Monday, July 11, 2011

சபாஷ்.... அம்மாவின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்...


முதல்வராக ஜெ பதவி ஏற்றபின் முந்தைய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்தார். உடனே உடன்பிறப்புகள் எல்லாம் ஏழைகளின் திட்டம், நல்ல திட்டம் கருணாநிதி கொண்டு வந்ததற்காகவே ரத்து செய்து விட்டனர் என்று கூக்குரலிட்டனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஏழைகளுக்கான திட்டத்தை ரத்து செய்யவில்லை அத்திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக நிறைய  இருக்கின்றன அதைக் களை எடுத்து ஏழை மக்களுக்கு உதவும் வகையில் புதிய காப்பீட்டுத்திட்டம் உருவாக்கப்படும் என்றார் சொன்னபடி இன்று உருவாக்கி விட்டார். அவர் கூறியபடியே ஏழைகள் பயன்படும் வகையில் அற்புதமாக இருக்கிறது புதிய காப்பீட்டுத் திட்டம்.

புதிய காப்பீட்டுத் திட்டம்: 

முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்ச மருத்துவச் செலவாக நான்கு ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு ரூ.1 லட்சமும், குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்காண்டுகளில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ.4 லட்சத்துக்கான மருத்துவச் செலவினைப் பெற இயலும்.

முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 642 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தன. இந்த சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு இப்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்: மருத்துவ சிகிச்சை அளிக்கும்போது அதனுடன் தொடர்புடைய பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும்.

அரசு மருத்துவமனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்குப் பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவைச் சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.

ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில் பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை.

நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இந்தத் திட்டத்தில் வழங்கப்படும்.

இந்த வகையிலான கட்டணங்களைப் பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், இப்போதுள்ள முறைகளை மாற்றி சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுவது போன்று அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தனி-சிறப்புப் பகுதிகள்: 

புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்துக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி மற்றும் சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும்.இதனால் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற மக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவர்.

அரசே நேரடியாக வழங்கும்: 

புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுவத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு இப்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக வழங்கும்'.
. 
வித்தியாசம் என்ன? 
திமுக அரசின் காப்பீட்டுத் திட்டம் 

1 குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் 

642 வகையான சிகிச்சை முறைகளுக்கு அனுமதி 

பரிசோதனைக்கான செலவுத் தொகைகாப்பீட்டுத் திட்டத்தில் அடங்காது 

சிகிச்சை முடிந்த பிறகு பரிசோதனை மற்றும் இதர செலவுகள் வழங்கப்படாது 

அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம் 

1 குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் 

950 வகையான சிகிச்சைகளுக்கு அனுமதி

பரிசோதனைக்கான செலவுத் தொகை காப்பீட்டுத் திட்டத்தில் அடங்கும் 

பரிசோதனை மற்றும் இதர செலவுகள் காப்பீட்டில் சேர்க்கப்படும்.

நன்றி தினமணி...

Friday, July 8, 2011

என்றென்றும் பதினாறாக இருக்க சில யோசனைகள்


செக்ஸ் உணர்வை அதிகரிக்க நிறைய மருந்துகள் இருக்கின்றன. எள்ளுருண்டை, உளுந்து வடை, பால், நெய், கோதுமை, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ, வெங்காயம், முருங்கைக்காய், பனங்கற்கண்டு, போன்றவை மிகவும் சிறந்ததாகும். அமுக்கிராப் பொடி, ச்யவனப்பிராச லேகியம் போன்றவற்றையும் இதனுடன் சாப்பிடலாம். பேரீச்சம் பழமும் மிகவும் நல்லது. ஒரு அவுன்ஸ் தண்ணீரில் இரண்டு பேரீச்சம் பழத்தை நறுக்கிப் போட்டு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ளவும். நான்கு பாதாம் பருப்பை பொடித்து 1 சிட்டிகை குங்குமப்பூ 1 ஸ்பூன் முருங்கைப் பூ கலக்கவும். இது மிகவும் சிறந்த பலனை அளிக்கிறது.

