Tuesday, February 16, 2010

எண்ணெய் குளியலும் உடல் நலமும்...


இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.

எப்படிக் குளிப்பது

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,  பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும். 
 எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயது‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கான எ‌ண்ணெயை (பே‌பி ஆ‌யி‌ல்) வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது உட‌ல் முழு‌க்க‌த் தட‌வி‌வி‌ட்டு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்.

ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌‌ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.

முத‌‌ல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது எ‌ன்பதா‌ல் உடலு‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம்.

ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம். 4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்
கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.

நன்மைகள் :
  • உடல் சூட்டைத் தணிக்கும்
  • உடல் புத்துணர்ச்சி பெறும்
  • உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
  • திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
  • சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
  • ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.

50 comments:

  1. நல்ல தகவல்!இன்றைய நகர வாழ்க்கையில், சூரிய ஒளியில் உடல் படும்படி இருப்பது மட்டும்தான் சிரமம்.

    ReplyDelete
  2. வாங்க மோகன்.,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  3. இடுகையை நல்லாவே எண்ணையால் குளிப்பாட்டியிருக்கிறீர்கள். ரொம்ப தகவல்களுடன் அழகான நடையில் அற்புதம் நண்பா! பல விஷயங்களை புதிதாய் தெரிந்துகொண்டேன்.

    பிரபாகர்.

    ReplyDelete
  4. வாங்க பிரபாகர்.... நலமா?

    ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கறீங்க...

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  5. எண்ணைக்குளியல் மறந்தே போச்சு...
    அதெல்லாம் ஒரு கனாக்காலம்.

    விடுபட்ட தகவல். எண்ணைக்குளியல் அன்று மோர், தயிர் போன்ற குளிர்ச்சியானவற்றை உணவில் சேர்க்கக்கூடாது... சரிதானே சங கவி...

    ReplyDelete
  6. ஆகா நல்ல பதிவு இங்க எண்ணை தேய்த்து குளிப்புது குறைவு...

    ReplyDelete
  7. நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.

    ......... பயனுள்ள இடுகை. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. //கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும்//

    டாக்டர்கள் கண்,காதுகளில் விடக்கூடாதுன்னு சொல்றாங்க. எதை ஏத்துக்கிறது!!!.

    ReplyDelete
  9. பகிர்விற்கு நன்றி சங்கவி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வாங்க கண்ணகி...

    இந்த தகவலை நான் கூட சொல்ல மறந்து விட்டேன்.. நன்றி ஞாபகப்படுத்திதற்கு...

    ReplyDelete
  11. வாங்க றமேஸ்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  12. வாங்க சித்ரா வாங்க...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  13. வாங்க அமைதிச்சாரல்...

    ஒரு சில மருத்துவர் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது இது தவறு என்கிறார்கள்... ஒரு சிலர் சரி என்கிறார்கள்.. நாம் நமது முன்னோர்களை கேட்போம் அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள் தானே....

    ReplyDelete
  14. என்னப்பு ...இப்படி ...மூட கேளப்புரீக.

    ReplyDelete
  15. வாங்க வண்ணத்துப்பூச்சியார்....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  16. தகவலுக்கு ரெம்ப நன்றி...

    ReplyDelete
  17. ஹூம்! நல்ல சீக்காப் பொடி எங்க கிடைக்குது. சீயக்காய், வெந்தயம், செம்பருத்தி, தேத்தாங்கொட்டை எல்லாம் சேர்த்து காய வைத்து மிஷின்ல அரைச்சு தேய்ச்சா ஷாம்பூ எல்லாம் எந்த மூலைக்கு:)

    ReplyDelete
  18. நல்ல தகவல் நண்பா..,

    ReplyDelete
  19. வாங்க நாடோடி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  20. வாங்க வானம்பாடி சார்...

    சீக்காப்பொடியுடன், அரப்பையும் சேர்த்துக்கங்க....

    ReplyDelete
  21. வாங்க பேநாமூடி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  22. ஆமாம் மிக நல்லது எண்ணெய் குளியல்.ஆனால், இப்பொழுது யாரும் செய்வதில்லை.நிச்சயம் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்..

    ReplyDelete
  23. தலை-க்கு எண்ணெய் தேய்த்து குளித்ததும், அம்மா கைமனத்தில், கோழி குருமா சாப்பிடுவோமே? அதை மறந்திட்டிங்களே? எனி வே மிக நல்ல கட்டுரை.

    ReplyDelete
  24. நானெல்லாம் டாக்டர் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டான் என்று சொன்னதால் சின்ன வயதிலிருந்தே எண்ணெய் தேய்த்துக்குளிப்பதில்லை :(

    ReplyDelete
  25. வாங்க அமுதா கிருஷ்ணா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  26. வாங்க பிரோமா மகள்...

