உள்ளுரில் இருந்து உலகம் வரை........
காவிரி நீர் தமிழக
மக்களுக்கு கானல் நீராகவே போகின்றது.. இந்த உலகில் தமிழனுக்கு உதவுபவன்
எவனும் என்று தான் சொல்ல வேண்டும் போல.. மத்திய அரசில் இருந்து
நீதியரசர்கள் வரை எல்லோர் கேட்டும் இன்னும் தண்ணீர் வரவில்லை என்பது தான்
நிதர்சனம்..
முன்னேயே பின்னால் என்ன வேண்டும் என்று யோசித்து பல திட்டங்களை தீட்டி இருந்தால் இன்று தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் அடுத்தவர்களை கையேந்த வேண்டிய நிலை நிச்சயம் இருக்காது...
முன்னேயே பின்னால் என்ன வேண்டும் என்று யோசித்து பல திட்டங்களை தீட்டி இருந்தால் இன்று தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் அடுத்தவர்களை கையேந்த வேண்டிய நிலை நிச்சயம் இருக்காது...
........................................................... .....
தமிழகத்தில் எந்த ஊரில் சாலைகள் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்று கேட்டால் நிறைய பேர் நிறைய இடங்களை சொல்வார்கள் ஈரோடு மாவட்டத்துக்காரர்களை கேட்டால் யோசிக்காமல் கோபிசெட்டிபாளையம் என்பார்கள் கோபியிலும் கோபியை சுற்றி செல்லும் சாலைகள் மற்றும் அங்குள்ள வீதிகளிலும் அனைத்து சாலைகளும் நேர்த்தியாகவும் இது நம்ம ஊர்தானா என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.
கோபி சத்தி மெயின்ரோடு நல்ல அகலமாகவும் அந்த அளவிற்கு தரமானதாகவும் இருக்கின்றது கோபியில் இருந்து சத்திக்கு 25 நிமிடத்தில் சென்று விடலாம் அந்த அளவிற்கு தரமானதாக உள்ளது. இதே போல் தமிழகம் எங்கும் சாலைகள் இருந்தால் பயணாளிகளாகிய நமக்கு இதை விட வேறு என்ன சந்தோசம் இருக்கும்.
............................................................ ..............................
சமீபத்தில் நடந்த என்கவுண்டருக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம் ஆனால் ஒருவரின் உயிரை எடுப்பதற்கு அதிகாரம் நம் கையில் இல்லை மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதியையே நாம் நான்கு வருடங்கள் குற்றங்கள் உண்மையாக நிருபனம் ஆன பின் தான் தூக்கிலிட்டோம்... ஒருவரின் தவறுக்கு மரணம் தான் தண்டணை என்பதை என் மனம் ஏற்கவில்லை...
............................................................ .............................. ......
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு இதை நாம் என்ன தான்
எதிர்த்தாலும் நிச்சயம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசும் அதன்
கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தாச்சு இதைப்பற்றி கருத்து சொல்லி என்ன
பயன்... எல்லாம் நம் தலை விதி என்று இதையும் கடக்க வேண்டியது தான்...
........................................................... .............................. ......
இந்த செல்போன் கம்பெனிக்காரனுக
மாதிரி யாரும் கொள்ளை அடிக்க முடியாது. கோவையில் இருந்து கேரளாவிற்கு
செல்லும் போது சிக்னல் எல்லாம் தானாகவே ரோமிங்காக மாறிவிடுகிறது அதற்கு
இன்கம்மிங் ஒரு கட்டணம் அவுட்கோயிங் ஒரு கட்டணம் என்று பிடுங்குகிறார்கள்.
மொபைலில் நெட் வேலை செய்யவில்லை என்று போன் செய்து கேட்டால் சார் இங்க
ஆக்டிவ் ஆகவேண்டு மெனில் என லொட்டு, லொசுக்கு என ஒவ்வொரு கட்டணமாக
உயர்த்துகின்றனர்... ஏற்கனவே நம்மகிட்ட நிறைய பிடுங்குகின்றனர் இதில்
ரோமிங் போய்ட்டோம்ம சொத்தை எழுதி கொடுத்துட்டுத்தான் வரனும் போல...
......................................................... .............................. ........
......................................................... .............................. ........
வைகோவிடம் இருந்து மீண்டும் ஒருவர் வெளியேறி மாற்றுக்கட்சியில் தஞ்சம் இதுவரை வெளியேறியவர்கள் எல்லாம் தாய்க்கழகத்திற்கு சென்றனர் ஆனால் தற்போது வெளியேறிய நாஞ்சில் சம்பத் மட்டும் அதிமுகவிற்கு தாவிஉள்ளார். இப்போது தான் அரசியல்வாதி ஆகி உள்ளார். வைகோவிடம் மீதி உள்ள நபர் என்றால் அது கணேசமூர்த்தியாகத்தான் இருக்கும் கூட இருந்த அனைவரும் சென்று விட்டனர் இனி மீதி இருப்பவர்களையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற அரசியல் இல்லாமல் இருக்கிறார். இனி இவர் கட்சியை நிறுத்தி வெற்றி பெற்று தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிப்பெதெல்லாம் நடந்தால் அதிசியம் தான். போராட்ட குணம் உள்ளருக்கு அரசியல் குணம் இல்லாது போனது வருத்தம் தான்..
