Wednesday, December 12, 2012

அஞ்சறைப்பெட்டி 13/12/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

சாலைகளில் சிக்னலில் நிற்கும் போது 20 விநாடி இருக்கும் போதே ஒருவர் அவர் தான் அறிவாளி என்ற நினைப்பில் இருசக்கர வாகனத்தை வேகமெடுத்தார். தீடீரென வந்த சைக்கிளால் நிலைகுலைந்து தானே குப்புற விழுந்தார் அருகில் சென்ற நான் தேவையா சார் இன்னும் கொஞ்சம் செகன்ட் இருந்தால் பறக்கலாம் இல்ல என்றேன்... ஒன்னும் அடிபட சார் நோ ப்ராபளம் என்று எஸ் ஆவதிலேய குறியா இருந்த மனுசனை அடுத்த சிக்னலில் தலைகவசம் போடவில்லை என்று அமுக்கியது காவல்... பக்கத்தில் செல்லும் போது இன்னிக்கு யாரு மூஞ்சில முழிச்சேன்னே தெரியல இப்படி சிக்கிட்டேன் என்று புலம்பினார்... இப்படித்தான் நம்மாளுக தவறை அவர்கள் மேல் வைத்து விட்டு பக்கத்தில் இருப்பவனை திட்டுவது...

  ................................................................

சமீபத்தில் கும்கி, பரதேசி இரண்டு திரைப்பட பாடல்களையும் கேட்டு மெய் மறந்திருக்கிறேன் அதுவும் கும்கியில் மச்சான் பாடலை தினமும் ஒரு 20 முறையாவது கேட்கிறேன் அந்த அளவிற்கு மூழ்கிவிட்டேன்.. இதுவரை எந்த படமும் முதல் காட்சி இன்று வரை பார்த்ததில்லை முதன் முதலாக கும்கியை பார்க்க போகிறேன்...

..........................................................................................

நீங்க உங்க செல்போன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் எனில் உங்க பில்லை மாதந்தவறாமல் செக் செய்யுங்க நமக்கே தெரியாம நேஷனல் ரோமிங், இன்டர்நேஷனல் ரோமிங் என ஒவ்வொன்றுக்கும் அமைதியாக காசு புடுங்கறானுக. இத்தனை நாள் கண்டுக்காம இருந்த நான் இப்ப மெயில்க்கு பில்வரும் போது தான் இதை எல்லாம் நான் கேக்கவில்லை என்று கட் செய்தேன்.. பணம் புடுங்கறதுல எவ்வளவு விவரமாக இருக்கானுகன்னு பாருங்க..

................................................................................................

பேருந்தில் தொங்கி செல்லும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இது சரியான ஒன்று தான் ஆனாடல காலை மாலை வேளையில் ஏன் தொங்கிச்செல்கின்றனர் என்றால் பேருந்து அதிகம் இல்லாத காரணத்தால் தான். எதோ ஒரு பேருந்தில் மட்டும் தொங்கிச்செல்வதில்லை எல்லா பேருந்துகளிலும் தொங்கிச்செல்கின்றனர் இதற்காக காலை வேளைகளில் பேருந்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.  எனக்குத் தெரிய எங்கள் வழித்தட்ங்களில் நான் படிக்கும் போது சென்ற பேருந்து தான் இன்றும் செல்கிறது காலை மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்தை அதிகரிக்க வேண்டும் பேருந்தை அதிகரிக்கும் போது கூட்டம் குறையும் குறைவான கூட்டத்தில் தொங்கிச்சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்...
9 மணி வேலைக்கு 8.30க்கு பஸ்நிலையம் வந்தால் தொங்கித்தான் செல்லவேண்டும் கொஞ்சம் முன்னமே புறப்பட்டு தொங்கி செல்வதை நாம் தவிர்க்கலாம்... அரசு காலை வேளைகளில் அதிக பேருந்துகளை இயக்கி கூட்ட நெறிசலில் தொங்கி செல்வதை தவிர்க்கலாம்...


...............................................................................................

ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடிய அளவிற்கு எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் பாரதியின் பிறந்தநாளை கொண்டாடவில்லை நம் எதற்கொடுத்தாலும் பாரதியின் பாடலை மேற்கோள் காட்டுகிறோம் ஆனால் அவரின் பிறந்தநாளில் அவரின் அற்புட பாடல்களை அனைவருக்கும் தெரியும்படி செய்ய மறுக்கிறோம்.. மீடியாக்கள் அவர்கள் வருமானத்தை மட்டுமே பார்க்கின்றனர் யாரும் சேவை செய்வதில்லை அட்லீஸ்ட் தகவல்களையாவது பரிமாறலாம். ரஜினி 63 என்று நான்கு பக்கத்துக்கு செய்தியை கொடுத்த ஆனந்தவிகடன் பாரதிக்கு என்று ஒரு பக்கம் கூட ஒதுக்காதது என்னைப்போன்றவர்களுக்கு வருத்தம் தான்...

