Monday, February 1, 2010

தண்ணீரும் உடல்நலமும்...

தண்ணி குடி எல்லாம் சரியாகிவிடும் இந்த வரிகளை கேட்காத வீடு இருக்காது. தண்ணீர் நம் வாழ்வோடு உள்ள ஒன்று நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க இயலாது. தண்ணீர் நாம் குடிக்க, குளிக்க நமது அன்றாட தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய உதவுகிறது. நமது உடலிலும் தண்ணீர் இருக்கிறது. தண்ணீர் பல மருத்துவ தன்மைகள் கொண்டது தண்ணீரைப்பற்றி நான் அறிந்த படித்த பல தகவல்களை சேகரித்தேன் இத்தகவல்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

நமது உடலில் தண்ணீரின் பங்கு:
ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம். அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.
உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது. அதிக அளவில் வாந்தி எடுத்ததலும் வயிற்று போக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.
சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும். உடலும் இந்த மின்ணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு சரியாகிவிடும். சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்ததில் நீரின் அளவைக் குறைந்து, சோடியம் அளவை சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக அவைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.
தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்:
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.
தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
 மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்:
தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை ஏற்கனவே நிலவியது. தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும். தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.
காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.
காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும். கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.
இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. 
உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும். தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது. ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை ஆகவே உடற் பயிற்சி செய்த பின் சரியான முறையில் தண்ணீர் குடிக்கும் வழிமுறை என்ன என்றால் முதலில் தண்ணீர் வாய்க்குள்ளே ஈரம் செய்ய வேண்டும். பின் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.

47 comments:

  1. அருமருந்து தண்ணீர். அருமையான பகிர்வு மீண்டும்.

    ReplyDelete
  2. மிக தேவையான, அற்புதமான இடுகை நண்பா. எளிய முறையில் தெளிவா சொல்லியிருக்கீங்க. பாராட்டுக்கள். இடுகையின் அளவு கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் தேவையானதே. மீண்டும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. வாங்க வானம்பாடிகள் சார்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  4. வாங்க நவாஸூதீன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  5. அனைவருக்கும் அவசியமான பின்பற்ற வேண்டிய நடைமுறை..

    இடுகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. ஆஹா...சூப்பர் மேட்டரு... அப்ப தண்ணீரை அண்ணாந்து குடிக்ககூடாதா?? இது வேறயா?
    இனிமே கேர்புல்லா இருப்பேன். நன்றி சங்கவி

    ReplyDelete
  7. வாங்க ராதாகிருஷ்ணன்..

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  8. வாங்க நிகழ்காலத்தில்....

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  9. வாங்க நாஞ்சில் பிரதாப்....

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  10. மிக நல்ல பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  11. வாங்க பாலாசி...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  12. Welcome Thenammailakshmanan...

    Thank u for u r visit....

    ReplyDelete
  13. உடல்நலம் பேணுவது குறித்துத் தொடர்ந்து அரிய பதிவுகளைத் தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு மிக்க நன்றி. தண்ணீரின் மகத்துவம் கண்டேன். இப்போதைய மினரல் வாட்டர் எனப்படும் தாதுக்கள் நிறைந்த தண்ணீர் பற்றி ஒரு கருத்தோட்டம் இருந்தால் நலம் பயக்கும்.

    ReplyDelete
  14. நான் தினமும் காலை எழுந்தவுடன்
    1 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன்.நன்மை தெரிகிறது.

    ReplyDelete
  15. வாங்க ராதாகிருஷ்ணன்....

    தாதுக்கள் நிறைந்த தண்ணீர் பற்றி விரைவில் ஒரு பதிவு போட்டுவிடலாம் நண்பரே....

    ReplyDelete
  16. வாங்க ஹேமா....

    நீங்களூமா?... நானும் தினமும் குடிக்கிறேன்....

    ReplyDelete
  17. நீரின்றி அமையாது உலகு....அருமை...

