Wednesday, November 27, 2013

அஞ்சறைப்பெட்டி 28.11.2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கடந்த 10 நாட்களாக கோவையில் உள்ள CBSE, ICSE பள்ளிகளுக்கு படையெடுத்தேன் ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் வாங்குகின்றார்கள் அங்கு என் மகனுக்கு சீட் கிடைக்குமா என்ற பல அழைந்தேன். நிறைய அறிந்தேன் முக்கியமாக பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை விட அதிகமாக தர பெற்றோர்கள் இங்கு நிறைய இருக்கின்றனர் என்பது தான் மறுக்க இயலாத உண்மை. சரி அத விடுவோம் என் கதைக்கு வருகிறேன். என் மகனை இந்த இரண்டு syllables சேர்த்துவது என்று எங்க வீட்டு செயற்குழுவும், பொதுக்குழுவும் முடிவெடுத்து விட்டனர். எனது நிலையான சமச்சீர் அரசுபள்ளி என்ற வாதம் வெட்டி வாதம் ஆகிடுவிடும் என்பதால் நானும் பொதுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்து விசாரிக்கும் வேளையில் தீவிரமானேன்...

இரண்டு பள்ளியில் பையன் நேர்முகத்தேர்வுக்கு சென்றான் இன்னும் ரிசல்ட் வரவில்லை இன்று மதியம் தான் ரிசல்ட் என்பதால் காத்திருக்கிறேன் எந்த பள்ளி என்று.

.......................................

நாட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை நாட்டை ஆள நினைக்கும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் பல பிரச்சனைகள், பக்கத்து வீட்டுக்காரருக்கும், எதிர்த்த வீட்டுக்காரருக்கும் குப்பை பிரச்சனை, பங்காளிகளுக்கு வாய்க்கா வரப்பு பிரச்சனை, குழந்தைகளுக்கு படிப்பு பிரச்சனை, ஆபிஸ் போன வேலை செய்ய பிரச்சனை என பல பிரச்சனைகள் இத்தனை பிரச்சனைய சொல்ற எனக்கு மகனை எங்கு சேர்த்துவது என்ற பிரச்சனை...

.......................................


ஏற்காடு இடைத்தேர்தல் தான் இன்று களைகட்டுகிறது தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியியும் போட்டி போட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றனர். தேர்தல் முடிந்ததும் ஏற்காட்டின் நிலையை நினைச்சுபார்த்தால் சிரிப்பு தான் பலமாக வருகிறது. சமீபகாலங்களில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி தான் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. இங்கும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புவோம்... என்ன இருந்தாலும் இடைத்தேர்தல் வரும் தொகுதி மக்கள் ரொம்ப கொடுத்து வெச்சவங்கதான் என்பதை மறக்க இயலாது.



.......................................


தமிழ்நாட்டின் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 11 இடங்களில் போட்டியிடுவதை பாராட்டித்தான் ஆகவேண்டும். வெற்றியோ தோல்வியோ கவலையில்லாமல் டெல்லி சென்று அங்கு போட்டியிடுவது மிக பெருமைக்குரிய விசயம்.. கேப்டனுக்கு நம்ம அட்வான்ஸ் வாழ்த்தை சொல்லி வைப்போம்.

.......................................  



காதலனுக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி ரூ.120 கோடி மதிப்புள்ள தீவு ஒன்றை பரிசளிக்கிறார்.

பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (38). ஆஸ்கார் விருது பெற்றவர். இவரது காதலன் ஆலிவுட் நடிகர் பிராட் பிட். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர். 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் பிராட் பிட் தனது 50–வது பிறந்த நாளை வருகிற டிசம்பர் 18–ந்தேதி கொண்டாட உள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு தனது காதல் பரிசாக ஏஞ்சலினா ஜோலி இருதய வடிவிலான ஒரு சிறிய தீவை பரிசளிக்க உள்ளார். அது அமெரிக்காவின் பெட்ரா போஸ்ட்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு பிராட் பிட்டுக்கு மிகவும் பிடித்தமான கட்டிட கலை நிபுணர் பிராங்க் லியோட் ரைட் வடிவமைத்த 2 பிரமாண்ட பங்களாக்களையும் கட்டியுள்ளார்.

இவற்றின் மதிப்பு ரூ.120 கோடியாகும். பெட்ரா போஸ்ட்ஸ் பகுதிக்கு மேன்ஹட்டன் நகரில் இருந்து 15 நிமிடத்தில் செல்ல முடியும். இப்பகுதி இயற்கை எழில் நிறைந்தது.

 
தகவல்


பூமியின் துணைக்கோளான நிலவை ஆராய அடுத்த மாதம் பச்சை நிறத்திலான முயல்வடிவ ரோபோவை (ரோவர்) அனுப்ப சீனா திட்டமிட்டு வருகிறது. யூடு என்றழைக்கப்படும் இந்த ஆராய்ச்சியே சீனாவின் முதலாவது ஆளில்லா ஆய்வு என்று கூறப்படுகிறது.

நிலவில் தரையிறக்கப்படும் இந்த ரோவர் கருவியானது ரெயின்போ குடா என்றழைக்கப்படும் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு செய்யும். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் விரைவில் முடிவடையுமானால் அடுத்த மாத மத்தியில் இந்த ரோபோவை நிலவில் இறக்க சீனா திட்டமிட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ள சீனா, 2007-ம் ஆண்டு நிலவை சுற்றிவந்து ஆராய சாங்கெ என்ற விண்கலத்தை அனுப்பியது.

