Wednesday, October 31, 2012

அஞ்சறைப்பெட்டி 1/11/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
தற்போது இணையஉலகில் பரபரபப்பான விசயம் சின்மயி ராஜன் விவகாரம் தான் இவர்கள் பிரச்சனையில் புகார் கொடுத்ததும் உடனே இதன் மேல் நடவடிக்கை எடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை ஊரில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது இதற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இனி இணையத்தில் தனிநபர் தாக்குதல் எதிர் கருத்துக்கள், மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இனி வரும் நாட்களில் குறையும்... இந்த பிரச்சனை பற்றி நண்பர் அதிஷா அவர்கள் வெட்டி எறியப்படும் சிறகுகள் என்ற தலைப்பில் எழுதி கட்டுரை மிக உண்மையான ஒன்று...
  ................................................................
 
 
 
நீலம் புயல் ரொம்ப நீண்டு சென்னையை மிக பாதிப்புக்களாக்கிவிட்டது... மழையைக்காணம் மழையைக்காணம் என்று கூப்பாடு போட்டோம் இன்று நின்றால் போதும் என்ற அளவில் உள்ளது. இந்த புயலுக்காக மாவட்ட நிர்வாகங்கள் எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை மிக பாராட்டுக்குரியது. அதிக சேதம் இல்லை என்றாலும் நிறைய இடங்கிளில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
..........................................................................................

தமிழகத்தில் தற்போதைய பிரச்சனையான மின்வேட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று சொல்கின்றனர் இது எந்த அளவிற்கு உண்மை என்று போக போகத்தான் தெரியும். இந்த மின்வெட்டால் மிக பாதிப்புக்குள்ளாவவது சிறு தொழில் மையங்கள் தான். தினமும் வேலை செய்யும் நேரத்தை விட சும்மா இருக்கும் நேரம் தான் அதிகம் என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர்..


................................................................................................


 
கொசுவால் உருவாகும் டெங்கு காய்ச்சலுக்கு நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலுக்கு பப்பாளி இலையின் சாற்றைக் குடித்தால் சரியாக நிறைய வாய்ப்புக்கள் உள்ளது என்கின்றனர்.

கொசுவை வீட்டினுள் ஒழிக்க சிறிய டம்ளரில் மண்ணெண்ணை ஊற்றி அதில் இரண்டு கற்பூர துண்டுகளை போட்டால் அந்த வாசத்திற்கு கொசுக்கள் வருவதில் என்று அறிவித்துக்கொண்டு இருந்தனர் பஸ்நிலையத்தில் நானும் வீட்டில் போய் செய்து பார்த்தேன்... உண்மைதான் கொசு வரவில்லை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...

...............................................................................................

குப்பை கூழங்கள் நிறைந்த புனேவின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஜான்முகமதுவின் இரண்டு மகன்களின் ஒருவன் ரிஷ்வான் சேக். அவன் சிறுவயதிலேயே 1 - 100 வரையுள்ள அனைத்து வாய்ப்பாடுகளையும் சரளமாக கூறியுள்ளான். அவன் 5 வயதாக இருக்கும்போதே சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறான். பிறகு பொது அறிவு புத்தகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, அவன் அனைத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.
 
அவனது திறமையைப் பாராட்டி ஜெர்மன் நிறுவனம் ஒன்று ஒரு பன்னாட்டு கல்வி நிறுவனம் ஒன்றில் 5 வருடத்திற்கு அவனை சேர்த்துவிட்டது. பல்வேறு அவமானங்களுக்கிடையே பள்ளியில் முதலாவது மாணவனாக திகழ்ந்தான்.  பின்னர் உலக பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அந்த நிறுவனம் அவனுக்கு அளித்த உதவியை நிறுத்திவிட்டது. 10 வயதாகும் இந்த இளம் அறிவு ஜீவியான ரிஷ்வான் சேக்குக்கு ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் நன்றாக தெரியும்.
 
...............................................................................................

