Monday, February 3, 2014

சொம்படிக்கும் சுயபுராணம்...


எதை, எதையோ எழுதினாலும் அதில் கருத்து இருக்கிறதா? இல்லையா? என்று பார்ப்பதில்லை. நமக்குப் பிடிச்சிருக்கு எழுதுகிறோம்! படிச்சாப் படி, இல்லை என்றால் விடுங்க, இது என் ஏரியா, அப்படித்தான் எழுதுவேன் என்று இருந்த எனக்குப் பயன் உள்ளதாக எழுத வேண்டும், எழுத்துப்பிழை, சந்திப்பிழை எல்லாம் எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் இப்பபொழுதுதான் வந்திருக்கு. நான் தினமும் ஒரு பதிவு எழுதுவது எழுத்தாளன் ஆவதற்கு அல்ல. என் தமிழை முறையாக எழுதிப் பழகுவதற்கு என்று தான் சொல்வேன். எப்ப இருந்து படிக்க ஆரம்பிச்சேன், எப்ப இருந்து எழுத ஆரம்பிச்சேன்னு ஒரு சுயபுரணம்.

சிறுவயதில் இருந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் எனக்கு உண்டு. முதலில் வாரம் தவறாமல் படிப்பது காமிக்ஸ் புத்தகங்கள் தான். அதுவும் மாயாவிக் கதை என்றால் மிகப் பிடிக்கும், அப்போதுதான் கப்பல் கொள்ளை, கடல் கொள்ளை, செவ்விந்தியர்களைப் பற்றி எல்லாம் அறிய முடிந்தது. தினமும் காலையில் தினத்தந்திப் படிக்கும் பழக்கம் நான் படிச்சுப் பழகிய காலத்தில் இருந்தே உண்டு. அப்போது எல்லாம் வெள்ளிமலர்ப் பேப்பரைப்பார்த்ததும் ச்சீ அசிங்கம் என்று சொல்லும் அளவிற்கு நல்லவன்.

பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாக் கதைகள் எனக் கோயிலுக்குப் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் புத்தகக் கடையில் அழுது அடம் பிடிச்சு வாங்குவேன். வீட்டிற்கு வந்ததும் ஒரே மூச்சில் படிச்சி முடிச்ச உடன் தான் அடுத்த வேலை.

9ம் வகுப்பு படிக்கும் போது ஹாஸ்டல் செல்லப் பவானியில் இருந்து கோபி செல்லும் 21 நெம்பர்ப் பேருந்தில் 1 மணி நேரத்தில் ஆனந்த விகடன், குமுதம், ஸ்பேர்ட்ஸ் ஸ்டார் போன்ற வார, மாத இதழ்களைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பின் பேருந்துப் பயணம் என்றாலே என்னுடன் புத்தகங்களும் பயணிக்கும் எனக்குத் தெரிந்து 17 வயதில் இருந்து நக்கீரன், ஜீவி, நெற்றிக்கண், குமுதம் ரிப்போர்ட்டர்ப் சில வருடங்களுக்கு முன் வந்த தமிழக அரசியல் போன்ற அரசியல் பத்திரிக்கைகளை வாரம் தவறாமல் இன்று வரை படித்து வருகிறேன்.

குமுதத்தின் ஒரு பக்க சிறுகதை, விகடனின் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை என அப்படித்தான் சிறுகதைகள் அறிமுகம். எனக்கு தெரிந்த நாவல் எல்லாம் ராஜேஸ்குமாரின் பாக்கெட் நாவல்கள் தான். அப்படி இப்படி என்று பல புத்தகத்தை படித்து எழுத்தார்வத்தை வளர்த்து கொண்ட நான் சில சிறுகதைகள், துணுக்குகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன் கன்னித்தீவு போல இன்று வரை படிக்கிறேன் ஒன்னும் வரவில்லை. இலவசமாக கிடைத்த இணையத்தில் இலவசமாக பலவற்றை பதிந்தாச்சு, திரும்பி பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது அத்தனை பிழைகள்.

இந்த சுயபுராணமே இதுக்குத்தாங்க நன்றாக எழுத வேண்டும் முக்கியமாக பிழைகள் இன்றி எழுதனம். ஒரு முறை ஆங்கிலம் கற்க ஒரு பேராசிரியரிடம் போய் கற்றுக்கொண்டேன் அப்போது அவர் சொன்னார் உனக்கு ஆங்கிலம் வரவில்லை என்று சொல்லதே!! "உனக்கு சரியாக தமிழ் தெரியவில்லை என்று காயடித்துவிட்டார்". உனக்கு மட்டுமல்ல இந்த வகுப்பில் உள்ள அனைவருக்கும் என்று நங்குன்னு ஒரு போடு போட்டார் எல்லோருக்கும்...

மக்களே தினமும் இப்போது பதிவெழுத ஆரம்பித்தாற்கு காரணம் நான் தமிழை ஒழுங்காக எழுதி பழகத்தான். இதற்கு சுயபுராணம் என்று பெயர் வைத்திருந்தால் சரி அது எதுக்குடா சொம்படிக்கும் சுயபுராணம் என்று நீங்க கேட்பது  புரிகிறது. ஒரு விளம்பரம்....

10 comments:

  1. மக்களே தினமும் இப்போது பதிவெழுத ஆரம்பித்தாற்கு காரணம் நான் தமிழை ஒழுங்காக எழுதி பழகத்தான்.
    >>
    ஹலோ அதுக்கு உன் பையன்கிட்ட இருந்து நோட்டை வாங்கி எழுதப் பழகனும். இங்க வந்து ஏன் எங்க உயிரை வாங்குறே!?

    ReplyDelete
    Replies
    1. அக்கா இதுக்கு பதில் முதல் பத்தியிலேயே கொடுத்திருக்கிறேனக்கா...

      Delete
  2. பழகப் பழக பழக்கம் வழக்கமாகி விடும்... (எழுதுவது மட்டுமல்ல...)

    ReplyDelete
    Replies
    1. எதச்சொல்ல வர்றீங்கன்னு தெரியலையே தல...

      Delete
  3. பதிவு எழுதி விட்டு பிரசுரம் செய்யுமுன், மறுபடி ஒருதடவையாவது நாமே வாசித்துப் பார்த்தாலே நிறையப் பிழைகளைத் தவிர்த்து விடலாம். நாம் அதுதான் செய்வதில்லை! :)))

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.. அதைச்செய்யாததால் தான் பல தவறுகள்...

      Delete
  4. நீயும் அண்ணன் சாதிதாம்டே மக்கா, நானும் அப்படித்தான், இணையம் வந்தபின், வாரமலர்களை மிஸ் பண்ணிகிட்டு இருக்கேன்...!

    ReplyDelete
  5. எப்படியோ தமிழை மறக்காமல் இருந்தால் சரி..

    ReplyDelete
  6. நல்ல தமிழில் முன்பு நோட்டில் எழுதிப் பழகினோம்... இப்போ இணையத்தில் எழுதிப் பழகுகிறோம்... எல்லாரும் ஒரே சாதிதான் சகோதரா...

    ReplyDelete