    கோழி குருமாவ மறக்க முடியுமா?

    ReplyDelete
  27. வாங்க சின்ன அம்மிணி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  28. எண்ணெய் தேச்சுக் குளிக்கிறதை மட்டுமில்ல, தலைக்கு எண்ணெய் தேய்க்கிற பழக்கத்தையே மறந்துகிட்டுவருது இன்றைய தலைமுறை.

    நல்ல இடுகை...நன்றி சங்கவி!

    ReplyDelete
  29. படிக்கிறதோட விட்டுடாடம்ம, அதை கடைப்பிடிக்க வேண்டும். தேவையாக உள்ள விஷயத்தை சொன்னதுக்கு நன்றி.

    ReplyDelete
  30. உண்மை சொன்னால் ...இன்று தலைமுடி கொட்டுவதாக டாக்டரிடம் ஆலோசனை கேட்டேன்.எண்ணெய் மசாஜ் தான் உடனே அறிவுறுத்தினார்.நன்றி சங்கவி.

    ReplyDelete
  31. உண்மைதான் சங்கவி எண்ணை தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறைந்து நல்ல தூக்கம் வரும்

    ReplyDelete
  32. ரொம்ப பயனுள்ள பதிவு .நான் என் மகன்களுக்கும் முடிந்த வரையில் மாதம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவேன் .உடலுக்கு கடலை மாவு தேய்த்து விடுவேன் .இதில் கொஞ்சம் தயிர் கலந்து தேய்க்கலாம் .
    கோட்டக்கல் வைத்திய சாலைகளில் "தன்வந்த்ரம் குழம்பு "என்று ஒரு எண்ணெய் கிடைக்கும் .இது பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு தேய்க்க பயன்படுத்தப்படுவது என்று சொல்லி கொடுத்தார்கள் .ஆனால் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன் .அருமையாக இருக்கும் .லேசாக சுட வைத்து தேய்க்க வேண்டியது தான் .

    ReplyDelete
  33. அருமையான தகவல்கள்.

    மேலும், சின்னவளா இருந்தப்ப அம்மாதான் தலைக்கு எண்ணெய் தேச்சு விடுவாங்க. இப்போ யாரும் இல்லை. :(

    ReplyDelete
  34. இதெல்லாம் பண்றதே இல்லைங்க, நல்ல பயனுள்ள பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. நல்ல இடுகை சங்கவி. நன்றி..

    ReplyDelete
  36. மிகவும் பயனுள்ள பதிவு சங்கவி...

    ReplyDelete
  37. எண்ணெய் தேய்த்து குளிப்பதே கிட்டதட்ட மறந்து வருகிறது. சைனஸ், ஒற்றை தலைவலி என தொந்தரவுகள் வருவதால் மருத்துவர்கள் இதை ஆதரிப்பதில்லை. ஆனால் நிச்சயம் இது நல்லதுதான். ஆனால் சிறு வயதிலேயே பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  38. வாங்க சுந்தரா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...


    வாங்க தமிழ் உதயம்....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...


    வாங்க பழமைபேசி....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...


    வாங்க ஹோமா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  39. வாங்க Thenammailakshmanan...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  40. வாங்க பூங்குழலி...

    நல்ல பயனுள்ள தகவலை கொடுத்ததற்கு நன்றி...


    வாங்க வித்யா...

    நீங்க உங்க குழந்தைகளுக்கு தேய்ச்சு விடுங்க...


    வாங்க சசிகுமார்...

    முதன் முறையா வர்றீங்க... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  41. வாங்க திவ்யாஹரி...
    வாங்க சிசேகிதி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  42. வாங்க அம்பிகா...

    ஆமாங்க நானெல்லாம் சின்னதில் இருந்தே பழகியதால் தான் இன்றும் மாதத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக்குளிக்கிறேன்...

    ReplyDelete
  43. // எப்படிக் குளிப்பது? //

    அருமையான கேள்வி.

    :)))

    ReplyDelete
  44. நீங்க மருத்துவரா இப்படியெல்லாம் போட்டு தாக்குறீங்க நல்லாருக்கு தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. பதின்ம காலத் தொடர் ஒன்று எழுதிட அழைக்கின்றேன்.

    ReplyDelete
  46. nalla thagaval.idupondra innum pala nlla visayankalapathu eduthuvidunka

    ReplyDelete
  47. but should nt stand under sunlite for 20mts , u ll get dark, and main thing should not go out that day as much as possible, otherwise nice

    ReplyDelete
  48. munnorgal moli :

    varudam irandu - pethiku marundhu sapituvathu

    matham irandu - kalavi (sex)

    varam irandu - ennai theythu kulithal

    naal irandu - malam kalipathu.

    ReplyDelete