உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மாணவர்களின் போராட்டத்தில் மிக பாராட்டுக்குறியது
அவர்களின் அறவழிப்போராட்டம் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இத்தனை
மாணவர்கள் வீதியில் வந்து போராடுவதை பார்க்கும் போது நான் இப்போது மாணவனாக
இல்லை என்ற ஏக்கம் என் மனதில் ஏறக்குறைய நிறைய பேர் மனதில் நிச்சயம்
இருக்கும். அதுவும் இந்த போராட்டத்தில் மாணவிகளின் கூட்டம் பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது..
கோவையில் ஏறக்குறைய அனைத்து கல்லூரிகளும் விடுமுறை விட்ட நிலையில் மாணவர்களின் போராட்டத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் மாணவக்கண்மணிகள் கலந்து கொண்டார்கள் என்பதில் தெரிகிறது அவர்களின் உறுதியான மனநிலை..
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் மிகப்பெரிய அளவில் நடக்கும் போராட்டம் இந்த ஈழப்போராட்டம் தான் மாணவர்கள் ஈழப்போராட்டத்தோடு சேர்ந்து நம் மீனவர்கள் தாக்கப்படுவதையும் முன்னிறுத்த வேண்டும் என்பது என் ஆவா...

........................................................... .....
இத்தாலி நாட்டினர் கேரள மீனவர்களைத்தாக்கி
விட்டு சென்றதை கண்டிக்கும் நம் பாரத பிரதமர் 40க்கு 40 கொடுத்து முதன்
முதலில் ஆட்சி பீடத்தில் அவரை பிரதமாராக ஏற்றிய தமிழன் மீன்பிடிக்க
சென்றபோது 500க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றபோது இன்றளவும்
கண்டிக்காதது வருந்தத்தக்கது...
............................................................ ..............................
............................................................ .............................. ......
........................................................... .............................. ......
வேலைக்கு போகும் பெண்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும்
இல்லத்தரசிகள் ‘லிப்ஸ்டிக்’ பூசாமல் வெளியே செல்வதில்லை. உதட்டில்
லிப்ஸ்டிக் பூசியே செல்கின்றனர்.
அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று
வெளியாகி உள்ளது.
அதன்படி லிப்ஸ்டிக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத்தது. ஆகவே, மனித உடல்களிலும் இது நடக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத்திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளையில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட டிரைக்ளோசன் அளவு அதிகம். ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் இந்த ரசாயனத்தின் அளவு மிக குறைவாகவே சேர்க்கப்படுகிறது என அவற்றின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.
இருந்தாலும் லிப்ஸ்டிக் போடும் பெண்களே உஷாராக இருங்கள். லிப்ஸ்டிக் போட்டால் மட்டுமே அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள். இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

......................................................... .............................. ........
கோடை
வெய்யிலை சந்திக்க இருக்கிறோம் அதே போல் தண்ணீர் பிரச்சனையுயைம்
சந்திப்போம் போல இருக்கிறது.. எல்லா ஆறு குளம், குட்டைகள் எல்லாம் தண்ணீர்
குறைந்து வறண்டு போய் இருக்கிறது.. காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம்
தண்ணீர் தேடி ஊருக்குள் வர ஆரம்பித்து விட்டன. இனி நாம் தண்ணீருக்கு எங்கே
போவது என்று தான் புரியாத புதிராக உள்ளது....
தகவல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கலை
எப்படி சமாளிப்பது? என்பது குறித்து பிரதிநிதிகள் சபையின் அறிவியல் கமிட்டி
கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாசா விண்வெளி அமைப்பின் தலைவர்
சார்லஸ் போல்டன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இதுதொடர்பாக நடந்த
விவாதத்தில் பிரதிநிதிகள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்துக்கள்
வருமாறு:-
நியூயார்க் நகரை நோக்கி
வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கல்லை எப்படி சமாளிப்பது என்பது
குறித்து ஆலோசிக்க வேண்டும். விண்கல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய
வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.
பூமிக்கு
அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித விண்கற்களை நாசா கண்காணித்து
வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய விண்கற்களும் அடங்கும். இந்த
விண்கல்லானது மனித நாகரிகத்தை அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.
10,000-க்கும்
மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் விண்கற்களில், 50 மீட்டர் விட்டமுடைய
வெறும் 10 சதவிகித விண்கற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து
அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் விண்கற்கள் பூமியை தாக்குவதை சமாளிப்பது
குறித்து முடிவெடுக்கவேண்டியது அனைத்தும் அமெரிக்காவை சார்ந்து
இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர்
விட்டமுடைய விண்பாறை ஒன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி
வந்தது. அந்த விண்பாறையானது ஆகாயத்திலேயே குண்டுகளை வீசி தகர்க்கப்பட்டது.
அப்போது அப்பகுதி வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன. இதில்
1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அதன்
பிறகு மிகப்பெரிய விண்கல் ஒன்று சமீபத்தில் பூமியிலிருந்து 17,200 மைல்
தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண்கலங்கள் படமெடுத்தன.
பூமியை
தாக்கும் விண்கற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை
மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர்
நோக்கிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
தத்துவம்
காணும் கனவை நிஜமாக்கி காட்டுபவர்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க சிறந்த வழி மெளனம். பல பிரச்சனைகளை தவிர்க்க மிக சிறந்த ஆயுதம் புன்னகை.