உள்ளுரில் இருந்து உலகம் வரை........
ஐப்பசியில் அடை மழை என்பது இந்த வருடம் கொஞ்சம் பழிக்கிறது போல அங்காங்கு மழை பெய்து நிலத்தை குளிரவைக்கிறது. எப்படியோ தீபாவளி அன்று மழை பெய்தால் தீ விபத்துக்கள் வெகுவாக குறையும் ஆதலால் வரவேற்போம் மழையை...
.......................................
மோடி பேசிய பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்தது என்பது பாதுகாப்பு அலட்சியத்தை காட்டுகிறது. யாராக இருந்தாலும் சரியான பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அந்த மாநிலத்தின் கடமை. காழ்ப்புணர்ச்சியால் பாதுகாப்பை குறைத்தது அல்லது அலட்சியமாக இருந்தது கண்டிக்கத்தக்கது. இனியும் இது போன்ற தவறுகள் நடக்கா வண்ணம் இருக்கவேண்டும். ஒரு முறை போனால் கிடைக்காது உயிர் அது தலைவர்களது உடலாக இருந்தாலும் பொதுமக்கள் உடலாக இருந்தாலும் அதற்ககாவாவது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்...

தமிழகத்தின் அனைவரும் ஆவாலாக பார்ப்பது ஏற்காடு இடைத்தேர்தலைத்தான் அந்த அளவிற்கு மக்களுக்கு தேவையானவற்றை உடனே செய்து கொடுப்பாதல் மக்கள் இடைத்தேர்தலை விரும்ப ஆரம்பித்து விட்டனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அப்போது நடக்கும் இடைத்தேர்தலில் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்பது அவர்களுடைய ஆவலாக இருக்கின்றது இப்போதும் அப்படித்தான். இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி நிச்சயமாக்கப்பட்ட ஒன்று..
.......................................
சென்னையில் புதிய பஸ்களில் இலைச்சின்னம் வரைந்துள்ளனர் இதனால் அவர்களது சின்னத்தை மக்களுக்கு விளம்பரப்படுத்துகின்றனர் என பலர் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். என்னைய பொறுத்தவரை பொதுக்கள் பேருந்தில் இடம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்களோ தவிர படத்தை பார்த்து யாரும் பேருந்தில் ஏறுவதில்லை. பொதுமக்களுக்கு இந்த பேருந்தால் பயன் இல்லையா என்றால் கோர்ட்டுக்கு சென்றவர்கள் எல்லாம் நிச்சயம் பதில் சொல்ல தயங்குவர்...
.......................................
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற்
கொள்ள அமெரிக்காவின் 'நாசா' மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை
அனுப்பியுள்ளது.
அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை
போட்டோ எடுத்து அனுப்பி வைத்தது. காற்றின் வேகம், தட்ப வெப்ப நிலை போன்ற
வற்றை அளவீடு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.
கியூரியா சிட்டி
விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பில் ஆங்காங்கே நகர்ந்து மாதிரிகளை
சேகரித்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள கொலந்தர்
என்ற பெரிய மலையின் வடமேற்கு பகுதியில் ஏறி அங்குள்ள மண் மாதிரிகளை எடுத்து
ஆய்வு செய்து வருகிறது.
15 முதல் 20 டிகிரி செங்குத்தான உயரத்தில் 2
முதல் 6 மீட்டர் வரை ஏறியுள்ளது. அது 40 மீட்டர் உயரம் ஏறி அங்குள்ள மண்
மற்றும் பாறைகளை வெட்டி எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்.
கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சுமார் 10 ஆண்டுகள் தங்கியிருந்து ஆராய்ச்சி நடத்துகிறது.
..............................
இணைய நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மனம் திறந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இணைய நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மனம் திறந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
தீபாவளி அன்று அனைவரும் மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளித்து குடும்பத்துடன் கொண்டாடுங்கள் தீபாவளியை...
தகவல்
நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள எழில் மிகும் கிராமம்,
ர்ஜுக்கான்.
இதர பெரிய வசதிகள் ஏதுமற்ற இந்த கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஒர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும் மட்டும் உண்டு.
இந்த உரத்தொழிற்சாலையையும், இப்பகுதியில் வளமான மண் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என நம்பி 1900-ம் ஆண்டு வாக்கில் வெறும் 300 பேர் இங்கு குடியேறினார்.
தற்போது சுமார் 3500 மக்கள் வசிக்கும் இந்த கிராமம் ஆண்டில் 6 மாதங்கள் (மழை மற்றும் குளிர் காலம்) சூரிய ஒளியை சந்திக்க முடியாதபடி சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்தன.
இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் மலையை கடந்து செல்ல வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் இருந்த இங்கு வந்த மார்ட்டின் ஆண்டர்சன் என்பவர் இந்த கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்க ஒரு வழியை கண்டுபிடித்தார்.
சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதை பின்தொடர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இயங்கும் ராட்சத நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதி உச்சியில் அவர் அமைத்தார்.
8 1/2 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்த கிராமத்தின் மையப் பகுதியான சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது.

தத்துவம்
பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.
ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.