விண்வெளியில் சீனா கட்டிவரும் வரும் விண்வெளி ஆய்வுக்கூடத்திற்கு கடந்த ஜூன் மாதம் 3 விண்வெளி வீரர்கள் சென்றனர். அவர்கள் சென்ற விண்கலத்தை ஆய்வுக்கூடத்தில் வெற்றிகரமாக இணைத்தனர். பின்னர் 15 நாட்கள் அங்கு தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர்.

ரஷ்யா, அமெரிக்காவிற்கு அடுத்து மூன்றாவது நாடாக விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிய நாடு என்ற பெருமையை சீனா பெறுகிறது.



தத்துவம்


தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.

23 comments:

  1. 120 கோடி ரூபாயில் பரிசா!?

    ReplyDelete
    Replies
    1. ஆமாக்கா... கிடைக்க பெற்றவன் கொடுத்து வெச்ச மகராசன்...

      Delete
  2. செயற்குழுவும், பொதுக்குழுவும் முடிவு எடுத்த பின் மாற்ற முடியுமா என்ன...?

    சீனா விண்வெளி தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தல...

      Delete
  3. மிக்சிங் மிக்சிங்.... உங்க பையனுக்கு நல்ல ஸ்கூல்ல அட்மிசன் கிடைச்சுடும் அண்ணா... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.

      Delete
  4. மிகுந்த நாட்களுக்கு பிறகு வலைப்பூ படிக்கிறேன்..... அருமை சதீஷ் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் நலமா... ரொம்ப நாள் ஆச்சு உங்களைப்பார்த்தும்...

      Delete
  5. நல்ல ஸ்கூலில் சீட் கிடைச்சு படிக்க வைக்க வாழ்த்துக்கள்.தீவே பரிசா கொடுத்து வைத்தவர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  6. நாங்களும் ஒரு காலத்தில் எங்கள் மகளுக்கு தில்லியில் பள்ளி அப்ளிகேஷன் வாங்குவதற்கும், அட்மிஷன் வாங்குவதற்கும் படாதபாடு பட்டிருக்கிறோம்...:))

    http://kovai2delhi.blogspot.in/2011/04/2_27.html

    அந்த அனுபவம் சில வரிகளில் இங்கே...

    உங்க மகனுக்கு நல்ல பள்ளியில் அட்மிஷன் கிடைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல அனுபவமுங்க... எனக்கும் இப்போது நிறைய அனுபவம்...

      Delete
  7. இடைக்காலக் காதலனுக்கு 120 கோடி! :)))

    பையன் பள்ளி முடிவாகி விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. இல்ல சார்... இன்னும் முடிவாகல...

      Delete
  8. ஜஸ்ட் 120 கோடி தானா? இதையெல்லாம் தங்கமணிகள் ஃபாலோ பண்ணா, எவ்ளோ நல்லா இருக்கும்!

    ReplyDelete
  9. ஸ்கூல் ரிசல்ட் என்னாச்சுன்னும் சொல்லுங்கய்யா!

    ReplyDelete
  10. வாழ்வில் ஒரு முறை... ஸ்கூல் அட்மிஷன்.... என் அனுபவத்தை தனிப்பதிவாகவே எழுதலாம்... என்னாச்சுன்னு பின்னூட்டத்தில் சொல்லவும்...

    ReplyDelete
    Replies
    1. இல்லப்பா நான் நினைச்ச பள்ளி கிடைக்கல... சோ சர்ச்சிங் அதர் ஒன்...

      Delete
  11. பள்ளியில் அட்மிஷன்.... இது பெரிய அக்கப்போர் தான் இப்போது....

    முன் போல கொண்டு போய் ஒக்கார வச்சுட்டு வந்துட முடியாது!

    த.ம. 5

    ReplyDelete
  12. அங்கே கொட்டிக்கொடுக்கும் நன்கொடையில் பத்தில் ஒரு பகுதியை அரசு பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்க எல்லா பெற்றோரும் முன்வந்தால் நிச்சயம் அரசுப்பள்ளிகளும் ஒருநாள் அகிலத்தில் உயரும்..

    ReplyDelete
  13. // சீட் கிடைக்குமா என்ற பல அழைந்தேன்.//

    எளுத்துப் பிலை உண்ணை விட்டு போகளையே ராஷா !

    கதைப்போட்டி எல்லாம் நடத்திக் கிழிப்பதற்கு முன்னால் ஒரு 80 பக்க நோட் வாங்கி , “அழைந்தேன் அல்ல அலைந்தேன் என்பது தான் சரி என 500 முறை எழுது. இது உனக்கு நீயே தரும் தண்டனையா இருக்கட்டும் அப்பம் தான் தேன் தமிழை கையாளும் போது கொஞ்சமேனும் மரியாதை வரும். தர்மபுரியால் யாராவது இப்படி எழுதிப் பார்த்திருக்கிறாயா ?

    தமிழின் சிறப்பு ”ழ”கரத்தையே இப்படி சிதைத்தால் இந்த ரா மற்றும் எல்லாம் உன்கிட்ட என்ன பாடுபடுமோ.


    என்ன உன்னை நம்ம கடை பக்கமே கானோம். ஓசியில் எதுவும் கிடைக்காதது காரணமா ?

    ReplyDelete
  14. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

    ReplyDelete