Wednesday, October 9, 2013

அஞ்சறைப்பெட்டி 10.10.2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........




மீண்டும் புயல் வருகிறது தமிழகத்துக்கு அவ்வளவு அபாயமில்லை என்று தினமும் ஒரு செய்தியாக வருகிறது.. உண்மைய சொன்னால் எங்க ஊரில் கடந்த சில நாட்களாக வெய்யில் பட்டைய கிளப்புது. மழை வந்தால் சந்தோசமாகத்தான் இருக்கும். மழை வரனும், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பனும், விவசாயம் செழிப்பாக இருக்கனும் இது தான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும்... பார்ப்போம் என்ன நடக்குது என்று...

.......................................

நிறைய முறை எழுதி இருந்தாலும் நான் அடிக்கடி செல்லும் வழித்தடம் என்பதால் மிக மிக ரசிப்பேன் நான் மட்டுமல்ல கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அனைவரும் நிச்சயம் ரசிக்கவேண்டிய பாதை அது.. கோபியில் இருந்து அத்தாணி செல்லும் பாதையும், கோபியில் இருந்து கள்ளிப்பட்டி செல்லும் பாதை, கோபியில் இருந்து பங்களாப்புதூர் செல்லும் இந்த 3 பாதைகளையும் தான் நான் மிக ரசிப்பது.. எவ்வளவு மனச்சுமை இருந்தாலும் அந்த பாதைகளில் சொல்லும் 20 நிமிடத்தில் நம் மனது சுத்தமாக ரிலாக்ஸ் ஆவது நன்றாக தெரியும்... கோபி போன நிச்சயம் இந்த பக்கம் போய்ட்டு வாங்கப்பா...



 .......................................

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி  முதல்வர் சுரேஷ், இவரை மாணவர்கள் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றது. இந்த செய்தியை படித்ததும் நிச்சயம் அந்த தவறு  செய்த மாணவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இந்த சம்பவத்திற்கு தரும் தண்டைனயால் மற்ற மாணவர்களுக்கு பாடமாக அமையவேண்டும்.

இன்று கல்லூரியில் சேரும் முன்பே எப்படியாவது கேம்பசில் வேலை வாங்கிட வேண்டும் என்று வெறியுடன் படிக்கும் மாணவர்கள் நிறைய கேள்விப்பட்டு இருக்கோம். கேம்பசில் வேலை கிடைக்காமல் வெளியே வந்து 5000ற்கு வேலைக்குச்செல்லும் பல மாணவர்கள் இருக்கின்றனர் இன்றும். இந்த மாதிரி தவறுகள் எதோ சில மாணவர்கள் செய்வதால் பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை இன்னும் உணரவேண்டும் மாணவர்கள்...

.......................................


இந்த வருடம் ஏற்காடு சட்டமன்றத்தில் வசிக்கும் மக்களுக்கு ஏறுமுகம் தான் எல்லா சாலைகளும் செப்பனிட்டு இருப்பர், எல்லா குடிநீர் குழாய்களிலும் தண்ணிர் வரும், மின்சாரம் தடைபடாது, தேவைகளை அனைத்தையும் உடனே செய்து கொடுப்பர் எல்லாம் இடைத்தேர்தல் படுத்தும் பாடு  இந்த முறை திமுக முன்னதாகவே களம் இறங்கி உள்ளதால் ஏற்காடு வாக்காளர்களுக்கு கொண்டாட்டம் தான்....

.......................................  

மோடி, மோடி எங்கும் இந்த பேச்சுதான், 10 வருடம் காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவிசயப்பொருட்களின் விலை ஏற்றம், தமிழக மீனவர்கள் தாக்கல், கூடங்குளம், முல்லை பெரியார் என நிறைய தீர்க்கப்படாத பிரச்சனைகள், மோடிக்கும் இணையதளங்கள், மீடியாக்களால் பொது மக்களிடமும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இது மோடி வெற்றிக்கான அறிகுறி என்று கூட சொல்லாம்.. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

..............................

தமிழக கட்சிகள் மத்திய ஆட்சிக்கு கூட்டணிக்கு அச்சாரம் இன்னும் தெளிவாக அறிய இயலவில்லை இங்கு மும்முனை போட்டி இருக்குமா அல்லது வழக்கம் போல் இரு முனை போட்டியா என்று குழப்பம் எல்லோரையும் போல எனக்கும் உள்ளது ஏற்காடு தேர்தலுக்கு பின் முழுதாக தெரியும்... அதற்கு பின்தான் இங்கு யாருக்கு 40க்கு 40 என்ற விவாவதம் களைகட்டும்..



..............................



குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடும்.

கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.

கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.

தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது.

இந்நிலையில், தேர்வில் 'பாஸ்' ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான 'வேஃபர்' வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.

2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



 
தகவல்


உலகின் ஏல நிறுவன வரலாற்றில் முதன்முறையாக ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அரிய வகை வைரம் ஒன்று 3 கோடி டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 180 கோடி ரூபாய்) ஏலம் போனது.