...............................................................................................

கூடங்குளம் அனு உலையைப்பற்றி எதற்கும் கவலைப்படாத கேரளாவிற்கு மின்சாரம் தரப்போகிறார்கள் என்று அறிவித்து இருக்கிறார் கேரள அமைச்சர். ஆனால் நம்ம ஊரில் தயாரிக்கப்படும் மின்சாரம் நமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்று விழி பிதுங்க வேண்டி உள்ளது.. நம்ம வீட்டில் சமையல் செய்து நம்க்கே சோறு போட மறுக்கிறார்கள் என்ற கதை தான் இது... அரசியல் சுய இலபாத்திற்காக தமிழகத்தின் பொருளாதராமும், நிறைய மக்களின் வாழ்வாதாரத்துக்கம் தேவையான மின்சாரத்தை வைத்துக்கொண்டே தர மறுக்கிறது மத்திய அரசு...

...............................................................................................

பனாமா நாட்டிலிருந்து பார்சலோனா வந்த விமானத்தில், மிடுக்காக உடையணிந்த, நவநாகரிக பெண் ஒருவர் வந்திறங்கினார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பெண்ணின் உடமைகளை சோதனையிட்டபின், அவளது உடலையும் சோதனையிட்டனர்.

அப்போது, அவளது மார்பகத்தில் புதிதாக தையல் போட்ட தழும்புகளும், தழும்புகளில் இருந்து ரத்தம் கசிவதையும் கண்டு, காரணம் கேட்ட போது, மார்பகங்களை கவர்ச்சியாக வெளிப்படுத்துவதற்காக, சமீபத்தில் ஆபரேஷன் செய்துக் கொண்டதாக அந்த பெண் கூறினார்.

அவளது பேச்சில் சந்தேகப்பட்ட போலீசார், அவளது வாக்குமூலம் சரிதானா? என்பதை கண்டுபிடிக்க ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்
சென்று டாக்டர்களை வைத்து பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில், அறுவை சிகிச்சை மூலம் தனது இரு மார்பகங்களிலும் 'கொக்கைன்'போதைப்பொருளை அவள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது'.

இதையடுதது, அந்த பெண் மீது போதைப்பொருள் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவளது மார்பகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  1 கிலோ 380 கிராம் எடையுள்ள 2 பாக்கெட்  கொக்கைன்-ஐ பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

தகவல்
 
12.12.12 என்ற அபூர்வ தேதி கொண்ட நேற்று, பலர் நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றுக்கு நாள் குறித்திருந்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், தனது மரணத்தை தற்கொலையின் மூலம் தேர்ந்தெடுத்த ஒருவர், அதற்கான முகூர்த்த நேரமாக 12.12.12, பகல் 12.12 மணியை நிர்ணயித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் நரோரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா பால். தனது பண்னையில் பூச்செடிகளை வளர்த்து, வியாபாரம் செய்து வந்தார். மனைவி, 2 மகள்கள், மகன் ஆகியோர் கொண்ட அழகான குடும்பம் இருந்தும், இவர் மனதில் ஓர் வினோத ஆசை தோன்றியது.

மனிதர்களின் மரணத்தை கடவுள் தான் நிர்ணயம் செய்கின்றார் என்று எல்லோரும் கூறுகின்றார்களே..! நமது மரணத்தை நாமே நிர்ணயித்துக் கொண்டால் என்ன? என்ற தாந்தோன்றி எண்ணம் இவரது மனதில் உதயமானது.

டெல்லி அருகே உள்ள காசியாபாத்திற்கு சென்ற கிருஷ்ணா பால், பிரதாப் விகார் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள 80 அடி உயர குடிநீர் தொட்டியின் ஏணியில் 'மளமள' வென்று தாவி ஏறினார். காலை 10 மாணியளவில் தண்ணீர் தொட்டி மீது ஏறிய அவர், ஒரு பையில் கற்களையும் ஒரு கயிறையும் கொண்டு சென்றார்.

தனது மரண வாக்குமூலத்தை கூட அவர் 12 பக்கங்களில் எழுதியிருந்தார். அந்த வாக்குமூலத்தை 12 செட் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த அவர், தண்ணீர் தொட்டியின் உச்சியில் ஏறி நின்றார். அங்கிருந்த படி, தனது தற்கொலை வாக்குமூலத்தில் ஜெராக்ஸ் பிரதிகளை கீழே வீசி எறிந்தார்.

