Wednesday, November 20, 2013

அஞ்சறைப்பெட்டி 21.11.2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பெங்களூர் ATM கொள்ளை சம்பவம் பொது மக்களிடையே மிகவும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது. இனி பணம் எடுக்க செல்பவர்கள் கூட ஒருவரை அழைத்து செல்லனும் போல குறிப்பாக பெண்கள். இந்த கொள்ளை சம்பவத்துக்கு முக்கிய காரணம் உள்ளே என்ன நடந்தாலும் வெளியே தெரியாத அந்த ATM அமைப்பு தான். ஒரு ஆள் மட்டும் நிற்கவும் உள்ளே ஆள் நின்றால் வெளியே தெரிவது போல அமைத்திருக்கலாம். உள்ளே ஒருவர் நுழைந்தவுடன் கதவு தானாக லாக் ஆகிவிடுவது போல நிறைய ATM இருந்தாலும் அது சரியாக வேலை செய்வதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ATM பாதுகாவலர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம் அவர்கள் வயதானவர்களாகத்தான் அதிகம் இருக்கின்றனர் அதனால் அவர்களை குறை சொல்லி பயன் இல்லை. வங்கிகள் ஆட்களை நியமிக்கும் போது திடகார்த்தமான ஆட்களை நியமிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். நம் பணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் வங்கிகள் அதை நாம் பெறும் போதும் பாதுகாப்பாக பெற வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும்... இப்படி நிறைய சொல்லி கிட்டே போகலாம் ஆனால் இது போல கொள்ளைகள் குறைவாக இருக்குமா என்பது கேள்விக்குறி... அதற்கு மிக முக்கிய தீர்வாக கடுமையான தண்டனைகள் கொடுப்பதன் மூலம் ஓர் அளவு கட்டுப்படுத்தலாம்.

எதற்கும் பணம் எடுக்க போகும் போது பாதுகாப்பான இடங்களை தேர்ந்தெடுங்கள் மிக முக்கியமாக மக்கள் நடமாடும் நேரங்களில் செல்லுங்கள்..


.......................................


காமன்வெல்த் மாநாட்டிற்கு சென்ற பிரதமர்களில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். மாநாட்டுக்கு போணமா ஊரைச்சுற்றி பார்ப்பவர்கள், மாநாடு சிறப்பாக நடைபெற்றது என்று ஜால்ரா தட்டுபவர்கள் இவர்களை எல்லாம் கடந்து வடபகுதியில் தனது பயணத்தை மேற்கொண்டு மக்களிடம் பேசி அவர்கள் கருத்தை அறிந்த ஒரே பிரதமர் இவர் தான் அதற்காகவே இவரை நிச்சயம் பாராட்டவேண்டும்..

நம் பிரதமரும் இதைச் செய்திருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்க மிக வசதியாக இருந்திருக்கும் அந்தவாய்ப்பை நழுவிவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்...

.......................................

சமீபத்தில் திருக்கொள்ளிக்காடு சென்றிருந்தேன் காவிரி டெல்ட்டா மாவட்டங்களுக்கு இதுவரை இரு முறை தான் சென்றிருக்கிறேன். தஞ்சையில் இருந்து மன்னார்குடி வழியாக சென்றிருந்தேன். தஞ்சை, மன்னார்குடி, திருக்கொள்ளிக்காடு வரை செல்லும் போது தான் தெரிஞ்தது காவிரியின் மகிமை சாலையில் இருபுறமும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என நெற்பயிர்கள் அவ்வப்போது காரை நிறுத்தி ரொம்ப ரசித்தேன் இப்பகுதிகளை அம்மூட்டு அழகு.. கொடுத்து வைச்சவர்கள் அந்த ஏரியாவில் இருப்பவர்கள். வழியில் இருக்கும் ஊர்கள் எல்லாம் நிறைய இடங்களில் பழமை மாறாமல் இருந்தது.



வடுவூர் பறவைகள் சரணாலாயம் நாங்கள் சென்ற காலைப்பொழுதில் ரம்மியமாக இருந்தது. சில்லென்ற சாரல் மழையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பறவைகள் நிறைய வித்தியாமாக இதுவரை பார்க்காத பறவைகள் எல்லாம் இருந்தது மனதை நிறைய கொள்ளை அடித்தது அந்த இடம்.



நிச்சயம் செல்லவேண்டிய ரசிக்கவேண்டிய ஊர்கள் அங்கு நிறைய இருக்கு.....


.......................................


இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் குழந்தை பிறந்த பின்னர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் குட்டி இளவரசர் ஜார்ஜை பேணி பாதுகாப்பதில் அக்கறையாக உள்ளார்.

முதன்முதலாக லண்டனில் உள்ள ஒரு பள்ளி விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்ட அவர் இன்று காலை காரில் வந்து இறங்கினார். கருப்பு நிற குட்டை பாவாடை அணிந்து 'சிக்' என்று வந்திறங்கிய இளவரசியை தங்களது கேமராக்களில் சிறைபிடிக்க நிருபர்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

அவரை வரவேற்ற ஒரு சிறுமி இளவரசிக்கு பூங்கொத்தை அளித்தபோது, அதை பெற்றுக்கொள்ள அவர் குனிந்தார். அந்த நேரம் பார்த்து வீசியடித்த சுழற்காற்றில் குட்டை பாவாடை விரிக்கப்பட்ட குடை போல மேல்நோக்கி பறந்தது.