பிரபல சோத்பை ஏல நிறுவனம் இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம்விட போவதாக அறிவித்த போது 2 கோடியே 80 லட்சம் மற்றும் 3 1/2  கோடி டாலர்களுக்கு இடையே இது விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹாங்காங்கில் நேற்று 6 நிமிடம் நீடித்த இந்த ஏலத்தின் போது போன் மூலம் ஏலம் கேட்ட ஒருவர் இறுதியாக 238.68 ஹாங்காங் டாலர்களுக்கு இந்த வைரத்தை தனதாக்கி கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வைர சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட போது இந்த வைரம் 299 கேரட் எடை கொண்டதாக இருந்தது. பட்டை தீட்டி இந்த வடிவத்திற்கு வந்துள்ள அதன் தற்போதைய எடை 118.28 கேரட் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தத்துவம்

உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு

அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே

தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே

 

 


22 comments:

  1. ம்... இங்கு மழையே இல்லை...

    சாக்லேட் அழியட்டும்... நல்லது...

    தத்துவங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தல...

      Delete
  2. அஞ்சறைப்பெட்டியின் சுவையில் மணத்தில்
    மகிழ்ந்தேன்.பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா...

      Delete
  3. புயல் வரும் முன்னே எங்க ஊருல தினமும் மழை கொட்டி தீர்க்குது.அதுவும் சரியா 5 மணிக்கு வந்துடுது. எங்க வீடு பள்ளிக்கு கிட்டக்க இருக்குறதால என் பசங்களுக்கு பிரச்சனை இல்ல. ஆனா, தூரத்திலிருந்து வரும் மற்ற பிள்ளைகளுக்கு!? இந்த மழை நைட்டு 10 மணிக்கு மேல பெய்ய ஆரம்பிச்சு விடிகாலை 5 மணிக்கு நிறுத்திக்கப்படாதா!?

    ReplyDelete
    Replies
    1. மழை வரலீனா அதுக்கு தனியா திட்டு வந்தா இப்படி பொழம்பல் வேற ஏனக்கா நீங்க...

      Delete
  4. சாக்லேட் கிடைக்காவிட்டால் கூட காதல் காணாமல் போய்விடும் நிலை வந்துவிடக் கூடாதுன்னுதான் காதல் சொல்லித் தரப் போகிறார்களாமே ..என்ன புரியலையா ...க்ளிக்குங்க புரியும் >>.http://jokkaali.blogspot.com/2013/10/blog-post_10.html

    ReplyDelete
  5. மோடியின் மோடி வித்தைக்கு பலன் கிடைக்குதான்னு பார்ப்போம்.

    >>
    மாணவர்களுக்கு கல்வியோடு நல்லொழுக்கமும் கத்து கொடுக்கனும். அவங்களை மார்க் மெஷினா வளர்த்து வருவதின் பலந்தான் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, பொர்ஜரிலாம்.
    >>
    வைரம் கண்ணை பறிக்குது. 180 கோடியா!? இதை விட காஸ்ட்லியான பொருட்களை மட்டுமே வாங்குறதா முடிவு பண்ணி இருக்கேன்.

    >>
    2020ல சாக்லேட்டுக்கு டிமாண்டா?! நான் இப்பவே வாங்கி ஃப்ரிட்ஜ்ல ஸ்டாக் வச்சுக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மோடிக்கு பலன் கிடைக்குமக்கா...

      Delete
  6. எங்க ஊருல ரெண்டு நாளா தூறல் போட்டுகிட்டு இருக்குது! சாக்லெட் தகவல் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. அன்பின் சங்கவி - அஞ்சறைப் பெட்டி அருமை - பல்வேறு தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. பிற கட்சிகள் எல்லாம் பல ஆண்டுகளாக 'மோடிவித்தை' காட்டிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், (நரேந்திர) மோடியே வந்து அந்த வித்தையைக் காட்டட்டுமே!

    ReplyDelete
  9. Really it makes me feel like reading an interesting book Sathish ! Keep it up ! Looking forward for more and more Write-up!

    ReplyDelete
  10. அறுசுவை உணவுபோல அற்புதமாய் இருக்கிறது உங்கள் அஞ்சறைப் பெட்டி.

    ReplyDelete
  11. சந்தரபாபு நாயுடுவின் புதிய வெர்ஷன்தான் இந்த மோடி.


    இணையம் உபயோகிப்பவர்கள் மட்டும் ஒட்டு போடலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் மட்டும்தான் மோடிக்கு வெற்றி


    காங்கிரஸ் கட்சி மேல் எல்லோருக்கும் மிக வெறுப்புதான் அதனால் அதற்கு மாற்று தேடுகிறார்கள் அந்த மாற்றுதான் மோடி என்று புரோமோட்டு செய்கிறார்கள் மேலும் பிஜேபிக்கு இந்திய அளவில் பல மாநிலங்களில் செல்வாக்கு இல்லை என்பதுதான் உண்மை. மோடி வெற்றி பெற மக்களை ஆதரவை பெறுவதை விட பல மாநிலங்களில் உள்ள செல்வாக்கு மிகுந்த முதல்வரின் ஆதரவைப் பெற்றால்தான் முடியும்

    ReplyDelete
  12. எங்க ஊர் பக்கம் எல்லாம்..
    புயல் உருவானா தான் மழையே..
    சிலபல துன்பங்கள் அதில் அடக்கம் என்றாலும்..
    சிறுதுளி மழைநீரை நோக்கி
    வான் நோக்கி பார்த்து பார்த்து
    பிடரி சுளுக்கிப்போன கூட்டமல்லவா...

    ReplyDelete
  13. அனைத்துமே சொத்துக்கள் அற்புதம்

    ReplyDelete
  14. அனைத்தும் அருமை...
    அஞ்சறைப் பெட்டி எப்போதும் போல்....

    ReplyDelete