனர்.. ஒரு 8 பேர் இருக்கும் எல்லாரும் நிதானம் இழந்து நின்று இருந்தனர்.. அப்போது ஒரு காதலர்கள் அவர்களை தாண்டி வரும் போது நான் மீன் வாங்கிக்கொண்டு இருந்தேன் அந்த 8 பேரும் பேசிய வார்த்தைகள் இருக்கே அந்த இளம் பெண் ஓடிவந்து மீன் கடையில் நின்று விட்டது என்றால் அவர்கள் பேசிய வார்த்தை கற்பழிப்பை போல் இருந்தது... மீண்டும் அந்த பெண்ணை நோக்கி அவர்கள் பேச அந்த மீன் கடை பெண் நல்லா பேசறீங்கப்பா இப்படியே உங்க அம்மா, பொஞ்சாதி, அக்கா தங்கச்சிங்க இருந்தா நீ மாத்தி அவ மாத்தி பேசுங்க தூக்கி வெச்சு கொஞ்சுவாங்க என்று ஒரு போடு போட்டது.... பக்கத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக சேர அடுத்த 5 நிமிடத்தில் அங்கு இருந்து அவர்கள் எல்லாம் எஸ்கேப்...

இதுவும் பாலியல் வன்முறைதான் என்பேன்... அந்த இடத்தில் யாரும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் அங்கும் நடக்க வாய்ப்புள்ளது.. டெல்லியில் மட்டுமல்ல இங்குள்ள சுற்லுலா தளங்களில் காதலனை தாக்கிவிட்டு காதலியை மானபங்க படுத்தி விசயம் நிறைய இடங்களில் கேள்விப்பட்டு இருக்கோம்...
..........................................................................................

அடுத்த கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் ஆம் ரயில்வே கட்டண உயர்வு மிக விரைவில் வரும் என மத்திய அரசு மட்டுமல்ல வாக்களித்த பொதுமக்களும் விலை ஏற்றத்தை மட்டுமே எதிர்பார்க்கமுடியும்...
................................................................................................

2012ம் ஆண்டு சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது மின்சாரம் தான் தமிழகத்தில் மின்சாரம் இல்லாமல் படும் பாடு சொல்லித்தெரிவதில்லை. தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு கொடுத்தால் போதும் இருண்ட பூமி வெளிச்ச பூமியாகிவிடும்.

2013ம் ஆண்டு சந்திக்கபோகும் பிரச்சனை மின்சாரத்துடன் சேர்த்து தண்ணீரும் இருக்கும் என எதிர்பார்க்கலாம் வருணபகவான் கருணை காட்டவில்லை எனில் நிச்சயம் தண்ணீர் பிரச்சனை ரொம்ப இருக்கும்.

...............................................................................................

 
இதய நோயாளிக்கு ஆல்கஹால் சிகிச்சை அளித்து அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர்.
 
இங்கிலாந்தில் பிரிஸ்போல் பகுதியை சேர்ந்தவர் ரொனால்டு ஆல்டோம் (77). இதய நோயாளியான இவர் ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்.
 
இந்த நிலையில் அவருக்கு திடீரென மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது நெஞ்சுவலி குணமாகவில்லை. மாறாக இதயதுடிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.
 
உடனே டாக்டர்கள் இந்த சிகிச்சை நிறுத்திவிட்டு மாற்று சிகிச்சை அளித்தார். அதன்படி இதயத்துக்குள் ஒரு குழாயை செலுத்தி ரத்தக் குழாய்களில் எத்தனாலை செலுத்தினார்.
 
இதைத்தொடர்ந்து எத்தனாலில் உள்ள ஆல்கஹாலால் இதயத்தில் உள்ள தேவையில்லாத தசைகள் அழிக்கப்பட்டது. இதையடுத்து இதயம் சீராக இயங்க தொடங்கி ஆல்டோம் குணமடைந்தார்.
 
இருந்தும் ஆஸ்பத்திரியில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
...............................................................................................

2012ம்முடிவுறும் தருணம் இது அனைவரும் 2013ம் ஆண்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் எனக்கு பல ஏற்றங்களைக்கொடுத்தது புதிதாக வாகனம் மற்றும் இடம் வாங்கும் அளவிற்கு முன்னேற்றம் இருந்தது. வரும் 2013 ம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் முக்கிய ஆண்டாக இருக்கப்போகிறது இந்த வருடம் சுயதொழிலில் ஈடுபடலாம் எனவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் நிச்சயம் வழி பிறக்கும் என துணிந்து என் முயற்சியில் சுயதொழிலை தொடங்க இருக்கிறேன் நண்பர்களாகிய உங்கள் ஆதரவோடு...
...............................................................................................

2013 ம் ஆண்டில் அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ என் அன்பு வாழ்த்துக்கள்....



தகவல்
 
 
சூரிய மண்டலத்தில் 'இசோன்' என்ற வால் நட்சத்திரம் கடந்த செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அது சூரிய மண்டத்தில் இருந்து விலகி சூரியனை நோக்கி வருகிறது.
 
இது அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் சூரியன் அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. எக்ஸ்ரே டெலஸ்கோப் மூலம் மட்டுமே காண முடியும். இந்த நட்சத்திரம் சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக இது கணிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தகவலை லண்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் மைனர் பிளானட் சென்டர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 20-ம் நூற்றாண்டில் ஹேல்-பாட் என்ற வால் நட்சத்திரம் அதிகம் ஒளிரும் தன்மையுடன் திகழ்ந்தது. 1997-ம் ஆண்டில் இதை பார்க்க முடிந்தது.
 
இது சந்திரனுக்கு போட்டியாக அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் சக்தி கொண்டது. எனவே, இதை 'சூப்பர் வால் நட்சத்திரம்' என அழைக்கின்றனர்.
 
அதை தொடர்ந்து இந்த 21-ம் நூற்றாண்டில் முதன் முறையாக அதிகம் ஒளிரும் வால் நட்சத்திரமான 'இசோன்' தெரிய உள்ளது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக இணையதளம் மின்மினி தேசம் என்ற பெயரில் எழுதி வருகிறார். இதில் இவர் எழுதும் சிறு, குறு மற்றும் குட்டி கதைகள் நம் மனதை கொள்ளை கொள்கின்றன...

http://minminidesam.blogspot.in/
தத்துவம்

ஆயிரம் பேர்களை வென்றவனைவிட தன்னைத்தானே வென்றவனே பெரிய வீரன்.

நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள்… தொடர்ந்து முன்னேறுங்கள்!

யாரையும் தீயவன் என்று கூற வேண்டாம்; நீ நல்லவன், இன்னும் நல்லவனாய் இரு என்று சொல்லுங்கள்.

4 comments:

  1. பல தலவல்களை தாங்கி வந்திருக்கிறது பெட்டி..

    ReplyDelete
  2. 2013 ம் ஆண்டில் அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ அன்பு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. சுருளி அருவி பகுதியிலும் பெண்கள்..அருவருக்கத் தக்க முறையில் தாக்கப்படுகின்றனராம்..பேச்சாலும்..சிலசமயம் .வன்முறையாலும்!

    ReplyDelete
  4. பாலியல் வன்முறை குறித்த தங்கள் கருத்துக்கள் நிதர்சனம்! பொது இடங்களில் இப்படி பெண்களை தாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது! அனைத்து தகவல்களும் அருமை நன்றி!

    ReplyDelete