Monday, October 11, 2010

நண்பன் அமைவதெல்லாம்...

நண்பன் எனக்கு இல்லை என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணலாம். அந்த அளவிற்கு நண்பர்கள் நம் வாழ்வில் இன்றியமையாதவர்களாகி விட்டனர் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் உருவாகி இருப்பர் நம் சிறுவயது முதற் கொண்டே நட்பு உருவாகிறது. குழந்தையாய் பக்தது வீட்டு குழந்தையுடன் முதல் நட்பு, பள்ளிக்குச் செல்லும் போது அங்குள்ள குழந்தைகளின் நட்பு, விடுமுறையில் அத்தை வீட்டுக்குச் செல்லும் போது அந்த ஊர் குழந்தைகளின் நட்பு என ஒவ்வொரு கால கட்டத்திலும் நட்பு இருந்தே வருகிறது. நட்புக்கு வரைமுறை எல்லாம் கிடையாது.

நண்பனை நம்பி ஏமாந்தவர்கள் நிறைய இருக்கின்றனர் ஆபத்தில் சிக்க விட்ட நண்பர்களும் இருக்கின்றனர், பாதியில் கழட்டி விட்ட நண்பர்களும் இருக்கின்றனர். இப்படி நிறைய வகை நண்பர்கள் உள்ளனர். யார் யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் நட்பு உருவாகலாம் அதை முறையாக கையாள்பவர்கள் தங்களது நட்பு கடைசிவரை உடன் வரும்.

நான் நிறைய நண்பர்களைப்பார்த்து உள்ளேன் அவர்கள் வீட்டு விசேசத்திற்கு அனைத்து வேலைகளையும் செய்வார்கள் அவர்கள் குடும்ப வேலைகளை இவர்கள் செய்வார்கள் என குடும்ப நட்பும் நிறைய உண்டு. உண்மையான நண்பன் கூட இருக்கும் போது எதற்கும் கவலை இல்லாம் இருக்கலாம். வெளியூரில் வேலை செய்யும் நண்பர்கள் தங்களது வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை எனில் முதலில் நண்பனைக் கூப்பிட்டு டேய் போய்பாரு என்று நண்பர்களுக்குத் தான் முதலில் தொடர்புகொள்வார்கள். நண்பனும் தங்களால் ஆன உதவியை செய்வார்கள் இது தான் இன்று நிறைய வெளியூரில் வேலை செய்யும் நண்பர்களிடம் இது அதிகமாக கணப்படும்.


உதவிக்காக மட்டும் தான் நண்பன் என்றால் அதுவும் தவறு. மாற்று உதவியை எதிர்பாரமல் உதவும் நண்பர்களே நண்பர்கள். நண்பனின் தேவை அதிகமாகும் இடம் வெளியூரில் வேலைக்குச் செல்லும் போது தான் அதிகரிக்கிறது. வேலைக்கு சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கும் போது நண்பர்கள் தேவை. வேறு ஊருக்கு வேலை காரணமாக செல்கிறோம் என்றால் முன்னரே நண்பனைக்கூப்பிட்டு இங்கே இருக்கிறேன் வாடா என்று உரிமையாக அழைக்கலாம். நண்பனை மட்டுமே அவன் எந்த பதவியில் இருந்தாலும் வாடா போட என்று அன்போடு அழைக்க முடியும்.

எனது நண்பர்கள் உடன் நான் அதிகம் சுற்றி எக்கச்சக்க சேட்டை செய்துள்ளோம் ஆனால் என் நண்பனுக்காக நான் செய்த ஒரு சின்ன உதவி இன்று வரை இருவரும் என்னை பார்த்தால் அவ்வளவு சந்தோசப்படுவார்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு மே விடுமுறையில் எங்கள் ஊரிற்கு புதிதாக ஒரு பெண் வந்தாதாங்க அனைவரும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வரும் போது பார்ப்போம் இதில் என் நண்பன் ஒருவன் எனக்கு அந்த பெண் பிடிச்சிருக்கு கட்டினால் இந்த பெண் தான் என்று சுத்த ஆரம்பித்தான். அந்த காதலுக்கு முதல் எதிர்ப்பே நான் தான் அதன் பின் அவன் என்னிடம் எதுவும் இப்பெண்ணைப்பற்றி சொல்வதில்லை நானும் கண்டுக்காமல் இருந்தேன். அப்புறம் தான் விசயம் தெரிய வந்தது காதல் ஒகே ஆகிவிட்டது என்றும் அந்தப்பெண் ஊரிற்கு சென்று விட்டாள் எனவும்.