செக்ஸ் எண்ணத்தைக் குறைப்பதற்கு கடுக்காய் கலந்த கஷாயத்தைப் பயன்படுத்தலாம். தூக்கத்தில் விந்து வெளியாகும் ஆண்களுக்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மிகவும் சிறந்ததாகும். மனதை மகிழ்ச்சியாக வைப்பது ஆரோக்கியமான தாம்பத்தய வாழ்விற்கு வழிவகுக்கும்.

நாட்டு அமுக்கிரா, சீமை அமுக்கிரா என்ற கிழங்குகள் மருந்துக் கடையில் கிடைக்கும். அவைகளில் ஒன்றை வாங்கிப் பெருந்தூளாக இடித்து வைத்துக் கொள்ளவும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேளைக்கு 3 – 4 கிராம் எடுத்து 50 மி.லி. தண்ணீரும் 100 மி.லி. பசுவின் பாலும் சேர்த்துக் கொதிக்க வைத்து தண்ணீர் சுண்டிவிட்ட நிலையில் இறக்கி வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். காலை 6 மணி, இரவு படுக்கும் முன் இந்த பாலைச் சாப்பிட ஏற்ற வேளை.

மற்றொரு முறை அரை கிலோ அமுக்கிராக் கிழங்கை இட்லி வேக வைக்கும் பானையின் மேல் தட்டில் வைத்து, கீழே ஜலம் விடும் பகுதியில் 100 மி.லி. ஜலமும் 200 மி.லி. பசுவின் பாலும் விட்டு மூடி, இட்லி வேக வைப்பது போல் வேக வைக்கவும். ஆவியில் கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி கிழங்கு களை மைய இடித்து வெயிலில் உலர்த்தவும். உலர்ந்ததை நன்கு தூளாக்கிச் சம அளவு ஜீனி சேர்த்து 5 கிராம் வீதம் காலை, இரவு உணவிற்கு பிறகு பாலுடன் சேர்த்து உட்கொள்ள என்றென்றும் 16 வயதாகவே திகழலாம்.

Thursday, July 7, 2011

அஞ்சறைப்பெட்டி 07.07.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவிலையை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலில், பாதாள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க, வைர, வெள்ளிப் பொருட்கள் குறித்து கணக்கெடுத்து இன்று வரை 5 லட்சம் கோடி மதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மதிப்பின் மூலம் உலகில் பணக்கார சுவாமி இதுவாகத்தான் இருக்கும். அந்த காலத்தில் இருந்த கோயில்களில் இந்த ஒரு கோயிலில் மட்டும் இத்தனை நகை என்றால் நமக்குத் தெரிந்த கஜினி முகம்மதுவும், ஆங்கிலேயர்களும் எத்தனை கொள்ளை அடித்திருப்பார்கள் அவை எல்லாம் முறையாக நம்மிடம் இருந்தால் இன்று நாம் நாட்டின் நிலையை நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன செய்வது நம் நாட்டிற்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..

இந்த மாதிரி தமிழ்நாட்டில் ஒரு கோவில் இருந்து அதில் இத்தனை நகைகள் இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும்.


...............................................................................................

ஆந்திர அரசியலை கலக்குகிறது இப்போது தெலுங்கானா புயல் தெலுங்கான பகுதி எம்பி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் பிரதமரும், சோனியாவும் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.


இதே போல் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழக எம்பி எம்ஏல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருந்தால் இலங்கையில் நிச்சயம் ஒரு இலட்சத்துக்கு அதிகமான தமிழகர்கள் இறந்திருக்க வாய்ப்பில்லை...

...............................................................................................

ஈவிகேஸ் இளங்கோவன் மீண்டும் தனது தாக்குதலை ஆரம்பித்து விட்டார் எப்பவும் இவர் ஆளும் வர்க்கத்தைத்தான் அதிகம் தாக்குவார் ஆனால் இந்த முறை இவர் கட்சியில் உள்ள முக்கிய கூட்டணிக்கட்சியை போட்டுத்தாக்குகிறார்.