 
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்த அமெரிக்காவின் 'நாசா' மையம் கியூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது. அங்கு அது போட்டோக்களை எடுத்து அனுப்பியும், பல ஆய்வுகளை மேற்கொண்டும் தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
 
அங்குள்ள பாறையை வெட்டி எடுத்து போட்டோ எடுத்து அனுப்பியது.   தற்போது, அங்கு கனிம வளங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மணலை கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப் மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்தது. அதில், பளிங்கு கற்படி வங்கள் உள்ளன. இது ஹவாயில் எரிமலை பகுதியில் இருப்பது போன்று உள்ளது. அதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் பூமியின் மணல் பரப்பை ஒத்துள்ளது.
 
எனவே அங்கு பூமியை போன்ற கனிம வளங்கள் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை கியூரியாசிட்டி விண்கல ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட் பிளேக் தெரிவித்துள்ளார். தனது 22 ஆண்டு காலகட்டத்தில் தற்போதுதான் அதுபோன்ற அதிசய நிகழ்வுகளை காணமுடிகிறது என தெரிவித்தார்.
...............................................................................................

உலக அளவில் திருமணமான பெண்களில் 3 பேரில் ஒருவர் தாம்பத்திய உறவில் முழு திருப்தி அடைவதில்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு உதவுவதற்காக வயாகரா போன்ற மருந்து ஒன்றை கனடா மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கிறார்கள்.


பெண்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்ட இத்தகைய மருந்து இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. தாம்பத்திய உறவுக்கு சற்று முன்பு இதை மூக்கு வழியாக நுகர வேண்டும். விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.

இது பற்றி கனடா மோனாஷ் பல்கலைக்கழக பெண்கள் சுகாதாரநல ஆராய்ச்சி திட்ட பேராசிரியர் சூசன் டாவிஸ் கூறுகையில், இது பெண்களுக்கு என்றே பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட வயாகரா ஆகும். 30 வயது முதல் 40 வயதுள்ள இளம்பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்கிறார்.


தகவல்
 ஆஸ்துமா என்பது உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய காரணம் 'நிக்கோடின்' பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப்ப காலத்தின்போது அவர்களின் கருவியில் வளரும் குழந்தை நுரையீரலை சிகரெட்டில் பயன்படுத்தும் 'நிகோடின்' பாதிப்பை ஆஸ்துமாவை உருவாக்குகிறது.

மேலும் அது சிகரெட் பிடிப்பவர்களின் 3-வது தலைமுறையையும் பாதிக்கிறது. இதன் மூலம் அவர்களின் பேரக்குழந்தைகளும் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த தகவல் கலிபோர்னியாவில் உள்ள ஹார்பர்-யூசி.எல்.ஏ. மெடிக்கல் சென்டர் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அவர்கள் கர்ப்பமாக இருந்த எலிகளிடம் ஆய்வு நடத்தி இதை கண்டறிந்துள்ளனர்.

சிகரெட் பிடிக்கும் அல்லது சிகரெட் புகையினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டு செயல்பாடு குறைகிறது. இதன் மூலம் ஆஸ்துமா உருவாகிறது. நிகோடினின் வீரியம் முதல் தலைமுறை குழந்தைகளை தாக்காவிட்டாலும், ரத்தத்தில் தேங்கியிருந்து அது அவர்களின் குழந்தையை பாதிக்கும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எனவே சிகரெட் பிடிப்பது அவர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவித்தாலும், பேரக் குழந்தைகளின் நலனையும் அது பாதிக்கிறது.


அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் பலே பிரபு என்ற பெயரில் எழுதி வரும் பிரபு கிருஷ்ணா அவர்கள்.. இவரின் அனுபவங்களும், கவிதைகளும் இவருடைய எழுத்துடன் நம்மையும் அழைத்து செல்லும்...

http://www.baleprabu.com/

 
தத்துவம்
 
நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.
 
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
 
உன் மேல் நம்பிக்கை வை... வெற்றி உன்னைத் தேடி வரும்...

Wednesday, October 10, 2012

அஞ்சறைப்பெட்டி 11/10/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
தற்போதைய மிகப்பெரிய பிரச்சனை முதலில் மின்வெட்டு மின்சாரம் இல்லை என்றால் எந்த தொழிலும் செய்வது இயலாத காரியம் என்பது அனைவரும் அறிந்ததே இருந்தாலும் தினமும் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பது நிச்சயம் வேற்று கிரகத்தில் இருப்பது போலத்தான். இரவுகளில் கொசுக்கடியில் தூங்காமல் இருப்பது ரொம்ப வேதனையான ஒன்று தான்... என்று விடிவுகாலம் பிறக்குமோ...
..............................................................................................

காவிரி நீரை திறந்து விட்டு விட்டு மீண்டும் அடைத்தது ரொம்ப கேவலமான ஒன்று அதைவிட அதற்காக கர்நாடக மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள்.. இங்க தமிழக மக்கள் ஓட்டு போட்டு தேர்தெடுத்த மத்திய அமைச்சர்கள் அதைப்பற்றி பேச்சையேக் காணம் அவர்களை விட இங்கு தான் மத்திய அமைச்சர்கள் அதிகம் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தால் மக்களாவது சந்தோசமடைந்துருப்பர்.. என்ன செய்வது தமிழனின் தலைவிதி...
..........................................................................................



உலக கோப்பை 20 / 20 மேட்ச் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இலங்கை அடித்துவிடுவார்களோ என்று கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்து வந்ததேன்.. நமது இந்தியா அணிக்கு அப்புறம் எனக்கு பிடித்த அணி வெஸ்ட் இண்டியன்ஸ் தான் விவியன் ரிச்சட்ஸ், ரிச்சி ரிச்சட்ஸ், அம்புரோஸ், வால்ஸ், கூப்பர், லாரா, சந்திரப்பால் என எனக்கு பிடித்த வீரர்கள் நிறைய உண்டு அந்த அணியில். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் இறுதி போட்டிக்கு வந்ததால் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன்..

இலங்கை கொஞ்சம் பாமில் இருப்பதால் சந்தேகமாக இருந்தது ஆனால் இறுதி போட்டியை காண வந்திருந்து அவர்களின் சனாதிபதியை பார்த்ததும் நிச்சயம் அவர்களுக்கு தோல்வி தான் என்று என் மனசு சொல்லுச்சு அது போலவே நடந்தது... சிகப்பு கலர் பிடிச்ச அவர் எங்கே இறுதி போட்டிக்கு போனாலும் எதிர் அணியினர் மிக்க சந்தோசமாக இருக்கலாம் இனி....

................................................................................................

 
 
பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட விஸ்கிகளை ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் உள்ள பொன் ஹாம்ஸ் நிறுவனம் ஏலம் விடுகிறது. அதில் 12 வகை விஸ்கிகள் இன்று ஏலத்திற்கு வருகின்றன.

ஜலே தீவில் 55 ஆண்டுக்கு முன்பு அதாவது 1957-ல் தயாரிக்கப்பட்ட விஸ்கி பழமையானது. இந்த விஸ்கி பாட்டில் குறைந்தது ரூ.85 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.1 கோடியே 25 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஸ்கி பலவகை சுவை கொண்டது. இதை குடிக்கும்போது முதலில் அத்திப்பழம், உப்பு, புளு பெர்ரி மற்றும் பூகலிப்டஸ் போன்றவற்றின் சுவை தெரியும். பின்னர் சாக்லெட் மற்றும் திராட்சையின் சுவையை அறிய முடியும். இந்த விஸ்கியை குடித்த பின்னரும், பெருஞ்சீரகத்தின் சுவை நீண்ட நேரம் நாவில் இருக்கும். எனவேதான் இதற்கு அதிக கிராக்கி உள்ளது.

ஆகவே பெரிய தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

...............................................................................................


தோல் புற்று நோயை குணப்படுத்த தற்போது புதிய வகை கிரீம் மருந்தை ஆஸ்திரேலிய நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். தோல் புற்று நோயின் ஆரம்ப அறிகுறியான ‘மெலனோமா’ என்றழைக்கப்படும் கருப்பு நிற கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் மெல்போர்ன் ‘ஆர்.எம்.ஐ.டி’ பல்கலைக்கழக நிபுணர்கள் இந்த கிரீம் மூலம் சிகிச்சை மேற்கொண்டனர்.
 
அதில், நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. தோல் புற்று நோயின் தாக்கம் குறைந்திருந்தது. அந்த ‘கிரீம்’ மருந்தில் உள்ள ரசாயன வேதி பொருள் புற்று நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளையும், புற்று நோய் ‘செல்’களையும் அழிக்கும் திறன் கொண்டது. இந்த மருந்தினால் நோய் பாதிக்காத மற்ற ‘செல்’களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே தோல் புற்று நோயை குணப்படுத்தும் அரிய மருந்தாக இந்த ‘கிரீம்‘ விளங்கும் என நிபுணர் டாக்டர் தக்ரீத் இஸ்டிவான் தெரிவித்துள்ளார். 

...............................................................................................

 
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரை சேர்ந்தவர் ஆலிவியா மேன்னிங். 12 வயதான இவள் இளம் வயதிலேயே மிகவும் அறிவாளியாக திகழ்கிறாள். உலகிலேயே மிகவும் பழமையான, மிகப்பெரிய அறிவு திறன் சமூக நிறுவனமான 'மென்சா' சமீபத்தில் அறிவு திறன் போட்டி நடத்தியது.
 
அதில் பங்கேற்ற அவள் 162 மதிப்பெண்கள் பெற்றாள். அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இவள் 2 மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்களை விட அறிவு திறன் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
 
இதனால் உலகில் அதிக நுண்ணறிவு கொண்டவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறாள். மேலும் 'மென்சா'வில் இணையும் வாய்ப்பையும் பெற்று இருக்கிறாள்.


தகவல்
 
 
உயிரினங்கள் வாழமுடியுமா என ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற ஆய்வுக்கூட விண்கலத்தை அனுப்பியுள்ளது.

2 ஆண்டுகள் அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் அந்த விண்கலம் தற்போது பல அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. பாறையை வெட்டி எடுத்து போட்டோக்களை அனுப்பியது. மற்றும் செவ்வாய் கிரகத்தின் தோற்றத்தை பல கோணங்களில் படம் எடுத்து அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், கியூரியாசிட்டி விண்கலம் கடந்த 8-ந்தேதி எடுத்து அனுப்பிய போட்டோவில் செவ்வாய் கிரக மண்ணில் ஒரு ஒளிரும் பொருள் உள்ளது. அது என்னவாக இருக்கும் என விவாதம் தற்போது நடந்து வருகிறது. இது விண்கலத்தில் இருந்து கழன்று விழுந்த அதன் ஒரு பாகமாக இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆய்வு செய்தபோது கியூரியாசிட்டியின் 7 அடி நீளமுள்ள ரோபோட் கரங்களின் வெளிச்சம் மண்ணில் விழுந்திருக்கலாம். அதன் நிழல் ஒளிரும் அதிசய பொருள் போன்று தெரிகிறது என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் அதுகுறித்த தீவிர ஆய்வு நடைபெற்று வருவதாக கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் நிஜமாகும் நிழல்கள் என்ற பெயரில் விஷ்ணு என்பவர் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் காதல் மொழிகள் பேசுகிறது..

http://www.vichu-vishnu.blogspot.in
 
தத்துவம்
 
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
 
உனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்....  உயர் வாய்ப்புக்கள் தானாக வரும்....
 
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

Wednesday, September 26, 2012

அஞ்சறைப்பெட்டி 27/09/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
 
அலுவலகம், வீடு இரண்டிலும் ஜெனரேட்டர் வசதி இருப்பதால் மின்தடை பற்றி அதிகம் உணரவில்லை படிப்பதோடு சரி எங்கள் ஊருக்கு சென்றாலும் எனக்கு மின்தடை இல்லை எங்கள் ஊரில் தண்ணீர் உந்து நிலையம் மூலம் வெளியூருக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் அங்கும் எப்போதும் மின்சாரம் இருக்கும் ஆனால் இம்முறை ஊருக்கு சென்றபோது கிட்டத்தட்ட 14 மணி நேரம் அதாவது நண்பன் கூட்டில் UPS போட்டு இருந்தும் அது சார்ஜ் ஆகவே மாட்டிங்குது...

ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பவர்கட் எப்ப போகும் எப்ப வரும் என்று யாருக்கம் தெரியாது.. கிராமம் என்பதால் எல்லார் வீட்டிலும் அம்மி, ஆட்டங்கல் இருப்பதால் சமைப்பதற்கு பிரச்சனை இல்லை ஆனால் விவசாயத்திற்கு கிணற்றில் நீர் இருந்தும் நீரை இரைக்க தண்ணீர் இல்லை.. இந்த வருடம் மழையும் இல்லை மின்சாரமும் இல்லை...
..............................................................................................
 
 
சமீபத்தில் சுந்தர பாண்டியன் திரைப்படம் பார்த்தேன் மிகநேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.. படத்தில் பேருந்தில் வரும் காட்கிகள் எல்லாம் 10 வருடம் பின் நோக்கி பயணிக்க வைத்தது.. நிறைய வசனங்கள் நன்றாக மனதில் பதிந்த காதல் வரிகளானது...

இந்த படத்தின் ஹிரோயின் கிராமத்து மண் வாசனையில் ஆழமாக மனதில் பதிந்து விட்டார்....

பேருந்தில் சைட் அடிப்பதும் பெண்ணிற்கு நூல் விடுவதும் மிக எதார்த்தமாக இருந்தது.. நல்ல பொழுது போக்கான படம் நிச்சயம் அனைவரும் பார்க்கலாம்...

" எத்தனையோ பேர் வாக்கு தவறி இருக்கலாம் ஆனா அவுங்க நாக்கு சுத்தம் இல்லைன்னு சொல்வதில் அர்த்தம் இல்லை என்போம் அவர்களின் சூழ்நிலை அறியாமல் "

படத்தில் பிடிச்ச வசனத்தில் இதுவும் ஒன்று..
 
..........................................................................................


 த்திய பிரதேசத்தில் வைகோவின் போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தது உண்மைதான்.. இந்த அளவிற்கு யாரும் இறங்கி போராடமாட்டார்கள் பல பேரை திரட்டிக்கொண்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பக்த்து நாட்டு தலைவரை எதிர்த்தது வரலாற்று நிகழ்வு ஆனால் இதை மீடியாக்கல் ரொம்ப பெரிது பண்ணவில்லை இதையே ஒரு வடநாட்டு தலைவர் செய்திருந்தால் அது மட்டுமே செய்தி ஆகியிருக்கும்..

வைகோ என்னதான் மக்களின் பிரச்சனைக்கு போராடினாலும் அவருக்கு என ஓட்டு போடும் மக்கள் மிக குறைவுதான்.. அவரின் போராட்டத்தையும், மக்களுக்காக அவர் கொடுக்கும் குரலையும் ஆதரிக்கும் மக்கள் அவரை தேர்தலில் ஆதரிப்பதில்லை என்பது தான் நிதர்சண உண்மை...

................................................................................................

 
உலகிலேயே மிக குள்ளமான சிறுமியாக சார்லட் கள்சைட்டை கின்னஸ் சாதனை புத்தகம் அறிவித்துள்ளது. 5 வயதான இவள் இங்கிலாந்தை சேர்ந்தவள். இவளது உயரம் 68 செ.மீட்டர். எடை 9 பவுண்டு. அதாவது 4 கிலோவுக்கும் குறைவுதான்.
 
தற்போது பள்ளியில் படித்து வருகிறாள். இவளது தந்தை ஸ்காட் கார்சைட். தாயார் பெயர் எம்மா நியூமேன். பிறக்கும்போது இவள் 25 செ.மீட்டர் உயரமே இருந்தாள். எடை 2 பவுண்டு அதாவது 900 கிராமே இருந்தது. பொம்மைக்கு அணிவிக்கும் உடைகள் போன்று மிக சிறிய உடைகள் இவளுக்கு அணிவிக்கப்பட்டது.
 
...............................................................................................


இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை பெருமைப் படுத்தும் விதமாக லண்டனில் புதுவித உணவுக்கு அவருடைய பெயரிடப்பட்டுள்ளது. நம் ஊரில் பஞ்சாபி தாலி என்று இருப்பதுபோல் அங்கு ‘மகாத்மா தாலி' (Mahatma Thali) என்று சூட்டப்பட்டது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள கணபதி சௌத் இந்தியன் கிச்சன் என்ற அந்த ஹோட்டலில் 12 வகை டிஷ்களுடன் கூடிய வாழை இலையில் பரிமாறப்படும் உணவிற்கு ‘மகாத்மா தாலி' உணவு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்திபற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் சாப்பாட்டு விசயத்தில் சைவ உணவுகளை சிறந்த முறையில் கடைபிடித்துள்ளார் என்பது யாரும் அறிந்திராத ஒன்றாகும். அவரது உணவுப்பழக்கம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியதன் காரணமாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உணவிற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது என்று ஓட்டல் உரிமையாளர் மணாலி ஜக்தாப் நையீம் விளக்கமளித்தார்.
லண்டன் போனாலும் தேசப்பற்று போகலையே!

...............................................................................................

 
உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான். அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது.
 
ஹபிசா மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32 வயதாகிறது. தன்னைவிட 3 வயது குறைவான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார். முகமது ருசானி பிரதமர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட மன்னர் அரண்மனையில் நடந்தது.
 
பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து மிக விமரிசையாக திருமணத்தை நடத்தினார்கள். திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உள்பட ஏராளமான வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்

 
கடந்த 2003-ம் ஆண்டில் ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் சார்ஸ் (எஸ்.ஏ.ஆர்.எஸ்) என்ற வைரஸ் கிருமிகளால் சுவாச நோய் பரவியது. அதில் 800 பேர் உயிரிழந்தனர். தற்போது இதுபோன்று புதிய உயிர்க்கொல்லி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவை சேர்ந்த கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவர் புதுவிதமான சுவாச நோய் பாதித்து சிகிச்சைக்காக லண்டன் வந்தார்.
 
அவரிடம் நடத்திய பரிசோதனையில் அவரை புதிய வகை உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. சமீபத்தில் இவர் சவுதி ஆரேபியா சென்று இருந்தார். அங்கு இவரை இந்த நோய் தாக்கியுள்ளது. அங்கு இது போன்ற நோய்க்கு ஏற்கனவே ஒருவர் பலியாகி இருக்கிறார். தொடக்கத்தில் ஜலதோஷம் போன்று ஏற்படும் இந்நோய் படிப்படியாக நுரையீரலில் பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இந்நோய் பாதித்தவர் லண்டனில் சிகிச்சை பெறுவதால் இங்கிலாந்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிரிகரி ஹார்டில் கூறும்போது. தற்போது இந்த நோய் 2 பேருக்கு மட்டும் பாதித்து இருப்பது. தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என தெரியவில்லை. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் கண்ணன் இவர்க கவிதைகள் உணர்வுகளின் வெளிப்பாட்டில் கண்முன் காட்சி அளிக்கிறது இவரது வரிகள்..

http://www.kannam.com
 
தத்துவம்
முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
எல்லாச் செல்வங்களிலும் ஞானமே அழியாத செல்வமாகும்.
நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

Tuesday, September 25, 2012

நம்ம ஊரு வயாகரா.... ஜாதிக்காய்...

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.


உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் :-

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.


மேலும் சில குறிப்புகள் :-

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காயை + சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

எச்சரிக்கை :-

ஜாதிக்காய் அதிகம் சாப் பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி...

Monday, September 24, 2012

அழிந்து வரும் ஒப்பாரி பாடல்கள் .... 02


ஒப்பாரி பாடல்கள் ஏறக்குறைய இன்று அழிந்து விட்டன.. கால ஓட்டத்தில் மறைவதில் ஆச்சர்யமில்லை. இப்பாடல்களை பாடுவதற்கு ஆட்கள் இல்லை என்றாலும் பாடல்களை பதிவு செய்வதன் மூலம் மீண்டும் படிக்க இயலும்...

எங்க வீட்டு பெரியவர் இறந்த போது அவரைச் சுற்றி பெண்கள் எல்லாம் நின்று ஒரு பாடல் பாடினர் அது சொக்க பாடல் என்றும் அந்த பாடலை பாடினால் தான் அந்த உடல் சொர்க்கத்து போய் சேரும் என்று சொன்னார்கள்  அப்போது அந்த பாடலை பாடிய பெரிசுகளை நிறைய முறை சந்தித்தும் அவர்கள் பாட மறுத்து விட்டார்கள்.. அதை இப்ப எல்லாம் சொல்லக்கூடாது இறந்தவர் முன் தான் சொல்லனும் என்றனர். அந்த பாடலை விரைவில் பதிவு செய்ய முயற்சிசெய்து கொண்டு இருக்கேன்...

என்னுடன் என் மனைவியின் பாட்டி தங்கி உள்ளார் அவர் அந்த காலத்தில் நாற்று நடும்போது தான் அப்போது அங்கு வரும் முதிய பெண்கள் எல்லாம் இந்த கிராமிய பாடலை சொல்லிக்கொடுப்பார்களாம். அப்போது தான் இந்த ஒப்பாரி பாடல்களும் வருமாம்.. கிராமத்தில் வீட்டில் உள்ள பெண்களை விட வயல் வேலைக்கு செல்லும் பெண்களுக்குத்தான் கும்மிப்பாட்டு, ஒப்பாரி போன்ற பாடல்கள் தெரியுமாம்..

இன்று எல்லாம் மிஷினிலேயே நடைபெறுவதால் இவர்களின் கூட்டமும் குறைந்துவிட்டது பாட்டுக்களும் குறைந்துவிட்டது...


சமீபத்தில் கேட்ட ஒப்பாரி பாடல்கள்...

என்னென்ன சொல்ல நினைச்சியோ..
என் மாமா...
ஒரு வார்த்த சொல்லாம போனியே...
என் மாமா

உன் உடம்பு என்ன பண்ணுச்சோ
என் மாமா
அத தாங்காம போனியோ
என் மாமா

போகிற வயசா உனக்கு
என் மாமா
போகாத இடம் போனியே
என் மாமா..

உனை இப்படிப்பாக்கத்தான்
வந்தேனோ
என் மாமா
உனக்கு முன் நான்
போயிருக்கக்கூடாதோ
என் மாமா...

..........................................

தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே     
தானநன்னே   தந்தநானே

வானம் கருத்திருக்கு 
வட்டநிலா வாடிருக்கு 
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

 சிங்க தெருவெல்லாம் 
 சிந்தி அழுகிறேனே 
சிங்கார சிங்கபூர 
கண்ணீரில் கழுவுறேனே 

வட்டிகடன் வாங்கி 
வாக்கப்பட்டு போறவள 
வாசலோடு நிக்கவச்சி 
வந்துநானும் சேர்ந்தேய்யா

வட்டிகடன் கட்டி 
வண்டியில சாமான்வாங்கி 
வந்தவக வாயடக்க 
வரிசை கொடுத்தேன்ய்யா 

பக்கவாதம் வந்து 
பாலகனா போனவரே 
தொண்டைகுழி  விக்கி 
தொலைதூரம் போனதேனோ?

போனமகன் வரலயான்னு 
பொறுக்கலையா உன்னுசுரு 
புள்ளகொல்லி விழாம 
போனதய்யா உன்னுசுரு  ....

..........................................

 கிருஷ்ண மூர்த்தி என்பவர் எழுதிய இந்த ஒப்பாரி பாடல் மிக கவர்ந்தது....

கண் திறந்து பாரடா மகனே..!
பத்து மாதம் சுமந்து பெற்றேன்..
ஈ கொசு அண்டாமல்
இமைபோல் காத்தேன்..
ஊரே பழித்தாலும்
உனக்காய் வாழ்ந்தேன்..
யாரும் இனி எனக்கில்லை..
மாதாவை தனியே விட்டு
மாய்ந்தாயே மகனே??

சோறூட்டிய கைகளில் வாய்க்கரிசி
பாலூட்டிய மார்பினில் செங்குருதி..
இந்த தள்ளாத வயதினில்,
தவிக்க விட்டுச் சென்றாயே..
கண் திறந்து பாரடா மகனே..!
இது தாயில் அலறல்..
*
காடு மனையெல்லாம் வித்தேன்
கடன் வாங்கி படிக்க வைச்சேன்..
சேம நிதி கூட எடுத்து- உன்
திருமணத்தை நடத்தி வைச்சேன்..
இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா..
பட்ட கடனை எப்படி அடைப்பேன்!
ஐயா.. ராசா..!
இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா..
நான்
பட்ட கடனை எப்படி அடைப்பேன்?
பதில் சொல்லிப் போ மகனே..!!
இது தந்தையின் புலம்பல்..
*
பெத்தவங்க,
கூடப் பொறந்தவங்க..
சாதி சனம் எல்லாரையும்
மறந்து வந்தேன்..
நீ ஒருத்தனே கதியென்று
உன்னோடு பறந்து வந்தேன்..!

வயித்தில வளரும் கரு
ஆணா பெண்ணா
அறியுமுன்னே..
என்னை நட்டாற்றில்
விட்டுச் சென்றாயே..!

நரம்பில்லாத நாக்கு
என் ராசியை குறை சொல்ல
தாலியை பறித்துச் சென்றாயே!

ஏழு ஜன்மமும் கூட வருவேன்னு
என் மேல சத்தியம் செய்த கை
குப்புறக் கிடக்குதிங்கே
ஐயோ..!
என் குடிகெட்டு போயிருச்சே!

வாக்குறுதி தந்த வாயில
வாக்கரிசி போட வைச்சு
வாழ்வை தேடி வந்த எனக்கு
விதவைச் சாயம் பூசியதென்ன?

ஐயோ..

இந்த கேள்விக்கும் உன் பதில்

மௌனம் தானா??!
இது மனைவியில் கதறல்..

*
இறந்த சடலத்திடம்
எத்தனைக் கேள்விகள்..?
எத்தனை குற்றச்சாட்டுகள்..??

ஆவியாகிய ஆன்மாவிடம்
எத்தனை புலம்பல்கள்?!
எத்தனை பழிச்சொற்கள்..?!

சொர்க்கம் சேர வேண்டி
ஒரு பக்கம்
சாங்கியம் நடக்கிறது..
பதில் தர வேண்டி
மறு பக்கம்
ஒப்பாரி ஒலிக்கிறது..!
சுயநல
ஒப்பாரி ஒலிக்கிறது..!!
*
இறைவா..
உன்னிடம் ஒரு வேண்டுகோள்…
இங்கு யாரும்
பிரேதத்தைப் பார்த்து
பெருமை பாடுவதில்லை..!

சுயநல மனிதர்கள்
செத்த பிறகும் ஆன்மாவை
விட்டு வைப்பதாயில்லை!


இங்கே,
ஒப்பாரி பட்டியலில்
ஆறுதல் வார்த்தையை விட
ஆத்திரக் கேள்விகளே அதிகம்..!


ஆன்மாவின் வழியனுப்பலை விட
அவரவர்
வயிற்றெரிச்சலே அதிகம்..!!

அதனால் இறைவா..
உயிர் பிரியும்போது மட்டும்
ஆன்மாக்களை
கொஞ்சம் செவிடாக்கி விடு..! 

..........................................


முத்து பதித்த முகம்
முதலிமார் மதித்த முகம்
தங்கம் பதித்த முகம்
தரணிமார் மதித்த முகம்...

ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க.

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுது வந்த ராசா
பாதியியில போரிங்க்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ என
சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா.

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே
உங்களுக்கு காதும் கேக்கலையா.

இந்த சொர்க்க பாடல்களை இன்னும் நிறைய பெரியவர்களிடம் இருந்து சேர்க்க வேண்டும்.. முடிந்தவரை சேர்ப்போம்...

இதற்கு முன் நான் எழுதிய ஒப்பாரி பாடல் பதிவு படியுங்கள்......

அழிந்து வரும் ஒப்பாரி பாடல்கள்...