இந்த அபூர்வ காட்சியை படம் பிடிக்க போட்டோ கிராபர்களுக்குள் கடும் போட்டோ போட்டியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சுதாரித்துக்கொண்ட கேட் மிடில்டன் பாவாடை மேலும் உயர்ந்து விடாதபடி இடது கையால் சரிசெய்தார்.

லண்டன் ஊடகங்களில் மட்டுமின்றி, சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கூட இங்கிலாந்து இளவரசியின் குட்டை பாவாடை காற்றில் பறந்த செய்திதான் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ளது.

.......................................  


அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பனி பிரதேசமான அண்டார்டிகாவில் கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐஸ் கட்டிகளுக்கு அடியில் ஏதோ ஒன்று மெதுவாக கொழுந்து விட்டு எரிவதை அறிந்தனர்.

அதைத்தொடர்ந்து ரேடார் மூலம் அப்பகுதியில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பனிக்கட்டிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் எரிமலையின் சிகரம் தெரிந்தது. அதற்குள்ளே குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை இருப்பது தெரிய வந்தது.

இந்த எரிமலை ஒருநாள் திடீரென வெடித்து சிதறும். இதனால் தற்போது விட 1000 மடங்கு வெப்பம் வெளிப்பட்டு அதன் மூலம் பெரிய அளவில் ஐஸ் கட்டிகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பல லட்சம் காலன் அளவிலான அந்த தண்ணீரால் ஏராளமான ஏரிகள் நிரம்பும் என்றும் தெரிவித்தனர். இதன் மூலம் கடலின் நீர் மட்டம் பெருமளவில் உயர்ந்து தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
 
தகவல்



 கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

பிறக்கும் போதே சுவாசக் கோளாறுடன் இருந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர். கடந்த 12ம் தேதி குழந்தையின் நிலைமை மோசமடைந்ததால் அதை காப்பாற்ற வெகு நேரம் போராடிய டாக்டர்கள் அது இறந்துவிட்டதாக தெரிவித்து, இறப்பு சான்றிதழும் வழங்கி டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினர்.

சோகத்தில் மூழ்கிப்போன பெற்றோர் அதை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தபோது உடலில் சிறு அசைவு ஏற்பட்டதை உறவினர் ஒருவர் கவனித்தார்.

இதனையடுத்து, அவசர அவசரமாக அன்ஹுய் மாகாண அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் தூக்கிக்கொண்டு ஓடினர்.

உடனடியாக, உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. உயிருடன் உள்ள குழந்தை இறந்து விட்டதாக சான்றிதழ் தந்த டாக்டர் மற்றும் நர்ஸ் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதை குழிக்கு போகும் வழியில் உயிர் பிழைத்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தத்துவம்







காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!

ஜெயிக்கிறவன் எவனும் பேச மாட்டான்! பேசாம இருக்குறவன் எவனும் ஜெயிக்க மாட்டான்

கஷ்டம் என்றால் என்னவவென்று தெரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறேன்! 

10 comments:

  1. /// குட்டை பாவாடை காற்றில் பறந்த செய்திதான் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ளது.//

    ரொம்ப முக்கியமான செய்தி!

    ReplyDelete
  2. இந்த ஏடிஎம் செய்தி மிக அதிர்ச்சியானது..குட்டை பாவடை செய்தியும் அதிர்ச்சியானது!! அதை விட அதிர்ச்சி சீனக்குழந்தைக்கு நேர்ந்த கதி...நல்ல வேளை கொஞ்சமா மூச்சு விட்டு பிழைச்சுடுச்சு...

    ReplyDelete
  3. வணக்கம்
    பதிவு பற்றி விரிவாக்கம் அருமை வாழ்த்துக்கள்...நண்பரே..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அஞ்சறைப் பெட்டி அருமையான செய்திகளின் தொகுப்பு..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. கொடூரமான சம்பவத்தை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது...!

    ReplyDelete
  6. ///அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.//

    இந்த மாதிரி செய்தி பதிவு போடும் போது இதயம் பலவீனம் ஆனவர்கள் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை போடவும் இதைபடித்து பின் பயமாக இருக்கிறதுப்பா tha.ma 4

    ReplyDelete
  7. எல்லாம் மிக்ஸ் செய்த கலவை... ஒன்னொன்னும் ஒவ்வொரு வெரைட்டி

    ReplyDelete
  8. அஞ்சறைப் பெட்டி சுவை...

    குட்டைப் பாவாடை செய்திதான் நாட்டிற்கு முக்கியமானதாகும்.

    ReplyDelete
  9. சற்றே இடைவெளிக்குப் பிறகு அஞ்சறைப் பெட்டி.... பகிர்வுக்கு நன்றி. !

    ReplyDelete