சரி அந்த பெண்ணைப் பார்க்க போகனும் என்ன செய்யலாம் என்று அப்போது தான் என்னிடம் உண்மையை சொன்னான் சரி வா போகலாம் என்று எங்கள் ஊரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பெண்ணின் ஊரிற்கு சென்றோம் இன்னும் இங்கிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளே போகனும் என்றான் ஊரைப்பார்த்து விட்டு அந்த ஊரில் என்ன செய்கிறார்கள் அந்த ஊர் எப்படி என்று விசாரித்து விட்டு திரும்பினோம். இதற்குப்பின் அவன் வேலை செய்யும் கம்பெனி வண்டியை எடுத்துக்கொண்டு அந்ந ஊரிற்கு சென்று கேஸ் அடுப்பிற்கு டியூப் வேண்டுமா என ஒவ்வொரு வீடாக நாங்கள் 5 பேர் அந்த ஊரைச்சுற்ற கண்டுபிடித்தோம் அவர்கள் வீட்டை அப்புறம் அந்த பெண்ணிடம் பேசிவிட்டு திரும்பினோம்.
இதற்குபின் அவன் தனியாக இருமுறை சென்று பார்த்துவிட்டுவந்து விட்டான். அப்புறம் பெண் கேட்கலாம் என நானும் அவனும் அவனது ஊரிற்கு செல்ல அந்த ஊர் இளைஞர்கள் இவன் வருவதையும் அப்பெண்ணிடம் பேசியதையும் பார்த்து வைத்துள்ளனர் சரியாக நாங்கள் இருவரும் போக ஊர் ஒன்று சேர்ந்து ரவுண்டு கட்டிவிட்டார்கள் அப்புறம் என்ன கொஞ்சம் கும்மாங்குத்து தான் அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவர் எங்களுக்கு சப்போட்டாக பேச அங்கு இருந்து தப்பி வந்தோம் எத்தனையோ நண்பர்கள் அவனுடன் சென்றாலும் நண்பனுக்காக பொதுமாத்து வாங்கியது நான்தான். அவர்கள் இருவரும் இன்றும் நினைவு கூர்ந்து சந்தோசப்படுவார்கள்...

அதற்குப்பின் இரண்டுமுறை அந்த ஊரிற்கு இரவில் கரும்புக்காட்டு வழியாக சென்று கடிதம் கொடுத்து மூன்றாவது முறை வெளியே கூட்டடிட்டு வந்து திருமணம் முடிந்து இன்று அனைவரும் சந்தோசமாக உள்ளனர் இது நண்பனுக்காக நான் செய்த உதவி மறக்க முடியாத நினைவுகள் தான்... நம்மில பல பேர் நண்பனுக்காக பல உதவிகள் செய்து இருப்பார்கள் நண்பர்களும் நமக்கு செய்து இருப்பார்கள். மனைவியிடம் பேச முடியாத விசயங்களைக் கூட நண்பனிடம் ஆலோசனை பெறபவர்கள் இங்கு அதிகம் இது தான் இன்றைய நிலையும் கூட....

இன்று நம் வலைப்பதிவில் எடுத்துக்கொள்ளுங்கள் எத்தனையோ முகம் தெரியாத நட்புக்கள் இதில் அனைவரும் சந்தித்திருப்பார்களா என்றால் நிச்சயம் குறைவு தான் ஆனால் நட்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பது சந்தோசமான விசயம்....

நம் வாழ்விற்கு நண்பர்கள் முக்கியம்.. நண்பன் அமைவதொல்லாம் நாம் பெற்ற வரத்தைப் பொறுத்து... நண்பேன்டா.....

Friday, October 8, 2010

நம்ம ஊரு கூட்டாஞ்சோறு...2


கூட்டாஞ்சோறு என்னைப்பொறுத்த வரை வயது ஆக ஆக மாறிக்கொண்டே இருக்குது சிறு வயதில் கூட்டு சாப்பாட்டை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். நாங்கள் முதன் முதலில அசைவ கூட்டாஞ்சோறு சமைக்கத் தொடங்கியது படித்து முடிதது வேலைக்கு செல்லும் போது தான் ஊரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் ஞாயிறு அன்று நிச்சயம் வீட்டில் அசைவம் தான். புரட்டாசி மாதத்தில் யார் வீட்டிலும் அசைவம் இருக்காது மாதம் மாதம் சாப்பிட்டு பழகியாச்சு என்ன செய்வது வீட்டில் செய்யமாட்டாங்க. எங்களுக்கு பக்தி எல்லாம் கிடையாது அனைவரும் வேலைக்குச் செல்வதால் கையில் பணம் இருக்கும். ஆளுக்கு 20 ரூபாய் போட்டு கறி எடுத்துக்கொள்வோம்.

