Tuesday, May 17, 2016

மார்க் முக்கியம் இல்லடா மாக்கானுகளே !!

+2 தேர்வு முடிந்ததும் மார்க் எவ்வளவு, மார்க் எவ்வளவு என்று ஊர்ல போறவன், வர்றவன் எல்லாம் கேள்வியா கேட்டு சாகடிப்பானுக, 1000க்கு மேலே மதிப்பெண் பெற்றவன் எல்லாம் கெத்தா சொல்லுவான், என்னைப்போல 700க்கு கீழே உள்ளவன் எல்லாம் பல்ல மட்டும் தான் காட்டுவோம்.

மதிப்பெண் குறைவா எடுத்தா மதிப்பும் குறைந்து விடுகிறது, அந்த மதிப்பை மீட்க பல காலம் போராட வேண்டி இருக்கு, இந்த மதிப்பெண் சிஸ்டத்தை கொண்டுவந்த அரசாங்கம் இன்னும் அப்படியே இருக்கு..  காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டாமா? இன்னும் மார்க், மார்க் என்று குழந்தைகளை தாளிக்கின்றனர்...
நமது அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இன்னும் கல்வியின் தரத்தில் நாம் குறைவாகத்தான் இருக்கிறோம். நம்ம ஊரில் ஐஐடி யில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவு, இதே ஆந்திர மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஏன் அதிகம், ஏன் குறைவு என்று ஒப்பிட்டு பார்த்து கல்வியை சரி செய்ய இங்கு யாரும் முன்வருவதில்லை..
இன்ஜினியரிங் படிப்பு எல்லாம் தகுதி அற்ற பலர் படித்து விட்டு இன்னிக்கு 5000க்கும், 6000க்கும் ஙே என்று அழைந்து கொண்டு இருக்கின்றனர்.
எனக்கு தெரிந்த ஒரு பையன் 6000 சம்பளத்திற்கு வேலைக்கு படித்த வேலைக்கு போகாமல், செக்கியூரிட்டி வேலைக்கு செல்கிறான், ஏன்டா இங்கன்னு கேட்டேன், இங்க 10000 சம்பளம் அண்ணா அதுவும் இல்லாமல் நிறைய நேரங்களில் படிக்க நேரம் கிடைக்கிறது, அதானல மேல படிக்க உதவும், மற்றும் நேரம் கிடைக்கையில் நேர்முகத்தேர்வுக்கு போகிறேன் என்றான். மகிழ்வாக இருந்தது அவன் சொன்னது. இன்றைய காலத்தில் படித்த வேலைக்குத்தான் போக வேண்டும் என்றால் கடைசியாக திருவோடு தான் மிஞ்சும்.
எத்தனையோ படிப்பு இருக்கிறது, ஆனால் இன்ஜினியரிங் படித்து பராக்கு பார்ப்பவர்கள் நிறைய.
இன்று வந்த +2 தேர்வின் முடிவில் என் சித்தியின் மகன் 705 மார்க் தான் பெற்றான், எனக்கோ மிக மகிழ்ச்சி என்னை விட 30 மார்க் தான் அதிகம் வாங்கி இருக்கிறான் என்று.
இன்ஜினியரிங் சேர்த்தலாம் என்று ஒத்தக்காலில் நின்னாங்க, நான் தான் மண்டைய கழுவி ஆங்கில இலக்கியம் படிக்கட்டும் என்று அவனுக்கு ஆசைய உண்டாக்கி, அதிலேயே சேர விண்ணப்பம் வாங்க அனுப்பிவிட்டேன்.
தயவு செய்து +2 முடிச்ச மாணவச் செல்வங்களை மேலே என்ன படிக்கறீங்கன்ன கேளுங்க, மார்க்கை கேட்டு அவர்களின் மனதை மானபங்கபடுத்தாதீர் !!

மார்க் முக்கியமில்லடா மாக்கானுகளே !!

5 comments:

  1. உண்மைதான்! புற்றீசல் போல முளைத்த பொறியியல் கல்லூரிகள் 600, 700 மார்க் எடுத்தாலே பணத்தை வாங்கி சீட் கொடுத்துவிடுகின்றன. பெற்றோரும் அவன் புள்ள படிக்கிறப்ப நம்ப புள்ளைக்கு என்ன கொறைச்சல் என்று சேர்த்துவிடுகின்றார்கள். எத்தனையோ நல்ல படிப்புக்கள் இருக்கின்றன. வேலைவாய்ப்பை அள்ளித்தர என்று அவர்களுக்கு எடுத்துரைக்கத்தான் ஆட்கள் இல்லை. எடுத்துரைத்தாலும் சிலர் செவி மடுப்பதில்லை.

    ReplyDelete
  2. "மண்டைய கழுவி ஆங்கில இலக்கியம் படிக்கட்டும்"

    enna oru villathanam!...nadakattum!

    ReplyDelete
  3. Good msg bro.....

    But it is too late for me....may be 22 yrs....

    700 plus only scored...but now college toppers working for me...

    Seshan dubai

    ReplyDelete
  4. அருமை நண்பரே.. சரியான நேரத்தில் சரியான பதிவு.

    ReplyDelete
  5. நல்ல பதிவு தான் . அப்படியே அந்த முட்டைபூரி பதிவில் உள்ள றகர பிழையை சரி செய்யுங்க... 600 எடுத்தாலும் ஆயிரத்துக்கு மேல எடுத்தாலும் தமிழ்-ல தப்பு வரக்கூடாதுங்கோ. தம்பி இதுல கெளரவம் பாக்காதீங்கோ

    ReplyDelete