........................................................................................................

சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற நபரை ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பழம் பறிக்கப்போன சிறுவனை கொன்றது எல்லாம் என்ன சொல்ல...


........................................................................................................

பேஸ்புக் இணையத்தளத்துக்கு தடை விதித்துள்ள சீன அரசு, அந்த இணையத்தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.

சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன் வெல்த் பண்ட், பேஸ்புக் இணையத்தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை விலைக்கு வாங்கும் நிறுவனத்துடன் இது தொடர்பாக சீன நிதி அமைப்பு பேசி வருகிறது. மேலும் சிட்டி பேங்க் மூலமாகவும் 1.2 பில்லியன் மதிப்புள்ள பேஸ்புக் பங்குகளை வாங்க சீனா முயன்று வருவதாகத் தெரிகிறது.

அதிகபட்சமான பங்குகளை வாங்கி, அதன்மூலம் பேஸ்புக் இணையத்தளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயல்வதாகத் தெரிகிறது.

சுமார் 700 மில்லியன் பயனீட்டார்களைக் கொண்ட பேஸ்புக் இணையத்தளம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எப்படியாவது சீனாவிலும் கால் பதிக்க பேஸ்புக் தீவிரமாக உள்ள நிலையில், அந்த நிறுவனத்தையே வாங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா தீவிரம் காட்டி வருகிறது.

பேஸ்புக்கை சீனா வாங்கத் திட்டமிட்டுள்ள செய்தி சீனர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. தங்கள் வருத்தத்தை சில சீனர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பிளாகுகளில் தெரிவித்து வருகின்றனர்.

........................................................................................................

அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில், அழுது கொண்டே இருந்த, பிறந்து 6 வாரமே ஆன தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டுக் கொலை செய்துள்ளார் அக்குழந்தையின் தாய்.

அவரது பெயர் கா யாங். 29 வயதாகும் இவருக்கு மிராபெல்லி தாவோ லோ என்ற பிறந்து 6 வாரமே ஆன பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டு கொடூரமாக கொலை செய்தார் கா யாங்.

தாய் என்ற சொல்லுக்கு தகுதியில்லாத பெண்...
நாட்டு நடப்பு

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறன் இன்று பதவி விலகிவிட்டார்.


தகவல்

கடந்த 1980-ம் ஆண்டுகளில் இருந்து செல்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்போன்களை அதிக அளவில் பேசுபவர்களுக்கு மூளை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, சுவீடன் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.   அதில் செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சினால் மூளை புற்று நோய் ஏற்படாது. அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அறிமுக பதிவர்


இந்த வார அறிமுகப்பதிவர் என்னுள் நானே என்ற பெயரில் S.Deluckshana என்பவர் எழுதி வருகிறார். பல சமூக நோக்குடன் பல பதிவுகளையும், எதார்தமான பல பதிவுகளையும் பதிந்து வருகிறார்.
http://shanasiva.blogspot.com/



தத்துவம்

சளித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பை பார்க்கிறான்...

முடியாதது என்று எதுவுமில்லை ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை

Thursday, June 30, 2011

அஞ்சறைப்பெட்டி 30.06.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மாதம் மாதம் சம்பளம் வாங்குவது போல் உயர்கிறது பெட்ரோல், டீசல், கேஸ் விலை. மத்திய அரசு இது வரை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை. மத்திய நிதி அமைச்சர் விலையேற்றம் தவிர்க்கமுடியாதது என்கிறார் தடுக்க முடியாத இவர் அமைச்சராக இருந்து என்ன பிரயோசனம்.

மேற்கு வங்கத்தில் மம்தா சமையல் வாயுவிற்கு மாநில அரசின் வரியை குறைத்தது வரவேற்கத்தக்க விசயம். அதே போல் தமிழகத்திலும் சமையல் வாயுவிற்கான வரியை குறைத்ததற்காக அம்மாவிற்கு அம்மாக்களின் சார்பாக வாழ்த்துக்கள்...