அவரது தற்கொலை வாக்கு மூலத்தில் கிருஷ்ணா பால் கூறியிருந்ததாவது:-

கடவுளின் விருப்பப்படி 12.12.1972 அன்று நான் பிறந்தேன் ஆனால், என் பெற்றோர்கள் என்னை பள்ளியில் சேர்க்கும் போது என்   பிறந்த தேதியை 10.10.1972 ஆக பதிவு செய்து விட்டனர். கடவுளின் விருப்பத்திற்கு மாறாக, கடவுளுக்கே சவால் விடும் வகையில், கடவுளின் கையில் உள்ள என் மரண விதியை, என்கையில் நான் எடுத்துக் கொண்டேன்.

என் மரணத்தின் மூலம் நான் சத்திய யுகத்தை வரவழைக்கப் போகிறேன்' இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது. தனது கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்ட அவர், 80 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில், கத்திக் கொண்டே பாய்வதற்கு முற்பட்டார்.

கீழே நின்றிருந்தவர்கள், இதைக் கண்டு பதற்றமடைந்தார்கள் அவர்களில் சிலர், கிருஷ்ணா பாலை காப்பாற்ற ஏணிப்படிகளில் ஏறி மேலே செல்ல முயற்சித்தனர். பையில் கொண்டு போயிருந்த கற்களால், தன்னை காப்பாற்ற வந்தவர்கள் மீது அவர் எறியத்தொடங்கினார். பொது மக்களில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விஜய் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வரும்படி கூறினர். 'கடவுளுக்கே சவால் விட்டு இந்த முடிவை எடுத்தவன் நான். நீங்கள் என்ன? கடவுளைவிட பெரியவர்களா? உங்கள் முடிவுக்கு நான் கட்டுப்பட மாட்டேன்.

என் முடிவை யாராலும் மாற்ற முடியாது என்று கூறியபடி, சரியாக காலை 11.05 மணிக்கு தண்ணீர் தொட்டிக்குள் குதித்தார், கிருஷ்ணா பால். அவரை பின்தொடர்ந்து, போலீசாரும் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து, அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வரும் வழியிலேயே கிருஷ்ணா பாலின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். 'அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார்கள். ஆனால், அது பலிக்கவில்லை. கிருஷ்ணா பால் மனநோயாளியாக இருக்கலாம்' என்று காசியாபாத் போலீஸ் சூப்பிரண்டு ஷிவ் ஷங்கர் சிங் யாதவ் நிருபர்களிடம் கூறினார்.

'வினாதி காலம் - விபரீத புத்தி' என்பது 12.12.12 விவகாரத்தில் பலித்து விட்டது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக இணையதளம் மகாத்மா காந்தி பற்றிய செய்திகள் தமிழில் பகிர்ந்துள்ளனர். அவர் வாழ்வில் நடந்த பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.. காந்தியை பற்றி அறிய விரும்பவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய இணையதளம்...
http://gandhiworld.in/tamil/news.html
தத்துவம்

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல. உழைக்கும் நேரம்.

உழைப்பு எந்த மனிதனையும் ஏமாற்றுவதில்லை. மனிதன்தான் உழைப்பை ஏமாற்றுகிறான்.

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.

6 comments:

  1. தத்துவம் ரொம்ப நல்லா இருக்கு....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. இரண்டு மாதமாக நானும் கும்கி பாடலைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மெய்மறந்து கேட்க வைக்கிறது சில குரல்கள் ....
    அவர்கள் எவ்வளவு கவலைப் படுகிறார்களோ நான் படம் நல்லா வரணும்னு கவலைப்படறேன்..
    ரஜினியால் வரும் விளம்பர இலாபம் பாரதியால் வராதே.
    தத்துவம் அருமை

    ReplyDelete
  3. கும்கி பாடல்கள் மிக அருமை.காந்தி பற்றிய பதிவுகள் படிக்க வேண்டும். நேற்று ஏன் தான் ரஜினி பிறந்த நாளை அப்படி மீடியாக்கள் கொண்டாடியதோ தெரியவில்லை. ரஜினியே விரும்பி இருக்க மாட்டார்.

    ReplyDelete
  4. உங்க எல்லா பதிவும் சூப்பர். இந்த தத்துவங்கள் ரொம்ப ரொம்ப சூப்பர்.
    விபரித புத்தி விநாச காலே. கரெக்ட்.

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete