Sunday, March 16, 2014

குழந்தை வளர்பில் சூதனமா இருங்க பெத்தவங்களே...

 
குழந்தை வளர்ப்பு ஒரு கலை, அவர்களை முறையாக வளர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர் இப்போது எல்லாம். இதற்காகப் பல மருத்துவர்களும், குழந்தை வளர்ப்பு பற்றிப் பல புத்தகங்கள், பல வலைப்பதிவுகள் என அனைத்து மொழிகளிலும் உண்டு. இதைப்பற்றி எல்லாம் நம்ம வீட்டுப் பாட்டியிடம் சொன்னால் போடா போக்கத்தவனே, உன்னை எல்லாம் அப்படியா வளர்த்தோம், உனக்குத் துணியே போட மாட்டோம், அம்மணமா சுத்திகிட்டு இருந்த பய இன்னிக்கு என்ன பேச்சுப் பேசறாம் பாரு என்கின்றனர், எங்க வீட்டுப்பாட்டிகள்.

குழந்தைகள் வளர வளர பல பிரச்சனைகள் வரும் அதை நாம் அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும், நம் குழந்தைகளுக்கு உண்டான தகுதி என்ன வென்று நாம் அறிந்து அவர்களை அதன் படி நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் இது தான் இப்போதைய அட்வைசாக உள்ளது.

எனது பால்ய நண்பன், நான் எப்போது ஊருக்கு சென்றாலும் ஆட்டம் பாட்டம் எல்லாம் இவனோடு தான், ரொம்பக் கஷ்டப்பட்டு இன்று சுயதொழிலில் ஈடுபட்டு நல்ல முறையில் உள்ளவன். இவருடைய குழந்தை சமீபத்தில் அதிகத் தலை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது, நடக்க இயலவில்லை என ஒவ்வொரு பிரச்சனையாக அடுக்கி அழ, எப்போதும் தொழிலையே பார்த்துக் கொண்டு இருந்தவர் பக்கத்தில் உள்ள டாக்டரிடம் காண்பித்து அவர் கொடுக்கும் மறுந்தை சாப்பிட்டாலும் இதே பிரச்சனை.

அம்மா தலை வலிக்குதும்மா, அம்மா தலை இழுத்துப் பிடிக்குதம்மா, அம்மா வயிறு எரியுதும்மா, அப்பா முட்டி காலையே ஊனமுடியவில்லை, நடந்தால் கால் வலி அதிகமாக உள்ளது, படுத்த உடம்பெல்லாம் வலியாக இருக்கிறது என்று குழந்தை அழுது கொண்டே இருந்தால் மருத்தவரிடம் தான் அழைத்துப் போவோம், அவரும் குழந்தைக்கு ஒன்றும் இல்லை என்றால், அப்போது பெற்றோர் படும் பாடுதான் அதிகம்.
 
இந்தக் குழந்தைக்கு அனைத்து டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்து விட்டார்கள் ஆனால் எங்கும் எந்தப் பிரச்சனையுமில்லை, அடுத்த என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவரை சந்தித்தோம். அவரும் அனைத்து டெஸ்ட்டையும் பார்த்து விட்டு, இரண்டு நாள்க்குப் பின் சொன்னார்.

குழந்தைக்கு எந்தப் பிரச்சனையுமில்லை அவளின் மனது தான் பிரச்சனை, எதிலும் நாம் தான் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று பெற்றோர் சிறிய வயதில் அந்தக் குழந்தையை மற்றக் குழந்தைகளுடன் இணைத்து பேசியதால் வந்த வினை, முதல் இடம் பெற வில்லையா, ஏன், எப்படி என்று யோசித்து யோசித்துத் தலைவலி அதிகமாகிறது கூடவே அனைத்து வலிகளும்.

குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்ன விளையாடவேண்டும் என்று குழந்தை தான் முடிவெடுக்கவேண்டும், நாம் முடிவெடுக்கக் கூடாது, நமது கட்டாயத்தை ஆசையை, எதிர்பார்ப்பைப் குழந்தை மேல் திணிக்கக்கூடாது என்றார். இன்னும் 2 நாட்கள் சில கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைக்கிறேன் என்றார் மருத்துவர்.

மருத்துவர் சொன்னது நிச்சயம் 100 சதவீத உண்மை அப்பாவுக்கு டாக்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் சூழ்நிலையால் படிக்க இயலாது அதற்காக் குழந்தையைக் கட்டாயப்படுத்துகின்றனர் இன்றைய பெற்றோர் என்றால் நிச்சயம் மறுக்க இயலாது. இதற்காகவே நிறைய பணங்களைப் புடுங்கிக்கொண்டு பிராய்லர் கோழிபோலப் படிக்க வைக்க நிறையக் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

பெற்றோர்களில் குழந்தையிடம் பேசும் போதும், அவர்களின் ஆசையைக் கேட்கும் போதும் அவர்கள் வழியில் சென்று தான் வளர்த்தவேண்டும், கட்டாயப்படுத்தப் படுத்த குழந்தைகள் மனதால் பாதிக்கப்படும் நாம் தான் அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்...

14 comments:

  1. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  2. What you said is true Sathish...... we should not force this to the kids. A right post at the right time..... good writing !

    ReplyDelete
  3. இப்படிலாம் பெரியவங்கக்கிட்ட சொன்னா அப்படித்தான் உங்களைலாம் வளார்த்தோமா!?ன்னு கேட்பாங்க. ரெண்டு போட்டா சரிவரும்ன்னு சொல்வாங்க.

    ReplyDelete
  4. மிகவும் உண்மையான ஒன்று! குழந்தைகளின் கனவுகளை, விருப்பங்களை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே..

      Delete
  5. குழந்தைகளின் மேல் நமது விருப்பத்தினை திணிப்பது சரியில்லை......

    நல்ல பகிர்வு சதீஷ்.....

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.

    குழந்தைகள் மனநலம்என்பது முக்கியம்.
    பெற்றோர்கள்தமதுஆசைகளை திணிக்கக்கூடாது
    அதனால்பாதிப்புஎன்பதை சில பெற்றோர் உணர்வதில்லை..

    ReplyDelete
  7. பாட்டி காலங்களில் குறைந்தது 3 - 7 குழந்தைகள் , ஒன்றாவது பெயர் சொல்லும் பிள்ளையாகிவிடும்.
    இன்றோ ஒன்றே, கூட எனக் கருதி, அந்த ஒன்றையே எல்லாம் வல்லோனாக ஆக்குகிறோமென,
    பெற்றோர் செய்யும் கூத்து சொல்லிமாளாது.
    ஒரு நீயா நானாவில் பெற்றோரும் பிள்ளைகளும், பங்குபெறும் போது, பல பெற்றோர் பிள்ளைகளிடம்
    இனிமேல் நான் உன்னை வற்புறுத்தேன், என சத்தியம் செய்ததையும் மன்னிப்புக் கேட்டதையும் பார்த்தேன்.
    ஆனாலும் பெருவாரி பெற்றோரின் மனநிலையில் மாற்றமேயில்லை. தோல்வியையே சுவைக்காமல் தம் பிள்ளை வளரவேண்டுமென , பெரிய தவறைச் செய்கிறார்கள்.
    எம் எதிர்காலத் தலைமுறையை மனநிலைப் பாதிப்பிலிருந்து, கடவுள் தான் காக்க வேண்டும்.
    அருமையான சமூக நோக்குக் கட்டுரை! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. நாம் குழந்தைகளிடம் இதைச் செய்யாதே, அதைத் தொடாதே, அங்கே போகாதே என்று கட்டளைகள் பிறப்பித்துத்தான் வளர்க்கிறோம். மாற்றிக்கொள்ளவேண்டும்...

    ReplyDelete
  9. நல்ல பதிவு
    ஆழமான கருத்து
    எல்லா பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று

    ReplyDelete