...............................................................................................

திரைப்படநடிகர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் நடிகர்கள் அவர்களின் அன்பான பாராட்டு விழாவை தவிர்த்த முதல்வருக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.

முதல்வரே தமிழகதில் மின்சாரத் தட்டுப்பாடு, விலையேற்றத்தை கட்டுப்படுத்துங்கள் எங்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்புக்கள் இதுதான்.


...............................................................................................

சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. பெரும்பாலும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.

தற்போது சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற பகுதியில் நாய் கறியை சமையல் செய்து உண்பதை அவர்கள் ஒரு கலாசாரமாக வைத்துள்ளனர். திருவிழா போன்று ஒரு வாரம் வரை நடைபெறும் இதற்காக 15 ஆயிரம் நாய்களை கறிக்காக கொன்றுள்ளனர்.

நாய் கறி பல மருத்துவ பலன்களை கொண்டது என காலங்காலமாக அவர்களது நம்பிக்கையாக உள்ளது. எனினும், இதனை கொடுமையாக கருதி, நாய் கறி உண்பதை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2008 ஒலிம்பிக்போட்டியின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்ததால் அப்போது குறிப்பிட்ட உணவகங்களின் மெனுவில் இருந்து நாய் கறி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நமக்கு ஆர்டர் கொடுத்து இருந்தால் 15 ஆயிரம் என்ன அதற்கு மேலும் நம்ம ஊரில் உள்ள தெரு நாய்களை அனுப்பி இருக்கலாம்...


........................................................................................................

இங்கிலாந்து, தலைநகர் லண்டனை சேர்ந்த ஒருநிறுவனம் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஒருசில ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் படுக்கைகள் மற்றும் தலையணைகள் நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் சுத்தமில்லாமல் அழுக்காக இருந்தன.

இந்த தலையணைகளில் நோயாளிகளின் உடலில் இருந்து உரிந்து விழுந்த தோல்பகுதிகள், தலையில் இருந்து உதிர்ந்த பொடுகுகள், வியர்வைதுளிகள் போன்றவைகளால் பிசுபிசுப்பான அழுக்கு ஏற்பட்டிருந்தது.

இது குறித்து அந்த ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், தலையணையில் உள்ள அழுக்குகளால் 30 வகையான நோய்க்கிரிமிகள் உண்டாகின்றன. இவை சின்ன அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

எனவே, தலையணைகள் மற்றும் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும்.   நர்சுகள் தங்கள் கைகளை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். தலையணையின் ஓரத்தில் ஏற்படும் கிழிசல்களை உடனுக்குடன் தைக்க வேண்டும். அதன் மூலம்தான் நோய்க்கிரிமிகள் உள்ளே புகுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆஸ்பத்திரிகளுக்கு மட்டுமல்ல, வீடுகளில் தங்கியிருக்கும் பொது மக்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாகும், தாங்கள் பயன்படுத்தும் படுக்கைகளையும், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

........................................................................................................

சமீபத்தில் எங்கள் ஊரில் பாலம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்தார்கள் அப்போது புறம்போக்கு இடங்களில் ஒரு 15 குடும்பத்தினர் குடியிருக்கின்றனர் அவர்களின் வீடு எல்லாம் காலி செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்திருந்தனர் இதையறிந்த மக்கள் என்ன செய்வது நமக்கு குடி இருக்க இடம் வேண்டும் என்றதும் தொகுதி எம்எல்ஏவிடம் முறையிடலாம் என்று முடிவானது இவர்கள் அனைவரும் அவரைப்பார்க்க கிளம்பிய செய்தி அவரை எட்டி அவர் உடனே ஊர் முக்கியஸ்தருக்கு போன் செய்து என்னைப்பார்க்க யாரும் வரவேண்டாம் எதுவாக இருந்தாலும் பிரச்சனை என்றால் நானே நேரில் வருகிறேன் என்று நேரில் வந்து ஊர் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரிடம் கலந்து ஆலோசித்து உடனே மாற்று இடம் ஏற்பாடு செய்தார்.