    தண்ணி குடிக்கிற பாப்பா ரொம்ப அழகு...

    ReplyDelete
  18. வாங்க கண்ணகி....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.......

    ReplyDelete
  19. வாழ்த்துகள் சங்கவி..:)
    ------

    மினரல் வாட்டர் ஒரு சக்கைதாங்க.. அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை..:(

    சங்கவி அதுக்கும் ஒரு பதிவு போட்டுடுங்க.

    ReplyDelete
  20. எதுலையாவது கலந்து குடிக்கலாமா?

    ReplyDelete
  21. வாங்க சங்கர்....

    மினரல் வாட்டர் பத்தி ஒரு பதிவு போட்டுட்டா போச்சு....

    ReplyDelete
  22. வாங்க தண்டோரா (தல)....

    உங்களுக்கு தனியா ஒரு பதிவ போட்டுட வேண்டியது தான்...

    ReplyDelete
  23. நான் வேற தண்ணியோன்னு நினைச்சேன்

    ReplyDelete
  24. அதுவும் தண்ணி தானே நண்பரே.....

    ReplyDelete
  25. சங்கவி அருமையான பதிவு ..

    ReplyDelete
  26. தண்ணீரைப்பற்றி எழுதியிருந்த தகவல்களோடு, எப்படி குடிக்கவேண்டும் என எழுதியது முத்தாய்ப்பாக இருந்தது.

    நிறைய தகவல்களை சுவைபட தருகிறீர்கள். அருமை.

    பிரபாகர்.

    ReplyDelete
  27. வாங்க மீன்துள்ளியான்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  28. வாங்க பிரபாகர்...


    தங்கள் வருகைக்கும், அன்புக்கும் நன்றி...

    ReplyDelete
  29. தண்ணீரில் இத்தனை தத்துவமா? அருமையான பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  30. வாங்க சித்ரா வாங்க....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  31. அருமையான பதிவு சங்கவி.

    ReplyDelete
  32. பல செய்திகள். நன்றி.

    ReplyDelete
  33. தொடர்ந்து பயனுள்ள நல்லபதிவுகளாகக் கொடுத்துகிட்டிருக்கீங்க... வாழ்த்துக்கள்!

    தண்ணீர் குடிப்பதில்கூட இவ்வளவு விஷயம் இருக்கான்னு வியந்தேன்.
    நன்றி!

    ReplyDelete
  34. அருமையான பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  35. அருமையான பகிர்வு சங்கவி...
    மிக்க நன்றி...
    :-)

    ReplyDelete
  36. அடேயப்பா! தண்ணியில இம்புட்டு விஷயம் இருக்கா! கூடவே, ‘தண்ணி’ அடிக்கக்கூடாதுன்னும் ஒரு வரி சேர்த்திருங்கலாங்ணா! :)

    ReplyDelete
  37. வாங்க ஸாதிகா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  38. வாங்க பின்னோக்கி....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  39. வாங்க சுந்தரா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  40. வாங்க அக்பர்....

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  41. வாங்க கனிமொழி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  42. வாங்க கிருபாநந்தினி...

    //‘தண்ணி’ அடிக்கக்கூடாதுன்னும் ஒரு வரி சேர்த்திருங்கலாங்ணா! :)//

    இதப்பத்தி தனியா ஒரு பதிவுக்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறேன்...

    ReplyDelete
  43. சங்கவி,

    ”நல்ல தண்ணியத்தானே சொல்றீங்க.?”


    உண்மையில் சிறந்ததொரு பகிர்வு தோழா. நன்றி.

    ReplyDelete
  44. தண்ணிக்கே இம்புட்டா?அடி ஆத்தி

    ReplyDelete
  45. தண்ணீர் குடிப்பது பற்றிய பதிவு அவசியமான ஒன்று. நிறையபேருக்கு சரியாக தண்ணீர் குடிக்காமல்தான் சிறுநீரக பிரச்சனை வருகிறது.

    ReplyDelete