ஊருக்கு ஒதுக்குப்புறம் எல்லாம் செல்ல மாட்டோம் ஊர் நடுவில் உள்ள பஞ்சாயத்து மோட்டர் அறை தான் எங்கள் சமையல் அறை வீட்டில் அசைவம் செய்தாலும் அப்ப அப்ப எங்க சமையல் நடைபெறும். கிராமங்களில் சேவல் வளர்க்கும் பழக்கம் உண்டு எங்கள் எல்லார் வீட்டிலும் வளர்ப்போம் எங்க பசங்க யாராவது வீட்ல இருக்குற சேவலை தூக்கீடடுப்போய் சமைத்து சாப்பிடடு விட்டு அப்புறம் அவங்க வீட்ல மாத்து வாங்குன கதை எல்லாம் நிறைய இருக்கு...


அசைய சமையலில் நாங்கள் அதிகம் சாப்பிடுவது கோச்சை தான் கோச்சை என்பது கட்டுச்சாவல் என்று சொல்வார்கள் இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கோழிச் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்று சண்டையில் இறக்கும் கோழியை கோச்சை என்பார்கள் இதன் சுவையே தனி... ஒரு கோச்சை 3 முதல் 5 கிலோ வரை இருக்கும்.

கோச்சையில் இருக்கும பொங்கை பிய்ச்து எடுத்து விட்டு துண்டு துண்டாக நறுக்கி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்,வெங்காயம் போட்டு நன்கு வனக்கி நறுக்கிய துண்டுகளை உள்ளே போட்டு நன்கு எண்ணெய்யில் வனக்க வேண்டும் ஒரு பத்து நிமிடம் எண்ணெய்யில் வணக்கி கொத்தமல்லி தூள், மிளகாய்ப்பொடி போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் பூ போல வேக வைப்போம் இன்னொரு அடுப்பில் ( அடுப்பு மூன்று கல்லை வைத்து அதற்கு மேல் பாத்திரம் இது தான் எங்கள் அடுப்பு) சாப்பாடு ரெடியாக இருக்கும் பக்கத்து தோட்டத்தில் தலை வாழை இலை கொண்டு வந்து நாங்கள் 10 பேர் மண் தரையில் தான் உட்காருவோம் ஆளுக்கு மூன்று கரண்டி கறித்துண்டும் குழம்பும் சாப்பாட்டோடு சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. இதுவரை நிறைய இடங்களில் சாப்பிட்டுவிட்டேன் ஆனால் இந்த சுவையும் சுகமும் கிடைக்கவில்லை.

அடுத்து ஆட்டுக்கறி எப்பவும் ஆட்டுக்கறி சமைப்பது என்று முடிவு செய்து விட்டால் கறி எடுக்க செல்வது தனி கலை. ஆடு முத்தி இருக்கக்கூடாது இளம் ஆடாகவும் செம்புளி ஆடாகவும் முன் தொடை கறியாகவும் பார்த்துதான் எடுக்க வேண்டும் அப்ப தான் சுவை அதிகமாக இருக்கும் ஆட்டுக்கறி சமைத்தால் கூட சாப்பிட எதாவது வேண்டும் (டாஸ்மார்க்) தான். எல்லாத்தையும் வாங்கிவிட்டு எங்கள் ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்று கரைக்கு சென்று விடுவோம் யாரும் வராத இடமாக சென்று சமைத்து தண்ணீரில் குளித்துக்கொண்டே இருப்போம் ஒருவர் மாற்றி ஒருவர் சமையல் வேலைகளை பார்ப்போம் தண்ணீர் சாப்பிட்டுவிட்டு தண்ணீரில் குளிக்கும் சுகமே தனி தான்.. நன்றாக குளித்த பின் நல்ல பசி எடுக்கும் அப்ப மட்டன் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுப்பதெல்லாம் தண்ணீருக்குள்தான் இதன் சுகமும் சுவையும் தனிதான்...

இந்த மட்டன் வருவலும, கோச்சை கறியும் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் நண்பர்கள் நான் ஊருக்கு செல்லும் போது வாய்ப்பு கிடைக்கும் சென்று சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன் மற்ற அனுபவங்களுக்கு நேரமில்லை... ஆனால் இந்த கூட்டாஞ்சோறு கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களிடம் இன்றும் இருப்பது சந்தோசமான விசயமே...

Wednesday, October 6, 2010

எங்க ஊரு கூட்டாஞ்சோறு....1


எத்தனை உணவு விடுதிகள் வந்தாலும் என்னதான் வீட்டில் ருசியாக சமைத்துப்போட்டாலும் கூட்டாஞ்சோறு சாப்பிடுவது தனி சுகமே. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்களாகட்டும் கிராமத்து இளைஞர்களாகட்டும் நிச்சயம் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு அதன் சுவையை அறிந்தருப்பார்கள் இதன் சுவையும் அனுபவமும் அனுபவித்தால் தான் அறியமுடியும். அந்த வகையில் நான் அதிஷ்டசாலி இன்று வரை கூட்டாஞ்சோறு சமைப்பதை செய்து கொண்டு இருக்கிறோம்.

காலத்துக்கும் வயதிற்கும் ஏற்றவாறு கூட்டாஞ்சோறு மாறிக்கொண்டு இருக்கிறது முதலில் பொங்கல், தக்காளி சாதம், காய் சாப்பாடு (எல்லா காயையும் போட்டு சமைப்பது), மீன் சோறு (மீனை சுட்டு சாப்பாட்டுடன் சாப்பிடுவது), நண்டு வறுவல், நாட்டுக்கோழி வறுவல் உடன் சாப்பாடு என வயது ஏற ஏற இந்த கூட்டாஞ்சோறின் வகைகளும் மாறிக்கொண்டு இருக்கின்றன.

முதன் முதலில் 5ம் வகுப்பு படிக்கும் போது வீட்டிற்கு பின் இருக்கும் சாமி சிலைக்கு எங்கள் பக்கத்து வீட்டு அக்காக்கள் எல்லாம் இணைந்து அவர் அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த அரிசி, நாட்டுச்சக்கரையுடன் பொங்கல் வைத்து சாப்பிடுவோம் இது அப்ப அப்ப நடக்கும இது தான் என் முதல் கூட்டாஞ்சோறு.

7ம் வகுப்பு படிக்கும போது நண்பன் விஜய் வீட்டில் இருந்து பாத்திரங்கள் எடுத்துக்கொண்டு பஞ்சாயத்து போர்டு டிவி அறைக்கு பின் உட்கார்ந்து யார் யர் வீட்டில் இருந்து என்ன கொண்டு வருவது என முடிவு செய்து எல்லாரும் அவர் அவர் பங்கை கொண்டு வந்ததும் எல்லா காய்களும் போட்டு சமைக்க ஆரம்பித்து விடுவோம் சாப்பாடு தயாரானதுடன் வாழை இலைகளை கொண்டு வந்து தண்ணீர் தொட்டியின் மீது அனைவரும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.

10ம் வகுப்பில் நான் விடுதியில் தங்கி படித்ததால் கொஞ்சம் இடைவெளி வருடா வருடம் எங்கள் ஊரில் இருந்து அருகில் உள்ள சித்தேஸ்வரன் மலைக்கு செல்வோம் புரட்டாசி மாதமும், சித்திரை மாதமும் சனிக்கிழமைகளில் அங்கு பூஜை நடக்கும் நான் முதல் தடவையாக புரட்டாசி மாதம் சென்றேன் நாங்கள் மொத்தம் 40 பேர் சென்றோம் எல்லோரும் இங்கேயே அனைத்து பொருட்களையும் வாங்கி எல்லோரிடமும் பிரித்துக்கொடுத்து ஊமாரெட்டியூர் வழியாக விடியற்காலை 3 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம்.
முன்னால் செல்லும நபர் ஒரு சைக்கிள் டயரையும் கடைசியில் வருபவர் ஒரு டையரையும் தீ பந்தம் போல் பிடித்துக்கொண்டு செல்வோம். இடையில் கோயிந்தா கோயிந்தா என்று கோசமிட்டு செல்வோம் காலை ஆறு மணிக்கு நடுமலை மலையாளத்தான் காட்டுக்கு சென்று அங்கே மலை கிராம மக்களிடம் வீடு ஒன்று வாடகைக்கு(ஓலை குடிசைதான்) எடுத்துக்கொள்வோம் அனைவரும் ஆளுக்கு 10ரூபாய் முன்னாடி கொடுத்த பணத்தில் பாத்திரங்கள் வாடகைக்கு எடுத்து ஆளாளுக்கு ஒரு வேலை கொடுத்து காலை உப்புமா தயாராகும் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு வாங்கடா என்றால் யாரும் வரமாட்டார்கள்.

அப்புறம் ஒரு வழியாக 40 பேர் சென்றதில் ஒரு 5 பேர் கோயிலுக்கு செல்வோம் ஒத்தையடிப்பாதை வழியெங்கும பலாவும் கொய்யாவும் இருக்கும் பறிக்க முடியாது மலைக்காரனுக காவலுக்கு இருப்பார்கள் புரட்டாசி மாதம் மழைக்காலமாக இருப்பதால் நிறைய சிறு சிறு அருவிகள் இருக்கும் குழித்துவிட்டு ஆட்ட்ம போட்டு விட்டு பாறை மேல் தவழ்ந்து ஒத்த பாறையில் நடந்து என பல சவால்கள் நிறைந்த பாதை அது கடைசியாக சித்தேஸ்வரனை தரிசிப்போம். அங்கு இருந்து பார்த்தால் மேட்டூர் அனை தீப்பெட்டி அளவு தான் இருக்கும்.

நாங்கள் இறங்கி மீண்டும் வரும் போது எங்க நண்பர்கள் எல்லாம் பொறியல், பருப்பு, சாப்பாடு, ரசம் என ஒரு விருந்தே வைப்பார்கள். இந்த கூட்டாஞ்சோறு தான் மறக்க இயலாது அதுவும் அந்த மலைத்தண்ணீர் ருசிக்கு ரசம் குடி குடி என குடிப்போம். இரவுகளில் சாப்பாத்தியும் உப்புமாவும் செய்வோம் அங்கு தான் முதன் முதலில் சமைக்க கற்றுக்கொண்டேன். இந்த சித்தேஸ்வரன் மலையில் ஒரு சிறப்பு உண்டு இந்த கோயிலுக்கு வந்தால் பெண்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது எல்லா வேலையும் ஆண்களே செய்வார்கள் நிறைய ஊர்களில் இருந்து ஊரே ஒன்று திரண்டு வந்து சமைத்து சாப்பிட்டு செல்லும் போது கரடி, அனுமார் வேஷம் போட்டு ஆடிச்செல்வார்கள். நாங்கள் எப்பவும் இக்கோயிலுக்கு வந்தால் இரண்டு நாட்கள் தங்கி இருக்கும பொருளை எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டுதான் செல்வோம்.

இது எனது சைவ கூட்டாஞ்சோறுதான்... எனது அசைவ கூட்டாஞ்சோறு அடுத்த பதிவில் (தொடரும்)...

Tuesday, October 5, 2010

காதலும் கரண்ட்டும்

 

மேற்குத் தொடர்ச்சி மலை அருகே காவிரி ஆறு அழகாக ஓடுக்கொண்டும், மின்சாரம் தயாரிப்பதற்காக தேக்கியும் வைத்து இருப்பர். அடர்ந்த மலை அதன் அருகே சாலை அடுத்து காவிரி என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகான கிராமம் சிறியூர். 300 குடும்பங்களை கொண்ட அற்புதமான ஊர். விவசாயம், ஆடு மாடு மற்றும் கோழி வளர்பது தான் பிரதான தொழில்.

ஊரில் அன்பு என்னும் பெரும் பணக்கார இளைஞன் நன்கு படிப்பவன் அனைவரையும் மதிப்பவன் ஊரில் அவனுக்கு என நட்பு வட்டங்கள் உண்டு. அவர் அப்பா ஒரு மிராசுதார் கிட்டத்தட்ட 25 ஏக்கர் நிலம் உள்ள ஒரு வசதியான விவசாயி எந்த வம்புக்கும் செல்லாதவர் தனது மகனையும் ஆதே போல் தான் வளர்த்தார். அன்பு கல்லூரி முடித்து மேல்படிப்பு படிக்காமல் விவசாயம் செய்து வந்தான். அவர்கள் பக்கத்து தோட்டத்து மணியின் பெண் சங்கீதா.