இதில் மிக்க பாராட்டப்பட வேண்டிய விசயம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் என் எண்ணிற்கு அழையுங்கள் நானே நேரில் வருகிறேன் என்று அவர் எண்ணை கொடுத்து சென்றுள்ளார் அவருக்கு நம் பாராட்டுக்கள்.

........................................................................................................

கடந்த ஆட்சியில் நில அபகரிப்பு பிரச்சனையில் இப்பதான் ஒரு சிலர் கைதாகி உள்ளனர் இந்த எண்ணிக்கை நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறேன். தைரியமாக சென்று புகார் கொடுத்து தண்டனை வாங்கி தர நினைக்கும் பொது மக்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பாராட்டுகிறேன்..

நாட்டு நடப்பு
சமச்சீர் கல்வியின் வழிமுறைகளை அடுத்த வாரம் முழுவதும் தெரியவரும். இன்று மக்களின் முக்கிய நினைவே சமச்சீர்கல்வியின் மேல் தான்.

தகவல்

எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீனினங்கள், மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடலடியில் வாழ்வியல் பிரச்னைகள், உணவிற்கு போராட்டம், பாதுகாப்பின்மை என எத்தனையோ இன்னல்கள் வந்தாலும், அவற்றை தாக்கு பிடிக்கும் திறன்கள் பல உயிரினங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவைகளின் உத்திகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதில் பல வினோதங்கள் மீனனிங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள். அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது.

இத்தகை சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீனிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம்.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் சுந்தர் ஆனந்தமாயிருங்கள் என்ற பெயரில் பதிவெழுதிவருகிறார். இவரின் பதிவின் முக்கிய அம்சம் சொரியாசிஸ் பற்றி எழுதிவருகிறார் அதற்காக ஆலோசனைகளையும் வழங்குகிறார். இவர் தற்போது பதிவெழுதுவதுதில்லை அவரிடம் பேசிய போது நிறைய ஆர்ட்டிக்கள் கையில் இருக்கிறது வேலைப்பளு காரணமாக அதை பதிவிட இயலவில்லை என்றும் விரைவில் அனைத்தையும் பதிவிடுகிறேன் என்று கூறினார்.

உங்களுக்கு எதாவது தோல் நோய் பற்றி சந்தேகமோ அல்லது தோலில் எதாவது மாற்றம் இருந்து அது தோல் வியாதியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தால் அவரை தொடர்பு கொள்ளவும்.


அவரின் மின் அஞ்சல்  sundarsiddha@gmail.com

கைபேசி எண் 9994063531

http://villiputturan.blogspot.com/




தத்துவம்
 
குழந்தையின் மழலை,
பைத்தியக்காரனின் பிதற்றல்,
மகானின் பொன்மொழி
இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.
 
 
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

Monday, June 27, 2011

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?????


மீண்டும் பெட்ரோல் விலையேற்றம். ஒவ்வொரு முறை விலை ஏற்றத்தின் போதும் எதிர்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் பின்பு அரசு அதைப்பற்றி முடிவு சொல்லும் போது இது தேவையானது சர்வதேச சந்தையில் விலை உயர்வு அதனால் பெட்ரோல் விலை உயர்வு என அறிவிப்பார்கள் இது அனைவருக்கும் தெரிந்தது. இதைப்பற்றி முபமையாக தெரிந்து கொள்ளும் ஆவலில் நண்பரிடம் கேட்டேன் அவர் துக்ளக் இதழில் ஓர் கட்டுரை இதைப்பற்றி வந்து இருக்கு என எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். அக்கட்டுரை உங்களுக்காக...

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது 30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.

அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது.

உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.

மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?

எத்ரேஆலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..!?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGC மான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?

மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.

பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

இக்கட்டுரை ஒரு மீள் பதிவு 8வது முறையாக பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது துக்ளக் இதழில் வந்த இக்கட்டுரையை தற்போதைய சூழ்நிலைக்கு சரியாக இருக்கும் என்று பகிர்கிறேன்....