......................................................... .............................. ........
இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான உதவி ஆசிரியை, தனது மாணவர்களுக்கு கேஎப்சிக்கு கூட்டிச் சென்று சிக்கன் வாங்கிக் கொடுத்து, இன்ன பிற உணவுகளை வாங்கிக் கொடுத்து அவர்களைத் தாஜா செய்து பின்னர் செக்ஸ் வைத்துக் கொண்டு தற்போது சிக்கியுள்ளார்.
வகுப்பு இல்லாத சமயங்களில் இந்த மாணவர்களுடன் அவர் செக்ஸ உறவு கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவரது பெயர் எம்மா வெப். திருமணமானவர். தான் விரும்பிய மாணவர்களுக்கு முதலில் செக்ஸியான எஸ்எம்எஸ்களை அனுப்பி வலையில் இழுப்பார். பின்னர் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து பின்னர் வீட்டுக்குக் கூட்டி்ச சென்று செக்ஸ் வைத்துக் கொள்வார்.
2 குழந்தைகளுக்குத் தாயான இவர், ஒருமுறை ஒரு மாணவனிடம் உறவு வைத்துக் கொண்டபோது உனது குழந்தை எனது வயிற்றில் வளருகிறதே என்று கூறி கிண்டலும் அடித்தாராம்.
தகவல்
செவ்வாய் மண்ணில் 'கார்பன்' ..
செவ்வாய் கிரக ஆராய்ச்சில் இன்னும் ஒரு முக்கிய திருப்பமாக அந்த கிரகத்தின் மண்ணில் கார்பன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புதான். இந்த ஆய்வை வைத்து அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு உறுதியாக வந்து விட முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கியூரியாசிட்டி விண்கலமே நடத்திய மண் மாதிரி ஆய்வின்போது, மண்ணில் கார்பன் மூலக்கூறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கார்பன், உயிரினங்களின் உருவாக்கத்தை நிர்ணயிக்கும் கார்பனா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது. மேலும் இந்தக் கார்பன் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளது.
ஒரு வேளை இந்த கார்பன், செவ்வாய் கிரக மண்ணிலேயே இயற்கையாகவே இருந்தது என்றால் நிச்சயம் உயிரினம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வர முடியும் என்றும் நாசா கூறுகிறது.
உயிரினம் வாழ மொத்தம் மூன்று விஷயங்கள் அவசியம். முதலில் தண்ணீர், சக்தி ஆதாரம் மற்றும் கார்பன். இது போக சல்பர், ஆக்சிஜன், பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகியவையும் கூட தேவை.
கடந்த நான்கு மாதமாக செவ்வாய் கிரகத்தில் நிலை கொண்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம், பல்வேறு வகையான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அதில் முக்கியக் கண்டுபிடிப்பாக தற்போது கியூரியாசிட்டி போய் இறங்கியுள்ள பகுதியில் ஒரு காலத்தில் அபரிமிதமான தண்ணீர் இருந்தது என்பதுதான்.
மேலும் அங்குள்ள நீர்ப்படுகையில், தாதுக்களும் அடங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக Scribblers என்ற பெயரில் துரை என்பவர் எழுதி வருகிறார். இவருடைய பதிவுகளில் சிறுகதை, தியானம், இலக்கியம் என பல முகுங்களில் பல அற்புதமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.. மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது இவரின் சிறுகதை...
http://blog.scribblers.in/
http://blog.scribblers.in/
தத்துவம்
பிரச்னைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.
எதை முடியாது என்று அதிகம் பேர் சொல்கிறார்களோ அதை துணிந்து செய் வெற்றி உனதே....
** எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பாக்க மாட்டமா (தண்ணீர்,மின்சாரம், அன்னிய முதலீடு )
ReplyDelete** வை.கோ.விடம் ஒரு கேள்வி நீங்க நல்லவரா? கெட்டவரா?
**செவ்வாயில் ப்ளாட் போட ஆரம்பிச்சுட்டாங்களா?
**தத்துவம் சூப்பர்
கோபி பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. பலமுறை நானே பார்த்து வியந்திருக்கிறேன்.
ReplyDeleteகமகம அஞ்சறைப்பெட்டி! :-)
செவ்வாக்கிரகத்தில் உயிரினமா ?
ReplyDeleteஅறிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
நிறைய தகவல்கள்! நிறைவான தகவல்கள்! நன்றி!
ReplyDelete