அன்புக்கு சங்கீதா மேல் ஒரு இனம் புரியாத அன்பு. இவனும் காதலை சொல்ல பல முறை முயற்சித்தும் சொல்ல முடியல. ஆனால் திருமணம் செய்தால் அது சங்கீதா தான் என்று மனிதில் எழுதி விட்டான். அடுத்து என்ன செய்வது என்று தனது அம்மாவிடம் சொல்கிறான் எனக்கு மனைவி என்றால் அவள் மட்டுமே நீதாம்ம பொண்ணு கேட்கனும் என ஐஸ் வைக்கிறான். அம்மாவிற்கு கோபம் ஆனால் காட்டிக்காமல் உங்க அப்பா வந்தால் பேசிப்பார்க்கலாம் என சொல்லி அனுப்புகிறாள்.

அவன் அப்பா வந்ததும் அம்மா காதில் போட அதுக்கென்ன போய் கேட்டுவிடலாம் என்று சொல்லி தனது தாய்மாமா சங்கரனுக்கு சொல்லி அனுப்புகிறார். அவர் வந்ததும் இது தான் விசயம் நாங்கள் மணி பெண்ணை கேட்கலாம் என இருக்கிறோம் நல்ல பொண்ணுதான் கேட்கலாம் என்று சங்கரன் மாமா சொல்லிவிட்டு மணி வீட்டுக்குச் செல்கிறார்.

மணி என் பெண்ணை நான் விவசாயம் பார்ப்பவருக்கு தரவில்லை அரசு வேலையில் இருக்கும மாப்பிள்ளைக்குத்தான் தருவேன் என்று சொல்லி மாமாவை திருப்பி அனுப்ப மாமாவும் அன்பு வீட்டில் வந்து சொல்லி விட்டார். அன்புக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கல்லூரி முடித்து 4 வருடம் ஆகிவிட்டது இனி எங்க அரசு வேலைக்குப் போக என எண்ண அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து இவனே மணியிடம் சென்று எனக்கு உங்க பொண்ண கல்யாணம் செய்யனும்னு ஆசைபடறேன் என்று சொல்ல யோசிக்கிறேன் அன்பு என்று சொல்லி அனுப்புகிறார்.

அவர் யோசிக்கிறேன் என்றதும் அன்பு சரி நமக்குத்தான் என்று சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கும் போது தான் வந்தது அதிர்ச்சி மாமா வடிவில் உனக்கு பக்க்தது ஊரில் சேகர் என்பவரின் பெண்ணைப் பார்த்து இருக்கிறோம் வரும் ஞாயிறு சாப்பிட போகிறோம். இல்ல எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல என்று கத்துகிறான் கட்டுனா அவளத்தான் கட்டுவேன் என கத்துகிறான்.
மகன் கத்துவதை கேட்டு திடுக்கிட்ட அவன் அம்மா ராணி அன்புவை தட்டி எழுப்புகிறாள் என்னடா மத்தியான நேரத்துல கனவா என தட்ட இவன் தூக்க்ம தெளிந்து அம்மாவை பார்க்கிறான். என்னடா பிரச்சனை யரோ ஒரு பொண்ணு பேரச் சொல்லி கத்துன யாருடா அது யாருனு சொல்லுடா கூட்டிட்டுகீது போயு குடும்ப மானத்த காத்துலவுட்டறாதே... கனவு கண்ணடது போதும் மத்தியான கரண்ட் வந்துருச்சாம போயி காட்டுக்கு தண்ணி கட்ற வேலையபாரு என்றாள்... ஆகா இவ்வளவு நேரம் நினைச்சது கனவா.......

Sunday, October 3, 2010

உடலுக்கு அழகு சேர்க்கும் மருதாணி



இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதா‌ணி இலையை கைக‌ளி‌ல் வை‌ப்பதா‌ல் ப‌ல்வேறு பய‌ன்களை பெ‌ண்க‌ள் பெறு‌கிறா‌ர்க‌ள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர். 



மருதாணியின் பயன்கள் 

மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம்.

கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம்.

‌சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்க.

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.

மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.


மேகநோய்

பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.


தோல் நோய்

மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்


ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர 

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை 


தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

பேய் பூதம் 

மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும். 

கரப்பான் புரகண் 

பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும். 

கால் ஆணி 

உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம். 

படைகள் 

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். 

இளநரையை போக்கும் மருதாணி   

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
 
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.