இந்த வருட தமிழ்புத்தாண்டு அன்று எங்கள் அலுவலகத்தில் ஆண்கள் வேஷ்டி அணிந்தும் பெண்கள் புடவையுடன் வரலாம் என்று அறிவிப்பு வெளியானதுமே எனக்கு ரொம்ப சந்தோசம். எனக்கு பிடித்த உடைகளில் வேஷ்டி ரொம்ப முக்கியமானது. நான் பொதுவாக தமிழர் திருவிழா காலங்களில் வேஷ்டி அணிவது வழக்கம் அதனால் உற்சகத்துடன் வீடு திரும்பி சித்திரைத் திருநாளை எதிர் நோக்கி காத்திருந்தேன்.
சித்திரைத் திருநாள் அன்று காலை எழுந்து கனிகளில் விழித்து வெள்ளை வேஷ்டியில் பளிச்சென்று புறப்பட்டேன். மாடியில் இருந்து கீழே வரும் போது எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டு அத்தையும், மாமாவும் கோயிலுக்கா என்றார்கள் இல்லை அலுவலகத்துக்கு என்றேன். ஆபிஸ்க்கு இப்படியா போறது என கேட்டாங்க சுளீர் என வந்தது கோபம் ஆனா சிரிச்சிகிட்டே வந்து விட்டேன். கீழே வந்து இருசக்கர வாகனத்தை எடுத்து தலைகவசத்தை அணிந்தால் எதிர்வீட்டு நண்பனும் அவனது தங்கையும் என்ன வேஷ்டி கட்டடிட்டு தலைகவசம் என அங்கே ஒரு நக்கல் சிரிப்பு மீண்டும் கோபம் என்ன செய்வது சிரிச்சிகிட்டே வந்து விட்டேன்.
வேஷ்டி கட்டி வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணியக்கூடாதா என்ன? என்ன செய்வது என நான் மீண்டும் சந்தோசத்துடன் அலுவலகம் வந்தேன். அலுவலக லிப்ட்டில் ஏறியதும் அங்கே வந்த நண்பன் ஆகா வேஷ்டியா நல்லாயிருக்கு என சென்று விட்டான். எனது இருக்கை நோக்கி போகும் போது தான் எங்கள் தளத்தில் நான் மட்டுமே வேஷ்டி மற்ற யாரும் கட்டவில்லை. யாரைக்கேட்டாலும் வேஷ்டியா என்று சிரிக்கிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் காலையில் இருந்து அலுவலகம் வரை என்னை பார்த்து வேஷ்டியா? என சிரித்தவர்கள் அனைவரும் தமிழர்கள்.

ஒரு தமிழ் திருவிழா அன்று ஒரு தமிழன் நமது பாரம்பரிய உடையான வேஷ்டி அணிவது தவறா? என்னிடம் வேஷ்டியா என்று கேட்டவர்களிடம் நான் கேட்ட கேள்வி இதுதான்.
வேஷ்டி தமிழனின் அடையாளம் இன்று இருக்கும் நமது மக்கள் படித்துவிட்டு பெரிய கம்பெனியில் 5 இலக்கத்தில் சம்பளம் வாங்கினால் நீ தமிழன் இல்லையா? அலுவலகத்திற்கு ஏற்ற உடை நாகரிகமான உடை பேண்ட் சர்ட் தான் இல்லை என்று சொல்லமாட்டேன். நமது திருவிழா நம்ம வீட்டு விசேசங்கள், நம்ம கோயில் பண்டிகை, நம் வீட்டுத்திருமணம் போன்ற நமது விசேசத்திற்கு நமது பாரம்பரிய உடை அணியலாமே இதில் தவறு ஒன்றும் இல்லை என நான் நினைக்கிறேன்.
நான் எப்போதும் எனது வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், நமது பாரம்பரிய திருவிழாக்களுக்கும் வேஷ்டி அணிவது தான் வழக்கம் இதை இன்றும் கடைபிடித்து வருகிறேன் நான் மட்டுமல்ல எங்க ஊர் இளைஞர்கள் எல்லோரும் ஊர் திருவிழாவிற்கு வந்தால் வேஷ்டி அணிந்து கொண்டு கலந்து கொள்வது வழக்கம்.
அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் வேஷ்டி என்பது நமது அடையாளம், இன்று புதிதாக நாம் அணியும் உடையல்ல, நம் அப்பா, தாத்தா என நம் முன்னோர்களின் உடையே இதுதான். இவ்வுடையை தினமும் அணியவேண்டிய அவசியம் இல்லை நமது கலாச்சார திருவிழாக்கள் அன்று அணியலாம் எனறு வலியுறுத்துகிறேன். இவ்வுடையை அணியும் போது நம்மைப்பார்த்து ஏளனம் செய்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் உனக்கு அதன் அருமை தெரியவில்லை.
நண்பர்களே நீங்களும் நமது கலாச்சார நிகழ்வுகளில் வேஷ்டி அணிந்து நம் கலாச்சாரத்தை காக்க கைகொடுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.